Friday 14 October 2011

பூ

இதயதாமரையில்
கொலுவாய் நானிருந்தோன்
உலகின் கண்கள் எல்லாம்
நம்மை ஒன்றாய் காணவோ!!
தன்னம்தனிமையிலும்
தவறியும் தவறுசொய்யாது
உனக்குள் வாழ்ந்தும்
என்னை தவறென்று நினைத்து
தவறவிட்டு விட்டாய் மண்ணில்!!
தவறி விழுந்தாலும்
தவறும் காலம் வரைஅன்போ
தவறா நினைவாய்  நீயோ
எனக்குள் ...................

Friday 7 October 2011

இசையின் சுவாசமாய் ஓர் சாரல்................,



 அசையும் காற்றின் அலையிடம்

மெல்ல கவியெழுதி கொடுத்தேன்


உறைந்த உணர்வின் நரம்பினை

மெல்லிய துளையிட்டு இசையொன்றை
இசைந்திட வேண்டி!!
அறுந்த உணர்வால் இறுகிய பாறை
 உன்னைக் கொஞ்சம்
அசைத்தசைத்து இழுத்திட!
எனக்காய்!! கொஞ்சம்
தென்றல் !
உதிர்த்த இசையில் அசைந்த
 உன் இதயத்தில் எழுந்த என்    சுவாசம்     
எங்கோ நான் தொலைத்ததாய்  
   உன்
 வார்தைகளாய் என் காதுகளில்
கடித்த நிமிடம் உறைந்தது என் உயிர்
அறுந்தது என் நரம்பு  இப்போ
இசையாய் நீயிருந்தும் கவியாய் நானிருந்தும்
ராகங்கள்    இசைத்திட முடியா     
வீணையாகின்றோம் நாம்!!!!!!


தாய்மடி

மண்ணில்பெண் தேடுவது
என்னவென்றறியாத காலதத்தில்
இதுவென்றது  காலச்சாரம்!!

அது பிழையென்றபெண்ணின்
இதயவாசலை!! மெல்ல திறந்து
தானென்றது அறிவுக்கண்!!

இயற்கைவாசல் தான் திறந்து
 சொல்லாது பெண்ணிற்காய்
கொடுத்தது அதுவல்ல இதுனென்று!!

எதையெடுப்பது என்றுதெரியாத
பெண்ணின் கைகளுக்குள் சிக்கிக்கொண்ட
இவ்வுலகிற்குள் நான் என்றது பத்துமாதம்!!

கடத்த பருவம் கண்ட ஆண்மை
பொய்யென்றது !சிதைக்கப்பட்ட பெண்மை
 வேடிக்காய் பார்க்கின்றது
 வரம்கொடுத்த இறையை  எங்கு காணவில்லை
!!
எங்கேயாவது தேடிபிடிப்பது என்று அழைகின்றது
காவிதரித்தஆண்மை !!!

 கொண்ட வாழ்வில் சிகரங்கள்
நாங்கள் எங்கின்றது பெண்மை!
 நாங்கள் இல்லா உங்கள் வாழ்வில்
எங்கே வரும் இனிமையென்று
வாதிடுகின்றது ஆண்மை !!!

வேடிக்கையான இறைவன்
ஒன்றுக்குள் ஒன்றைவைத்து
வேதனையாய் சிரிக்கின்றான் சிலையாய்!!

ஒன்பது நாள் என்ன ஓராயிரம் நாட்கள் விரதம்
கொண்டாலும் முடிந்ததும்         
விடித்ததும் யார்பெரிது என்பதே கேள்ளி?ஃ

தவம்

தென்றலின் வருடல்
சுறாவளியின் தொடுதலானது
விட்டிடாது  பற்றிய ஆணவம்!!..

இருவேற திசை காற்றில்
இருமனதின் மோதல் இன்பதின்
பாதையில் தேற்றிட்டஆணவம்!!....

பாதையோடு சேர்ந்து நடந்திட
முடியா இருகரை வழியில்
இருதயம்  இணைத்தகை வாதத்தால்
தொலைந்த மகிழ்ச்சி பிடி  ஆணவம்.!!..

ஒன்றுக்கு ஒன்று போட்டியிட்டு
ஒன்றை ஒன்று ஜெயித்ததில் கிடைத்த
வெற்றி தொலைத்தது புரியா ஆணவம்!!

