Sunday 30 December 2012

வர்ணமழை


இயற்கையில் ஒர் விந்தை
மனிதனுக்கு புரியா விந்தை
ஆதவன் அள்ளியொடுத்தவிந்தை
மேகமதிற்குள் ஓடும் விந்தை
தூறலாய் சிதறும்விந்தை
கண்ணை கட்டியாலும் விந்தை
சிந்தையை நனைக்கும்  விந்தை
செய்தவருக்கு புரியா விந்தை
சீற்றம்கொண்டதால் வந்த விந்தை
அழித்திட  துடிக்கும் விந்தை
அழிந்தவர் சிரிக்கும் விந்தை
அழிந்தழித்து மாற  விந்தை
மனிதனக்கு
அழிவை காட்டும் விந்தை
இறுதியாய் விந்தையாய்
வந்த விந்தை
திருத்திட விளையாடுது
வானவிலின் வர்ணத்துறலாய்..........


சிதறல்................

மலரோடு ஒர் கோவம் இறை
கொண்டதேனோ
உதிர்த்த போதும் சுறாவளியாய்
சுழட்டுவது ஏனோ
பட்ட காயத்தை ஈட்டியால்
குத்தி கிழிப்பதேனோ
உடைந்த மனதோடு இதயமில்லா
விளையாட்டு கொள்வதோனோ
கனவில்லாகண்களுக்குள்  கனவாய்
வந்ததேனோ !!!கவிதையாய்
கவியாய் படைத்ததேனோ
கவிதையோடு ஒர் காதலை
உணர்வோடுகலந்ததேனோ 
வெள்ளை மனசுக்குள் மீண்டும்
கொள்ளை ஆசைகளை 
கொலுவாய் வைத்ததேனோ
 கொண்டாடிடா கொண்டவனை  
கொண்டாடி செய்ததேனோ 
கொண்டுகின்ற நீராய் என்றும் 
கண்ணீரொண்டை  கொடுத்ததேனோ
கற்பனை வாழ்வுக்குள் முற்றுபெற்றிடா
புள்ளிகளை இட்டதேனோ
இடரோடு வாழ்கையோனோ
முடிவில்லா துயரமேனோ
இலலாத கற்பனைகளை என்னோடு
சிதறியது தான் ஏனோ 
சிதறாத உயிராய் என்னை சிதறடிப்பதும்
ஏனோ.......




எதற்கு இது இறைவா...............

ஆண்டுதோன்றி மறையும்
ஆண்டாண்டு புதிய புதிய
எண்ணமும் மீண்டும் தோன்றி
மறையும் !!நடப்பது கொஞ்சம்
இழப்பது கொஞ்சம் இருந்தும்
இருபதை நினைத்து நடந்ததை
மறந்திடத்தேன்றும் !!ஆனாலும் 
மாறதே நடந்திடும் யாவும்
 ஏக்கங்கள் கூடும் எதிபார்ப்புக்கள்
பெருகும் காத்திட ஓர் இதயம்
தேடும்!!! கிடைக்காது போனால்
எல்லாமே அழிந்ததாய்  நிற்காது
 என்னாலும்  வாடும் 
கருணையுள்ள மனிதனை தேடும்
கருணையற்ற செயலையோ
கருணையோடு செய்யும்
வீராப்பாய் உறுதியோடு
எழுதிடதுடிக்கும் மீண்டும் ஓர் 
தோல்வி  வந்து  அந்தனையும் 
சேர்த்தேயுடைக்கும் எது நடந்தாலும்
 இதுவோ வாழ்வாய் தேன்றும்
மீண்டும் ஒர்பிரிவு எதற்கொன தெரியாது
கூடவே தேன்றும் கருணையற்றவன்
இறைவனாய் போவான்!!!!!!¬

Tuesday 4 December 2012

வாமன்னன்

எதுகும் சொல்லாது
என்னவென்றும் சொல்லாது
உள்ளத்தை பிழிந்து நீ
எதற்கு மாமா உருப்படியி்ல்லா
ஆட்டத்தை ஆடுகின்றாய்!!!

விளையாடிட  நானிருந்தும்
உன்னோடே சேர்ந்திருத்தும்
உனக்காய் வாழ்ந்திருத்தும்
 தவமாய் நினைத்திருத்தும்
ஏன் மாமா தனித்தே ஆடுகின்றாய்

அடி யே !!பைத்தியமே
 படிக்காத பட்டிக்காடே
பகுத்தறிவும் பக்குவமும்
பதவியோடு உள்ளவளுக்கே
சொந்தமொன  அருக்கானி தேடினீ
ஏன் மாமா புதிதாய் அழைகின்றாய்!!

பாதையோடு போறவளை
பாதியிலே வழிமறித்து பாதியிலே
நின்ற உறவை  பாதையிலே
 சொல்லி  வீனே  ஓர் நாடகம்
எதற்கு மாமா போடுகின்றாய்!!

