Wednesday 22 October 2014

குட்டிக்குட்டிச் சாரல்......,

வலிகளைகொட்டிய
இறையே உனக்குகோர்
தீபம்!!
ஏமாற்றங்களை கொட்டிய
 இறையே உனக்கோர்
தீபம் !!
கரத்தினை வெட்டிய
இறையே உனக்கோர்
தீபம் !!
கருணையின்றி பழிவாங்கிய
.இறையே உனக்கோர்
தீபம்!ஒளியாய் தருகின்றேன்
உன்கண்ணின் இருளுக்கு!!

தீயாத்தீபத்திருநாள்

மனதிற்குள் ஆயிரம்
அழுக்கும் குப்பையும்
அழியாது இருப்பதை
அழிந்திட வந்திடும்  ஒளியே!!

அடுத்தவர்சொல்லும் செயலும்
 புரியாதுஇருப்பதை ஒர்நாளேனும்
புரிந்திட வைத்திட அழியாது
வந்திடும் ஒளியே!!

 இருப்பதைத் தொலைத்து
எடுப்பதை எண்ணி இருப்பதை
விட்டு அழுதிடும் இதயங்களை
சிரிந்திட வைத்திட வந்திடும் ஒளியே!

ஆன்மீகஅறிவை அறியாது
தொழிநுட்பறிவாள் தடுமாறி
தடையானவரை தடுத்திட
தடைபடாது தொடரும்ஒளியே!!

இல்லதின் ஒளியாய் உள்ளத்தின்
வழியாய் உறங்கிட்ட பாசத்தை
உயிரோடு எழுப்பிட  எழுந்திடும்
ஒளியாய்யெழுந்திட்ட ஒளியே!!

இறந்துகொண்டே வாழும்
மனிதநேயத்தை உள்ளத்தில்
எடுத்து!!பணயிந்திரமனிதனை
இல்லத்திலாவது கொட்டாடிட
கொண்டாடிடும் தீபஒளியோ!

எதிர்பவர் இயத்திலும்ஒளிர்த்திடு
நல்லெளியாய்!!



Tuesday 21 October 2014

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................

பெண்மையின் பலவீனங்களால்
ஒரு கூட்டம்
பேச்சாளர்களாய் உயர்கின்றனர்!
பெண்மையின் பலவீனங்களால்
 ஒரு கூட்டம்
எழுதாளர்களாய்  உயர்கின்றனர்!
பெண்மையின் பலவீனங்களால்
ஒரு கூட்டம்
வீரனா  உயர்கின்றனர்!
பெண்மையின்பலவீனங்களால்
ஒரு கூட்டம்
வாழ்வின்சுவையோடு  சாமியாய்
உயர்கின்றது !! உயரந்து உயர்ந்து
பெண்ணிற்குள்ளோ சுற்றி பெண்ணாலே
வாழும் தியாகிகள் பெண்மையின்
பலவீனங்களாலே சிறந்து வாழ்கின்றனர்!!!

Friday 17 October 2014

குட்டிக்குட்டிச் சாரல்......,

துளிகள் ஏனோ கண்கள்
விடுவதுதான் ஆனால்
வலிகளைக்கொடுப்பது ஏனோ
நேசிக்கும் இதயம் தானே!

Wednesday 15 October 2014

குட்டிக்குட்டிச் சாரல்......,

எதையோதேடி
எதற்காகவோ
பொய்கள் சொல்லி
 என்னிடம கேளாது
எதையோ அறிந்து
இதயதில் ஓர்வலியை அறியாமல்
கொட்டி  காதலால்
கண்கள் இருந்தும் ஏன்
கண்ணின்மணிதொலைதாய்

குட்டிக்குட்டிச் சாரல்......,

ஒரு மரத்தை  அழித்திட
ஒரு தோப்பை குறைகாண்கின்றான்
ஒரு தோப்பை அழிந்திட
ஒரு மரத்தை குறைகாண்கின்றான்    
மனிதநேயத்தால்!!

Saturday 4 October 2014

குட்டிக்குட்டிச் சாரல்......,

எழமுயல்கின்றபோதெல்லாம்
மரணதின்வலியறிகின்றேன்
வாழ்வில்!!
தடைகளை கடந்திட முயலும்போதெல்லாம்
மலைகளோ தடையாக நிமிரக்கண்டேன்
வாழ்வில்!!
ஊமையைாய் அழுகின்றபோதெல்லாம்
கேலிசிந்திரமாய் வரையக்கண்டேன்
வாழ்வில்!!
தனிமையை உடுத்திடும் போதெல்லாம்
வேப்பங்காயாய் கசந்திடக்கண்டேன் வாழ்வில்!!

குட்டிக்குட்டிச் சாரல்......,



வலிகளைத்திண்று
பசிமறந்தேன் தன்னால்
வறுமையைதிண்று

கனவினை மறந்தேன் உன்னால்
கற்பனையைத்திண்று

இளமையை மறந்தேன் விதியால்
என்னைத் திண்று
உயிரைமறந்தேன் இறையால்

குட்டிக்குட்டிச் சாரல்......,

யாரோ எறிந்திட்ட
பந்தைப்போல் துள்ளியோடிய
வாழ்கை
 யாரோ தவறவிட்ட
கண்ணாடியைப்போல்
உடைந்துசிதறியது அடையாலமின்றி!!

Friday 3 October 2014

நினைவஞ்சலி


நீதிவழிக்காவலனாய்
கடமைவழிநாயகனாய்
தரணியில் வாழ்ந்தவரோ! இங்கே
என் இல்லது நாயகனாய்
என்னைச்சுமந்தவரோ! இப்போ
எங்கே ஐயோ போனீர்!

எங்கள் அன்பிற்கோர் மடியாகி
பண்பின் வழிகாட்டியாய்
வாழ்வின் வழித்துணையாய்
கண்ணின்மணிபோல்
இன்பம்தந்து சுமந்தவரோ !இப்போ
எங்கே ஐயாபோனீர்

நாணயத்திற்கும்  நாயத்திற்கும்
சொல்லுக்கும் செயலுக்கும்
ஒற்றை அர்தமென்றை எம்மிடத்தில்
கற்றுதந்திட கண்டிப்பென்றை
கவசமாய் காத்து நடந்தவரோ !இப்போ
எங்கே ஐயாபேனீர்

எம் கருணைக்கண் திறந்து
கடவுளின் முன்நின்று
நரகத்தின் வழியமர்ந்து
சொர்கமே உம்மை தேடியழுகின்றோம்
எங்கே ஐயா போனீர்!