நின்று கேட்டு நடக்கா தன்னை இழந்த
மனிதன் தொலைத்து எடுத்த கற்பனை
எழுதி முடித்த தன்னம்பிக்கை ஆணவம்!!!

முட்டி மோதியுடைத்த கருணையில்லா
தவமாய் தமிழன்   பெற்றதாய் எண்ணிடும்
முட்டாள் சிந்தனையின் தோல்வி ஒருவருக்கும்
உதவா ஆணவத்திற்கே வெற்றியாகின்றது.............

Thursday 29 September 2011

தொண்டன்

கொடுத்த தாய்பாலில்
சுரந்த வீரம் எழுந்து
வேங்கையானதால்!!

பிறந்தமண்ணில் விடுதலை தேடி
பிடித்த கைகளுக்குள் நிறுந்திய
தலைவர்!! ஜெயித்திட தன்னுடல்
கிழித்தெடுத்து வைத்திட்ட
வெற்றித்திலகம் அழித்திட முன்
கிடைத்த வெற்றி  பெற்ற தாயின்
கற்புக்கு காவலில்லா தேசம்......
மண்ணில் மக்களை காத்திட
வந்த தலைவன் முன்னோ தொண்டன்
காதுகளில் ஒலிந்த முதல்  செய்தி ..........


Sunday 25 September 2011

எப்படி உன்னால்..........

என்
இதயத்துடிப்பு நீ
என்றாய்!!
என்
உயிரின் சத்தம் நீ
என்றாய்!
என்
உணர்வின்நாடியோ நீ
என்றாய்!
என்
இரவு பகலும் நீ
என்றாய்!
என்
கனவும் நினைவும் நீ
என்றாய்!
என்
உறக்கமும் விழிப்பும் நீ
என்றாய்!
எப்பவும் எல்லாமே நீ
என்றாயோ!
 எப்படி முடிந்தது
உன்னால் என்னை  எப்பவும்
மறந்தோ வாழ!!
அப்போ நீ
சொன்னதெல்லாம் ...............
அந்த நிடத்து பொய்களா?

Thursday 18 August 2011

விளையாட்டாய் ஒர் விதி

பஞ்சதிலும் பஞ்சம் மறக்க
பஞ்சனை தலையணையாய்
ஒர் காதல்  கற்பனை வார்த்தைக்கு
கைகொடுத்து பசியகற்றி
கனவாய் உயிர் பெற்று
உயிரோடு விளையாட !!
உணர்வு மயங்கி   மறத்து
உயிரோடு உயிர் சேர்ந்து
உயிருக்குள் உயிர்பெற்று
உறவாகி கருவாகி கனியாகி
நிறை நிலாவாகி ஒளிபெற!!
குறைகண்டு பணம் தேடி
பதவிபெற்று அசிங்கமாகி
விரட்டிய விதியிலோ  அவமானச்சின்னம்
அடிவயிறு  வலியாகி முத்தாகி
பூமியில்   பூத்தபோது!!
பசிதுறந்த   கேள்வியாய்
 தலைவிதி தான் நானாகி
பாதையோர அழுக்காய்
உயிர் துறந்த பெண்மைமுன்
மானம் தொலைத்த காமமாய்
பாடம் சொன்னது இது விதியென்று...
யார் இதை நம்புவார்?

சொந்தம்

பலசொந்தம் கூடி நிக்க
சிலசொந்தம் பகைத்து நிக்க
உறவாகி நின்றசொந்தம்
விலகிப்போக !!

விடைதேடிகளைத்த சொந்தம்
ஊரைக் கூட்டி கதைபேச
உயிரில் கலந்த சொந்தம்
எட்ட நின்று கண்ணீர்விட!!

சொத்துகள் சொந்தக்காரராய்
ஆயுள்காலப் பாதபூசைசெய்ய
அழகான தவறுகள் அதற்குள்
மறைந்து ஆறாம் அறிவை காக்க!!

உனக்கும் எனக்குமான மண்ணில்
கற்களும் முற்களும் என்னைத்தாக்க
பூக்களும் புல்வெளியும் உன்னைக்காக்க!!

புரிந்தது எனக்கும் என்னிடம்
இல்லத பணமும் பதவியும்
உன்னிடம் உண்டானதால்
என்னைக்காக்கா அனைத்தும்
உன்னைக்காப்பது!!                 

