Thursday 25 April 2024

குட்டிக்குட்டிச் சாரல்................

கருகி விழும்வரை வானமும் 

நேசம் கொள்வதில்லை

 உதிர்த்து பறக்கும் வரை 

மலர்களும் 
ரசிக்கப்படுவதில்லை 

ஹைக்கூ... கவிதைகள்

 பிரிந்தவர் துணையுடன் காதல்  


 உயிர் மேல் அச்சம் வருகின்றது 

விதவைத் திருமணம்  

Wednesday 24 April 2024

குட்டிக்குட்டிச் சாரல்................

இளமைக்குள் தொலைந்து 

போன காதல் தேடலை 



முமைக்குள் தொலைத்த 

விழிப்பார்வை கண்ணாடியாய் 

தேடுகின்றது இதயம் 


Thursday 18 April 2024

குட்டிக்குட்டிச் சாரல்................

 தெரிமால் தெரிந்து 

கொள்ளும் 

சிறுகுழந்தையக்கின்றேன்

 


உன்னைக் கண்டால்

 நீயோ புரியாதவன் போல்  

நடிக்கின்றாய் !!!




குட்டிக்குட்டிச் சாரல்................

 இல்லையென்னும்

 இடைதேடி இருக்கும்  



விழிதவளதவறிவிழுந்தது 

இதயம் புடவையிடைக்குள் 

Wednesday 17 April 2024

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 பேசும் நொடிகள் 

பேசாதே  கேட்கின்றேன் 

உன் வார்த்தைகள் 

 தரும்  சுகத்தை!! 

பார்க்கும் நொடிகள் 

மூடாதே  பார்க்கின்றேன் 

விழிகள் பெறும் 

சுகத்தை !1



வாழும் நொடிகளுக்குள்  

வசந்தம்  வீசும் நொடிகள் 

தரும்  உன் இதயத் துடிப்பிற்குள் 

என் இதயத்துடிப்பின் 

  சத்தம் ஓரமாய் கேட்ப்பதால் 

தானே  எனக்கு வலித்தால் 

நீ தானாய்  வருகின்றாய் 


 



Sunday 14 April 2024

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 எந்த ஆர்ப்பாட்டமுமின்றி  

மௌனங்களால் உன்னை

வரவேக்கிறேன் ஏதும்  இல்ல

நீலம்போல் !

!தருவாயென காத்திருந்து 

ஏமாந்தநாட்கள்  

புன்னனைப்பதால  இல்லை  

வாழ்த்துக்கள் 



வழவைக்கதறியதால

புரியாமலே  நிக்கின்றேன் 

வீதியில் ஏறிந்த 

விதிக்குழந்தையாய் 

என்றோ ஒருநாள் 

எனக்காய் பிறப்பாய் 

எனற எதிர்பாப்பில்!!!!!!!! 



Friday 12 April 2024

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 அழகியவள்  காத்திருக்க 

அல்லிக்குளம்  மீன் தவமிருக்க 

வெண்பாத  கொலுசு 

பொயுரைக்க  போயுரைக்க 

தென்றல்  தேகம் தொட 



அச்சம்பட்டு பூவிதல்  தொட்டு  

காதோர இசையாய்  

தவள்ந்தோட   

கருவிழி கவியுரைக்க 

காத்திருந்த  அல்லிக்குளம் 

தாகப்பட்டு   பாதம் தொட 

அழகியவள் நிழ் பட்டு  

துள்ளியெழுந்த 

மீன்  பொருளுரைத்தது !!!தென்றலுக்கு 


குட்டிக்குட்டிச் சாரல்................

 பத்துக்காசுக்காய் 

பற்றிய பத்தினியை சிறையிட்டு

  வதையிட்டு
புரியாது புலம்பி
ஐம்பது காசுக்காய் க
ரம்பற்றிட பெண்ணை 
தேடி அழையும்ஆண்மையோ !!
உன்னைப் படைத்தவனோ
இன்று !!
உன்னால்  கல்லானதாய்
தகவல் உன் படைப்பில் 
செய்ததவருக்காய்!!


Thursday 11 April 2024

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 நீயமோ  இல்லை 

பொய்யோ  நீ  தரும் 

அன்பு  அறியாமலே 

உன்னைத்தேடுத்து  மனசு 

இதயம் நீ 

யாரெனெத் தெரியாமலே 

குழம்புது  தவிக்குது 



நீ விட்டுப்பிரியும் நிமிடம் 

நீ எனனோடு புன்னகைக்க 

இதழ்கள் உச்சரிக்க

தவமிருக்கும்  ஆனாலும் 

நீ  யாரோ எனறு 

எனனை ஏமாற்றி 

விலகிடத்துடிக்கும் 

நிமிடம் நான் அனுபவிக்கும் 

தனிமைக்குள்

 நீ தரமறுத்த  நம்பிக்கை 

 வனத்தின் தூரத்துக் கனவாகும்  

மீண்டும் விதியென

நாட்கள்  தனாய்  நகரும் 

மீண்டும்  மீண்டும் 

தோற்பது உன்னிடம்  மட்டும் 

நானாகவே  நகருகின்றது 

அர்த்தங்கள் அற்ற  இருளோடு!!!


 

Wednesday 10 April 2024

என் இலக்கணபிழைகளில் ஓர் இலக்கியம்,

 நான் பிறவாமலேயே 

இருந்திருக்கலாம் ஆனாலும் 

பிறந்துவிடடேன்  பிறந்தவுடன் 

இறந்திருக்கலாம் இறைவா 

என் பிறப்பு பாவத்தின் கூலியென்றே 

நம்ம்புகின்றேன்  இருந்தும் 

ஒரு நிமிடம் ஒரு துளி

எனக்கான  நிமிடங்களை 

தேடுவதால்   சுடுகின்றது 

வாழ்க்கை 

தேடித்தொலைந்து 

விழும் கண்ணீர் துளிகளுக்கே 

இவள்  உணரவுகள் புரிகின்றது 

இப்போது தான் புரிகின்றது 

மரணத்தின் குழிக்குள் 

ஏக்கத்தின் தூக்களே நிரந்தரம்  எனறு !!!!


