Thursday 30 May 2013

, விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,


பிறப்பும் இறப்புமில்லா
லிங்கதிற்கு ஒரு பாதி
அதுவே உயிரில்  பெண்பாதி
இதுவோ சிறப்பின் நியதி
இதை
படைத்தவன் தன்னை காத்திட
படைத்த நியதி
இருந்தும் பிறந்து இறந்து சேருவது
இறைநியதி
மனித தர்மத்தால் துடிப்பது
 பெண்பாதி  இதை
உணர்வில் உணருது ஆண் பாதி
ஆனாலும் வென்றிட
காதிருக்கின்றது  சமநீதி
இதுவோ இயற்கையின் சரிநீதி
இதை சொல்வதும் செய்வதும
ஆண்பாதி...........................



குட்டிக்குட்டிச்சாரல்............













Monday 27 May 2013

வேடிக்கையாய் வந்தது இந்தவலி.............

என்னை ஏன்
தேடித்தேடிவந்தாய்
புரியவில்லை!!!
என் கனவை ஏன்
ஆதரித்து வளர்த்தாய்
புரியவில்லை!!
நான் வாடி நிற்கையிலே ஏன்
தீண்டிசிரிக்கவைத்தாய்
புரியவில்லை!!
தனித்து நடந்திட்ட போது ஏன்
நிழலாய்  வந்தாய்
புரியவில்லை!!
 நான் பாவிஎன்று தெரிந்தும் ஏன்
ஆவி தடுத்தாய்
புரியவில்லை இன்று
அழுது வாடுகின்றேன் ஏன்
அன்னியனாய் மாறினாய்
 புரியவில்லை
காத்ததும் புரியவில்லை என்னை
அழித்ததும் புரியவில்லை
வந்ததுவும் புரியவில்லை சென்றதுவும்
புரியவில்லை
 நான் செய்த பாவமும்
புரியவில்லை
உன்னை சந்திக்க செய்த
விதியும் புரியவில்லை
நான் மாண்ட பின்னாவது
உண்மையை சொல்லி விடு
என்னைதண்டித்த  காரணத்தை
இறந்த பின்னாவது ஆமான்புரிந்து சொல்லட்டும்...........



Thursday 23 May 2013

அந்தாதி

01

தொட்டு த்தொட்டு
 விட்டுத் தொட்டு
விட்டு விட்டு
தொடங்கி தொடங்கி
விட்டு விடும் மாப்பிள்ளை
கட்டிக்கிட்டு விட்டுவிட
கதைதேடும் அழகென்ன
கொஞ்சம் பொத்தி வைத்த ஆசைகளை
கொட்டிவிட தேடுதையா  உந்தன் கிளி
 நட்டுவைத்தமல்லிகை  பந்தலின் கீழ்
மல்லிகை!! கொட்டிவிட முதல்
வாருமையா ஆசைசொல்ல““““““““““““““
02

ஆசைசொல்ல ஆசையில்லா  
ஆசைமறைத்து கொஞ்சும் கோவத்தோடு 
ஆசையாய் என்னை
அக்கரயில் நின்று அழைப்பவளோ!!
கொஞ்சம் இக்கரை சங்கதி கேளடி!!
ஓடிவர கால்துடிக்க தடுத்துவிட்டு
கடமை தவிக்க!!
கூடிவிட இதயம் துடிக்க
ஒருத்தி உந்தன் முகமாய் பூ மலர
போகும் வழியெங்கும் நான் தவித்தேன்
ஜோடியே  நீ இல்லாது பாதியாய் நான் நின்று
கோடி வார்த்தை தேடியெடுத்து சொன்னாலும்
கோவமுள்ள  என்கிளியே  உன்னால்
சண்டையிடத்தான்  தோன்றுமடி...................
03


                                 தோன்றும் மடியிருந்தும் தோகையிவளிருந்தும்
தேடிவர ஆசையிருந்தும் தேடிகதைபேசிடாது
என்னை காத்திருக்க வைத்துவிட்டு  பார்க்காது
இருக்கையிலே  பாவிமனம் தவிக்குதையாய்
பார்பவர் கண்ணும்  கேலியாய்  பேசுதையாய்
தனிமை த்தவிப்பினிலே
நித்தம் நித்தம் கதைபேசி 
நிலவு முகமும் தேயுதையா
ஊமையாய் இருந்தாலும் கோவம் வந்து கூடுதையா
ஒன்றையாய் சண்டையிட்டு பொழுதெல்லாம் வாடுவதையா
பிரிந்து வந்தும் சொல்லாத பிரிவிடமே கேளுமையா
தன்னம் தனிமை துரத்திவர தனிமையிலோ
புலம்புவதை!!
   அந்த நிலவு வந்தால் கேளுமையா............
04

