Sunday 25 March 2012

அழைப்பு

வாழ்வின் வட்டதிற்குள்
வெற்றி தோல்வி முற்கள்
நிற்காது ஓடுகின்றது
மரணதின் நிமிடம் வரும்வரை!!
எவன் எமன் எனதெரியத் தேடலிலும்
எமனாய் சில நிமிடம்
 மரணதின்
அழிவினையும் ரசித்தபடி!
அடுத்தநிமிடம் எதுவெனத்தெரியா
இந்த நிமிடத்தின் உணர்ச்சி
சந்தோசத்தேடலுக்காய்
ஏதோ சொல்லுது 
மனதிற்கு !!!
ஏதையோ செய்யுதுகொண்டு
மரணத்தையும் மறந்தடி!
உன்நினைவுகள்   அணைக்க
தேல்வியால் நிலைத்தும்
வெற்றியால்மறந்தும்
 ஓடும் இந்த கடிகாரம் 
நிற்பதும் ஒடுவதும்
யார்கையில் ????

Thursday 1 March 2012

நிழல்

அர்த்தயாமத்து இருளுக்குள்
ஒருத்தி!தளர்ந்த நடைபின்னிழுக்க
 தளர்கரம் சோர்ந்திழுக்க
 ஏக்கவிழி !துக்கம்சுமக்க!
 இருளின் அமைதிகெடா
 வேகம்  கொண்டு !
பரந்த தேசத்து
 ஒன்றைபெண்ணாய்
                                                 காத்திட துணையின்றி 
வாழ்வோ சுமையாக
 மெல்ல சொல்ல !!
..சற்று மூ டிய மேகம்
 விட்டு விலக
வந்த ஒளி முகம்துடைக்க
பெண்ணவள் சற்று நிமிர 
ஒளியானவள் புன்னகைத்த படி
 சொன்னாள்!!
 தன்னம்தனியே
நிற்கும் இருள்கொண்ட 
சோகப்பெண்ணே!!
 உன்னக்கண்டு தொடரும்
என்னைக்கூடபாராதச் சோகம்
 உனக்குள் ஏனடி??
!விரத்திப் புன்னகை முகம் பரவ
பெண்ணவள் சொன்னாள்!!
 காதலுக்கு சாட்சியானவளுக்கு
 உணர்வின் வலி தான் புரியுமா
 தனிமையின் தவிப்பு தான்
புரியுமா!!
ஒளியானவள் சிரித்தபடி
 பரந்த வானில் நான் தனிமை
 பரந்த தேசத்தில் நீ தனிமை
 இருவர்நிழையும்ஒன்றோ!!
கற்பனைக்கு உயிர் கொடுக்க
 உன்னையும் என்னையும்
 தேடும் மானுலகம் நியம்
 மறப்பதால் இரவிற்கு 
 அரசியாய் சந்திரன் இதயத்தில்
 குடிகொண்டாலும்
 ஒளியில்லா இருள் தான்
 என்வாழ்வு!! ஒளிகொண்டு
 சந்திரன் எழுந்தால்
 அல்லிமலர் மலர்வதற்காய்
 சொல்கிறான் பெண்ணோ!
 தன்தனிமையை போக்கியவள்
 பேசியதை கேட்டபடி
 தன்னை மறந்து
 வீடு வந்தாள்பெண் !!
 தன்நிழலாய் தொலையும்
நியதியை சிந்தித்தவாரு
 இரவிற்கு துணையாய் 
வந்த நிழலின் துணையோடு!!!!!!