Thursday 31 December 2020

குட்டிக்குட்டிச் சாரல்......,

    1.  நேசத்தின் ஆழத்திலேயே
    • திரைகள் உடைகின்றது 
    • தூரத்தின் கால்களிலேயே
    • காதல் ஓடுகின்றது 
    • கூடவே  இருந்தால்
    • வாழ்கை கசந்தே அழுகின்றது


குட்டிக்குட்டிச் சாரல்......,

 விழுந்தெழுந்த போதெல்லம்

இடைவெளியில் கற்றபடம்  வறுமையின்

 பள்ளத்தில் வீழ்ந்து நிரவிட முடியா மனசானது

முயற்சிகளின் தடைகளான தோல்வி

கண்டும் காணாதே போனது ஆசையில்!!

காரிருள் மழையிலும் நனைந்தது

இதயம் !!  திரும்பாமலே

நின்றது  நேற்று!



Friday 25 December 2020

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

தன்னில் பாதியென்றான்
மண்ணின் தாயையென்றான்
கண்ணின் மணியே என்றான்
சுடுகாற்றின் கைபிடியென்றான்
கைதொட்டாமலரின் 
மென்மையென்றான்
தன்னுள் எழுந்த சிந்தனையென்றான்
உண்ர்வுகள்வேறில்லா உயிர் நீயென்றான் 
கண்கள் ஆனந்தம் கொள்ள 


கைபிடித்தே நீயே
 உலகெமன்றான்    
தன்னில் எழும் 
சந்தோசதேடல்லென்றான்
தனிமைகளை  உடைத்தெறிந்தான்
அவனே உலகமாக்கி 
  அவனையேசுழல வைத்தான்
 நம்பிக்கையின்
சிகரம் தொட்டான்  உண்மையின்
முகம் மறைத்தே  நின்றான்கண்முன்னே! 
காரணம் பலர்தேடியும்  பொய்யின்
சுகத்தில் பின்னிய சந்தோஷத்தில்
அவள் தொடுத்த திருமணமாலை அவளுக்கே
கல்லறைமாலையாய் விழுந்தது கழுத்தில்!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

 கொடிவடிவில்  இனத்தவிப்பில்
இளஞ்சிவப்பில் இனத்தோடு  இனமாகி
இளமை தேடும் இனத்துயரத்தை  இளமனசு
இளகியே கைசேர்த்து  இயலாமை நீருக்குள்


இயம்பித் துடிக்கும்  இதயங்களின் ஏணியாய்
கரைசேர்த்திட   முயன்றெழுகையில்இடர்செய்யா 
வலதுகைதொடுகை இனத்தை தொலைத்தே
 இருந்தும்காத்திடா இடதுகை தடுக்கா சிறப்பே!!


குட்டிக்குட்டிச் சாரல்......,

இன்பம் கொண்டே துன்பம்
கண்டு வாழும் காலம் இன்று!
உறவு கொண்டே   உரிமையின்றி
தனிமையோடு  போகும்
காலம்  இன்று!


பணமும் உண்டுஅறிவும் உண்டு
 உயிரை காத்திடமுடியா  காலம் இன்று!
எல்லாம்கண்டும் கண்களிருந்தும்
 குருடாய்போகும் காலம் இன்று !!

Monday 21 December 2020

கண்ணீர் அஞ்சலி!!!!

  •                                                           உயிரின்
    •                        முதல் வடிவம்
    •  கருணையின் ஆழ்கடல் யாரும்
    • தந்திட  முடியா பொக்கிசம் தாயே
    • உன் வடிவம் !!வடிவமாய் வடித்தெடுத்து
    • கூடிநின்று அழுகின்றோம் எம் கண்ணீர் கண்டும்
    • தேடாமல் தன்னம் தனியாய் போனதேனே!தாய

                                                             எந்தனை  இடர்கள் வந்தபோதும் 

                                                                                                  

    • சற்றும் கலங்கியே நின்றிடாது  தனித்து நின்று
    • குடும்பத்தை காத்திட்ட தெய்வத்தின் தெய்வமே
    • குடும்பமே கலங்கித் தவிக்கையில்  மண்ணுலகைமறந்தே
    • விண்ணுலகம் சென்றதேனே 
    • ஈடுசெய்ய எதுவுமின்றி இருந்த இடமே தவிக்கையில்
    • உயிர்கொடுத்த தாயே உயிரற்ற ஓளியாய்
    • போனதேனே பொல்லாவியென  புலம்பிதவிக்கின்ற
    • உன் பிள்ளைகளின் துயர்துடைக்க யார்வருவார்?


Sunday 20 December 2020

குட்டிக்குட்டிச் சாரல்......,

பிரிவின் வலி மனதை சுடும்வரை

மரணத்தின் வலி மரணித்தவுடன்

மறைவாகின்றது!!! 

குட்டிக்குட்டிச் சாரல்......,

  •  ஓய்வில் ஒரமாய் ஒரு
  • சிந்தனை ஒராயிரம் உயிர்ஒன்றாய்
  • போனபின்னும் அறிவிருந்தும் தேடியலையும்
  • மகிழ்ச்சி உண்மையானதா !!உயிரைவிட!

குட்டிக்குட்டிச் சாரல்......,

 நிழலின் நியமாய் நிதானித்தே போகின்றது

வாழ்கை!பிடித்தவரின் 

நம்பிக்கைஅழிவென !!புதைத்தபின்னே அறிவிக்கின்றது தேடல்!