கேளுமையா நீயென
 மார்வில் முகம் புதைத்திட
 மார்வுக்குள் துடிப்பவளோ 
 உன்னையின்றி உலகில் ஒர் உறவு
 இல்லையடி என்றுமெனக்கு
துடிப்பாய் நீருக்க தொட்டணைக்க நானிருக்க
 ஏக்கமென்ன சோகமென்ன
 கண்மணியே!!நீ கூறடி!
 நீ கோவப்பட்டு போகையிலோ
நான் விட்டுவிட்டு  தவிக்கையிலோ
 காயப்பட்டு   மனசும் நோகுதடி!!!
நீ  திரும்பி  பார்கையிலே  பக்க வந்து நிற்கையிலே
சொல்லமா ஓர் துடிப்பு உள்ளுக்குள் ஏங்குதடி
கூடிட நேரமிலிலா கூட்டுக்குளும்
 உன்  உணர்வே சொல்லாது கூடுதடி....................
05

கூடுதடியாட
கூடும் சேர்ந்தாட   கூடுவிட்டு நீயாட கூட்டுக்குள் நானாட
ஆவிவிட்டாட அந்தரத்தில் வாழ்வாட!!
கற்பனையில் நீயாட உன்னோடு
நானாட
கல்லோடு மண்ணோடு
தோன்றாக் காலத்தோடு
பொய்யே தொடராய்யாட
பெண்னோடு வந்தாடும்
சொல்லெல்லாம்  ஏமாற்றி விளையாடும்
 ஆட்டம் தான் மாமா
சொல்லாதே நில்லாதே தொடுக்காதே 
சும்மா  ஏமாற்றியே காலத்தை போக்காதே
  உள்ளோடு  உணர்வோடு
உன்னோடு  நான் கலந்திருத்தால்
ஒரு நொடி   பிரித்தாட உன்னால் முடியாமா!!!!!
06

    முடியுமா என
முன்னும் பின்னும் முடியாது
என்னோடு என் உயிரோடு நடைபோடும்  
என் பொல்லாத  பைந்தமிழே!! என்பைங்கொடியே !!
உன்னோட இடையோட அசைவோடு 
அசைந்தாடுதடி என்னோட உயிர்கிளியே  !!!
கொல்லாது கொல்லும் பெண் தமிழே
 உன்னோட  பிடிவாத மனதாட
என்னோட மனம் சேர்ந்தாட
எண்ணாத எண்ணமெல்லாம் என்னிடத்தே சோர்ந்தாட
உன்னைவெல்ல உன்னோட கைகோர்க்க  
தாலியொன்றை   செய்திட சொல்லுதடி
என் மனம்
   செய்து  வரும்வரை காத்திரடி........
07


          காத்திரடிபாவையே
காத்திட ஓடிவருவோன் என  
காத்திருக்கவைத்திட்டு 
காத்திட பல காரணம்  
தேடிதேடி சொல்லும் மாமான்  
காத்திருப்பவள் கழுதிற்கு தாலியை 
 தட்டன்நேற்றுவரை செய்ய தங்கம் 
இன்றி  இருந்தானா இல்லை
ஆளக்குழிதோன்டி அதற்குள் தங்கம் தேடி
 முப்பாட்டன் புதையலுக்குள் 
 கட்டி தங்கமெடுக்க மாமான்
 இக்காலம் தொலைத்து 
வருங்காலம் மறந்து நிக்கின்றாயா
 தாலியோடு  தேடிவர இன்னும்  எந்தனை
காலம்  காத்திருக்க மாமா உனக்காய்......................

 08


 உனக்காய் நானிருந்து
  உறக்கம்  தனையிழந்து
ஒரு நொடி  கனம்  உன்னை மறக்காது 
உழைக்கிறேன் சொல்லமே !! நாளை
நமக்கான வாழ்விலோ! நீ வாடாது  வதங்காது
நாளும் மலராய் மலரவோ !!
உன்னையின்றி ஓர் உறவை  
நெஞ்சு எண்ணாது
 தனிமையின் துயரங்களை
எனக்குள் புதைத்திட்டு நடப்பதால்
 புரியுதடி கூடவோ
ஆள்ளிருந்தும் நானும் தனித்தோ வாடுவதை
 கொஞ்சம் நினைத்தால் புரியுமடி!!

09




              புரிந்தமடி உன்மடியென புரிந்தவள்
காதலோடு காத்திருந்தது  
உனனக்காகவேமாமா!!!
எண்ணியதை எண்ணியபடி 
எண்ணமாய் மாமான்உதடு உச்சரிக்க  
என் உயிர்துடித்து
உள்ளுக்குள்ஓர் மாற்றம்
 உள்ளதை அள்ளிசுமக்க 
 என்கண்கள் உயிராகி அழகாகி
கொஞ்சும்மொழி பேச
கேலியாய் பல கண்கள் மாற்றதைத் தேட
என் மனசு திண்டாது  உன்னையெண்ணி 
பணத்தோடு வாழ்வை இணைத்தாடி
ஆடம்பரம் எடுதாட பணம் வேண்டாமே
பகிர்திட நாலுவார்தை இல்லா 
வாழ்கையும்
நமக்கு வேண்டாவும் வேண்டாம்மாமா
 இயந்திரமாய் உழைத்து
இன்பத்தை தொலைத்து துன்பத்தை வேண்டி
கண்ணீரும் வேண்டாம் மாமா
இருப்பதை வைத்து!!
வாழ்வோம் விரைந்து  வா மாமா ..
10

             மாமன் தன் உயிரொடுத்து 
உன்னையோ கொலுவைத்து
இயதைத்தை நந்தவனமாக்கி
 உனக்காய் வனத்தில்வாழுகின்றேன் 
என் உயிரோ  
உன்வாசத்தை என் நாசிக்குள் வைத்து
என் சுவாசத்தில் உன் உயிர் வாழ 
என் உயிரால்
உன் உயிர்  காத்து 
நிக்கிறேனடி தேனே !!நாளை நான்
சூடு மாலை நீபோடும் வேளை 
மல்லிகைகொடியோ  மல்லிகை!! தருமடி
மானே!


