Tuesday 12 March 2013

வருமா

இளமை காலம் மெல்ல
என்னை விட்டு போகின்றது
என முதுமை  என்னை தொட்டு
சொல்லாது மாறும் நரையின்
சிரிப்பாய் என்னை எச்சரித்தபோது
இல்லாத பித்தம் சும்மா கொஞ்சம்
விளையாடி சென்றதாய் எண்ணியது தப்போ!!

உடல்சோர மனம்சோர தடுமாற்றம்
வந்து சடுகுடு ஆட
மறதி வந்து பள்ளாங்குழியாட
என்னவென புரியாது சிந்தனை
வந்து வந்து  குழப்ப
அசதியாய் ஓர்மனசு சும்மா உக்காருவென
 சண்டையிட்டது இதற்கு தானா?

களைந்து போகின்ற இளைமையை
கையமர்தி விளையாட முடியாத
காலமிதுவென கைகாட்டிசொல்லியதை
கேட்காது  மனசு கையாடி நின்றது
கையெடுத்து வேலைசெய்யாது போகும்
காலம்  எனி சொல்லாது வரும் என்பதாலா?

நில்லாத  ஓர் கேள்வி
என்னை வாட்டியா ட  சும்மா நின்றாலும்
போனாலும் வந்தாலும்
பொல்லாத வியாதியெல்லாம் இப்ப
 கும்மிகொட்டி ஆடத்தேடுவது  இதற்காகவா!!

பசியறியா வயிறும் பயமறியாமனசும்
 பசியோடும் பயத்தோடும்
கிளித்தட்டு போட்டியென்றை என்னோடு
வெற்றியின்றி விளையாடுவதும்  இதற்குதானா?
 !!!
இது பொல்லாத காலம்  இளமை நில்லதாது போவதை
வறுமைக்கு சொல்லாது போனதால்
கடன் கல்லறை கட்டியபின் மனம்  புரிந்து கொண்டு
என்பயம்!!!!!!!!!!!





Thursday 7 March 2013

கீற்றுகுள் இருவிழி தூறல் சாரலில்............,

ஊரும் உறவும்
உருக்கழிந்து போயாச்சு!!

போக்கிடம் தனையிழந்து
அயல் நாடும் வந்தாச்சு!!

சிக்கிய உறவும்
இருக்குமே இல்லையே நமக்கு
தெரியாது போயாச்சு!!

வலுவான வரலாறும்
வாழாது அழிஞ்சாச்சு!!

ஆழ்வதும் வாழ்வதும்
தெரியாமல் போயாச்சு

புரியாது தவிந்திடும்
என் தமிழனே எழுந்திடு
எம் மானம் தன்மான
அடகுக்கடை பாத்திரமாயாச்சி!!

உடலின் உதிரத்தில் ஓடும்
அக்கினித் தீயல்லவா நீ!!

வெற்றிப்பாதை கண்ட தமிழன்
 விட்டதை வென்றிட
தலைவன் பாதை வருவான்!!

புரட்சியும் எழுச்சியும்
திவிரவாதமும் தந்தவனுக்கே
திருபி கொடுத்து எடுத்து
என்றும் நம்மை நாமே ஆழ எழுந்திடு
!!

Wednesday 6 March 2013

காலம்!!!

காலகாலமாய் பலதைக்கற்று
 பெற்றுத்தந்த காலம்
தொலைவாகி போனபின்
தவறை எழுதிவிட்டு தொலவிற்காய்
அழுகின்றோம்!

தப்பென உணர்ந்த போதும்
தவறென அறிவுசொல்லிய போதும்
கேளாது மனசை ச் சொலுத்திட்டு
ஏதோஒன்றைிடம் வாழ்வை
தோற்றிட்டு அழுகின்றோம்!!!

உரிமையில்லாத உறவிலும்
 நில்லாது ஒர் கதையை
தொடராக எழுதிவிட்டு சொல்லாது
தவிக்கின்றோம் மற்றவர்சொல்லியும்
கேட்காது தண்டனை பெற்றுவிட்டு
நில்லாது துடிக்கின்றோம்!!!

எல்லாமே தெரிந்தாலும் வாழ்வை
கண்முன்னோ தொலைத்து விட்டு
தொலைவாகி நிற்கின்றோம்
இதை வெல்லவும் முடியாது மெல்லவும்
முடியாது ஊமையாய் போகின்றோம்!!

மீண்டும் காலம் கற்றுவிட...கற்றுவிட
தோடுகின்றோம் கற்பனை,யாய்,,,காலத்தை