                                                                                                                                                                                                                                



குட்டிக்குட்டிச் சாரல்

 நமக்கானா இதயம் 

 நமக்கானதாய்  கிடைத்தாலே 

போதும்

  நாம் 

பாரதிக்கு கண்ணம்மாவாய் 

வழத்தேவையில்லை 


Thursday 4 April 2024

குட்டிக்குட்டிச் சாரல்

இதயம் ஒன்று 

களவு போனதால் மலர் 

ஒன்று வண்டிடம் 

நீதி  கேட்க்க சென்றது 

மலருக்கு தெரியாது 



களவாடி சென்றதே 

வண்டுதானென்று 

கல்லவனிடம்  நீதி  கேட்ப்பதே 

மலர்களுக்கு  வாடிக்கை 

வாழ்க்கையானது 

Wednesday 3 April 2024

குட்டிக்குட்டிச் சாரல்

நீ 
வருவாய்யென 
என்
 இடது கண்துடிக்க

 
என் 
வலதுகண் தேடியே 
தூங்கிப்போனது என் 
எதிர்பார்ப்புகள்!!!

குட்டிக்குட்டிச் சாரல்

 இன்றுபோனால் 

நாளையுண்டெரென்ற

சொல்லுள்தேடும் 

ஒருநாள் ஒருநாளும் 



இருப்பதாய் இன்று போய் 

நாளை தோன்ற காணோம்

இருந்தும் காத்திருக்கிறேன் 

இன்று!அந்த நாளுக்காய் !!


Tuesday 2 April 2024

விழி கண்டு மொழி பேசும் சாரல்

 ஏனோ  சிலநேரம்

சிலநொடி

நீயே எல்லாமாய்  உணரவைக்கிறாய்

என் கைபிடித்து 

குழந்தையைப்போல் 

கூட்டியும் செல்கிறாய்

அடுத்த நொடியே 



என் உணர்வை  பொய்யேயென 

நினைக்கவைத்தே

தனிமையைக்கு துணையாக்கி

என் உணர்வை 

 பொய்யாக்கி விடுகின்றாய்!!!

வெளிவரமுடிய உன் உணர்வும்

வெளியேவரமுடிய என் மரணமும்

தோற்றே விழுகின்றது மரணக்குழிக்குள்

இருந்தும் இல்லா உன்னைப்போலே।





Monday 1 April 2024

குட்டிக்குட்டிச் சாரல்

 குட்டி குட்டி ஆசைகளையே

கொண்டாட  முடியா இவள்

எப்படி தோற்ற  ஆசைகளை

கொண்டாட ஆசைப்படுவாள்

இவள் தனிமையை



உடைக்கும் காலமே இவளை

தனியாகவே விட்டுவிடேன்

எப்பவும்

 இவள் நினைப்பதும்

நடப்பது வேறு வேறேகவே

முடிகின்றதால் எப்பவும்

இவளுக்கு பொருந்துவது

தனிமையாகட்டும் 


குட்டிக்குட்டிச் சாரல்

 ஏமாற்றங்கள் வழ்கையில்

அதிகம் தான் அந்த

 ஏமாற்றமே



வாழ்க்கையையின் புதிய

மற்றதை உருவாக்கின்றது 

நாம் ஏமாற்ற படுவதை புரிந்தாலே

போதும்।




Saturday 30 March 2024

விழி கண்டு மொழி பேசும் சாரல்

 இவள் கடந்த

 ஒத்தை பதையில்

பலரை கடந்தபோதும் 

ஒருசிலரே நினைவில் 

அப்படி கடக்கையில் இவள்

கைபிடித்தவள்  அவள்

இவள் வலிகளில்

அவள் அழுகின்றாள்  

இவள் பெற்ற சாபத்தில் 

கிடைத்த வரமே அவள்

அவள் விழிபார்த்து 

திகைத்தவிழிகளுக்குள்

பூக்கும் அன்பின் ஆழம் இவளானால்!!

ஒருவரை புரிந்தால் மட்டுமே

அவர் வலிகள் மற்றவரை ஆழவைக்கும்

இவளை புரிந்தவர்கள் 

புரியாமல்போனவர்களுக்குள்

இவளுக்காய் நிக்கிறாள் என்றும்

அவள்।



குட்டிக்குட்டிச் சாரல்

வாயடியனவள்  ஒற்றை சொல்லுக்குள்

மௌனமாகின்றாள்  

விசித்திரமாகதான்  உள்ளது  

அவள் மௌனம்।இங்கே

உறவும் உயிரும் அழகாகின்றது

அவள் ஒற்றை சொல் 

மௌனத்தில்!!!


Tuesday 26 March 2024

குட்டிக்குட்டிச் சாரல்

 துன்பமென்று தெரிந்தே

விழுகின்றோம்  விழுந்தபின்னரே

எழுந்திட துடிக்கின்றோம்

இங்கே காப்பத்த யாரு

இலையென்றால் தான்  வலிகள்

பேசுகின்றது!!!


விழி கண்டு மொழி பேசும் சாரல்

 என்னடா விசித்திரம்

சில உறவிற்கு

அர்த்தங்கள் புரியவில்லை

சில நட்பிற்கு காரணம்

 புரியவில்லை

என் வாழ்க்கையின் கிறுக்கள்

போல் காரணமின்றியே 

தோற்று  போனாலும் 

நிழ்போல் தொடருது

நெடுஞ்சாலை பயணம் போல்

விட்டு விலகிபோனாலும் 

தூறல்வழி  சாரல் மழை

தூறலால்  நனைக்கு  என்னை

தினமும் இது

அன்பின் தேடலால் தொலைந்த

குழந்தைக்கு கிடைத்த வரமா

இல்லை சாபமா!!



குட்டிக்குட்டிச் சாரல்

 இலையென்றே இருக்கும்போது

ஒடும் கால்கள் இறக்கும்வரை

ஒடும் எதுவிருந்தாலும்

குட்டிக்குட்டிச் சாரல்

 எதையெடுத்தும்  நான் கொடுக்க

நான் கற்பனையுலகவானில் 

பறக்கவில்லை  இப்போ மாமா  

நீ தந்த நான்

உன்னோடு பிறந்திறந்து

காலங்கள் காகிதமாய்

நினைவுக்குள் மறைந்தே

போனோம் மாமா

இரும்தும் அக்கம்பக்கம்

அவரவர் கொடுப்பதை  நாமாய்

சும்மா கொடுக்க சுகமாய்

இருக்கு மாமா கேட்டாலும்

இல்லை மாமா நீயில்லா

நான்!!!