11

மானோ இவள் உந்தன் மயிலே
தேனே தெகிட்டா  இன்பமே
பூவோ பொன்னோ பூவையோ

கனக்கூயிலே கற்பகமே

நான் வானம் பார்க்கின்றேன் மாமா
நீ ஊருவந்து சேருகாலம்
எங்காலமென்று!!
கானி நிலமிருக்கு பாரதி பாடிய
தென்னையும் பாக்கு வாழையும்
 காய்கனியோடு பூவாய் நானும்
பூத்திருக்கின்றேன் உனக்காய்!!
இன்னும்பல தேடிவளர்கின்றேன்
தேவையென்ன சொல்லுமாமா
அத்தையும்மாமாவும் என்னோடு
உன்னைக்காண காத்திருக்க
நானும் சேர்ந்தே வாடுகின்றேன் பூப்போல
ஆவி அடங்க முன் ஆறடி சேரமுன்
தேவிமுன் ஓர் மாலை தேடி வந்து
போடு மாமா தேடிதேடி ஓர் சேதி
சொன்னதெல்லாம் போதும் இனி மாமா!!
12



         
  இனி மாமா
வருவதை  காணடி கண்மணியோ 
காலம்கூடி காத்திருக்க நாளும்
 வாடியது போதுதடி 
இனியென்ன வென்று வந்ததடி வெறுப்பு 
உன்னைக்காண  கண்தவிக்க  
ஆடி தொடங்க முதல் 
வந்து கரம்பிடித்திட நாடி நரம்பும்
 உன்னைத் தேடி சேதி சொல்லியென்ன
 ஓடிவிறுட்டுதடி என்பூமகளோ !!!
                                போதுமடி நம்பிரிவு   நாம் கூடி பிடித்திடும் கரம்
                                     ஆவி பிரியும் வரைபிரியாதடி நம் வாழ்வாய்..
                                                                                     13




வாழ்வாய் அமையவோ மாமா
நான் காத்திருந்தேன் !!
நீ வரும்செய்தி கேட்டடு
இனிபெல்லாம் கசப்பாச்சி
உணவெல்லாம் வெறுப்பாச்சி
உதிரத்திற்குள் ஒர் உணர்வு
இனிப்பாய் ஓடலாச்சி என்
உயிருக்குள் ஓர் உயிர்  கூடித்துடிப்பதாய்
தோன்றலாச்சி !!முற்றத்து
மல்லிகைபந்தலின்று மொட்டு விட்டு
சிரிக்கலாச்சி தோழனுக்கும் தோழிக்கும்
உன் செய்தி பரவலாச்சி  ஆந்தங்கரை
மரத்தடி பிள்ளையாருக்கும் தகவல்
சொல்லி பொங்கள் பானைவாங்கியாச்சி
அந்தையும் மாமாவும் 
நீ வரும்நாளை என்னிடத்திலே
 சொல்லும் கொடுமை கேட்டு
தவிப்பாச்சி!! சிரிபிற்குள் மறைத்து
சிரிப்பதே என் பிழைப்பாச்சி
!ஊரோ
நம்மை பார்த்து வாழும்  ஓர் வாழ்வை
வாழலாம் மாமா நீவா!!


14

வா வா என 
என்னை நிலாவாய்அழைப்பவளை
 என் காரிருள்
வானத்தின் ஓளியாய்யிருப்பவளோ
என் கண்களின்
 விழியில் விழுந்திடாத்துளியானவளோ
என் சொந்ததை 
சொத்தாய் சொந்தமாக்கியவளோ
உன் சின்ன கரம்பற்றிட
வண்ணதில் தங்கம்சோர்து
வளயல்லென்று செய்திடவா
உன் சங்கு கழுத்தோடு 
உருண்டு விளையாட!!ஓர்
சங்கு மணிமாலைவாங்கிடவா
துள்ளியோடும் உன்
வாழைதண்டு கால்களுக்கு
 ஜோடிக்கொலுசு ஓன்று போட்டிடவா
கட்டித்தழுவிட!1 கட்டழகை
மறைத்திட என் இரட்டைத்திமிரோ
வானவில்வர்ணம்தொட்டு
பட்டுப்புடவை நெய்திடவா
 என்னவேணும்
சொல்லடி என் காதல் கண்ணம்மா!!!
15