வாசல்ப்படி

சுறற்றியவேலிக்குள்
சுவராய்பெற்றோர்
கட்டி நின்று காத்தபெண்கள்
 விடுதலை காற்று வீசிய திசையில்
வேண்டிய திசைகடந்து பறந்தால்!!

திசைகள் மாறியவாழ்வில்
சிதைகின்ற குடும்பங்கள்
நித்தமும் உழைத்த ஆண்மகனை
அவமான சின்னமாக்கியகதை
வீட்டிற்கு வீடு வாசல்படியானது!!

வாசல் தாண்டி இல்லாத குறைகூறி
குறையில்லா மகான்தேடி ஓடும் பெண்கள்
விட்ட பிள்ளையால்..அப்பா முருகனாய்
அம்மா வள்ளியாய் நித்தம் நித்தம்
 தேடுவது அப்பாவும் அம்மாவும்!!!

உழைத்து  உழைத்து சேர்த்த பணத்தின்
உயர்ந்த ஆடம்பரம் தேடிய  சந்தோஷம்
 வீடுக்கு வீடுவாசல்ப் படியானது இன்று!!!


Sunday 14 August 2011

என் இலக்கணபிழைகளில் ஓர் இலக்கியம்,

அன்னனையர் தினம்


முத்தாடாது எடுத்தமுத்தவள்
தந்தியாடிய தரைநிலவாய்
என் உயிருக்குள் நின்றாடிட வந்தவள்

திட்டியாடிய பொழுதுகள்
வந்து வந்து வதைத்தாடிடும்

தொட்லிட்ட விதியவள்!
துயரத்துளிகளாகி  மெல்லென ஆட்டும்
கட்டி வைத்த தைரியங்களை
கட்டவிழத்து உடைப்பவள்!

தொட்டணைத்த கைகள்
பிடியின்றி தவிக்க
தேற்றிடா மனதுக்குள்
சோர்வாய் வந்து சுகமாய் உறங்குபவள்!
சொல்லொடுத்து பாமாலை
பாடிய இதயமும் துடிப்பிழந்து
தவிக்கின்றது தாமையால்..............................

கனவானகற்சிலை......

என் நிழலுக்கு
நிழலொன தொடர்ந்த
நிழலான உணர்வென்று
நியமானச் சொல்லி
கனவென்றை உள்ளோடு
விதையாக்கி என் நினைவோடு
நிழலாகிக் கதைபடிக்க!!

அறிவிலந்த மனமிது
அதற்காய் காத்திருந்து
காத்திருந்து சுகமிழந்து
தான் தவிக்க!!

சொல்லியும் சொல்லாமலும்
சுமையான வாழ்வது
உயிர்கொண்ட உணர்வால்
மெல்ல மெல்ல தனக்குளுடைய!!

பெண்ணிதயம்  தானிழந்து
தன்யையே தானழித்து
தனக்குள் தான் தொலைய            
மறந்ததிடா நினைவுகள்
உணர்வைக் கல்லாகி
கொஞ்சம் கொஞ்சமாய்
தன்னையோ கல்லாக்கி
கற்சிலைகனவாகின்றது.............................

யாரிவள்.........

கதிரவன் கனிமொழி
காரிருள் ஒளிமொழி
காந்தவில்மொழி
தென்றலின் அசைமொழி
பூக்களின் புதுமொழி
இறைவனின் அருள்மொழி!!
காகிதப்பொருள்மொழி
கல்லின் கூர்மொழி
பாதையின் பாதமொழி
முற்களின் முதல்மொழி
முவேந்தர் சொல்மொழி
முதுமையின் தாய்மொழி
மூத்தவர் பண்புமொழி!!
அறிவில்லா பார்வைமொழி
அடைக்கல பறவைமொழி
சிந்தனை சிறகுமொழி
சிந்திக்கா இதயமொழி
இன்பத்தின் சொல்மொழி!!
சொல்லிடாத் துயர்மொழி
 புன்னகைக் கண்ணீர்  மொழி
களைத்திடா கதைமொழி
கவிதையின் விழிமொழி
கருணையுள்ளோர் அன்புமொழி.....



Saturday 16 July 2011

பொன்னாள்...............

நின்றிட தொடரில்
நின்று ஆடும் ஆனந்தம்
வந்து  கொண்டு  இன்புற்று
மகிழ்த்திடும்  பென்னாள்!!