Monday 25 March 2024

குட்டிக்குட்டிச் சாரல்

 நம்வாழ்வில் ஒருவரிருந்தால்

நம் வாழ்க்கை அழகாகும் என்பது

நம் நம்பிக்கை அதுவே இருவர்

நம்பிக்கையானால் வாழ்க்கை

அழகாகின்றது நமைபோல்!!

Sunday 24 March 2024

குட்டிக்குட்டிச் சாரல்

 ஒவ்வென்றும் ஒவ்வென்றை

காற்று தருவதே 

வாழ்க்கை என்றார்கள்

நானும் மனிதபுத்தத்தை 

புரட்டிப்புரட்டிப்பார்க்கின்றேன் 

 மனிதத்தறுகளின் அர்த்தங்கள் மட்டும்

புரியவில்லை 

இறைவனின் விளையாட்டு

என்றார்கள் 

இப்போ இறைவனையே

கேட்க்கிறேன் 

இத்த விளையாட்டால்

அதிகமானா  தண்டனை யாருக்கும்!!

விழி கண்டு மொழி பேசும் சாரல்

 ஒருபெண்மையின் வாழ்க்கை

முற்செடி பூபோன்றது 

யார் கண்ணுக்கும்

தெரியா காயங்களே அதிகம்

காவல்காரர்களும் காகிதாப்பூவாய்

நினைப்பதாலேயே 

இங்கே அவள் தியாகங்கள்

 அசிங்கப்பட்டு தன்னம்பிக்கை

உடைக்கப்படுகின்றது 

அவள் உடைந்து நிலைகுலைந்து

நிக்கும்போதே  அவள்

பலகாலவாழ்க்கையை 

ஒரு நொடியில் கசக்கியெறிந்து 

செல்லவும் முடிகின்றது

இங்கே பூ

அன்பால் தடுமாறுகிறது

துணையென நின்றவர்

ஆசையால்  தடுமாறுகிறார்

ஒற்றை சொல்லை சொல்லமுடியா

மனிதனால் துன்பம் என்னவே பூவிற்கே


Saturday 23 March 2024

குட்டிக்குட்டிச் சாரல்

 தண்டனைகள் 

அதிகம் தான் பெண்மைக்கு 

படைப்பின் நியதியென்றாலும் 

காக்க அப்பாவை 

படைத்து  தான் வைத்தான்

இறைவன்  ஆனால் 

அப்பாவிற்க்கு ஏன்

தான் புரியவில்லை 

மனைவியின் அர்த்தங்கள்!!!அப்ப

அப்பாவை படைத்த இறைவனுக்கு

என்ன தண்டனை!!


குட்டிக்குட்டிச் சாரல்

 கெட்டது நதியின் வேகத்தில்

வந்து சென்றுவிடுகின்றது

நல்லது ஆமையின் வேகத்தில்

வருவதால் நல்லது வந்தது

தெரியாமல் வாழ்க்கை நகர்கினள்றது



Friday 22 March 2024

குட்டிக்குட்டிச் சாரல்

 பேசி புரியவைக்க வேண்டிய

நேரம்  பேசிடாமல் 

உணர்வுகளை சிறைவைப்பவரே 

தனது வாழ்வில்

தமக்கே தண்டனை கொடுத்து

தன்னையே தண்டிக்கின்றனர்।

Thursday 21 March 2024

விழி கண்டு மொழி பேசும் சாரல்

 போட்டிகளும் பொறாமைகளும்

இதுவரை காயப்படுத்தியதில்லை

இப்போ இதனாலும் காயப்படும்

காலமதுவே !!!

இதுவரைபார்த்த முகங்கள்

இதுவரை காணா முகங்களாய்

அழகாய்

புன்னையோடே விளையாடி

நடிக்கின்றது !! இப்போதுதான்

புரிகின்றது மனிதர்களை 

விட இயற்கையை 

ஏன் காதல் செய்தேன் என்று 

முகங்கள் பார்த்து  முகங்கன்

அறிய எனக்கும் 

பல முகம் தேவையோ இறைவா!!!

என்றாலும் வேண்டாம் இறைவா

இந்த பொய்யான முங்களை விட

என் அழகான காடு என்றுமே  என்

அழகாகன புன்னகையாகும்!!! 

நடிக்கும் மேடையைவிட 

நடிக்கும் வாழ்க்கை கொடுமைக்குள் 

போளியாய் புன்னைக்க

கற்றுக்கொள்வதைவிட 

உண்மையான  தனிமைகள் வரமே


Wednesday 20 March 2024

விழி கண்டு மொழி பேசும் சாரல்

 இதுவரை  தனியாக

பூட்டிக்கொண்ட என் கனவுகள்

இன்னும் யாருக்கும் புரியாமலே

சிறைப்பட்டு கிடக்கின்றது 

யாரும் புரிந்துகொள்ளா  

உணர்வுகள் போல்

வெறுப்புகளும் வலிகளும் 

தத்தெடுத்த குழந்தையை போல் 

உறவுகள் இருந்தும்

அனாதையாய் கிடக்கின்றது

தனியாய்

உரிமையற்று மடிந்த  உடலை

பார்த்து தவிக்கும் உயிர்போல்

இவளும் இவள் கனவுகளும் என்றுமே

தனியாகவே  கூடு விட்டுபறக்கும்வரை

வாழும்!!!



Monday 18 March 2024

விழி கண்டு மொழி பேசும் சாரல்

 ஒருநாள் ஒருபொழுது 

எனக்க விடியுமா விடியல்

விடியலில் ஆதவன் ஒரு தேனீர்

தந்தென்னை  அதிகாலையெலுப்பிட

மண்ணிற்கு வருவானா!!