கண்ணம்மா கண்களுக்குள்
கனிவாய் இருக்கும்மாமா!!
காஞ்சியில் பட்டெடுத்து
அங்கமெல்லாம் தங்கபோட்டு
கூட நடத்திட தேடலையோ
உன்னை !!
ஆவியோடு கலந்தநேசம் 
 சாவு வந்தும் பிரிக்காது
அடுத்தடுத்து பிள்ளைபெற்று
பள்ளியென்று தொடங்கிட
ஊருஉறவைக்கூட்டி நம்ம சங்கதி
சொல்லிடகுங்குமத்தோடு
 மஞ்சலும்தாலிக்கயிறும் 
போதுமாமா! நம்
கழுத்தைஅறுத்திடா நம்
உறவை காத்திடும்சாட்சியாய்
ஊரைக்கூட்டிக் கட்டிடுவோம் வா மாமா!1
அத்தையவள்
குங்குமத்தை நித்தமும் திருடி
நெற்றியில்இட்டு களவாய் ரசிக்கின்றேன்
உன் அழகுமுகம் பார்க்க
கையிரண்டில் வயலிட்டு  
மருதாணி இலையரைத்து  
அள்ளி வைத்து உன்
வரவை எண்ணி நானும் சிவக்கின்றேன்
உன்னாலே மாமா!!
18


மாமான் வரும் மணித்துளிகள்
சேர்த்து நிமிடங்களாய் கோர்த்து
குறைந்து குறைந்து  இணையும்
நிமிடம் சொல்லுதடி சொல்லம்
உன் இதயத்தைின் துடிப்ஒலியை
சங்கிதமாய் !!இதுவரை தோன்றக்கனவில்
மாமாவும் மிதக்கலாச்சி
மங்கையோ உன் மதிமுகமாய்
எல்லாம் தோன்றலாச்சி
உறங்கமெல்லாம் எங்கே மிதகுதடி
விழிகளிரண்டும் உன்னை சுமப்பதாய்
போச்சு !!கேட்கும் ஒலியெல்லாம்
உன்குரகலாச்சி  !!கடந்திடும் பெண்கலெல்லாம்
நீயாய் தோன்றலாச்சி  என் உதடுகள்
புலம்பலும்  நீயே நீயாச்சி
என்னை எங்கோ அழைப்பதாய் என்நினைவுக்குள்
தோன்றலாச்சி!!!எங்கே என தெரியாத
தவிப்புக்குள்ளும்  என்னைத்தீண்டிவிளையாடும்
கைகள் உன்கைகளாய் தோன்றுதடி
 பெண்மயிலோ!!!
19

பெண்மயிலின்று கருமேகம்கண்டு
துள்ளுகின்றது  ஓடுகின்றது
குதிக்கின்றது ஏனோ !!செதுக்கிய கனவிற்கு
உயிர்கொடுக்க மாமன்வருவதாலோ!!
இறுககைபிடித்து   தோல்சாய்ந்து 
ஒர்ராயிரம் கதைபேசிட பெண்யமயில்
காத்திருப்பதால் நிலவே  இன்று போய்
நாளைவா!! நாங்கள் சேர்ந்திருக்கும்
இரவை ஒளியாக்க!!
கொண்டைச் சேவலே   நாளை
மாமன் வருபொழுது அதிகாலை
கூவியெழுப்பிட இன்று தூங்கி
                                                   நாளைவிழித்திடு  எனக்காய்!!
திருடிதிண்ணும் காக்கையே
ஊருக்கு உறவு வரும்செய்தி
சொல்லும்  நீ இன்று தூங்கி
நாளை ஊருக்கு  என் செய்தி
செல்லிட நீ இன்று போய் நாளைவா!!
கொஞ்சிப்பேசும் என்கிளியோ
தெலையெல்லாம் இன்று செய்து
நாளை  என்
தோட்டத்துகனியெல்லாம் காத்திடு
நாளை நான் பறித்து என் மாமானுக்கு
கொடுத்திட அணில் கோதா பழம் 
வேண்டும் எனக்கு!! 
பிள்ளையப்பனோ திட்டியதும்
கோவப்பட்டதுவும்  மாமானை
பிரித்தால் வந்த கோவத்தால்
 மன்னிப்பு கோறுகின்றேன்
என் மாமானை சுகமாய் என்னிடம்
சேர்த்திடு  என் தவிப்பும் காதலும்
அறிந்தவன்  நீதானே ஐயனோ!!
உன்னையன்றி ஓர் நட்பு கொண்டதில்லை
என் வாழ்வில்!! இன்று விடைகொடு
நாளை  நானும் மாமானும்ஜேடியாய்
 உன் முன் வருவதற்கு!!
பொழுதே போ இரவோ வா 
உதயமே உறங்காதுவிழித்துடு 
நாளை நான்மாமான் முகம் பார்க்க 
காத்திருக்கின்றேன்!!“


