Thursday 29 April 2021

குட்டிக்குட்டிச் சாரல்......

 யார்விழி

யாரையே தேட 

யார் இதயம் யாரோட சோர

 பேசாமல் மொளனித்து

ரசித்தவள் ரசனையை  தேடுது

இருவிழி. 

கல்லுக்குளும்  ஓரு ஈரம் 

மழைநீர் படாமல் பரவுவதை

தடுத்திட முடியாமலே வருகின்றது

தானாய்

 தள்ளியே அழித்த ஆசை

அள்ளியே எடுத்திட   

இறந்திட்ட பூவிடம்  கையெழுத்தை

கேட்பதைபோல  

முடித்திட்ட புத்தகத்தின்  முகவரியை

தேடுவது போல் 

வந்தது  நானடி!!!!

புன்னகைகொன்றே

மண்ணிலும் வாழும் மனிதம்

உண்மையடி!!!


Wednesday 28 April 2021

குட்டிக்குட்டிச் சாரல்......

 உயிரின் ஓசையடங்கிய

 பின்பும் 

உள்ளத்தின் ஓசைக்குள்

ஐம்புலங்கள் எழுதுவதை

  மூச்சுகாற்றுக்குள்

வாழ்ந்திட   செய்வதே காதல்

குட்டிக்குட்டிச் சாரல்......

மரணம் மரணமென அழுகுரல்கள்

திரும் திசையெல்லாம் உயிரற்ற உடல்கள்

யுதங்களில்ல சத்தங்களில்ல அழிவுகள்

படைத்தவன் எழுதிய விதிபிழைகளில் மனிதனின்

நேசமற்ற சுயநலகைபிடிக்குள் அடங்கியே எரிகின்றது

உடல்கள் அடக்கங்கள்  கூட ஆனாதையாகியும் நாளைய  நிரந்தரமற்ற வாழ்கைக்கு இன்றைய கல்லறை குழிகளை தோன்றியே ஜெயிந்திட   துடிக்கின்ற மனுதர்மங்கள்    இப்போ கலியுகம்  வந்தாய் பேச்சு  

இறைவனுக்கும்.   உயிர்வர   தாமை தான்  இல்லாமல் போச்சோ!!!


குட்டிக்குட்டிச் சாரல்......

 வலியேடு இரவுவிழித்திருக்க விடைதேடி இரவு நீண்டிக்க தன்னையே தேடி தனித்திருக்க தனக்கான நிமிடங்கள் தொலைந்திருக்க  ஏதோயெரு குயிலின்இசை மெல்ல தழுவி உறங்கிட சொய்து


Sunday 25 April 2021

குட்டிக்குட்டிச் சாரல்......

  விதியெழுதிசென்ற வாழ்வின் விடையை

   யார்யாரே கிறிக்கிய கிறுக்கள் கேள்வியாக்க

தேட ல்கள் தேடலாய் தொடருது பல சுமைகள்

கடந்தும்

குட்டிக்குட்டிச் சாரல்......

 தன்னில் நிறைவின்றி பிறரின்   குறையுண்டு

அன்பில் காயமாகின்றது  நம்மில்  நம்பியவர்

வாழ்கை  கையில் கட்டுன்டு  வார்தையேடு

வாழ்வதாரம் போராட  செய்யத்தெரியா 

செய்யுள்ளானது   வாழ்வு

குட்டிக்குட்டிச் சாரல்......

 உயிரில் ஓரு கவிதை உயிரின் சுவாசமாய்

உயிரோடு வாழுவதை மூச்சினை தாலாட்டும்

சுவாசக்காற்று இசையாய் மாற்றியது   இதயத்தின்

சத்தில் ஸ்ரங்கள்  சுகந்திரமாய் பாடுது அர்த்தங்களை

சொல்லா மொளனத்தில் ரசனையற்ற பொழுகளில்

மனதின் வலியில் யுதங்கள் செய்யும் நினைவுகளை

உறங்கிட தவழுது உணர்வாய்!!


Friday 23 April 2021

குட்டிக்குட்டிச் சாரல்......

