Friday 28 November 2008

என் இலக்கணபிழைகளில் ஓர் இலக்கியம்,

ஒரு துளி...

துன்பம் மெல்ல மெல்லத்
தொடர
உணர்வுகள் என்னைத்
தொட்டு வதைக்க

வறுமை என் வீட்டுக்
கதவு தட்ட
உறவுகள் எனனை விட்டு
விலக

பசியினால் என் குழந்தை
கதற
தெருத் தெருவாய் நான்
வேலை தேட

வசை பாட நால்வர்
எனைத் தேடியழைய
என் தருத்திரம் வாசல்
திறக்காமலே வீட்டுக்குள்
வாழ!!!

வீதியோர சிருசும் பெருசும்
என்னைப் பார்த்து கேலி பேச
நாலுபோருக்கு நாலு கதையாய்
என் வாழ்கை மாற

வழிதெரியாது வழிதேடிய
பாதையில் வழிமாறியது
என் வாழ்வு நீர் சுமக்கும்
இயந்திரமாய்

ஒரு துளியில் என் கதையை
நான் எழுத
கண்ணிலிருந்து வழிந்த
துளி அதை அழித்தது
அருவருப்பு நீயொன்று......

Thursday 27 November 2008

கீற்றுகுள் இருவிழி தூறல் சாறலில்............,

செந்தனல் குருதியில்
செங்கதிராய் உதித்த
செந்தமிழ் வீரர்களே!!
செந்தாமரைப் பூவாய்
தோழமை உணர்வோடு
தலைவன் தோழனாய்
தோல் கொடுத்தவர்களே!!

உண்மை வாழ்விற்காய்
உள்ளத்தின் உறுதியோடு
தோல்வியிலும் வெற்றிகானும்
உயர்ந்த எண்ணத்தில்
உயர்வாய் நிற்பவர்களே!!
உலகை வென்று
எங்களோடு கலந்து
எழிமையாய் எங்களை
என்றும் உங்கள் பாதையில்
மாற்றிப் போனஎம்
 வீரர்களே!!!

உங்களுக்காய் நாங்கள்
ஆயிரம் ஆயிரம் தீங்கள்
ஏந்தி! தாழ் பணிந்து
தழிழால் தவிந்தெழுந்து
தனித்தனி பாதை மாற்றி
தருகின்றோம் உறுதி!

இந்த புனித நாளில்
தரணியெங்கும் ! தமிழ்
தலைநிமிர்ந்து வாழ!
உங்கள் பாதையில்
தொடர்வோமென!

Tuesday 25 November 2008

கீற்றுகுள் இருவிழி தூறல் சாறலில்............,

துயிலும் இல்லமெல்லாம்
துயிலாது தவிக்கும்
தூய்மையானவர்களே !!!
உங்களுக்கு ஈடாய் நான்
எதைச் சொல்ல!

பசித்த வயிற்றுக்கு
நீர்கொடுத்து
வாடிய முகத்தை
தாம் மறைத்து!

வந்த களைப்பை
எதிரிக்கும் காட்டா வீரம்
கொண்டு ! எழுந்த
உங்கள் மனதிற்கு ஈடாய்!
நான் எதைச் சொல்ல

இதை அறிந்து தாய் தவிக்க
பாசக்கல்லாய் நின்று
தாய் மனதை கடந்து!
தாய் மண்ணை காக்க
புறப்பட்ட உங்களுக்கு ஈடாய்!
நான் எதைச் சொல்ல!!


எதிரியின் செல் கண்டு
பட்ட காயம் மறந்து
வீழ்ந்த தோழன் உடல் தாண்டி
எதிரி மேல் போர் தொடுக்கும்
உங்கள் மனதின் உறுதிக்கு
ஈடாய் ! நான் எதைச் சொல்ல!!

மண்ணில் வீழ்ந்த உடலோடு
உயிர் ஒட்டி நின்றால்!
எதிரியைக் காணமுதல்
அமுதாய் விசம் பருகி
கொஞ்சம் கொஞ்சமாய்
விண்ணுலகம் தேடிடும்!
உங்களுக்கு ஈடாய்
நான் எதைச்சொல்ல!!

இன்று! உங்களுக்காய்
பூக்கும் பூக்களும்
மண்ணில் வீசும் தென்றலும்
வாசம் வீச!! மழைமேகம்
கண்ணீரை சென்நீராய்
தருகின்றது! எம்மை விட.........

