Monday 29 January 2024

குட்டிக்குட்டிச் சாரல்

 முதல் முறை  திறந்தது

ஒருவித  பதை அது

இருண்ட காட்டுவழிக்குள்

நடக்க தொடங்குது

பல முறை விழுவேன் என

அறிவிக்கின்றது  அறிவு

இருந்தும் நம்பிக்கை போவென

தள்ளி விடுகின்றது !!பல முகம்

பல விதமாய் தோன்றுகின்றது

இருந்தும் எதுகும் தெரியாமலேயே

நடக்கிறேன் இறைவன் வருவான்

என நம்பி!!!



Friday 26 January 2024

குட்டிக்குட்டிச் சாரல்

கொஞ்சம்  கொஞ்ச

கொஞ்சநேரம் இல்லையெமும்

மனிதனே குடும்பம்  இருந்தும் 

தவிக்கும்  நிமிடத்தை உருவாக்கி

மிஞ்சநேரம் கொஞ்சத்தேடுகின்றான்

Wednesday 24 January 2024

குட்டிக்குட்டிச் சாரல்

 ஓய்வாய் சிலநொடி

ஓரமாய் கேட்டது

உன்னோட சிலநொடியை

யாரே இவனெ  தனாய்

தள்ளிவிட்ட காலமே

பல கதை கூறியே 

காணாமல் போனபோதும்

உனக்கான நிமிடத்தையே

எனக்காய் கேட்குது தனாய்

வீணா ஆசையென நானாய்

சொன்னாலும்  உணர்விற்கு

புரியவில்லை இன்னும்!!!இங்கே

இன்னும் நான் நிலவை கையில்

பிடிக்க ஆசைப்படும் குழந்தையே!!!




குட்டிக்குட்டிச் சாரல்

 நீயே உலகம் என்றவள்

உலம் இலை இப்போ

தன் வழ்கையே அழகு என்றவள்

வாழ்வில்லை இப்போ ஆனாலும்

வாழ்கின்றாள்  உன் நிழல் கவிதையாய்!!

குட்டிக்குட்டிச் சாரல்

சில தவருகளை திருத்த
முடிந்தாலும். நாம்
திருத்தாதவருகளே 
பெரிய தவருகளை
உருவாக்கின்றது

Saturday 13 January 2024

குட்டிக்குட்டிச் சாரல்

 யாருடைய 

திமிரும் அலச்சியம்

என்னை எதுக்கும் செய்ததில்லை

அதை விட எனக்கு அதிகமாய்

இருப்பதால் 

யாரையும் நம்பி  எத்த

எதிர்பாப்போடு சிலையாய்

நின்றதில்லை  என்னை

நம்பிக்கையே ஓடுவதால்

 ஆனால்

பொய்யான அன்பை  மட்டும்

யார்மீதும்  வைத்ததிலை 

பல முறை ஏமாந்தும்

முட்டாள் பெண்ணாயே வாழ்கின்றேன்

Wednesday 10 January 2024

குட்டிக்குட்டிச் சாரல்

        உன் முகம் தேடியே

பல விழிகளுக்குள் விழுந்தெழுந்து

உன் விழிக்காய்  விழிக்கின்றது இரவு !!




குட்டிக்குட்டிச் சாரல்


  நாணம் கொண்ட 

பெண்மை

ஆசை கொண்ட நெஞ்சம் 

மறைத்து!!

தென்றல் பாடும் பாடல் 

பாடி

 கிளிகள் சொல்லும் கதைகள்

கேட்டு

ஆசைக்கனவில் மிதக்கிறாள்

நதிமேல் படகாய்!!!

Monday 8 January 2024

குட்டிக்குட்டிச் சாரல்

 அச்சம் நிறைந்தமனதை

பதறித்தாங்க

இதயம் இல்லாவிட்டாலும்

பதறவிட்டு எழந்திடாதே 

மிஞ்சமீதியாசையையும் அச்சப்படவைக்க

இதயம் உண்டு!!

