Saturday 29 November 2014

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

நாககண்ணியிவள்
நாளும் பொழுதும்
கொண்டதில்லை கொலையாட்டம்!!
நன்மைக்குள்ளும் தீமைக்குள்ளும்
இவள் பாவங்கள் செய்யவில்லை
தன்வாழ்விற்காய்!!
 இவள் உள்ளத்து அழகில்
பலர் தேடிக் கூடியே உறவாய்
சிரித்தனர்  இவளோடு!
பாடிஆடுகையி்ல் பல கண்கள்
பாதைதேடி உயர்ந்தே நின்றனர்
தம் வாழ்வில்!
பசிகண்டு தாயாய் துடித்திவள்
கொடுத்தவுணவின் விசம்
அமிர்தமானது கைகள்பட்டு
தேடியே வழியின்றி தவிந்த இதயங்கள்
வாழவழியமைத்தாள் தான்வாழ
வாழ்கையிளும்!!
விசமாய் அவளிருந்தும்
அமிர்தமாய் வார்த்தைகள்  தொடுத்தே
வாழ்கை பாதையமைந்தாள்
பிறர்சந்தோஷதேடலில்!!
தறுகளை செய்தவர்  விசம்கண்டு
பயம்கொண்டு புலம்புகின்றனர் அவளை
எண்ணி!!எரிகின்றநெருப்பிற்குள்
அக்கினியாகம் நடத்துகின்றாள்
தன்கோவம் தனித்திட
சாப்பலில் உறங்கிடுவதற்குள்
களையெடுப்பாள் பல விசசொடிகளை
மண்ணில்!!

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

பரந்தவான் வெளியில் 
நிலவற்ற  இவள் முகம்
சிவந்ததில்லை     வலியால்!
கார்மேகவான் வெளியில்
மலரில்லா இவள் 
தோகை கலையிழந்ததில்லை
ரசனைக்காய் !
வெள்ளை மேகவான் வெளியில்
கலையிழந்த இவள்
தேகம் ரசனைக்காய் தவறியதில்லை!!
பார்ரினில் பார்வைக்கு புரியா இவள்வானத்து 
உணர்வை  யாரும்
கண்டதில்லை ஓர்நாளும்!!ஆனால்
நாடகத்தால் அவள் பாவத்தின்
பழிவாங்களில் கற்றுகொண்டால்
தன் வாழ்வின் உண்மையை
அவனிடத்தில்!!!

Wednesday 19 November 2014

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

கவிநடை இசைவழி
குரலோசை பாவையிவள்
கொஞ்சும் மழலை!!
மொழியழகு தனிக்கவி
பொருள்ச்சுவை தனிவழி
வனஅமைதிக் கருங்குயில்!!
கானக வானம்பாடி
மூங்கில் தென்றல் தொடும் 
 உயிரோசை
கரைபுரளா அலைவழித் தாமரை!!
நாணல் புதர் குறிமாற பசுமனம்
பாலைவன  நிழல் மரம்
நிலையற்ற மனிமனச்சாட்சி
நிலைகொள்  இதயத்தின்
உயிர்த்துடிப்பு !
நிலையற்றவாழ்வின்நிலையானநேசம்!
உடைந்தளும் வலிகளின் நேசக்கரத்துடிப்பு
நேசமற்றவர்  பொரும்தோல்வி
பொய்களின் பெருநெருப்பு
உண்மையின் அரவணைப்பு!!

Sunday 9 November 2014

சுடர்கள்

மண்வாசனை
நந்தவனப்பூவின் உதிர்பூக்களோ!
உதிரத்தின்
 உடலாய் விளைந்திட்ட
உணர்ச்சிப்பூக்களோ!!
உள்ளத்தின்
அசைகளைஉரித்திட்டு
உவமைக்குஉயிரான
உறவுப்பூக்களே!!
வெற்றி சேதியை
 கொட்டி முழக்க திட்ட கொண்ட
தியகிகளின் ஆன்மாவின்
திகதிப்பூக்களே!!
நிலைகொள்ளஆயுள்மனிதனின்
நிலையான ஆயுள்பெற்ற
உண்மைபை்பூக்களே!!
எழுகின்ற விடுதலையை
ஏந்திக்கொள்ள  உங்கள்
ஜென்மங்கள் வேண்டுமையா1!

