Wednesday 30 March 2022

குட்டிக்குட்டிச் சாரல்

 நம்மை நேசிப்வர்கள் நம்

சந்தோஷத்தை  நினைத்தே

சிந்திப்பார்

நம்மை நேசிப்பதாய்  நடிப்பவர்கள்

தம்மை மட்டுமே சிந்திப்பார்

நம்வாழ்விற்காய்  தன்னை தருபவரே

நம்மை சந்தோஷமாய்  வைத்திருப்பார்கள்

Saturday 26 March 2022

குட்டிக்குட்டிச் சாரல்

 அறுந்த வீணையில்

விழுந்தோடிய மழைத்துளிபோல்

என்னுள் உடைந்த  கனவை.

 மீட்டிப்பார்க்கின்றது காலம்!!’

Friday 25 March 2022

குட்டிக்குட்டிச் சாரல்

 வறுமையை உருக்கியே

கண்ணீர் விடுகின்றது ஏழ்மை

உழைக்கும் வழிகளை மூடிவிட்டு

கொடுக்கும் கைகள்  நம்பி!!!

குட்டிக்குட்டிச் சாரல்

 சந்தோஷத்தை தொலைக்கும்

வரை எதையே  சந்தோஷம் என

நினைக்கின்றோம்  தொலைத்தபின்னே

தெரிகின்றது தொலைத்தது தான்

சந்தோஷமென!!!!

Thursday 24 March 2022

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 மறைந்தே போகின்றேன்

இசையே  நீயோ  வரைந்து

பார்க்கின்றாய்

உடைந்தே போகின்றேன்

இசையே. நீயோ செதுக்கி

எடுக்கின்றாய்

தடுக்கிவிழுகின்றேன். 

இசையே நீயோ தூக்கி

சுமக்கின்றாய்

வெறுத்துப் பார்க்கின்றேன்

இசையே  நீயோ தாயாய் 

வருகின்றாய்

கோவம் கொள்கின்றேன்

இசையே நீயோ தொட்டிலாய்

ஆடுகின்றாய்

பிரித்தே பார்க்கின்றேன்

இசையே  நீயோ சுவாசமாய்

வாழ்கின்றாய்!!!


நீ

Wednesday 23 March 2022

குட்டிக்குட்டிச் சாரல்

குட்டிக்குட்டிச் சாரல்

 தூக்கி சுமக்கின்றது

தமிழ்

இறக்கி வைத்திட முடியா

அகதிப்  பட்டத்தை !!!



குட்டிக்குட்டிச் சாரல்

 தன்னை தானே ரசித்த

நிதிடத்தை  

ரசிக்கும் இதயம்தந்த நிமிடம் 

சொல்லுகின்றது

ரசனையின் அழகில் 

பூத்திடும்நிமிடம் 

தோற்றிடா அழகே

மனிதன்  வெற்றியின் அழகுயென!!!





Tuesday 22 March 2022

குட்டிக்குட்டிச் சாரல்

 எதிர்பார்ப்பை

 அதிகம்வைத்தே 

அதிகமாய் 

எதிர்பார்க்கும்

அந்த  

எதிர்பார்ப்புக்களே 

நம்மைதேற்கடித்திடும்  

நாம் எதிர்பார்க்கதே 

நம்மேடு 

கூடவே   நடக்கும்  

எதிர்பார்ப்பு 

ஆச்சரியமாகும்

எப்போதும்!! 



உயர்ந்த இடத்தை  

பிடித்த 

 எதிர்பார்ப்புக்கள் 

நம்மை  விட்டு 

இறங்கி  வருவதில்லை இருந்தும் 

இறந்து  விடுகின்றதுஉனர்வு !!!

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,



 என் செல்லத்தின்  செல்லமே

என்னைப்பிரியா நேசமே

பிரிவுகள்  பிரிக்கா உறவே

யாரும் பறித்திட  முடியா பந்தமே

 நான் கதைபேச  சலிக்காமல்

கேட்டிடும்  என்   சொந்தமே

என் தனிமையின் துணையே

நான் கட்டித்தூங்க  விழித்திருக்கும்

விழியே  என்னோடஅதியமே  



என்

 மையிட்ட விழியின் அழகில் 

என் பொய்யிட்ட கவிதையே

 என்  இதயத்தின்  மொழியே 

கூடவந்து ஆண்டு கடந்தும்

என்னோடு  வாழும்  காதலே 

என்மரணம் தொட்டே  எந்தன்

உயிர் உனதாகுமே இல்லை  ஓற்றை தீயில்

இருவர சாம்பலும் ஓன்றாகுமே!



 



குட்டிக்குட்டிச் சாரல்

 ஓவ்வொரு துன்பத்திலும்

எனோ மனசு நிறையவே 

எதிர்பார்க்கும்  

எதுகும் கிடைக்காதென

தெரிந்தும் அப்போது தான்

என் கற்பனைகள்  என்னோடு

சண்டையிட்டு அழுகின்றது!!