சொத்திட்ட உணர்விற்கு ஒரு
துளிநீர்  போதும் மாமா!! உன்னை
என்னைப் பிரித்திடும்காலம்
எப்பவும் வானும் மண்ணும்
தான் மாமா !!
உன்னை யோ எண்ணி
என்காலம்  முடிந்தாலும்
யார் காலத்தையும் அழிக்காதே
என் மாமா!!

உன்னையோ நம்பியவளை
உறவாக்கி ஒதுக்காதே
ஆசையில் தோல்சாய்பவள்
ஆசைகளை வேசமிட்டு காக்காதே
வேதணையை க் கொடுக்காதே
பொய்யான மனிதனாய்போர்வைக்குள் ஒழியாதே !!
 வீரத்தோடு நீருந்தால்
முற்களிலும் என் முகவரிகிழிந்திடாது
இருக்கும் மாமா...........................

எதிர்பார்ப்பு

நிமிடங்கள் கடந்து
வாரங்கள் கடந்து
மாதங்கள் கடந்து!!!
கடந்து கடந்து வந்திட துடிந்திடும்
புதியதோர் வருடமே!!
உன்னை வரவேற்க மனிதன்
காத்து காத்து கனவுகளை
கண்ணுக்குள் பதித்துக்கொண்டு
காலத்தோடு சண்டையிட்டு
சண்டையிட்டு  அழித்த
உயிர்களை எண்ணி எண்ணி
புதியதோர் சண்டையிட
யுத்திதனை வகுத்துக் கொண்டுகூடிபேசி
நடிப்பதனை
பார்த்து பார்த்துவெறுத்திட
விண்ணுக்கும் மண்ணுக்கும்
வந்திட்டதே ஓர்  கோவம்
அணுவின்றி ஆயுதமின்றி
தயராகுது மனிதனை வென்றிட
ஓர்  யுத்ததிற்கு !!! இயறகையாய்
கொடுத்ததெல்லாம் சேர்க்கையாக்கிய
மனிதன் மட்டும் எதற்கு இயற்கையாய்
என்று எண்ணியதோ !!இயற்கையே இப்போ
யுத்தை நடத்திட துடிக்கின்றது !!
 சந்தோசம் பாதி சந்தோகம் பாதி
சங்கடந்தோடு அழிவிற்குள் மனிதனை
அந்தரதில் நிறுத்தி  மரணத்தை நோக்கி
 நகரது பூமிக்கிரகம்
மரணத்தை கொடுத்து கொடுத்து
திருந்த முடியாமனிதனை தன்னையழிந்து
திருந்திட துணிந்ததுவே..,,,,

Saturday 1 December 2012

வலை

மெல்ல மெல்ல ஊற்றிடும் உணர்வு
மெல்லமெல்ல  நகருது தனா
சொல்ல சொல்ல வளரும் உணர்வு
சொல்லாது அசையுது தானா
என்னடா கொடுமையிது
பெண்ணவளுக்கு!!

பெண்ணினமானதால் 
கிடைத்த சாபமா
இருப்பன் கொடுத்தசாபம்
இறந்தவன் கட்டிய சாபம்
அடுதவன் கண்களை தொட்ட சாபம்
பெண்ணினதின் வார்தைகள் கோர்த்து
  கோர்த்து விளையாடுது  சாபமாய்
ஆண்ணினதின் அலட்டல்களுக்குள் சிக்கி
கொண்ட சாபம்ங்களாய்!

எல்லாம் தாங்கிதலைநிமிர்த்து
நடக்கையில் தடுக்கிவிடும் சாபம்
 பேதையவள் போதைக்கென சுற்றிய
இவ்வுலகு வரையுதுசாபமாய்!!
எண்ணி எண்ணி தேற்றவள் 
எடுத்து விளையாடிவிதைத்தவன்
விதியொன போகையில் சரியொன
சொல்லும் விதியின்சாபம்
பொண்ணிற்கு மட்டும் தான் உண்டோ
நம்மிடையில்  !!!
எதற்கு தான் இந்த
விவரிப்பு அலட்டல்கள்!!!

 நான் நீயும்ஒன்றொன்று
சொல்லி சொல்லிஅந்தனை
அசிங்கங்களை அள்ளிதெளிக்க
அங்கங்களாய் காட்டி நிற்கும்சாபம்
விதியொன சொல்லி தள்ளிவைத்து
அசிங்கங்களை அரங்கோற்ற
சாபமாய் வந்த பெண்ணின் சாபங்களானதேன்!!
கோவிகளில் பெண்ணாய்  குடுபத்தில் பெண்ணாய்
சிலையுருவில்பெண்ணாய்
அடுப்படியில் பெண்ணாய் ஆசைகளுக்காய் பெண்ணாய்
வேண்டுவதும்பெண் தேடுவதும் பெண்
துணைக்கும் அவள் துறவிக்கும் அவள்!!!!