20

வாரோனடி உன்னைத்தேடி
போகுதடி நினைவு
நம் பிள்ளைபருத்திற்கு!!
கைபிடித்து நான் நடக்கத்
துள்ளித்திரிந்தவளோ
அக்கரையாய் எனக்கென
அந்தனையும் தருபவளோ
உறங்கும்வரைபிரியாது
ஒட்டியிருப்பவளோ !!
தெரியதபருத்திலும்
இதுதான் காதலென ஊரோ
சொல்லவைத்தவளோ
தெரியும் பருத்தில் பிரிவோ
பிரித்தாலும் என்னையன்றி ஒர் நினைவு
இல்லாது தவித்தவளோ!1
என் அருகில் அமரும்
பெண்ணைத்திரும்பி ரசிக்கையிலோ
உணர்வாய் எனக்குள் கோவப்பட்டு
சிவப்பவளோ !1
உன்னைவிட ஓர் அழகி
உலகிலில்லையடியெனக்கு
 கறுப்பாய்இருந்தாலும் 
கரும்பாய் இனிப்பவளோ!!
மலரின் மென்மையாய்
என்
பாசதால் பூப்பவளோ!!
மாமான்  தந்த பொக்கிஷமே
அத்தை வரைந்த அற்புதமே
ராமனாய் நான் வாழ சீதையாய்
எனக்குள் துடிப்பவளோ 
மரணமே வந்தாலும் மடியாதடி
என் உயிர்!!!
21

என்யிரோ நீபார்த்தவுடன்
கட்டியணைப்பாயோ
தள்ளிநின்று ரசிப்பாயோ
என்னைக்கண்டு பேசுவாயோ
அத்தைதேடிசொல்வாயோ
அத்தையும் மறந்து
நண்பர்முகம் காண்பாயோ
அக்கரையற்றுயிருப்பாயோ
மூடியகதவிலும் யன்னல்வழி
குதிப்பாயோ
கதவுடைத்துவருவாயோ
 கதவை மூடிசெல்வாயோ
கோவம் கொண்டு போகையிலோ
சட்டைபிடித்திலுப்பாயோ
கண்டவுடன் மலர்வாயோ
யாரோ போல் பார்ப்பாயோ
அத்தை சமைத்ததெல்லாம்
திருடிக்கொண்டுவருவாயோ
அப்படியே உண்பாயோ
என்னைநினைத்து வருவாயோ
காக்காக்கடிகடித்ததெல்லாம்
நினைவில்வைத்து கேட்பாயோ
அந்தனையும் பகிடியாக்கி
கேலியாய்சிரிப்பாயோ
என்னை பார்த்து!!
22


பார்த்தபார்வை நிலைத்திருக்க
என்சொல்லபெண்ணே
என்னடி சிந்தனை 
துள்ளித்திரிந்தவளோ
அம்மிக்கல்லாய் இருபதேனடி
செல்லப்பிரணிகெல்லாம்
சேதிசொன்னவளோ
கூட்டுக்குள் கிளியைவைத்து
கூடாது தனித்ததேனடி
தடுத்தாலும் நிற்காது அத்தைமுகம்
தேடுபவளே!இப்போ
கொத்தாய் மலரைவைத்து
சொல்லாது  தனிமையேனடி
மாமா போயாச்சி வந்திறங்கும்
நேரமும் வந்தாச்சி  எல்லாமே
நல்லதாய் முடிவாச்சி
எழுந்து வா வாயாடி நான் அத்தைவீடு
சொல்கின்றேன்
23 


சொல்கின்றேன் என்று செல்லும்
அன்னையே சொல்லத
உணர்வென்று என்னை
தடைபோட்டு வைத்து
சித்திரவதையென்றை
உணர்ச்சிக்குள் நடத்துகின்றது
கண்விழித்து எழுவில்லை
உறக்கமும்வரவில்லை
நிலவும் மறையவில்லை
ஆதவனும் விழிக்கவில்லை
காக்கைவந்து  செய்திதரவில்லை
பறித்திட்ட மலர்களும் சிரிக்கவில்லை
மாமன் முகம் பார்க்கும் வரை
இப்பே எனக்கில்லை நிம்மதி.....
24

நிம்மதிபோனதடி
உன் உயிரும் போனடி
வாழவந்தவன் வழியிலே
எரிந்தசெய்தி கேட்டு நானும்
இன்னும் உயிரோடு இருக்கின்றேன்
பிறந்தபோதுதந்நவலியைவிட
இப்போது தாடி உயிர்வரைவலிக்குது
பைத்தியமே பிடிக்குது 
மகிழ்க்கியோடு வரவேற்க போனள்
மார்வில் அடித்து அழுகின்றேன்
மலைபோல் இருந்தவன்
மார்வோடு வளர்ந்தவன்
பாவியோ அடம்பிடித்து கூப்பிட்டு
இப்போ சாம்பலாய் ஆக்கினியோ
உரோடு இருந்திருந்தால் 
உயிராவது மிஞ்சியியருக்கும்
தாலியோடு வந்தவனை
தாயுக்கு மகனின்றி ஆக்கினாயே
வெற்று நெற்றி யோடும் வெறும்
தலையோடும் அழைந்தாயோ
மாமன் !சூடும் அழகிற்காய்
இப்போ கோலமே அதுவாய் போனதடி
சொல்லுக்கேட்காத பிடிவாதத்தால்
ஊர்சொல்லுக்கு ஆளாகிபோனாயடி
அத்தைமாமாமுகம்விழிக்காது
இப்படியோ கல்லாய் இருக்காது
எழுந்து வா என்னோடு.........................
25

என்னோடு வாயென்று என்
கரம்பற்றிடாதே
எழுந்தோடியிருப்பேன் என்மாமான்
தேடிவந்திருந்தால் ஆடிப்பாடியிருப்பேன்
மாமான் கைபிடித்திருந்தால்