குட்டிக்குட்டிச் சாரல்

 ஓவ்வொன்றும்  என்னை

சிந்திக்க செய்கின்றது

ஆனால்  பணம் மட்டுமே

மற்றவர்கள்  என்னை சிந்திக்க

வைக்கின்றது. 

Monday 21 March 2022

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 ஆலமர ஆத்தங்கரை

அசையும் பூங்காற்று விழுதோடு 

தொக்கியாடிய இளமை  

கைகள் கட்டி வேடிக்கை  

பார்க்க ஆசைகளை 

சொல்லாதேயழைக்கு விழுது

தொலைத்ததை தேடத்துடிக்கம்

ஏக்கம் போல! அக்கம் பக்கம் 

ஓய்வாய் யாருமற்று ஊர்

ஏங்கமாய் பார்க்கின்றது  

என்னை போல்

யாருமற்று விழுதுகள்  அசைந்தாடி 

கூப்பிட சந்தோஷத்தில் ஒருநெடி

முதுமையும் மறந்தது

இருந்தும்!

இயந்திர வாழ்வில்  சற்றே ஒய்வு

எங்கேயும்

இல்லையே  விழுதே!!!

எப்படி மாற்றிவிட்டது நம்மை

காலம்!!!

Sunday 20 March 2022

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 நியமென்னும்  அன்பில்

பொய்யென்னும்  நிழல்

கூடவே நடிப்பதை  

காலமென்னும்கண்ணாடி 

உடைத்திடும்  போது தான்

உறவென்னும் அகம் 

 பிரிவின்றி  நிலைக்கின்றது

விழியென்னும் மாயை 

 திரையென்னும்வண்ணத்தால்

முடிய   நியமென்னும் விம்பம்

வலியென்னும் நீரால் 

கரைகின்றபோதே

தனிமையென்னும்  கை 

வெறுமையென்னும்

பக்கத்தில் கற்பனையென்னும் 

உலகத்தை  காட்டிமறைகின்றது!!!




Saturday 19 March 2022

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 விழித்திடு தமிழே விழித்திடு

உன்னை வென்றிட  விழித்திடு

பகைவர் மண்ணில்பலமின்றி

விழுமுன் விழித்திடு

அடுத்தவர் தூக்கி நம்மையாழும்

காலம் தடுக்க விழித்திடு 

ஆச்சி அப்பன் மூச்சுக்காற்று

தெருவில்  விழுமுன்விழித்திடு

கண்ணில் பட்ட திசைகள்  போன

மண்ணின் தமிழே  விழித்திடு

கைகள்   தொட்டு கதைகள் பேசி

கருவாய் புதைத்த தமிழே விழித்திடு

கயவன் தொட்டு தலைமையெழுத  

கைகள்பற்றி விழித்திடு

சிந்திக்க தவறியே நம் சந்ததி

தம்மை  இழக்கும் தழிழே விழித்திடு

மண்ணில் சுவாசம் விடுதலையாக

தமிழே விழித்திடு

உயிரின் நேசம்  கொண்டு விழித்திடு








விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 வலியினை மறந்திட  நான்

போராடியதுண்டு  

வலிகளைத்தருபவர்களைக்கண்டு

பயந்ததுமுண்டு

வலிகளால்என் மனம்அச்சம்

  கொண்டதுமுண்டு

வலிகளே வாழ்க்கையென 

சந்தோஷத்தை  வெறுத்ததுமுண்டு

  அந்த வலிகள் மட்டுமே

என்னைத் துரத்த மற்றவை வெறுக்க 

வலிகளின்  கைபிடிக்குள் வண்ணம்

தொலைத்த எண்ணமதனில் கண்ணீர்

பூபோல் வலிகளாய்உதிர்கின்றேன்!!!

