Saturday 27 July 2013

துறல்-------------

மெல்லிடைவாட
நினைவிடை சாய்ந்தாட
மனதிடையில் சில்லென்று
துறல் போட
வில்லென சாயம்
வந்து  நீயோ மின்ன
கனவின்றி நினைவின்றி
பித்தென பிடித்திட்ட
உன் காதல் சற்றென
குறைந்தாலும் பற்றென
பற்றி தொட்டணைத்து
தோல்சாய்த்து விட்ப்பிரியாது
உயிருக்குள்  நனைக்கின்றது!!
மலர்கின்றது!! ’’கைபிடித்து
நடக்கின்றது!! தவிக்கின்றது!!
நீ !!என் அருகில் இல்லாதபோதும்
இது தான் காதலா!!!


Tuesday 23 July 2013

மாயக்கண்ணாடி

அநீதியின் பக்கள்களில்
எழுபட்ட  உயிர்களின்
இரத்தின் சுவடுகள்
வரைத்திட்ட ஓவியம்
தமிழன்!!
அடிமைசங்களியில்
தொடுக்கபடும் சரித்திரகொக்கிகளாய்
உலகம் எமக்காய் உருவாக்கியது
ஏமாற்றுச்சிறை !!
தெரிந்தும்தெரியாமலும் இன்னும்
தமிழன் நாதியற்ற பக்கங்களிலே
தேடுகின்றன் !!
உரிமையேடுகளை மாற்றத்தேடிதேடி
தொலைவது  தன்னையோ
எண்ணிய தழிழனின் சுயநலபக்கங்களோ!!
மண்டியிட்டு மண்றாடி எழுந்திட்டு
போராடி இன்னும் தோற்றதன்
வலிகளோ தமிழன் தன்னையே
தொலைத்திட்ட வெற்று பக்களில்!!!
இரத்தசுவடுகளில் காண வழியின்
சரித்திரமே மோதிமோதி ஆண்டுகள்
தொலைத்திட்டோம் ஆனாலும் விடுதலை
சிறையில் அடைபட்டே கிடக்கின்றது
ஏன் !!இன்னும் சுயநலவாதிகளின்
கைகளிலே நாதியின்றி வாசம்
செய்வதால்!உடைந்திடும்
போது உலகே அழியும் எம் விடுதலையால்!!!
மாற்றிட உண்மை மாண்டவரின் 
அழுகுரல் சத்தியம்!!!!


Saturday 20 July 2013

ராதையின் விழி பேசும் சாரல்,

காதல்பெண்ணிவள் கண்ணன்
கைகளுக்கே கவியனவள்!
கூடலும் ஊடலும் இவளின்
காதலுக்கே தனியழகு
கோடிமலர்களில் கண்ணன்
கொஞ்சும் மலரழகு
பாரினில் இவள் போல் ஓரழகு
கண்கள் காண மனழகு!!

கண்ணன் தீண்டிபார்கையில்
ஆகாக !!நாணசிரிப்பழகு
கூடிப்பேசையில் கூடுவோர் முகழகு!
பாவையிவளின் பால்முகம்
பார்க்கையில்   மீண்டிடா
தனியழகு !கண்ணன்
காதலுக்குள் வாழ்வாய்வாழ வாழ்வழகு
கண்ணன் மலரிக்குள் நிற்கையில்
மலர்முகசிரிப்பில் இவளழகு
கண்ணன் குழலொடு சேர்கையில்
இதயத்து இசையழகு
கண்ணன் மார்வோடு சேர்கையில்
வைத்துப்  பொருளழகு
கண்ணன் கைபிடித்து நடக்கையில்
அமைதி வாழ்விற்கு சகியழகு
கண்ணன் துன்பத்து துடைக்கையில்
இன்பத்து சுவையழகு
கண்ணன் கொண்டிடடும் துணையழகு
இணையழகு
இருவாழும் காதலே தனியழகு!!!