என்னைவிட்டுஓர்பெண்ணை
தேடிமணதிருந்தால் மாமான்
நினைவோடு நாளும் பொழும்
வாழ்ந்திருப்பேன் 
கூடமுடியாவிதியென்னைக்கொலை
செய்திடாதுவிட்டதேனம்மா
ஆடிப்பாடும் வயதினிலே
எனக்கோர்சிறைதந்தது தேனம்மா
சொல்லியழுதிட என் உணர்வை
சொல்லத்தெரியவில்லை இருக்கும்
மனிதரொல்லாம் எனக்கு அன்னியமாய்
தேன்றுதம்மா அறிவு அழித்து
அறியாமை என்னை தாங்குதம்மா
சொல்லியளுகின்றாய் என்
நெஞ்சின் துடிப்பு நின்றுபோனதம்மா
 இன்னும் நான் வாழ்வதேனம்மா
இந்த வெள்ளக்கோலம் எனக்கும்
 சொல்லும்பாடம் என்னம்மா
உன் செல்லப்பெண்ணவள் செய்தபாவம்
சொல்லம்மா......
26

                         சொல்லம்மா

 என் சின்னம்மா சொல்லியழுதிடம்மா
உன் நெஞ்சத்து பாரத்தை கொஞ்சம்!!
 பாவாடைவயதினிலே  
பள்ளிக்கு செல்கையிலே
என்னை நீ கண்டு 
கண்ணால் அளவெடுத்து 
என்ன கோலமென்றாய்
பெண்மைக்கு இட்டகோலமிது
சரியோ தவறோ 
நான்னறியோன் என்றேன் 
சட்டென சிரித்து நான்
குட்டிவிதவையென சத்தமிட்டு
நீஉரைக்க!! பதறிதுடித்த நிமிடம்
இன்னும் ஒலிக்குதம்மா என்னுள்!!
அர்தம்புரியகது நீ உரைக்க தவிதவித்து
நான் வாட புரியாத வயதினிலே 
அறியாது நீசொன்ன கோலமிதனை
கொண்டு நீ நடத்திடாதே பாரினிலே
பெண்ணிற்கு கொடுத்தெல்லாம்
இன்னும் விரிவுரை காணகுறுதகவல்
கண்ணே ..பாதிக்கு பாதியென படைத்தவன்
கொள்கையிலே பழாய் நிற்கும்
பாதிபெண்பாதிதானடா ! !!
                   27                          
பாதிதானடா என் கண்ணே
நீ போனமகனின் பாதியல்ல
வாழும் எங்கள் உயிரம்மா  இருக்கும்
மனிதரொல்லாம்  மண்ணில் நிலையற்றவர்தானம்மா
தாயுக்கு மகனின் பிரிவு மரணத்தைவிட
கொடியதம்மா இருந்தும்தாங்கி
நிக்கின்றேன் பாரம்மா
தாலாக்காயம் வாழப்பிள்ளையின்
கனவிற்குள் சிக்கிதவிக்கின்ற
கொடிய மிருகம் தானம்மா!!
இருந்தும் உயிர்போகும்வரை
மனிதன் தாங்கியே வாழவேண்டுமம்மா
ஒரு நெடி போதுமம்மா உயிரை போக்க
நீ போனபின் யாரம்மா எம்மை காப்பார்!!
28

காப்பவள் நானெ தோன்றினாலும்
கருணையற்றவிதிவந்தால்
கொள்ளுதம்மா என் உணர்வை
கொலுத்துதம்மா தீயெடுத்து
என் உடலை
காப்பார் யாரிருந்தாலும்
காத்திட மாமானின்றி
காற்றில் கரையும்வாசபோல்
ஆனதம்மாவாழ்வு !வாழ்வுக்குள்
 என்னை வைத்து
வசந்தை தீயிலிட்டு
காப்பாற்ற உறவை வைத்து
கருணையாட்டம் ஆடுவிதியால்
கூடிப்பலரிருந்தும் கூட்டதில்
நானிருத்தும் கூடுவிட்டு
போகுதம்மா எந்தன் உயிர்
மாமான் முகம் என்னைச்சுற்ற
அள்ளியெடுத்திட நான்னினைக்கையிலே
காணலாய் கரையுதம்மா
மாமன் அழகுமுகம்!!
ஆறுதல் கூறபலரிருந்தும்
ஆறாஎன்மனசு அலையாய்
வீசுதம்மா விலிகளால்!!
29
வலிகளை தாங்கிட
வலியோடு பழகிட
 வேண்டுமடி என் பெண்ணே
கதறியழுதாழும்  கற்றோடு கரைந்தாலும்
பெண்ணின் வாசங்கள் மண்ணேடு புதையும்வரை
மாறிடாது என் கண்ணே !!
எடுத்து பேசுவார்இயன்றவரை !தேற்றுவார்
எல்லாம் முடித்தாய்
 அவர் அவர் சென்றிடுவார்
 உனக்கான  வாழ்வை அடுத்தவரோ
கண்டிடுவார் உடன்பாடேயில்லாது
உடன் பாடவேண்டுமடி
முடிவையெழுதியவன் எதையெண்ணி
எழுதினானோ யாருக்கும் தெரியாது
கண்மணியோ!!!!பொறுமைகாத்திடு
புத்தியோடு வாழ்ந்திடு!!!
30