பெண்ணவள் கேட்டாள் பேயும்

இறங்குமாமே ஆதலால் 

ஒருகற்ப்பனை வரம் கேட்க்கிறேன்

ஆதவனே

பெண்ணிற்கு கிடைப்பதெல்லாம்

கற்பனைகள் தோற்றுவிடும்

கதைக்களமானதால் 

குந்திதேவிபோல் வரம் கேட்கவில்லை

ஆதவா!!!

 தோற்றுக்கொண்டே இருக்கின்றேன்

தோல்விகள் வெற்றியடையும் வரை

காத்துக்கொண்டே இருக்கிறேன்

காலங்கள் பேசும் வரை

நினைத்துக்கொண்டே இருபேன்

நினைத்தது கிடைக்கும் வரை

Sunday 17 March 2024

விழி கண்டு மொழி பேசும் சாரல்

 இதுவரை யாரையும்

 ஜெயித்திடத்தோன்றவில்லை

ஜெயிப்பவர்களுக்கு  பக்கத்தில்

ஒரு அணிலைப்போல் தான் நின்றேன்

முதல்முறை போட்டியுலகத்தை 

பார்க்கிறேன் 

போட்டிபோடும் மனிதனுக்குள்

ஒரு புள்ளிமானைப்போல் நிக்கின்றேன்

ஓடவும் தோணாமல் 

போடிபோடவும் தோணாமல் 

இது வேடிக்கையாகவே இருக்கு இறைவா

உன்வழி நானாக என்வழி நீயாக

நடுவில் ஒரு ஆரம்பம்!!!என் தொடக்கமும்

முடிவும் உன்னிடம்!!!


Thursday 14 March 2024

குட்டிக்குட்டிச் சாரல்

 எதிர்காலம் தொலைவாய்

தொலைந்த  இருளோடு ஒரு

யுத்தம் செய்ய ஒரு நிலவு 

விழித்திருக்குமென  கொஞ்மும்

நினைக்கவில்லை   விழித்திருந்தும்

காத்திருக்கும் மொழிகள் தொலைத்ததேன்

நிலவே  மண்ணீல் நீயும்

என்னைப்போல்  வெள்ளையடை 

சிறையெடுக்க மௌனங்களோடு 

யுத்தம் செய்கின்றாயா

சொன்னாலும் புரிந்திடா இதயங்களோடு

பேசிபயனில்லையென என்னைபோல் நீயும்

ஊமையாகாதே!!!


குட்டிக்குட்டிச் சாரல்

என்னைச்சுற்றி விதியாடும்

ஆட்டம் புரியவிலை தான்

ஆனால் எனக்காக மண்ணில்

எதையும் விட்டவில்லையென

மட்டும் புரிகின்றது।

 ஒவ்வெரு தோல்விகளும்

சொல்லும்படம் இதுவாக இருக்க

நான் காரணமேயின்றி நடகின்றேனோ

காலமே பதில்லெழுத்தட்டும்!!

Sunday 10 March 2024

குட்டிக்குட்டிச் சாரல்

 அழகியகார்கூந்தல் 

இழந்தவாசத்தால் 

முழுமதியவள் வடித்த கண்ணீரில்

முகமது இழந்த அழகை அவன் இறந்தும்

பேசிய  இதயத்தின் மொழியழகால்

அவள் கார்கூந்தல் மல்லிகை வசத்தை

சூடிக்கொண்டது!!



குட்டிக்குட்டிச் சாரல்

 தூக்கத்தை  வேலைச்சுமை

கொடுக்க  விழிகள் தொலைத்ததை

தேடாமல் உறங்கி விடுகின்றது

Saturday 9 March 2024

குட்டிக்குட்டிச் சாரல்

 நேசங்கள் உண்மையா 

எனத்தெரியவில்லை ஆனால்

நேசிக்கப்பட்டால்

எந்த தடையையும்

உடைத்தெறிந்து காத்திடும் என ஒரு

கற்பனை இதயமென்று கண்டேன்

கற்பனையாளர்கள் மாறினால்

அழகான உலகம் நியமகாலம்

இதை கற்பனையாளார்கள்

புரிவார்களா

காமத்தின் தேடல்களில் தொலைந்தவர்களை

கொஞ்சம் நியத்தையும் சிந்திக்க

வைக்கலாமே!!!கற்பனையுலகமே!!

குட்டிக்குட்டிச் சாரல்

கடவுள் தந்து 

கடவுளே பறித்ததை 

கடவுளாகவே

ஒரு இதயம் கொடுக்குமெனில்

இழந்தவளுக்கு கிடக்கும்

 மதிப்பு எந்த வைரம் 

போட்டாலும்கிடைக்காது

இதுதெரிந்தும் அறியா

மனிதன் அழகான வாழ்கையை  

இருட்டுக்குள் தேடுகின்றான் !!!

இதைகற்பனைகள் கூட

 கற்பனை பண்ணா கற்பனையானதால் 

நியங்கள் மிருகவாழ்க்கை

தேடியாழைகின்றது !!

Friday 8 March 2024

குட்டிக்குட்டிச் சாரல்

 அச்சம்கொண்டபெண்மை

மிச்சமீதிவாழ்கைதேடி கால்களுக்கு

விலங்கை பூட்டுகின்றது !!

பாதம்  பரத்தும்  உயிர் 

போகும்மென்ற போதைகொண்ட 

உலமாவதால்!! பிறப்பிற்கும்

இறப்பிற்கும் அர்த்தம்மில்ல

வாழ்கையே பெண்ணை

தேடிப்பெற்றுக்கொண்டதால்

குட்டிக்குட்டிச் சாரல்

 ஒற்றை கனவோடு சிலையானவள்

கொட்டும் மழையில் நனைத்தும்

ஆசைகள் தோற்றும அசையாது

நிக்கின்றாள்  தடாகம் தாங்கிய தாமரைபோல்

குட்டிக்குட்டிச் சாரல்

  உறவுகள் நம் உதிரம்

கலந்தோடும் உணர்வு போன்றது

மூச்சுக்காற்று உள்ளவரை இதியத்திற்குள்

துடிப்பதை   தடுத்திடமுடியது


Thursday 7 March 2024

குட்டிக்குட்டிச் சாரல்

 காமத்தை வென்ற ஆண்மை

தமையை பெற்றேடுக்கின்றது

தாய்மையை பெற்றேடுத்த ஆண்மை

பெண்மையை  காக்கின்றது !!!