Friday 19 July 2013

என் இலக்கணபிழைகளில் ஓர் இலக்கியம்,

ஊமையான உணர்வுகள்
மௌனமாய் அழுகின்றது
என்னுள் ஏன் !!
தொட்டமடிதொடரா
நினைவுக் காலம்அழித்தகனவு
மாறாமல் என்னுள் ஏன்!!
விழிமூடா சோகத்தின் வழியதை
வலியாக எழுதியவிதி
வரைந்த ஓவியமானது
என்னுள் ஏன்!!
வர்ணங்கள் இழந்து தனியாய்
தவிக்கு புலம்பலும் புது காலத்தின்
சிதைவாய் என்னுள் ஏன்!!
பாவியாய் பிறந்தாலும் மண்ணில்
பாவையாய் பிறந்திடலாகாது
கோடியின்னல் தாங்கி
கொடுமையான வாழ்விலும்
நிழலாய் துரத்துவது ஏமாற்றமும்
மாற்றமே இல்லாவாழ்வுமே
என்னுள் ஏன்!!
யார் யாரோ சொன்னார் போராட
போராடி போராடி பெற்றதெல்லாம்
மனதின் காயத்து வடுக்களாய்
தோண்ற தோண்ற என்னுள் ஏன்!!

காலத்தால் பெற்றகாயத்தால்
மற்றவர் சொன்னதெல்லாம்
பாவிசெய்த பாவத்தால் வந்த
கொடுமைகளாய் இன்னும் என்னுள் ஏன்!
பாவியிவள் செய்த பாவம் தான் என்ன!!
மண்ணில் பெண்ணாய் பிறந்ததை தவிர!!



Monday 8 July 2013

விழி கண்டு மொழி பேசும் சாரல்.....


ஆண்மையின் கனவுலகிற்குள்
பெண்மைக்கு என்றுமில்லை சிறப்பு  !!
பூமி எதுரைத்தெரியவில்லை ஆனால்
ஆண்மையோ!! நீ சீதனச்சந்தையை
 நிறுத்தும் வரை!!

ஆண்மையின் முட்டள் சிந்தனை
இன்று பெண்மைக்கு உடலே
மூலதனமாச்சி!!இன்னமும்
ஏன் ஆண்மைக்கு வீரபேச்சு!!
ஒழுக்கத்தை இழந்துபெண்மைக்கு
சொன்னதெல்லாம் இன்று
மண்ணில் தொலைத்து நாளாச்சி!!

கோழையாய்  நீ மாறி நுற்றாண்டு
கடந்தாச்சி  
உழைக்கும் பணத்தை கூட
ஒர் இரவு காத்திட முடியாமல் போச்சு

இரவிற்காய்  தேடி த்தேடி காவியும்
பொய்யாச்சி 
எதற்குள்ளும் மறைந்திட
முடியா முகமே உனதாச்சி !!
எந்தனை
ஆண்டுகள் ஆனாலும் மாற்றி டாப்பேச்சு
பொய்யான  வாழ்விற்கு உதவாத வழிகாட்டி!!

அன்பை காட்டி அடிமையாக்கி
அடைத்ததெல்லாம் அகதியாய்
திரியலாச்சு!!
எலும்பை காட்டி ஏமாற்றியதெல்லாம்
இன்று ஐந்திற்கு மூன்று பெண்மைக்கு
புரியலாச்சி இன்னும்
ஏதற்கையா மூக்காட்டு முடிச்சி!!!
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!1



மண்ணுக்குள் புதைந்த
உடல் தேடி ஏன் வந்தாய்
மீண்டும் அதற்கு ஏன்
உயிர்  கொடுத்தாய்
மெல்ல விழித்து உன்னை
கண்ட விழியிரண்டை சந்தேகத்தால்
ஏன் சிதைத்தாய்!!!
உயிரற்ற உடலென்று தெரிந்தும்
உன்  உணர்வைக்கொடுத்து
உயிராக்கி உணர்வுற்ற போது
 மெல்ல மெல்ல சிதைதழித்தாய்
உறவில்லா உறவில் என்னை
தாங்கிய உன் வார்த்தைகளால்
உடைந்த இதயம் மெல்ல மெல்ல
உயிரை இழக்கும் போது
இன்று வந்து எதை தேடுகின்றாய்!!

 உயிர் கொடுத்து உயிர்ரழித்து
சகதியில் போட்டவனும் நீயோ
அதே மண்ணுக்குள் இன்று
உயிர்கொண்ட உடலோடுமௌனமாய்
தன்னையோ அழித்தபடி  என் உயிர்!!
என்றாவது ஒர்நாள்  ஓய்விற்காய்
என் கல்லறையில்  
அமர்ந்து உன்னை ரசிந்து பார்
இறுதிவரை ஒரு உயிர் உனக்காய் வாழ்தது
புரியும்!!!