வாழ்ந்திடுவேன் அம்மா

வாழ்திடதான் போகின்றேன்
 என் அம்மா
இறந்திட விதியில்லை
கனவைகாத்திட மாமன்
துனையில்லை
ஆசைகளை சொல்லிட
மாமன் இல்லாது தவித்தாலும்
 எடுத்திட்டப் பட்டுபுடவையில்
இழந்திட்ட வர்ணம் போல
எனக்கான தாலியை அம்மனக்கே
கொடத்திட்டு
உங்கள் உயிர்வரை மகளாய்
வாழ்ந்திடுவேன் இந்த வாழ்வையும்
பாசத்தால் உயிர் பெற்ற காதல்
உறவால் வலுப்பெற்றகாதல்
மாமன் உயிராய் என்னோடு இருக்கும்வரை
என்வாழும் இருக்கும் அம்மா!!






Wednesday 22 May 2013

விம்பம்............

பொய்கைகரை நாணல்
தொன்றலால் சாய்ந்தாட
வைகரையாதவன் சோம்பலின்றி
எழுந்தாட
பனிபடர்இலைமேல்
தண்ணீர் கோலமிட
மலர்கள் சிலிர்த்து
இதழ்விரித்து
கண்சிமிட்ட
கைபிடித்து  நான்
நடக்க  காத்திருக்கும் கனவு
கண்விழித்திடாதுறங்க
கண்விழிக்கா மலர்தனை
அரவணைக்க ஆதவன்  தான்துடிக்க
இதழ்விரித்த பூவெல்லாம்
என்னைத்தேடி மணம் பரப்ப
ஆத்தோடு ஆலமரத்தடியில்
காத்தாட அமர்ந்த பிள்ளையார்
என்னை காணது தான் துயில
வந்த.  ஓர் கனவலால்
பதறியே. சிதறியது என் நெஞ்சு 
என்  துயிலை 
கழைத்ததுவே ஓர்
நாகம்   பயத்தில்  மிஞ்சம் 
மீதியில்லாமல் உயிர் நடுங்க
புரியாது நான் தவிக்க  அதுவோ
  பூக் கூடை தான் சுமக்க
அறியாது  விழி நீராட
விடிந்தும்விடியா பொழுதிற்குள்
தலையில்லா நாகத்தோடு
ஒன்றும்  புரியாதே
நான் நடக்க
குளிரோடு  வாடிடும்
மலரோடு  ஆலமரத்தடியில்
ஐந்து தலையோடு
உன்னை கண்ட போது புரிந்தது எனக்கு
உன்னோட
பாதி யாய் காட்சி தந்ததுவும்
எல்லாமே தெளிவாச்சி
 மண்தின்ற வயமுதல் மண்தின்னும்
காலவரை மாறது நம் காதல்.....................

அப்பா

மார்வோடு உறங்கவில்லை
கைபிடித்து நடக்கவில்லை
தோல்சாய்ந்து கைபேசவில்லை
நான் நடக்க கற்று தந்ததில்லை
ஒர் வாய் சோறு ஊட்டவுமில்லை
உங்களுக்கு பிடித்ததை நான்
செய்யவுமில்லை
நல்ல ஆண்மகனை
உங்களை போல் பார்க்கவுமில்லை
வரபுகளில் நீங்கள் நடக்க
ரசிக்கவில்லை 
மேல்சட்டை அணிந்து பார்த்ததில்லை
அணிந்த போதும் ரசிக்கவில்லை
அன்னையை  படமாய் கூட
வீட்டில் பார்ததில்லை
எந்த பெண்ணும்
அதிகம் பேசி பார்கவில்லை
என்னை தவிர மற்றவர்
உங்கள் முன் இருந்ததில்லை
 உங்கள்
நாற்காலியில் என்னை தவிர
யாரும் இருப்பதுவுமில்லை
என் உயரம் உயர  
 வேலியின் உயரம் உயர்ந்ததுண்டு
அதற்கு மேலே ஏறி இருக்கும் என்னை த்திட்டி
அடித்தில்லை
என் கோவம் கண்டு
வருத்தப் பட்டு
மாறியதுண்டு உங்களுக்காய்
நான் மாறவுமில்லை
சண்டை போடாத நாட்கள் என்று
என்னிடம் எதுகுமில்லை
 என்னை கேட்டு பின்னோ
சாப்பிட்ட
உங்கள் பாசம் புரிந்ததில்லை
உயிரோடு இருந்த வரை!!!!!
இன்று வலியோடு நான் துடிக்க
ஆன்மாவாய்  என் கண்ணீர்  துடைத்த
உங்கள் கரம்தெரியவில்லை
அந்த பரிசத்தை  உணர்கின்றேன்
உங்கள் வாசத்தை கொண்டு
யாருமில்லாது போனதால்........................

