Tuesday, 31 March 2026

விழி கண்டு மொழி பேசும் சாரல்........................,

 மனிதா  உன்னை 

நீயும்  சிந்திக்கும்  காலம் 

எக்காலம்!!!  

பெண்ணாய்  ஆணாய் 

ஏன்  பிறந்தாய்   ஒன்றுக்கு 

ஒன்று  வாழ்வைகெடுத்து 

இல்லாமல்  போகும்  

நிமிடத்தில்  நின்று  

எச்சம்  விழும் எச்சிலால் 

முகம்  கழுவி யாருக்கு 

யார் சிறந்த பிறப்பென 

அம்பினை கையை விட்டு  

விழுந்த  கிளியினை  

வைத்து புத்தனாய் 

வேடம்  போட்டு  நடிப்பதால் 

எந்த போதிமரத்திற்கும் 

பயனில்லை !!பயனற்ற 

பயணங்களால்  எழும் 

கேள்விக்கு   நாளைய 

பரம்பரைக்கே  விடையில்லா 

தோல்வியே  வரலாறாய்  மாறும் !

 


குட்டிக்குட்டிச் சாரல்......,

 அழிகிய  உண்மை 

உனையே  நம்பி  

அழகான  வாழ்க்கைக்குள் 

 கைப்பிடித்தே அழகாய் 

உன்னை காக்கும் 

புன்னகையையே  காதல் !! 

Friday, 27 March 2026

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 இவள்  ஒற்றையில்


 நின்று 

ஓடும்  உயிர்களை

  வேடிக்கை பார்க்கின்றாள் 

பேசும்  வார்த்தைகள்

  தனியாய் 

பிறந்தகுழந்தையும் 

 தனியாய் 

கட்டிய குடும்பம் 

 மட்டும் 

நீதிகேட்டு  வீதிக்கு  வீதி 

சண்டையில்  !

விளையாட்டாய்  பேசினாலே 

வாயில்  அடித்தகாலம்  

வாய்க்கு  பூட்டு  கேக்குது  இப்போ!! 

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 நேசம்  என்ன 

நேசித்த உறவென்ன

 காலம்  கொண்டோடி 

போனதே

 அன்ரியவள் வார்த்தைக்குள் 

விழுந்து வெளியேறமுடியா

புதிய  நேசத்தின் 

புதுதிய  வளர்ச்ச்சியை  

அன்னை  கொஞ்சம்  அழுகின்றாள் 

பூமிக்கு  இது  என்ன 

புதிய  சோதனைக்கலாமென 

காவிக்கு  பயந்தோடிய காலம் போய் 

போதைக்குள்  விழுந்தோடமுடியாமல் 

நடுங்குகின்றது  மண் !!

குட்டிக்குட்டிச் சாரல்......,

 அவள்  ஏடுகளை 



 புரட்டி  புரட்டி  பார்த்தாலும் 

புரியாத ஒன்று  அவள் 

வாழ்க்கை ஒன்றே அது  

அவளுக்குமே  புரியவில்லை 

தானே !! 

Thursday, 26 March 2026

குட்டிக்குட்டிச் சாரல்......,

 உறவின் ஊருக்குள் 

அழகிய ரோஜா  அழகால் 

புன்னகைத்ததை  பிடிக்கா 

இறைவன்  தூக்கத்தில் 

போட்ட  கையெழுத்து  

தனிமை!!

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 தனிமை சிறைதந்து 

உறவின் உயிர் குடித்து 

முற்களை  விதைத்தவன்  

இறைவன்  அவனே !

இருந்த  கூட்டதை 

தள்ளியோட  வறுமைக்குள் 

அவளை  சிறைவைத்தே 

சாவியை  தொலைத்தவனும்

 அவனே!!புன்னகை சருக்குள் 

பொய் பூக்களை  வெண்ணீரால் 

குளிக்கவைத்தே  மண்ணிற்குள் 

புதைத்தவனும்  அவனே 

விதியென   தனிமை  கல்லறை 

கண்ணீர்  சிந்துகின்றது 

மண்ணில்  விழும்துளி 

மறுபடி  சேராது என்பதால் !