வருத்தமும் வேதனையும்
வருந்தியோ நடந்தாலும்
பெற்றது கொடுத்தம்
பெரின்பமானால் விட்டிட்டுதொடரும் பொன்னாள்!!

கற்றதும் அறிவும் கூடிய
பழமையும் முதுமையும்
பக்கத்துக்கு பக்கம் பணிந்தே
இருந்தால் பதவியும் பெருமையும்
கூடவே உயர்த்தி இனிதாய் சிரிக்கும் பொன்னாள்!!

இல்லாதவனும் இருபவனும்
இருந்தாலும் தொல்லை இல்லாது
போனாலும் தொல்லையென கூறிடும்
இல்லாதெரியும் ஒளி! எரியும் சந்தனத்தின்
 வாசமாய் சேர்ந்தே ஓர்திரியில்
எரிந்தால்என்னாலும் பொன்னாளோ!!!

கோடிக்காலத்து இன்பத்தை
கொண்டே வாழும் தொடரில்
நினைந்து  நினைந்து மகிழும்
பொன்னானனாள்  மண்ணில்
உள்ளவரை வந்து வந்து பேசும்இன்னாளாய்!!!!..............

Friday 8 July 2011

என் இலக்கணபிழைகளில் ஓர் இலக்கியம்,

காத்திருக்கின்றேன்.......

புன்னகைத்துப் பூக் கொத்தேந்தி
என்னைத்தேடிடும்
உன்னை வரவேற்று காத்திருக்கின்றேன்!!
எப்போ!! என்னைக் கொள்ளையடித்து
கொண்டு போக வருவாய்!!
இந்த மனிதரைப்போல்
 வஞ்சித்து ஏமாற்றி
வதையிட்டு ரசித்து
பொய்யாய்  கதையிட்டு
சித்திரவதை செய்து
நாடகமாடாது  !   
தாலாட்டி உறங்க வைத்து
மெல்லத் தூங்கவைத்துத்தூக்கி  போக
 வருவாயா?மரணமே
உனக்காய்! காத்திருக்கின்றேன்!!!!        

Monday 7 March 2011

ஜோதி நிலா

கண்ணன் தோட்டத்து பூவிக்காய்
பூத்திட்ட மல்லிகை 
கண்ணன் நெஞ்சத்து  முற்றத்தில்
கொஞ்சி கெஞ்சி சிரிக்கின்றது
இன்று மன்னவனுக்காய்!!!

அள்ளிக் கொள்ளும் பொறுமை
அள்ளிக்கொடுக்கும் மகிழ்ச்சி
கண்ணன் கூட்டி கழித்து ப்பொருக்கிய
கனவில்சிறந்து சிரிந்து சிந்துகின்றது
அவள் சிரிப்பை ப்போல்!! 

கண்ணன் காண வாழ்வின் 
வெற்றித் தேடலானவள்
அன்பால் இல்லம் அமைத்து
கொண்டவன் பண்போடு தன்னைக் கொடுத்து
தெம்மாங்கு பாட்டோடு பண்ணாகி 
கண்ணன் வாழ்விற்கு ஒளியாகி
நின்று சிரிக்கின்றாள் இன்று!!

திகட்டாத இன்பத்தை வர்ணமாக்கி
வைகரைக்கு கொடுத்தவள் இல்லத்தோடு
எண்ணங்களும் எண்ணியபடி
எண்ணியவன் எண்ணத்தோடு என்றும்
பூகழாய் சிந்தியோ  சிரிக்கின்றாள் இன்று

ஒன்றுமில்லா எண்ணத்தையும் ஒன்றாக்கி
ஒன்றுமில்லாபெண்ணின்றி 
கோடிபொன்னுக்கோ பொண்ணாகி !
!கண்ணன் கண்களின் ஒளியாகி
ஆண்டுகள் கடந்தும் கடந்திடா இளமையோடு
ஆண்டவன் வரமாய் தந்த வாழ்வில் வரமாய் 
சிரிக்கின்றாள் இன்று
ஆண்டவனோ வரமாய் தொடர
தொடரட்டும் ஒளியான வாழ்வு அவளுக்கு!!!!!