பெண்மைக்கு கொடுத்த வரம் இங்கே

பெண்மையே அழிக்கும் சாவமாய்

பெண்மை பெற்ற வரமாகின்றது!!!

Tuesday 5 March 2024

குட்டிக்குட்டிச் சாரல்

 கைகள் இல்லா கைபிடித்து

தோளில்லா தோள்சாய்ந்து

நிஜமில்லா நிழலோடு கதைபேசிட

பொய்யான இருள் தேடுது என்னை

கனவுலகத்தனிமைக்குள் வாழ்ந்திட

வாவென்!!


குட்டிக்குட்டிச் சாரல்

 கிடைக்காது என 

விட்டுபோன  ஒன்று 

கையில் கிடைக்கும் போது

கிடைக்கும்  மகிழ்ச்சிக்கு 

இணையான ஒன்றை 

ஏதைக்கொடுத்தும் அடையமுடியாது।!!


Sunday 3 March 2024

குட்டிக்குட்டிச் சாரல்

எழுதிமுடித்த புத்தம் 

விமர்சனங்களை கடந்து

விடையை  தேடுது அவர் அவர்

கற்பனைக்குள்!!

விழி கண்டு மொழி பேசும் சாரல்

 யாரே ஒருவன்  தொலைத்து

தேடும் கனவை 

யாரோ ஒருவன் தூக்கி செல்ல

யாரோ ஒருவன் தூக்கிப்போட்ட 

ஆசையை  யாரோ ஒருவன் 

கையில் ஏந்தி செல்ல

யாரோ ஒருவனைப்போல் ஒருவனாய்

ஒவ்வொருவர் வாழ்க்கையும்

தவிகின்றது  கரணமேயின்றி

தேடும் காரணம்  தேடியும் கிடைக்கா

ஒருவன் போல் கையில் வைத்தே

தேடும் ஒருவனாய்

தனியாய் த்விக்கு காரணமேயின்றி

யாரோ ஒருவன் நானென நினைக்கா

ஒருவனாய் வாடுவாழ்க்கை!!!





குட்டிக்குட்டிச் சாரல்

 மண்ணில் வாழ்ந்தபோது

தமிழால் அயல் வீட்டோடு சண்டை

இழந்தே நாடுநாடாய் வந்தும் 

தமிழால் நாட்டுக்கு நாடு

 சண்டை 

இங்கே இழந்தும் திருந்தாத ஒரு

மனிதம் நாமே !!!


Saturday 2 March 2024

குட்டிக்குட்டிச் சாரல்

இருக்கும் இததிற்கே 

புரியக்கதால்

இறந்து வாழும் இதயம் 

புரிந்து

இழந்த பெண்ணை வாழவைத்திட

துடிப்பதே காதலென்றால்  விசித்திரம்

தான்  கற்பனைவாழும் காதலும்!!!

Thursday 22 February 2024

குட்டிக்குட்டிச் சாரல்

 சொல்லி கேட்டும் சொல்லாமலும்

கொடுக்கவும்  இவளுக்காய்

வாழ வாழ்க்கையென்று சொல்லாமல்

கிடைத்திருந்தால்  நீ கேக்காமலேயே

அழகமான பூந்தோட்டம் உன்னையும்

திரும்பிப்பார் என சொல்லியலைத்திருக்கும்

குட்டிக்குட்டிச் சாரல்

 சொல்லும் சொல்லில் இல்லை

அன்பு 

கூப்பிடும் உறவில் இல்லை

அன்பு 

பேசும் வார்த்தையில் இல்லை

அன்பு 

உனக்குள் எனக்குள் இல்லை

அன்பு

சொல்லாமல் பேசாமல் கூப்பிடாமல்

போனாலும் வலிக்கும் போது

அருகே வந்து காக்கும் இதயங்களிடம்

இருக்கின்றது அன்பு   ஒற்றை

தாய் உலகை வென்றாள்  அந்த

அன்பால் அன்று!!!





Tuesday 20 February 2024

குட்டிக்குட்டிச் சாரல்

ஒவ்வேறுமுறையும் மழைமேகம் 

கடக்கையில் ஒருமுறையாவது 

என் கானலுக்குள் தூறாதாயென

இருவிழித்துறுகின்றது  மழைமேகமாய்



Monday 19 February 2024

குட்டிக்குட்டிச் சாரல்

 தேடித்தேடி பார்க்கும் ஓரு அழகான

நாட்களை தேடாமலேயே கொடுக்கும்

ஒரு அழகான இதையம் இருந்தால் போதும்

வாழ்க்கை அழகாக

Saturday 17 February 2024

குட்டிக்குட்டிச் சாரல்

 இவன் ஏன்  எனக்க 

கஸ்ராபடுகின்றான் 

என சந்தேகம் வரவில்லை  மாறாக

இவன்எப்போது 

என்னை  விட்டு

 பிரியாபோகின்றனோ

என்ற அச்சம் வருகின்றது

இதுவரை என்னை 

என்  அப்பாவே

புரிந்தவராய் இருந்தார் 

அதுவரையே  என் சந்தோசங்களும்

இருந்தது!!!


குட்டிக்குட்டிச் சாரல்

 ஒருநாள் ஒருமுறையேனும்

என் உயிர் தேடி  வாடும் உயிர்

நீயே தானடி உயிரே!!உன்னால்

பலமுறை ஏமாறும்  விழியிக்குள்

தூங்காமல் தவிப்பதும் நியமடி

உயிரே।

Friday 16 February 2024

குட்டிக்குட்டிச் சாரல்

வாழ்க்கை விசித்திரமானது

விடியுமென இரவுக்குள்

காத்திருக்க செய்து விடியாமலே

முடிகின்றது 

இதில் யாரோ ஒருவராரின்

வெளிச்சத்தை  எதிர்பார்த்து 

நகர்கின்றது நாட்கள்!!

Thursday 15 February 2024

குட்டிக்குட்டிச் சாரல்

 என்னடா வாழ்க்கையிது

சிறையில் வாழும்  மனிதனுக்கு

இல்லாத தண்டனையை

முயச்சி  என்ற ஒன்றை சிந்திக்கும்

மனிதனுக்கு கொடுக்கின்றது

பாதையெங்கும்!!!