Wednesday 15 May 2013

கல்லறைப்பூ


கல்லறை மலர் நேசம்
Bildergebnis für ரோஜாவையகம் அறியாத்தெருவாசம்

பொய்யையா போனக்காதல் நேசம்
ஐயகோ!!! பாவம பூவின் வாசம்

அடுத்தவர் அறியா வலியின் நேசம்
அறிந்தவருக்கு தெரியா பூவின் வாசம்

எடுத்தவன் கொடுத்த பூவின்  நேசம்
ஏழைக்கு கிடைத்த சிறையின் வாசம்

உரிமைக்கும் புரியா உறவின் நேசம்
இறைவனுக்கு கொடுத்த கல்லின் வாசம்

கேட்டும் கிடைக்க உறவின் நேசம்
உலகிற்கு சொல்லா உரிமை வாசம்


இழந்தும் கிடைத்த ஊமை நேசம்
வலிக்கும் போதே கிடைத்த வலியின் வாசம்
Bildergebnis für ரோஜா
கனவுகள் கலைந்த கண்ணீர்  நேசம்
இதய நரம்பை அறுக்கும்  வாசம்


உணர்ச்சிபிடிக்கியெறிந்த உயிரின் நேசம்
ஆசைகளை அழித்த உறவின் வாசம்

எரிந்த சாபலில் உயிர்த்தபூவின் நேசம்
மீண்டும் எரிந்து மண்ணில் புதையும் வாசம்

இறந்து உறங்கும்  உயிரின் வாசம்
எமனுக்கு தொடுத்தமாலையின்  நேசம்

மொய்யறியா  பொய்யான முகங்களின் வாசம்.
எனியும் ஏழுந்திடா உயிரின் நேசம்..............................

Sunday 5 May 2013

அம்மா!!!

இல்லறம் போற்றி நல்லறம்
காத்திடும் எம் அறமே
அன்பிற்கு ஈடு சொல்ல
இவ்வுலகில் ஈடில்லா மாணிக்கமே!!

இணையாகி துணையாகி
இல்லத்தின் ஒளியாகி
கனிவாகி பொறுமையாகி
பெண்மைக்கு பெருமைசேர்த்த பொக்கிஷமே!!

தாயாகி தன்னைத்தொலைத்து
கண்ணுக்குள் எம்மை வைத்து
எமக்காய் கனவைத்தொலைத்து
கருணையோடு காத்திடும் அற்புதமே!!

காயங்களான காலங்களை மாற்றி
காயத்தின் மேல் காயப்படாது
காய்பட்டு காயப்பட்டு எம்மை
 காயப்படுத்தாது காத்திடும்  தெய்வீகமே!1

கோலம் கலைத்த காலங்களை
வர்ணக் கோலம் போல் அழகாக்கி
சீராக்கி சிறப்பாக்கி  புதுமையாக்கி
பார் சிறக்க எம்மை காத்திடுபவளோ எம் தாயோ!!!

பசி




வாழ்வோடு போராடி
உலகை வெறுத்த மனசு
வயிற்றுப் பசி போக்க
கொஞ்சம் உழைத்துப் பணம்
 கண்டதால் !!

இறந்திடும் வாழ்வில்
துணையென்ன இணையென்ன
கொள்கையென்ன கேட்பாடென்ன
இந்த நிமிடமே இன்பமென்றது!!

துள்ளிய மனசு கொஞ்சம் உடல்
பசி போக்க  தேடித் தேடி
பெற்ற இன்பதிற்கு கொட்டிய பணம்
பெற்று தந்த மரணம்
கொடுத்த காலத்தி ல்
துள்ளிய மனசு உறங்கி
தப்பிற்கு சாட்சியாய் பேசிட!
உடல்வலியாற்றிட பணமின்றி
உயிர்விலி தவிக்கு தவிப்பாய்!!

இருகோடு




என்னில் இதயம்
உன்னில் துடிப்பு
என்னில் வேதனை
உன்னில் கனவு
என்னில் வறுமை
உன்னில் கற்பனை
நாமிருவர் ஒருவராவது
எப்படி!!என்றாள் மனைவி
நன்றாய் கேளடி என் பெண்ணே!!

உன்னில் என்  தேடல்
என்னில் தொலைந்த என்
அன்னையின் பாசம் !!

எனக்காய் தந்து என்னை மகிழ்வித்து
எனக்காய் வாழ்ந்தவள் தத்தெல்லாம்
என் உணர்வின் மகிழ்ச்சிகளோ!!

என் உணர்வோ அவள்  உணர்வு
ஆனதால் உனக்கு வேண்டாம்
தனியுணர்வு !!உன்னை
அழித்து எனக்காய் வாழவோ
உன்னை நேசித்தேன் என்றான்!!

சிதறிய துளிகள் மௌனமாய் சொன்னது
இன்னும் புரியவில்லை வாழ்வை

லொள்ளுக்கவிதைகள

உன்னைக் காகிதத்தில்
உங்க காதல் கலர்ஃபுல்லா இருக்கா ...எழுதி எழுதி
தொலைத்து விட்டேன்!!
அப்படியா!!

 ஆம் காதலோ!!
தன் மானம் பார்த்து  பார்த்து
எடுத்தவன் கிழித்து விட்டன்
அப்ப !!இப்ப
கண்ணே  மணியே என்று
கற்பனையின்  கனவாய் நீயே கதியானான்!!!!