 இறுதிவரை கனவாய் கலைந்த

கனவின் இறுதியஞ்லிக்கு பாரட்டுவிழா

உடைந்தெறிந்தவர்களே கண்ணீரோடு

குட்டிக்குட்டிச் சாரல்......

இயல்பாய்    இயங்கிட முடியா இதயம்

இயந்திரமானது பலமின்றி மனசும்

கல்லாய் போனது பருவங்கள்   உறைந்தே

உயிரும் உருகிட இயல்பை இழக்கின்றது

வாழ்கை!!!

Thursday 22 April 2021

குட்டிக்குட்டிச் சாரல்......

 இளமையில் ஏமாற்றம் 

முதுமைக்கு  ஏக்கம் 

இளமையின் தோல்வி  

முதுமைக்கு  பாரம்   

இளமையின்  தவறு

முதுமைக்கு  தண்டனை

ஆனால்!!

முமையின்  தவரோ 

ஜென்மத்தின் தண்டனை!!

குட்டிக்குட்டிச் சாரல்......

 உணர்சியின் தூண்டிலில் அறிவு 

மாட்டிக்கொள்வதால்  பொய்யின்

முள்ளில் சிக்கிக்கொள்கின்றது உண்மை

உயிரோடுயுள்ளவரை!!!

குட்டிக்குட்டிச் சாரல்......

 அழுக்கான மனதை எந்த விளக்கமும்

தூய்மையாக்கிட. முடியாது தன் சந்தோஷத்திற்காய்

மற்றவரை  அழுக்காக்கியே. தன்னை நிருபிக்கின்றது

Wednesday 21 April 2021

குட்டிக்குட்டிச் சாரல்......

 எப்பவும் பார்வையாய் நிற்பவர்கள்

கூட்டம் தான் அருகில்  உதவியாய் 

உதவிட நினைப்பவர்கள் இருந்தும் இருப்பதே

தொலைவில்!!

Tuesday 20 April 2021

குட்டிக்குட்டிச் சாரல்......

 ஒற்றையுறவே  உறவின் வழியை

பலவீனமாகின்றது ஒத்துக்கொள்ளாமலே

உறவின் பாதையில் நடக்கின்றது ஏமாற்றத்தோடு

இற்றைவரைக்கும் கனவின் வழியே பயணிக்கின்றது

தனியாய்கற்றுக்கொள்ளாமனதாய் 

கற்பனையில் நடக்கின்றது தன்னையும் மறந்து

இஸ்டமில்லாதே கூடுது கூடு கஸ்டமாய் போகவே

துறக்கு  உறவை



Sunday 18 April 2021

குட்டிக்குட்டிச் சாரல்......

 மரணத்தையெழுதியே மண்ணில்

பிறக்கின்றோம்  மரணம் தொடும்வரை

நாம் தான் சிறந்தவராய்  சிந்திக்க வேண்டியதை

சிக்காமலே இறக்குன்றோம் சிந்திப்பவரை

ஏற்காமலே நித்தித்தே   மரணத்தை மறக்கின்றோம்

Saturday 17 April 2021

குட்டிக்குட்டிச் சாரல்......

 சந்தர்ப்பம்  என்பது. சந்திக்கும்

போதுதான் சாதனை என்பது

தலையெடுக்கின்றது 

Sunday 11 April 2021

குட்டிக்குட்டிச் சாரல்......

 ஒற்றைநாள் உன்னை போல்

உனக்கான ஆசையை  எனக்கான ஆசையாய்

மாற்றினேன் சந்தோஷமானது மனசு சற்றே தனிமை

எட்டிபிடிக்க மாட்டிக்கொண்டேன் வலியிடம்

ஓன்று யோசியாமல்  என்னைதிட்டிபோனது 

தனிமை

 இல்லா உறவாய் நானேன்னானேன்  என

தெரியாமல் என்னை திட்டலாம இருப்பவர்சந்தோஷம்

இருந்திட இல்லாத உறவின் ஆசையாய்ஆனேன் என்றேன் தனிமைக்கு!!!


Saturday 10 April 2021

குட்டிக்குட்டிச் சாரல்......