குட்டிக்குட்டிச் சாரல்......,

உன் இருள்
கொண்ட வாழ்வில்
நிலவொளி நான்!!
உன் மிழ்ச்சிபூக்களில்
சூரியப்பூ நான் !!
உன்கண்ணீர்துளிகளில்
அழ்கடல் மீன் நான்!!
உன் இன்பங்களில்
இதழ்ரோஜா நான்!!
உன் வலிகளில் தொட்டெழுப்பும்
தென்றலும் நானோ!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

உலகதில் ஒர் பெண்ணின்
சிறப்பிற்கு!!  ஒர்
நல்ல ஆசிரியர்சிறந்தகணவரோ!!
உலகில் ஓர் பெண்ணின்
நல்ல அழகிற்கும்
சிறந்த ரசிகன் நல்ல கணவரோ!!
உலகில் ஒர் பெண்ணின்
 உயர்ந்தஅழிவிற்கும்
சிறந்த நடிகன் உ ண்மைக் கணவரோ!!

Saturday 8 November 2014

தமிழ்ச்சுடர்......

கார்த்திகையே எழுந்திடு
ஓர் எரிதணல் காற்றாய்
அக்கினிதாண்டவமாடிட
கார்த்திகையே எழுந்திடு!!
 
சிதையுண்ட சிதைகளை
சேமித்தவர் சிதையாது
சிறந்திட ஒர்வழித்துணையாய்
கார்திகையே எழுந்திடு

தீபந்தங்களை சேகரிக்கும்
தீபக்காற்றே தமிழ்நெஞசத்து
நெஞசாங்கூட்டிற்குகள்
அணல்நெருப்பினை ஏற்றிட
கார்திகையாய் எழுந்திடு

அழிந்த ஆன்மாவின்
அழியா விடுதலைத்தீபமே
பொழிந்த கண்ணீர்மழையிலும்
நணையா தீபமாய் பரந்ததேசந்து
கனவினை  எடுத்துச் சொல்லிட
அணல் காற்றாய் எங்கும் பரந்திடு!!


Thursday 6 November 2014

குட்டிக்குட்டிச் சாரல்......,

உலகத்தைவென்றிட
நீ எடுத்த உண்மையற்ற
தன்மைகள் உன்னை அழித்திட
உன்னை  காக்கின்றது இப்போது
உண்மை உடையுவரை நீ
சிறந்தவன்  மறவாதே!!!

குட்டிக்குட்டிச் சாரல்......,



உன்னை நேசித்த என்
இதயத்தையே வெறுக்கின்றேன்
உன்னால் !!
என்னைக் கல்லென்று
 திட்டினாலும் கவலையில்லை
உன் நினைவுகளை சுமக்கும்
என் இதயத்தின் வலிகளை விட
என்  உடலுக்கு மரணமே  சிறந்தது
உன்னை விட என்பதால்!!!!

Saturday 1 November 2014

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

மலர்கள்தந்தகாதல்
புன்னகைக்கும் இதழ்கள்
புல்வெளி தந்தகாதல்
கால்தழுவும் பனித்துளிகள்
தென்றல் தந்தகாதல்
தலைசாய்க்கும் வசந்தங்கள்
மழைத்துளிதந்தகாதல்
விழிமின்னும் மின்னல்ஒளிகள்
குழந்தை தந்தகாதல்
சுமைமறந்தநேசச்செண்டு
மனிதன் தந்த காதல்
காலம்அழித்த பலகதைகள்
ஒருவன் எழுதும் காதல்
எழமுடியா இயவலி
ஒருத்தி இழந்த காதல்
உயிரோடு எழுப்பிய வர்ணச்சமாதி!!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

 இதயதின்
சுமைதாங்கா பாவையிவள்
தனியேநின்றாள் தன்னையே
தரித்திரமாய் எண்ணியே!! 

சுமையென எண்ணியவன்
சுமந்திடஆசையின்றி பாலைவனதில்
ஒர் பச்சைவர்ண நாடகத்தால்
பலியெடுத்து தீயிட்டுபகைமுடித்தான்
 தன்திறமையால்