Tuesday, 24 March 2026

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 தமிழை அறிவோட 

தேடும்  மனிதன்  தன்னை 

பெருமை  கொள்  மனிதத்திற்குள்

இன மொழி  கடந்து 

இணைக்கின்றான் !!அதையே 

மற்றவரை  ஏமாத்தியே 

தமிழனாய்  தன்னை  அடையாளம் 

காட்டும்  தமிழன் மற்றவர் 

உணர்விற்குள்   விளையாடியே 

தன்னை  மட்டும்  காப்பாத்தி 

வாழ்கின்றான் ! 

குட்டிக்குட்டிச் சாரல்......,

 தூரமா அன்பினால் 

கூட  இருக்கும்  உருவம் 

மறைக்கப்படுகின்றதால் 

கூடமால்  கட்டப்படட 

இல்லத்திலிருந்து   கூடுவிட்டு  

பாய்கின்றது 

காதல் !!

விழி கண்டு மொழி பேசும் சாரல்........................,

 என்  தோல்வியில்  

ஒரு நம்பிக்கை 

 அருப்பிட 

என்  தவறுகளிலிருந்து 

 ஒருவன்   

தன்  நம்பிக்கையை 

 விதைக்கின்றான் 

அவன்  முயச்சிகள்  ஜெயித்திட 

என்  விதியை  எழுதியவனிடம்

அவன்  விதி மாற்றிட  

வேண்டுகின்றேன்!!  

Monday, 23 March 2026

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

புகழ்  ஒரு  போதைதான் போல  

பாட்டிக்கு  தெரியா  குடும்ப 

வாழ்க்கை 

அம்மாவிற்கு  தெரியா 

 அடுப்படி  

மகள்களுக்கு  புரிந்தால் 

ஆணுக்கும்  பெண்ணுக்கும் 

வாரத்தை  யுத்தம் 

அழகற்ற பிறப்பில் 

முழுகி   ஓடுகின்றது 

இணைய  வரலாற்று  சாதனையாய் !!!


விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

நம்மிடம்  இருப்பதை 

நாம்  இழக்கும்  வரை  

அது 

பயனற்ற ஒன்றாய்  

 நம்  சுயநலம்  காணும்

 மற்றவரின் 

கைகளில்  ஒளிரும் 

 போது 

ஏன்  நம்  சுநலம் 

பொறாமை  தீயுக்குள் 

விழுந்து  எரிக்கின்றது 

நம்மைவிட்டு   போனதால 

இல்லை 

 நாம்  முட்டாள் என்பதால!! 

Monday, 16 March 2026

குட்டிக்குட்டிச் சாரல்......,

 இதுவரை  என்  கண்கள் 

தூக்கி  சுமந்த  நீரெல்லாம் 

இப்போதே!

தப்பியோடிட துடிக்கின்றது 

எத்தனை  நம்பிக்கை என் 

கண்களுக்கு மட்டும் !!

குட்டிக்குட்டிச் சாரல்......,

 விதியென!

 விலகிப்போனாலும் 

பாவங்கள்  மனிதனைப்போல் 

என்னை விடாமல் சுற்றுகின்றது 

தண்டனைகள்  போதாதென !! 

குட்டிக்குட்டிச் சாரல்......,

 ஒவ்வென்றாய்!

இழந்த பின்னர் 

ஒவ்வென்றும்   கற்றுத்தரும் 

பாடங்கள்  என்னை  மட்டும் 

மனிதனுக்கு  வழிவிட்டு 

தனியே  நடந்து  போகச்சொல்லுகின்றது!! 

குட்டிக்குட்டிச் சாரல்......,

பத்திரிகைச்சுகந்திரம் 

படுத்துக்கிடக்கின்றது

 பணக்காரன்  வீட்டுக்குள் !!

ஏழையின்  கண்ணீர் 

விழுந்தோடு கூவத்துக்குள் !


Wednesday, 11 March 2026

குட்டிக்குட்டிச் சாரல்......,

இல்லறம்  அறம்  தேடுது 

நல்லறம்  இழந்து 

 திமிர் எழுந்து 

விளையாடுது  பாசம்  கொன்று

பணம்  வந்து கூட்டு  சேர்க்கின்றது 

தனிமனிததுணைக்காய் !!   