Wednesday 14 February 2024

குட்டிக்குட்டிச் சாரல்

 இன்று 

பூக்கும் பூக்களுக்கு

ஏன் 

இத்தனை கர்வம் 

காதலையாய்  பூப்பதாலா  

இல்லை கதலருகாய் பூத்தலா

சின்னவர் முதல்  முதியவர்வரை 

கையில் ஏந்தியபடி

புன்னகைத்து செல்கின்றனர்

ஏக்கம் நிறைந்தவிழியில் கூட

காக்கும் பொழுதை 

இத்தனை அழகைக்கொடுக்கும்

உனைபோல வாழ 

என்ன தவம்செய்ய நான் 

காதிருக்கும் மனிதன்

கடிகாரம் தொலைத்து  விழிதேதட

பார்க்கிறேன் நடக்கும் பாதையெங்கும்

இன்று  பூமியெங்கும் 

உந்தன் அழகே  அழகு!

உன்போல்  அழகானவளாய்

பிறக்காவிட்டாலும் உன் அழகில்

நானும் கொஞ்சம் காதல் கொள்கிறேன்





Tuesday 13 February 2024

குட்டிக்குட்டிச் சாரல்

 தொட்டுவிட்ட இதழ்களை

தொடத்துடிக்கும் உணர்வாய்

கூடி கூவி கேட்டு கூறும் இசையின்

 மொழியின் வடிவில் 

வாழும் கவியின் அழகில்

பேசும் காதல் நாம்



Sunday 11 February 2024

குட்டிக்குட்டிச் சாரல்

 எதிர்னீச்சல் போடும் எவருக்கும்

கிடைக்கா ஒன்று நமக்கு கிடத்துவிட்டால்

நமக்கான நம் வெற்றி 

நம் வெற்றியை எழுதுவது

நியம் 


குட்டிக்குட்டிச் சாரல்

 இதுவால் இதை காக்கமுடியும்

என்ற  அதுவாய்

நாம் மாறமுடியாமல் சென்றால்

அதுவே நாம் தொலைத்து செல்லும்

அழகான வாழ்க்கை 

இதுவாய் இல்லையென

விலகிச்சென்று தேடித்திரும்பிப்பார்த்து

நினைவுகள் பேசினால்

அதுவே நாம் விடுச்சென்ற காதல்

நாம்  உணர்வுகளை உணரா தருணங்களே

நாம் புரியா நம் வாழ்க்கை


குட்டிக்குட்டிச் சாரல்

 நம்மை நாமே அடிக்கடி

தோற்கடித்து காட்டுகின்றோம்

இந்த உலகிற்கு !!

ஒன்றை தெரிவுசெய்யவும் 

தெரியாமல்   ஒன்றை 

முடிவெடுக்கவும் தெரியாமல்

யார்யாரோ கைப்பொம்மையாய்

அசிங்கப்பட்டுகொண்டு  நம்

வரலாற்றையே தவறக்குகின்றோம்

ஒவ்வொருமுறையும்!!இங்கே 

ஒவ்வொரு தனிமனிதச்செயலும்

ஒரு இனத்தின் வரலாராகமாற்ற

நினைப்பாரே ஜெயிக்கின்றனர்!!!


Saturday 10 February 2024

குட்டிக்குட்டிச் சாரல்

எல்லாமனிதனையும் நேசிக்கும்

உறவாய் இருப்பவர் வாழ்க்கையில்

கூட  இத்தனை 

வண்மன் காட்டும் மனிதர்கள்

 இருக்குமென்று

இதுவரை  நினைக்கவில்லை


குட்டிக்குட்டிச் சாரல்

 கனவுகள் தூக்கத்தை 

துக்கிச்செல்கின்றது

நினைவுகள் உணர்வோடு

 யுத்தம் செய்கின்றது  உயிராட

உடல் சோர ஓடிட முடியாமலே

தள்ளாடும் கால்களுக்கு 

வறுமை கொடுத்த தண்டனை

முதுமையிலும்  தொலையும்

மகிழ்ச்சி!!!




Wednesday 7 February 2024

குட்டிக்குட்டிச் சாரல்

 அழகான நாட்களை 

உருவக்கத்துடிக்கின்றேன் ஆயுட்காலம்

இழந்தபூவாய்

ஒரு சிலர் கையை பிடித்துநடக்க 

ஆசை கொள்கிறேன்

முடிந்து போன பாதையில்

 மாமன் இதயத்துடிப்பை 

கேட்க நினைகின்றேன்

எரிந்த சாம்பலின் முன் 

முடியாதென கூறும் இறைவன்

மூன் ஒற்றை பூவை வைக்கின்றான் 

நினைவு பேசும் மொழிகேட்டு


Tuesday 6 February 2024

விழி கண்டு மொழி பேசும் சாரல்

 மீண்டு எழுத்திடு மகளே

நீவேண்டுமென்றே நான்

வரம் இருக்கின்றேன் !!!

காலம் கடத்தபோதும்

கண்மணியே கனவில் கூட

 உன்னை   மறக்கவில்லை 

உன்னை!!!

விதியின் விளையாட்டால்

உன் அண்ணன்

கோவம் கொண்டதால் 

நீ இன்று  அவன் கையில் 

வரமாய்யாகின்றாய்!

நான் வாசம் தொலைத்து

உனக்குள் உறக்கம் கொண்டதால்

இன்று 

அண்ணன் கையில் நீ

பூவாய் ஏழுகின்றாய்!!!நான்

உனக்குள் உயிராய் 

 அவன் கையில்  விழுகின்றேன்!!

உன் அண்ணன் உன்னை 

கைகளில் ஏந்த   நான் 

உன்மொழி மௌனம் ஆகின்றேன் !!

நான்தோற்றுப்போன 

பெண்மை

நீ ஜெயிக்கவாழும் 

பெண்மை!!