Sunday 13 February 2011

பூவோடு மோதினாலும் காதல் மெல்லபூந்திடும்……



காதலால் வந்த காயத்தால் 
தோற்ற மோதலால் வந்த 
ஊடலால் கொண்ட கோவத்தால்
வந்த வாதத்தால் பெண்ணோடு
தொலைத்த வாழ்வை மீட்டிட 
காயத்தை ஆற்றிட தேற்றிட
மீண்டும் வாழ்ந்திட தேடலாய்
வந்த பெண்ணின் கூடலான பாசம்
காதலாய் மாறி மாற்றமாய் தோன்றி
மாற்றமில்லா ஆணையும் மாற்றுமென்றால்

காதல் கொண்ட கோபத்தால்
வந்த மோதல் தான் வேண்டுமா?
கூடலான  கேடிக் கணக்கில்
தேடலாய்  தொலைந்த ஆணைனின்     
 காதல் மொழி   வீசும் வார்த்தையும்         
வையத்துள் எந்த  பெண்ணையும்   
மோஷமாய் தேற்றி அழித்திடும் போது

இங்கே யார்மீதுதப்பு சொல்வாய்?

மீண்டும்  மீண்டும்  பூத்திடம் காதல்    
 மாற்றமே இல்லாமல் தேடி
வந்திடும் மனிதா நீ தோற்றாலும் 
வீணோ வாட்டமாய் பேசி 
வார்த்தையாய்   தொலைந்து  
உணர்ச்சியாய் அழிந்து 
ஜடமாய் வாழ்திட  காதலில்லாத் தேசமெது?

மனிதனோடு காதலும் 
பெண்மையோடும் வாழ்வும்
பூமியோடு ஈர்ப்பும்    உள்ளவரை         
 உள்ளத்தை  எங்கு தொலைத்தாலும்    
உன்னையோ தொடரும் காதல்
காமந்தை வென்று காவியே அனிந்தாலும்……………..

Friday 11 February 2011

உதிர்ந்தாடிடா என் மதியோ………



எழுதுகோல் ஏந்திய
எழுத்தில்லா சித்திரதிற்குள்
புரியா கவியாகிய என் 
புதுமைத் தந்துவமே!!

புதுமைக்கு புதுமை சொல்லி
இனிய வாழ்வை எட்ட வைத்து
எட்டவோ நின்றாலும் நீ என்றும்
முழுநிலவோ!!

நிந்தனைகள் நின்மதியை
நித்தம் நிறைத்தாடினாலும்!!
என் மதி யோடு நின்தனை செய்ய
உன் மதியில் நின்றாடும் நின்மதியாய்
வந்தாடும் என் பொழுதுக்குள் நீ என்றும்
முழு நிலவோ!!

விட்டோடிடும் காலத்திலும் 
விட்டிடா வலிகள் வந்தாடிடும்
பொழுதுகளில் என்னோடு
புன்னகைக்கா உன் மதியை விரட்டியாட
சொல்லியாடும் என் பொய் கூட 
புன்னகைக்காக உன் மதியை வீழ்ந்திட தான்!!!
என்றாலும்!!! நீ என் முழுநிலவோ!!

என்னில் வந்த கனவினை
 உன்னில் வைத்து
உன்னோடு விளையாடினாலும்
என்னோடு தோன்றும் கோபம் கூட
கதைபேச கண்ணின்மணி நீ சிரிக்க தான்!!
என் அழகை ரசிக்கா உன் மதியை
ரசிக்கும் என் மனதிற்கு என்றும்
நீ முழு நிலவோ!!!!!!

Saturday 1 January 2011

கற்றும் தவழும் வாழ்வு விட்டாலும் தொடரும்……


முடிந்த வருடம் விட்டுச் சென்றதை
வந்த வருடம் வொல்லித்தொடர
கனிந்த கனவு களைத்து சென்றதை
புதிய கனவு விட்டுத்தொடர
கற்ற காயம் தத்த வலியை
பெற்ற காயம் வாடித் தொடர
தொட்டு விட்டு உடைந்த மனசு
எண்ணி எண்ணி உறுதியாய் தொடர
கரைத்த காலம் தந்த வயது
தனாய் கூடியே தொடர
ஏமாற்றம் அனுபவமாய் மாற்றி மாற்றி
மாற்றமாய் தொடர 
மாற்றங்கள் மாற்றத்தால் 
மாற்றத்தைத்  தேடித்தேடி தொடர
பிழையாகி சரியாகி வாழ்வு 
அழிந்தழிந்து தொடர்ந்தாலும்
இறைவனின் கணக்கு மட்டும்
வாழ்வோடு சரியாக தொடர்கின்றது
மாற்றமே இல்லாது…………………………