  



குட்டிக்குட்டிச் சாரல்......,

மனிதன் மனிதனோடு 

கைபிடித்திடா  நம்பிக்கை 

உருவாகியே  மனிதனை 

புதைக்கின்றது  மனிதம் !!!

 




Monday, 9 March 2026

குட்டிக்குட்டிச் சாரல்......,

 என்னைப்படைக்கும் 

போது 

என்ன நினைத்தானோ 

 இருக்கும்  வரை  

அழுது கொண்டே   ஓடு 

எங்கின்றான்  

முட்டிமோதி பார்த்தாலும் 

முடியாதே  போகின்றது  

தூரம் 

விழுந்தெழுந்து  களைத்து 

நிறுவிடடேன்  

எனியாவது 

ஓய்வுகொள்ளட்டும்  இறைவன் !

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

தமிழில் 



விடுதலை  என்னும்  சொல் 

  மட்டும்  பெண் 

தொலைத்து  விட்டு 

தேடுக்கின்றாளே ! 

ஒற்றை ஆணை 

கோடிப்பெண்கள்  கொண்டாடும் 

உலகத்திற்குள்  ஒரு  பெண்குழந்தையை 

கூட  பாதுகாத்திட  யாருமில்லை 

வேடிக்கையான  விடுதலை  தேசம் 

பெண்ணிற்கு  மட்டும்! 

தூயதமிலில்  பெண்ணை  துரத்தி 

துரத்தி  இழிவு  படுத்தும் 

மனித நேசம்  

கள்ளத்தொடர்வுக்குள்

விளக்கைபோட  பணத்தை  எரித்தலும்   

இழந்த வீட்டிற்க்குள் 

வறுமை  போக்க   எந்த 

பணத்தையும்  எடுப்பதில்லை ஏனோ 

பேதைப்பெண்ணாய் போதை 

தேடும்  மனிதநேயத்தை   மாற்றும் 

உறவில்  புதிய  விடுதலை  பூக்கட்டும் !!!


Friday, 6 March 2026

குட்டிக்குட்டிச் சாரல்......,

 விதியோடி  விழுத்தியகாலம் 

விடுதலையில்லா 

மரணதண்டையென

விட்டுக்கொடுத்து  போன 

உறவு  எழுதிய  சுயநலப்புத்தகத்தின் 

வரிகளை  படிக்காதே  அவள் 

புரிந்து  கொண்டால்!  

குட்டிக்குட்டிச் சாரல்......,

நாம்  யாரோவாய்   

வாழவேண்டும்  என !!

யார்  யாரோ  நம்மைக்கேட்க்காமலேயே 

நம்  ஓவியத்தை  அளித்தளித்து 

வரைந்து  பார்க்கின்றனர் 

தமக்கு  பிடித்தமாதிரி !

Tuesday, 3 March 2026

குட்டிக்குட்டிச் சாரல்......,

 வருடங்கள்  ஓடுகின்றது 

வாழ்க்கையும்  ஓடுகின்றது 

 கூடவே   இல்லறத்திற்குள்  

மட்டும் 

புரியாமல்  இரு  உடல்கள் 

சேர்ந்தோடுகின்றது !!


விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 விழுந்தெழுந்து விழாமல் 

வாழமுயற்சி  செய்யும்  

மனிதன் !

காமக்குளத்திற்குள்  ஒழுக்கமில்லா 

கல்லாய் !விழுந்து  

மூழ்கிகிடக்கின்றதால்தானோ 

நட்பின்கைகள்   கறைபடித்து 

கிடக்கின்றது !பெண்மைக்கு 

பொருள் சொன்ன  பொருள்ளெல்லாம் 

தாசிக்குள்  அடைக்கப்பட்டு 

மூழ்கிப்போனதோ!பெண்ணின் 

ஒற்றை  வடிவம் ஓராயிரம் 

வார்தைகளால்  தாக்கப்பட்டு 

அளிக்கப்படுகின்றது !இங்கே 

பேச்சு சுகந்திரம்  இழிநிலை 

வார்த்தைகளுக்குள்  பாண்டவர் 

மனைவியின்  வாரமோ !!