நீயில்லாமல் வாழ்கின்றாய் 

நான்  இருந்தும் 

இல்லாமல் வாழ்கிறேன்

இருவர் நிலையும் ஒன்று 

உனக்குள் நானும் 

எனக்குள் நீயும்

நிழலாய் இருப்போம் என்றும்।




குட்டிக்குட்டிச் சாரல்

 ஏனனென தெரையாமலேயே

ஓட்டம் 

யாரெனத்தெரியாமலே

உறவு 

வாழ்வது புரியாமலேயே

வாழ்க்கை  இது 

வினேனத்தெரியாமலேயே

யுத்தம் 

நாம் ஏனபுரியாமலேயே

பிரிவு


Saturday 3 February 2024

குட்டிக்குட்டிச் சாரல்

 விதையின் பழுதில் 

விருச்சங்கள் எழுவதில்லை

கெட்ட மனசிக்குள் 

நல்ல மனிதன் வாழ்வதில்லை


விழி கண்டு மொழி பேசும் சாரல்

 எல்லா  சூழ்நிலையிலும்

புன்னகைக்க கற்றுக்கொண்டவள்

இப்பொது !! புன்னகைக்கு

அச்சம் கொள்கின்றாள்

இஸ்ரப்பட்டு கஸ்ரப்பட்டவள்

இப்போது !!! துக்கம் கொள்ள்

மரணம் தேடுகின்றாள்

ஒற்றை கூறைக்குள் வர்ணக்கனவு

கண்டவள் இப்போது!!

ஒட்டைக்கனவுக்குள் ஒளியற்ற

நிலவனாள்

ஒற்றை தனிமைக்குள் ஒராயிரம்

கதைபடிப்பவள் இப்போது

தனிமை கண்டால் அச்சம்

கொள்கின்றாள் ।

பூக்கும் பூக்களிடமே அன்பை

காட்டியவள் இப்போது

ஏக்கம் சொன்ன ஊமையானால்

தென்றல் கற்றுக்கு கவிதை 

சொன்னவள்  இப்போது 

சுவாசக்கற்றையே வெறுக்கிறாள்।









Thursday 1 February 2024

விழி கண்டு மொழி பேசும் சாரல்

 ஒவ்வெரு தருணங்கள்

ஓவ்வெருவரை புறிந்து கொள்ள

செய்கின்றது  

உன்னை புறிந்துகொள்ள

இறைவன் தந்த தருணம் இதுவோ

உன்னை வெறுத்தே தீட்டியதுண்டு

பேசாமலே இருந்ததுண்டு

நீயாரென அறியராமலேயே 

உன்னால் காயங்கள் பட்டு

அழுததுண்டு மற்றவர் சொல்லால்

குழம்பியதுண்டு  என்னையே

வ்வெறுத்து தனிமையானதுண்டு இருந்தும்

இன்றுவரை உன் நம்பிக்கையை

வென்றவளாய் நான்னிலை ஆனால்

எனக்கு வழியாய் வழியில் வருகின்றாய்

என் சுமையின் வழியில் நீ நிழலாகையில்

நான் பயமிறி  எழுகின்றேன்

நான் ஜெயிப்பதும்  தோற்பதும்

காலம் கடந்த வரலாறு  

என் வரலாற்று கல்லறையில் 

நீயே  புன்னகை।அப்பா

கரம்பிடித்து நடக்காத இவள்

உன் பாதச்சுவட்டுக்குள்  அப்பாவை

காண்கிறாள்!!!வேடிக்கையானது

காலமும் உறவு எனக்கு।nm






Monday 29 January 2024

குட்டிக்குட்டிச் சாரல்

 முதல் முறை  திறந்தது

ஒருவித  பதை அது

இருண்ட காட்டுவழிக்குள்

நடக்க தொடங்குது

பல முறை விழுவேன் என

அறிவிக்கின்றது  அறிவு

இருந்தும் நம்பிக்கை போவென

தள்ளி விடுகின்றது !!பல முகம்

பல விதமாய் தோன்றுகின்றது

இருந்தும் எதுகும் தெரியாமலேயே

நடக்கிறேன் இறைவன் வருவான்

என நம்பி!!!



Friday 26 January 2024

குட்டிக்குட்டிச் சாரல்

கொஞ்சம்  கொஞ்ச

கொஞ்சநேரம் இல்லையெமும்

மனிதனே குடும்பம்  இருந்தும் 

தவிக்கும்  நிமிடத்தை உருவாக்கி

மிஞ்சநேரம் கொஞ்சத்தேடுகின்றான்

Wednesday 24 January 2024

குட்டிக்குட்டிச் சாரல்

 ஓய்வாய் சிலநொடி

ஓரமாய் கேட்டது

உன்னோட சிலநொடியை

யாரே இவனெ  தனாய்

தள்ளிவிட்ட காலமே

பல கதை கூறியே 

காணாமல் போனபோதும்

உனக்கான நிமிடத்தையே

எனக்காய் கேட்குது தனாய்

வீணா ஆசையென நானாய்

சொன்னாலும்  உணர்விற்கு

புரியவில்லை இன்னும்!!!இங்கே

இன்னும் நான் நிலவை கையில்

பிடிக்க ஆசைப்படும் குழந்தையே!!!




குட்டிக்குட்டிச் சாரல்

 நீயே உலகம் என்றவள்

உலம் இலை இப்போ

தன் வழ்கையே அழகு என்றவள்

வாழ்வில்லை இப்போ ஆனாலும்

வாழ்கின்றாள்  உன் நிழல் கவிதையாய்!!

குட்டிக்குட்டிச் சாரல்

சில தவருகளை திருத்த
முடிந்தாலும். நாம்
திருத்தாதவருகளே 
பெரிய தவருகளை
உருவாக்கின்றது

Saturday 13 January 2024

குட்டிக்குட்டிச் சாரல்

 யாருடைய 

திமிரும் அலச்சியம்

என்னை எதுக்கும் செய்ததில்லை

அதை விட எனக்கு அதிகமாய்

இருப்பதால் 

யாரையும் நம்பி  எத்த

எதிர்பாப்போடு சிலையாய்

நின்றதில்லை  என்னை

நம்பிக்கையே ஓடுவதால்

 ஆனால்

பொய்யான அன்பை  மட்டும்

யார்மீதும்  வைத்ததிலை 

பல முறை ஏமாந்தும்

முட்டாள் பெண்ணாயே வாழ்கின்றேன்

Wednesday 10 January 2024

குட்டிக்குட்டிச் சாரல்

        உன் முகம் தேடியே

பல விழிகளுக்குள் விழுந்தெழுந்து

உன் விழிக்காய்  விழிக்கின்றது இரவு !!