விழி கண்டு மொழி பேசும் சாரல்

 வலிகள் கடந்து  காயங்கள் கடந்து

கடந்தபாதையின் சுமைகளேடு

புதிதாய் ஒரு  பாதை

 அவள் கனவின் சுமையாய்

பூக்கின்றது  

தடுத்த கைகளைத்தாண்டி

வெற்றியடையாதென்ற 

நம்பிக்கையைத்தாண்டி

இருப்பவர் விளையாட்டைத்தாண்டி

இல்லாதவளின் நில்லாத ஆசையாய்

பூக்கின்றது!! இது ஒரு 

மரணதின் வெற்றி

ஒரு  மரணத்தின் தோல்வி 

இருந்தும்  இவள் கனவு



குட்டிக்குட்டிச் சாரல்

 இழந்தே தனிந்ததே வாழும்

பெண்னிடம் ஆண்மை  

பெண்மைத்தன்மையையே

இழந்திடச்சொல்கின்றது



இழந்தபெண்ணிடம்  இருப்பதும்

ஆண்மையின் தேடலும் 

இங்கே மட்டுமே  கேள்விகள் 

இல்லாவிடையாகின்றது

இந்தமாயாவுலதில் சில 

விந்தைகளும் நிகழும் 

சிலமரணகளும் நிகழும் ஆனால்

எப்போதும் பெண்மை மட்டுமே 

மீண்டும் மீண்டும் தோற்க்கும் !!






குட்டிக்குட்டிச் சாரல்

 வறுமை வாட்டியபோது

 அறியாமுகம்

திறமை பேசியபோது 

தேடாமுகம்

பணக்காரமாயக்கண்ணாடி விழுந்ததும் 

தேடுமுகமானது!!

இறைவேடிக்கை புரியாமல் 

திகைக்கின்றேன்

 வரும் ஆபத்தை புரிந்து!!

Sunday 7 January 2024

விழி கண்டு மொழி பேசும் சாரல்

 முயற்சியொன்ரே 

என்னுடையது

மற்றவையணைத்தும் 

இறைவனுடையது 

தாங்குவதும்

வீழ்த்துவதும் 

அவன் என்றால்

இப்போது 

வீழ்த்தியவனே என்னை

தாங்கிப்பிடிக்கின்றான்

 வேதனை கொடுத்து 

வேடிக்கை பார்த்தவனே

பாதையாகின்றான்  

முதல் முறை என் பாதம்

புற்கள் மீது பனித்துளிக்குளியல்

செய்கின்றது!!



Saturday 6 January 2024

குட்டிக்குட்டிச் சாரல்

 இதுவரை யாரும் பார்த்திடா

அவள் மனசை ஒரு நொடிப்பார்வையில்

அவன் பார்த்திட்ட போது!

 மறவர் போட்ட 

மாயக்கண்ணாடியை உடைத்து 

அவள் மனசு ।அவளை

அவளுக்கே அழகாய் காட்டியது



குட்டிக்குட்டிச் சாரல்

 ஒற்றைநொடிபார்வை பட்டு

மற்றநொடி ஏக்கமாக  அவள்

கேட்டநொடி  இதயதிற்க்குள்

காத்திருக்கு 


Friday 5 January 2024

குட்டிக்குட்டிச் சாரல்

 தோற்று போய் அழுத போதும் சரி

போராடிக்கலைத்தபோதும் சரி

நான் தேடிய சொத்து 

அன்பு ஒன்றே। 

குட்டிக்குட்டிச் சாரல்

 இறைவன் விளையாட கையில்

எடுத்த பொம்மை நான் மனிதன்

விளையாட கையில் எடுத்த பொம்மை

பெண் இயற்கை விளையாட கையில்

எடுத்த பொம்மை மனிதன்

குட்டிக்குட்டிச் சாரல்

 நேசம் என்ற சொலை

 நேசிக்காமலே உச்சரிக்கின்றன

உதடுகள்!!

Wednesday 3 January 2024

குட்டிக்குட்டிச் சாரல்

 நித்தம் பேசும் கனவிற்க்குள்

யுத்தம் செய்யும் நினைவேடு

மொழிகள் சண்டையிடாமல்

தோற்க்கின்றது!!

 


Monday 1 January 2024

விழி கண்டு மொழி பேசும் சாரல்

 புதிதாய் ஒரு  தொடக்கம்

எனக்கான தொடக்கம்

யார் வந்தாலும் போனாலும்

இருந்தாலும் பிரிந்தாலும்

நிக்காத தொடக்கம்  

போனகாலம்  கற்றுக்கொடுத்த 

தொடக்கம்

இருக்கும் காலம் கற்று 

தரும்  தொடக்கம்  இது 

எனக்காய் நான் தொடங்கும் 

மிஞ்சக்காலத்தொடக்கம்

கைகொடுத்து கைபிடித்து 

கூட்டிப்போகும் இறைவன் 

ஆடும் விளையாட்டின்

தொடக்கம் இங்கே 

ஓடும்  குதிரை நான் 

தொடக்கமும் முடிவும்  இறைவன்