 தோற்றவள் ஆசைக்கு  வாழ்பவள்

ஏற்றிடும் முதல் ஓளி இருவர் வாழ்வின் நீண்ட

இருளின் முதல் படி கைகள் தொடா கருணை

தோற்க கைகள் பற்றிய முதல் சந்தோஷம் நீதான்!!!

குட்டிக்குட்டிச் சாரல்......

 புதிதாய் ஓரு சந்தோஷம் புதிய பிறந்திட

இனிதாய் ஒரு நாள் தனாய் தொடங்க 

எழுதா வடிவாய் நானாய்  தோன்ற இனால்

தோற்ற தோல்வியில்  என் மனசு ஏனோ பூக்குன்றது

புதிதாய் !!!!

இதுவே காலம் தந்த முதல் தொடக்கமே இருந்தும்

மனதில் ஏளோ வலியின் துளிகள்

Thursday 8 April 2021

குட்டிக்குட்டிச் சாரல்......

 அழகான உன் இதயம் அழகாய்

பூக்கும  அன்பில் அழகாய் தொடருது

நம் அழகிய சந்தோஷம்  இருவர் நிலையிலும்

வேவ்வேறு  சங்கடம்  ஆனாலும். கைகள் கட்டி

கைகள. பிடித்த  உன் அழகான அன்பு

எந்தன் புன்னகை தேசத்தின்  வசந்தம்

நீதான் என்றது என் இதயத்திடம்!!!

Wednesday 7 April 2021

குட்டிக்குட்டிச் சாரல்......

 எத்தனை பெரிய யுத்தம் செய்தாலும்

அழிவினை புரிந்துட அறிவிலிகளால் தான்

அரம்பமாகின்றது அடுத்த யுத்தம்

குட்டிக்குட்டிச் சாரல்......

 என்னோடு தோற்ற கனவு கண்மணி

என்னுடல்  விட்டு விலகிய நிமிடம் எனக்காக

   நான்     போட்ட கோலம் மண்தொட்ட மழையில்

என்னுடல் விழுந்து    தன்னோடு இழுந்தேசென்ற

கற்பனை!!!

Tuesday 6 April 2021

விழி கண்டு மொழி பேசும் சாரல். ......................,

 பிறப்பின் சந்தோஷத்தில் இறப்பின்

வலியை எழுதிய இறைக்கு   எந்தன் உயிர்

கொடுத்தேன்   சந்தோஷமாய்!!

இழப்பின்   நடுவே விழுந்த  சங்கடங்களை 

என்னோட  மாலையாக்கி   சந்தோஷத்தைக்

கொடுத்தேன் இறைவனுக்கே!! 

பூக்கள் உதிர்ந்த நாரில் கண்ணிர் முத்துகளை

பக்தியோடு கோர்த்து   மகிழ்வாய் போட்டேன்

என் உயிர்  மாலையாய் இறைவனுக்கு!!!

மறைந்த. உடலெடுத்து  என் உயிரால் உயிர்கொடுத்து

இருண்ட நாளுக்கு ஓளியேற்றினேன்  நானாய்

இறைவன் சொல்லாமலே!!

கரையின்றிய கடலேடு  தரைதொடா தொப்பம் போல

தனியாய் மிதக்கின்றது வாழ்கை யார்வுடனும் கோவமுன்றி

 !! தவறுகளை உருவாக்கி  இறைகற்று தந்த பாடத்தையும்

அறிவிழந்த உயிரின்  உணர்ச்சியால்

உடைந்தெறிந்த கண்ணாடி.   காயத்தைப்போல

கற்றுக்கொண்டேன்  எனக்கான தண்டனையாய்!!

வலிகளுக்குள் வலிகளை வழியமைத்த இறைவனுக்கு 

நன்றியாய் என்  வண்ணங்களை     கொடுத்தேன் அன்பாய்!!! 

கற்றபாடத்தையும் வாழ்வையும் சிந்தித்த

கற்பனை தோல்விக்கும் எனக்கும்  இறைகல்லாய்

புன்னகைக்க  கண்ணின். நீர்சுரப்பிக்கும்

எனக்கும் எப்போதும்  சண்டையானது  என் வாழ்கையில்!!!