குட்டிக்குட்டிச் சாரல்


  நாணம் கொண்ட 

பெண்மை

ஆசை கொண்ட நெஞ்சம் 

மறைத்து!!

தென்றல் பாடும் பாடல் 

பாடி

 கிளிகள் சொல்லும் கதைகள்

கேட்டு

ஆசைக்கனவில் மிதக்கிறாள்

நதிமேல் படகாய்!!!

Monday 8 January 2024

குட்டிக்குட்டிச் சாரல்

 அச்சம் நிறைந்தமனதை

பதறித்தாங்க

இதயம் இல்லாவிட்டாலும்

பதறவிட்டு எழந்திடாதே 

மிஞ்சமீதியாசையையும் அச்சப்படவைக்க

இதயம் உண்டு!!

விழி கண்டு மொழி பேசும் சாரல்

 வலிகள் கடந்து  காயங்கள் கடந்து

கடந்தபாதையின் சுமைகளேடு

புதிதாய் ஒரு  பாதை

 அவள் கனவின் சுமையாய்

பூக்கின்றது  

தடுத்த கைகளைத்தாண்டி

வெற்றியடையாதென்ற 

நம்பிக்கையைத்தாண்டி

இருப்பவர் விளையாட்டைத்தாண்டி

இல்லாதவளின் நில்லாத ஆசையாய்

பூக்கின்றது!! இது ஒரு 

மரணதின் வெற்றி

ஒரு  மரணத்தின் தோல்வி 

இருந்தும்  இவள் கனவு



குட்டிக்குட்டிச் சாரல்

 இழந்தே தனிந்ததே வாழும்

பெண்னிடம் ஆண்மை  

பெண்மைத்தன்மையையே

இழந்திடச்சொல்கின்றது



இழந்தபெண்ணிடம்  இருப்பதும்

ஆண்மையின் தேடலும் 

இங்கே மட்டுமே  கேள்விகள் 

இல்லாவிடையாகின்றது

இந்தமாயாவுலதில் சில 

விந்தைகளும் நிகழும் 

சிலமரணகளும் நிகழும் ஆனால்

எப்போதும் பெண்மை மட்டுமே 

மீண்டும் மீண்டும் தோற்க்கும் !!






குட்டிக்குட்டிச் சாரல்

 வறுமை வாட்டியபோது

 அறியாமுகம்

திறமை பேசியபோது 

தேடாமுகம்

பணக்காரமாயக்கண்ணாடி விழுந்ததும் 

தேடுமுகமானது!!

இறைவேடிக்கை புரியாமல் 

திகைக்கின்றேன்

 வரும் ஆபத்தை புரிந்து!!

Sunday 7 January 2024

விழி கண்டு மொழி பேசும் சாரல்

 முயற்சியொன்ரே 

என்னுடையது

மற்றவையணைத்தும் 

இறைவனுடையது 

தாங்குவதும்

வீழ்த்துவதும் 

அவன் என்றால்

இப்போது 

வீழ்த்தியவனே என்னை

தாங்கிப்பிடிக்கின்றான்

 வேதனை கொடுத்து 

வேடிக்கை பார்த்தவனே

பாதையாகின்றான்  

முதல் முறை என் பாதம்

புற்கள் மீது பனித்துளிக்குளியல்

செய்கின்றது!!



Saturday 6 January 2024

குட்டிக்குட்டிச் சாரல்

 இதுவரை யாரும் பார்த்திடா

அவள் மனசை ஒரு நொடிப்பார்வையில்

அவன் பார்த்திட்ட போது!

 மறவர் போட்ட 

மாயக்கண்ணாடியை உடைத்து 

அவள் மனசு ।அவளை

அவளுக்கே அழகாய் காட்டியது



குட்டிக்குட்டிச் சாரல்

 ஒற்றைநொடிபார்வை பட்டு

மற்றநொடி ஏக்கமாக  அவள்

கேட்டநொடி  இதயதிற்க்குள்

காத்திருக்கு 


Friday 5 January 2024

குட்டிக்குட்டிச் சாரல்

 தோற்று போய் அழுத போதும் சரி

போராடிக்கலைத்தபோதும் சரி

நான் தேடிய சொத்து 

அன்பு ஒன்றே। 

குட்டிக்குட்டிச் சாரல்

 இறைவன் விளையாட கையில்

எடுத்த பொம்மை நான் மனிதன்

விளையாட கையில் எடுத்த பொம்மை

பெண் இயற்கை விளையாட கையில்

எடுத்த பொம்மை மனிதன்

குட்டிக்குட்டிச் சாரல்

 நேசம் என்ற சொலை

 நேசிக்காமலே உச்சரிக்கின்றன

உதடுகள்!!

Wednesday 3 January 2024

குட்டிக்குட்டிச் சாரல்

 நித்தம் பேசும் கனவிற்க்குள்

யுத்தம் செய்யும் நினைவேடு

மொழிகள் சண்டையிடாமல்

தோற்க்கின்றது!!

 


Monday 1 January 2024

விழி கண்டு மொழி பேசும் சாரல்

 புதிதாய் ஒரு  தொடக்கம்

எனக்கான தொடக்கம்

யார் வந்தாலும் போனாலும்

இருந்தாலும் பிரிந்தாலும்

நிக்காத தொடக்கம்  

போனகாலம்  கற்றுக்கொடுத்த 

தொடக்கம்

இருக்கும் காலம் கற்று 

தரும்  தொடக்கம்  இது 

எனக்காய் நான் தொடங்கும் 

மிஞ்சக்காலத்தொடக்கம்

கைகொடுத்து கைபிடித்து 

கூட்டிப்போகும் இறைவன் 

ஆடும் விளையாட்டின்

தொடக்கம் இங்கே 

ஓடும்  குதிரை நான் 

தொடக்கமும் முடிவும்  இறைவன்