Wednesday 16 March 2022

குட்டிக்குட்டிச் சாரல்

 நியமில்ல நிழலின் தூரம்

கைகள் தொட்டுவிடா நியமானதால்

தொலைந்தே போனது உருவம்


Saturday 12 March 2022

குட்டிக்குட்டிச் சாரல்

 தொலைந்திடும் நிமிடங்களை

 நான்  சேகரித்தே போகின்றேன்

நான்தொலையும் நாளில்

நிமிடங்கள் வாழ்ந்திட

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 இயலும்போது 

ஓற்றை துன்பம்

இயலாமையின்போது 

எல்லாம்துன்பம்

கடமையின்போது 

இளமை துன்பம்

முதுமையின்போது 

வாழ்க்கைதுன்பம்

பிரிவின்போது 

பொய்கள் துன்பம்

தனிமையின்போது 

கனவுகள்துன்பம்

வறுமையின்போது

வார்த்தை துன்பம்

வசதியின்போது 

கருணைதுன்பம்

மரணத்தின் போது 

தீயும் துன்பம்

மண்ணின்மீது   

உயிரிரும் துன்பம்

Wednesday 9 March 2022

குட்டிக்குட்டிச் சாரல்

 எப்போதும் நான் ஓன்றை

எதிர்பார்த்திட வேறென்று

கடுமையாய்  விழுந்திடுகின்றது

என்னை மூடி 

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 பெண்மையை மெண்மைக்கு

எதிரியாக்கிய  ஆண்மையின்

ஓரு முகம்காண பொண்மை  

கொண்ட அன்பில் 

இன்பம் காணான்ஆண்மை 

பெண்மைக்காய்சொல்லும்  

சொல்லுக்குள்அடைபட்ட 

பெண்மையின் ஆசை

சொல்லா உண்மை  

சற்றே புரியா பெண்மை

ஆடம்பரத்தை காட்டி கொண்டு

சண்டையிடுகின்றது  எதிரியாரென

அறியா கற்பனையில் 

தன்னில் உள்ளதை மாற்றா 

தன்தலைவன் 

சொல்பெய் மெய்யென

நம்பியே 

தன் அன்பில்  நம்பிகையின்றி

தன்னையே  தப்பென 

தாழ்த்தி  சிறுமை கொண்டே

அடிமையானது  இங்கே

அன்பின் சிறப்பு

தாய்மையின்  ஊற்று

உண்மையெனில்

உலகத்தில்  நீயென்றும்

இறைவியென்னும்  புரிதல் கண்டால்

யாருக்கும் யாரும்எதிரியில்லை 

பெண்னே!!!’



Tuesday 8 March 2022

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 யாரோ நினைக்க  

யாரோ வரைந்த ஓவியம்!!

யாரோவாய் யார்வீட்டுக்கே

பிறந்திடுகின்றது ஒவியம்!!!

 யாரோ ஆசைபட 

யாரோ  சொல்ல

யாருக்கே உறவாகும் ஓவியம்!!!

 யாரோடும் சோராமல்

யார்மேலோ கோவம் பட்டு  

யாராலும்  புரித்திடா 

அழகிய கற்சிலையாய்

 தன்னை தொலைத்து

தன்னைதேடும்  ஓவியம்!!!

யார் யாரோ திட்ட 

தனக்கா அழுதிட்டு

காலத்தின் கைதியாய்

உயிபெற்று உணர்வற்று  

நிக்கின்றது! ஓவியமாய்!!!





விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 தினமதன் வெற்றி

தினம்தினம் போராட்டம்

திரும்பி பாரா   வாழ்க்கை 

நிமிடங்கள்  எழுதும் கதை

இவ்வுலகின்பார்வை

கற்பனை  முகம்

இருந்தால் வெறுக்கும்

இழந்தால் நேசிக்கும்

இருட்டையே வெளிச்சமென்னும்

சிந்தனை 

 தாழ்வாய் பேசியே

உயரவை தடுக்கும் 

பெருமை கொள்  சிறப்பு

அறியாமையென்று

பூசி மெழுகும் காப்பு!!!


Sunday 6 March 2022

குட்டிக்குட்டிச் சாரல்

 அன்பும்அக்கறையும் 

கிடைக்காத போதே.

 இப்பிறப்புஅனாதை!!

நம்மை  தம் சந்தோஷத்திற்காய்

தொலைக்கும் போதே. 

நம் உறவும்அனாதை!!! 

சுயநலவாதிகளின்

அக்கறையில் தான்   மனிதப் பிறப்பே 

அனாதையானது!!!

Friday 4 March 2022

குட்டிக்குட்டிச் சாரல்

 நாம்தோற்றுகொண்டே

எழுகின்றோம்  

தோல்வியை ஏற்காத்தால்

வெற்றியை  ஏந்திக்கொள்கின்றோம்

 வெற்றியும் ஒரு  தோல்வியின்

உண்மை தான்மரணம்  வரை!!!!!


குட்டிக்குட்டிச் சாரல்

 பட்டென புன்னைக்க 

வைத்தே  நீ

சட்டென மறையும்

வானவில்லாகின்றாய்  என்னுள்

எட்டி  பிடித்திட 

தேற்கின்றது  என் இதயம் 

உன்னாலே!!!

Tuesday 1 March 2022

குட்டிக்குட்டிச் சாரல்

 நாமாய்தொலைத்ததே 

அதிகம் 

நமக்காய்இருப்பதை நினைபதே 

குறைவு

நம்மிடம்இல்லதை தேடியே  

 ஓட்டம்

முடியும்  என்ற கற்பனை

முயற்சின்முடிவில்  வாழ்க்கை 

தூரம்