Saturday 15 November 2008

மயமாய் வந்த என் மாயவனே.....

மாயவனே!!
நீ என் இயத்தில்
எப்படி வந்தாயென
எனக்குக்குள் தெரியாது
ஆனால் இருக்கின்றாய்

என் கனவில் எப்படி
தோன்றினாய்யென தெரியாது
ஆனால் நித்தமும்
கனவில் வருகின்றாய்

நான் தடுமாற! நீ
ஏன் கரம் தந்தாய்
எனத் தெரியாது
ஆனால் கரம் தந்து
காக்கின்றாய்!

தவித்த போதெல்லாம்
தாயாய் ஏன் மாறினாய்
எனத்தெரியாது
ஆனால் தவிக்கும் போது
தாய் மடியானாய்

என்னை நீ
சோதித்து சோதித்து
எதைத் தேடினாய்
எனத்தெரியாது
ஆனால் என்னை
சோதிக்கின்றாய்

நான் ராதையா பேதையா
மீராவா எனத்தெரியாது
ஆனாலும் உன்னோடு
நான் இணையாய் இருக்கக்
கண்டேன்......................

Tuesday 11 November 2008

கீற்றுகுள் இருவிழி தூறல் சாறலில்............,

வாழும் மண்ணிழந்து
வாழ்விழந்து போகும்
வழிதானிறி தவியாய்
தவிக்கம் எம் உறவு காக்க!

நாம்,எம் நிலமை தனை
எழுதி எழுதி கையும் சலித்தே வலிக்க!
தூரம் தூரமாய் எம் நின்மதியும்
தொலைந்தே போக!

உம் முன்னே
மனிதர்களாய் காத்து காத்து
தலைசாய்த்து சாய்ந்து
எம் நிழமை சொல்ல !தேடித் தேடி
திரும்பித் திரும்பி கூடிக் கூடி
கூட்டங் கூட்டமாய் நாங்கள்
வருகழன்றோம்....

சாக்கு போக்கு சொல்லிச்சொல்லி
எம்மை ஓரக்கண்ணால்
பார்த்துப் பார்த்து பேசிப் பேசி
எம்மை ஏமாத்தி விளையாடும்
உலகே! எம்மை ஏமாந்தியது போதும்

ஒரு முறை எம்மை நேராய் பார்த்து
எம் வேதனை அறிந்து
எம் உண்மை புரிந்து
உதவிட வா !!!!!

எங்கிருந்தாய்?

வானத்து கார்மேகத்திற்குள்
நீர்த்துளியாய் நானிருக்க!
தென்றலாய் நீ வந்து
மழைத்துளியாய்
என்னையெடுத்து மண்ணுக்குள்
ஏன் மறைத்தாய்.......

மண்ணுக்குள் மறைந்து
மண்ணோடு மண்ணாய் கரைந்திட
 என்னை
ஈரமண்ணென்னறு நினைத்து
சின்ன சின்ன தூக்கனாங் குருவி
கூட்டிற்குள் மறைத்து  ஏன்வைத்தாய்!!

இருண்ட கூட்டிற்குள்
மண்ணாயிருக்கும் எனைத்தேடி
மின்மியாய் நீ வந்து உடல் கொடுத்து
உயிர் கொடுத்து என் இருட்டுக்கு
ஒளியேற்றி வைப்பாய்யென்று
தூக்கனாங்குருவிக் கூட்டிற்குள்
காத்திருக்கின்றேன் உனக்காய்......

Thursday 6 November 2008

என் இலக்கணபிழைகளில் ஓர் இலக்கியம்,

நெஞ்சத்து நெருடல்

வண்ணப் பட்டாம் பூச்சியாய்
சிறகடித்த மகள்!
தன் குடும்ப வாழ்விற்காய்
தன் நெஞ்சத்து கனவாய்
தன் நெஞ்சோடு பூட்டி!
தன் குடுபவாழ்வை
தன் கனவாய் நேசிந்து
தரமாய் நிமிர்ந்து தாழ்ந்தாள்
ஓர் மனைவியாய்....