குட்டிக்குட்டிச் சாரல்......

 தோற்றபோது வலிக்கா இதயம்

தோற்கடிப்பட்டபோது வலிக்கு ஏமாற்றம்

அன்பினால் வருவதாலே

குட்டிக்குட்டிச் சாரல்......

 உணரமறுக்கும் உறவிடமே உணர்ச்சிகள்

அடைக்கலம்  தோடுகின்றது உணர்ந்தவர்

இருப்பதை மறந்து

குட்டிக்குட்டிச் சாரல்......

 நிகழ்த்த நிகழ்வில் நிகழா பந்தம் 

நிழைக்காதே என நிகழ்த்தியவன் பிரித்த

நிகழ்வே நியமான விதியானது

Monday 5 April 2021

குட்டிக்குட்டிச் சாரல்......

 துடிக்கையில் ரசிப்பவர்கள்

அரக்கர்கள் துடிக்கையில் காப்பவர்கள்

மனிதர்கள் துடிக்கையில் கடந்து சொல்பவர்கள்

மிருகங்கள் 

குட்டிக்குட்டிச் சாரல்......

 உன்னை அறியாதவரை பொய்யும்

அழகு    தான்   வாழ்வோடு

 உன்னை அறிந்தபின்பு உண்மையும் 

கசப்பு தான் நினைவோடு

குட்டிக்குட்டிச் சாரல்......

 பெண்மையை  வெறுக்கும்   பெண்மைக்கு

தெரிவதில்லை பெண்மையின் சிறப்பை

பொண்மையே அழிக்கும். கொடுமை!!

Saturday 3 April 2021

குட்டிக்குட்டிச் சாரல்......

 நம்பிகையே. தம்பியவரை தோற்கடிக்கும்

போது தான்  உடைகின்றது உருத்தெரியாமல்

நம்பிக்கையற்ற நம்பிக்கை உருவெடுக்கின்றது

தானாய்!!!

Friday 2 April 2021

குட்டிக்குட்டிச் சாரல்......

 மூச்யடைத்து சுவாசமின்றி    தவிக்கையில

தென்றலுக்கு வோர்க்கின்றதே

 சுவாசம் தேடும் தோகம்போல

என்னயிது இருப்பதும்இல்லாதும்  

 தேய்வதும்.  முறைப்பதும்  வெறுப்பதுமாய்

வீசிய தென்றல்    சுமக்கின்றதே என்

இதயத்துடிப்பை .  ஓரு வசந்ததை  போல !!!

Thursday 1 April 2021

குட்டிக்குட்டிச் சாரல்......

 பார்வையெளியில் இதயம் குருடாய்யிருப்பவர்

கைபிடித்தே நடப்பதை விட இதய்யெளியில்

பார்வையற்றவர் கைபிடித்தே நடத்திடு  இருள் கூட

அழகாகும் பயணத்தில்!!!!

குட்டிக்குட்டிச் சாரல்......

 ராஜதந்திரிகளின் கைகளில் தொட்டில்

குழந்தையாய் நாம் கையிறும் பாலும்

அவர்கள் கைகளில்  அழுகையோடு  நாம்!!

குட்டிக்குட்டிச் சாரல்......

 விழிகள் உறங்கா பொழுதுகளில் 

தாலாட்டும் தாயாய் நீ     தானிருந்தாய்

நான் தூங்கிடும் மடியாய்

இப்போ முதுமையால் தூங்கா பொழுதுகளில்

நீயோ முதியோர் இல்லம் சோர்த்த குழந்தையை போல்

என்னை மறந்தே சொல்லுகின்றாய் திரும்பாமலேயே!!

குட்டிக்குட்டிச் சாரல்......

 தோல்விகளின் படிகளில்  விழுந்திட்டபின்னர் தான்

ஜெயம் என்பதை அடையமுடியாவிதியாய்    உணர்ந்தேன்

மதியால் எழுகின்றேன்  விதியே தடுகின்றது