Sunday 23 December 2007

மழை

என் மீது நீ படும்
போதெல்லாம்
என் உடல்
சிலிர்க்கின்றது
ஏனோ
நான் பூக்களாய்
நனைகின்றேன்
என்னை தொட்டு சிதறும்
உன் சிதறல்கள்
என்னை விட்டு பிரியா
கவிதைகளானது
***
தென்றலால் குளிர்ந்து
மழையென நனைத்து
வானவில்லின் வர்ணத்தோடு
பூமிதனில் பூத்து
சுவாசத்தை வருடி
நதியில் நடை பழகி
கடலில் கலந்து
சூரியத் தீண்டலால்
மீண்டும்
மேகமாய் மறைகின்றாள்!

நினைவுகள்

என் உயிரே உன் பெயரை
மூங்கில் காடு என்
காதோடு இசைக்க
தொலை தூரத்து
வானத்தைப் போல்
தொலைந்திடா நிலவாய்
உன் நினைவுகள்
வந்து வந்து போக
அந்தி
மாலைப்பொழுதை
வெறுக்கின்றேன்
உன் நினைவால்

***
என்னேடு கலந்திட்ட
உன் விம்பங்கள்
என் இதயத்தில்
முள்ளாய் தைக்க
என் உயிர்
உனக்காய் துடிக்கின்றது
உன் நினைவால்
***
உன் ஞாபங்கள்
என் மெளனத்திற்குள்
மீட்கப்படுகின்றது
ஏன் தெரியுமா?
அதுகூட சுகமான நினைவுகள்
என்பதால்.....

***
அன்பால் அவளைஅணைத்து
தன் இதயக்கோவில்
அவள் உருவம் பதித்தவனின்
சிதறுகின்ற கற்பனையும்
உதிர்கின்ற பூக்களும்
அவன் முகம் காட்ட
அவன் நினைவைச் சொல்லும்
அவள் கனவுகளை
தென்றல் காற்றிடம
சொன்னாள்
அவன் காற்றோடு இருப்பதால்

***
எப்படி முடிந்தது
உனக்கு என்
நினைவுகளை
மறந்திட..
எனக்கு
சொல்லி தர மறந்து
விட்டாயே
உன்
நினைவுகளை
நான் மறந்திட
***
என்
மனச்சிறையில்
அவன் நினைவுகள்
தென்றலால் பதிவு
செய்து
சுழல் காற்றாய்
சுற்ற.....
என்னை அவன்
தீண்டி
அவன் வாசத்தை
எனக்குள் சுற்ற விட்டு
என் இதயத்தின்
நாளங்களை அவன்
நினைவென்னும்
சுழல்காற்றால்
பிடிங்கிச்சென்று
மீட்டுகின்றான்
எனக்காய் யாழை
**
பசுமரத்தாணியாய்
அவன் நினைவு
எனைத் துரத்த
பார்க்குமிடமெங்கும்
அவன் உருவம்
விம்பமாய்த் தோன்ற
பாவையிவள் தவித்தாள்
கண்ணிருந்தும் குருடா

பிரிவு

எனக்காய் நீ தந்த
சின்னச் சின்ன
மகிழ்ச்சிகளை
நான் அச்சத்தோடு
ரசிக்கின்றேன்

ஏன் தெரியுமா?
சண்டை வந்தால்
எனைப் பிரிந்து
விடுவாயோ என்று!!

பிரிந்து பிரிந்து
பிரிவையே வெறுத்து
விட்டேன் அன்பே
உன்னை பிரியவேண்டாமே என
நான் பிரிந்தேயிருக்கின்றேன்
என்றும்.....

****
உறவோடு உனைத்தேடி
உறவாகி நானிருக்க
உறவே எனை மறந்து
பறந்ததேனோ

உன் பிரிவால் சுதியின்றி
நல்ல ஜதியின்றி
என் பாதம் நடை பழக
மறுக்கின்றதே...

என் உறவே
உன் விழிப்பார்வை
என்னைத் தீண்டாதோ
என் உயிர் உன்னைச்
சோராதோ....

வாசம்

மலர் வாசம் வீசாயோ
தென்றல் காற்றே
கனிமொழியாள் படைப்பில்
கற்பனைக்குள் தோற்ற வாசம்
காலத்தால் அழிந்த வாசம்
இயத்தில் உறைந்த வாசம்
மலருக்குள் மறைந்த வாசம்
சுமையாக வந்த வாசம்
என்னோடு வாழும் வாசம்
எனை சுடராய் எரிக்கும் வாசம்
எவரோடும் தோன்றா வாசம்
புதைகுழியில் புதைத்த வாசம்
புதிராய் தோன்றிய தால்
என்னை வாசமில்லா வாசத்தை
சுவாசிக்க சொன்னது......

Friday 21 December 2007

மீண்டு முழு நிலா

பாரியவன் காதல் கொள்ள
பெளர்ணமி நிலாவும்
கொண்ட காதல் உயிர்த் துடிப்பால்
தன்னிலை தான் மறந்து பூமிக்கு
வந்தது...

காஞ்சுபுரப் பட்டுத்தி
நெற்றித் திலம் தானிட்டு
மல்லிகையும் தலை சிரிக்க
கைவலயல் கலகலக்க
கால் கொலுசு சத்தமிட
அதிசய தேவதையாய்
அசைந்தே வந்தாள்
பார்ப்பவரே அசந்திட..

பாவையவள் கைதொட
பாரியவன் துடித்து நிற்க
முகிர்த்தமும் வந்ததென்று
தோழியவள் அழைத்து செல்ல
அதிகாலையும் வந்து நிற்க
மணப்பெண்ணும் தான் மறைய
ஏக்கம்கொண்டு அவன் பார்க்க
வானமதில் அவள் சிரித்தாள்
தன் ஒளி தானிழந்து
வெள்ளை பொட்டொன்றாய்.......

என் அன்பே....

கரைந்து ஏன் போகின்றாய்
என் அன்பே!
தண்ணியடித்து தாடிவளர்த்து
காதல் காத்து!! கரைந்து ஏன்
போகின்றாயா என் அன்பே


குடும்பம் மறந்து வாழ்வைத் தொலைத்து
வீதியில் நின்று வீண் காதலால்
கரைந்து ஏன் போகின்றாய்
என் அன்பே

உழைப்பு மறந்து
உயர்வைத் தொலைந்து
சோம்பறிக் காதலால் உன்னை
நீ கரைந்து! கரைந்து ஏன்
போகின்றாய் என் அன்பே

கரைந்து கரைந்து போவதா
காதல், அல்லவே அல்ல!
கரைந்திடா காதலை நீ தேடி
காலத்தோடு லட்ச்சியம் வென்று
வாழ்ந்திடு என் அன்பே காதலேடு
வாழ்வையும்.........