மனைவியாய் எழுந்த மகள்
 பெண்மையின் தாமையால்
 தாயாய் பிறந்தமகளுக்கு
சோயாய் வந்த மகளை
சின்ன சின்ன ரசனையின்
புன்னகைப் புதுபொலிவாய்
கொடுத்ததாள்
நெஞ்சத்துத் கனவாய்
அவள் நெஞ்சம்கொஞ்சுமழலை
நெஞ்சதனில் இறக்க!!


இறப்பின் பிரிவால் வந்த
பிரிவின் பிரிவு அவள்
இதயத்தை வாட்ட
வாடிய இதயத்தின் ஒளியிழந்து
உணர்விழந்து வாழும் அவள்
உணர்வுச்
சுவையிழந்த மனதில்
அவளிருந்து வாட்ட
நெஞ்சம் சுமையால் தவிக்க
மகள் நினைவோ நெஞ்சத்தில்
ஊசலாட! மெளனத்தில் வாடுது
நெஞ்சம் நெருடலால்......

Wednesday 5 November 2008

அடித்தள்ளுபடியானது எம்மவர் வாழ்கை...

ஆடிவந்து உயிரை
அள்ளிக் கொண்டு போக
ஆடித் தள்ளுபடி
வியபாரப் பட்டியல்
சோலை வேட்டியாய்
தத்தி தவிக்கு எம்மவர்
வாழ்கை..... இன்று

வேண்டுவதும் விற்பதும்
அரசின் கையில் சிக்க
நிர்ணைய மற்ற விலையாய்
உடல் வீழ்ந்து கிடக்குது மண்ணில்

வீவேகமும் வீரமும்
கொண்ட நாம் வாழ்கை
நாணயத்தைப்போல இன்று
ஞாயமற்ற ஜடப்பொருள்
விலையாய் சிக்கித் தவிக்கின்றது

தள்ளுபடி கடை சேலை வேட்டி போல்
தத்தளிக்கும்எம் இனத்தைக் காத்திட
எழுத்திட்ட உள்ளங்களே
காயங்கள் மறந்து காவியம்
படைத்திட இனைந்த கரங்களை
இறுக பற்றிக்கொள்வோமா?
என்றும்..

Tuesday 4 November 2008

பூவிற்கும் ஓர் கதை ........

அதிகாலை தானெழும்பி
நந்தவனப் பூவென்று
தான் வாழ பூப் பறித்தாள்
நந்தவன் சென்று!

அதிகாலை காலை  தேனீருக்கு
வழியின்றி சரம் தொடுத்து
அழகழகாய்  கூடைக்குள் அடுக்கி
தலை சுமந்து ஓடோடிச் சென்றாள்
கோயில் வாசலுக்கு!


உள்ளிருக்கும் கடவுளுக்கும்
தெரிந்த கதையை கண்களால்
சொல்லி தலையால் நினைவு படுத்தி
காத்து நின்றாள் வருவோர் போவோர்
முகம் பார்து தன் பூவைவிற்பதற்காய்!

கிழிந்த ஆடை மற்றவர்
கண் தைக்க
வயிற்று பசி இசை பாட
தன் தலைச் சூட பூ
மற்றவர் தலை சேர
விதம் விதம் மாய்
கோர்த்தால் கடவுளுக்கும்
சேர்த்து இன்றாவது
தன் வியிற்று பசி போகாதா
என்ற ஏக்கத்தில்....

மனிதா ஒரு நிமிடம்..

எதை இழந்து எதைத் தேடி
எதை எடுத்து எதை
அடையப் போகிறோம்
மனிதா! நம் வாழ்வில் நாம்!!

அறிவு வளர்த்து அறியாமை வளர்த்து
பூமி கடந்து வான் தொட்டு
எதைத் தேடி எதை எடுத்து
எதை அடையப் போகிறோம்
மனிதா! நம் வாழ்வில் நாம்!!

இனம் பிரித்து மொழி பிரித்து
தனித் தனியாய் வாழ்வமைத்து!
சண்டை போட்டு சண்டை போட்டு
எதைத் தேடி எதை எடுத்து
எதை அடையப் போகிறோம்
மனிதா! நம் வாழ்வில் நாம்!!

பூமியழித்து பூவழித்து
சிகப்புக் கோலம் நாம்
போட்டு! மரணஓலத்தின் நடுவே
கண்ணீர் கடலின் மேல்
எதைத் தேடி எதை எடுத்து
எதை அடைய போகிறோம்
மனிதா! நம் வாழ்வில் நாம்!!!