Saturday 29 September 2012

பனிப்பூ

வானமும் மண்ணும் பனியும் மழையும்
பாறையும் கடலும் பறவையும் விலங்குகளும்
புல்லும்  செடியும் பூவும் மெட்டும்
அலையும் கரையும் கானமும் இசையும்
கரையும்  மனதை தொட்டொடுத்து
வார்தொடுத்து  வார்த்தெடுத்து
விட்டிடாது பிடித்து கற்று தந்த இலக்கணம்
 சொல்லாது என்னாலும் என்னோடு
விளையாடும் காதலின் 
 இலக்கணம் தான்!!

எல்லாமே என்னோடு காதல்கொண்டாலும்
 உன்மீது பட்டு என்மீது வந்த காதல்என்ன?

 எண்ணி எண்ணிபார்க்கிறேன்
உன் நினைவுகள் என்னுள்  உருண்டு
புறன்டு உணர்வுக்குள் பறந்து
 சொல்லுது இதை தான்காதலென்று !!

எதற்க்காவும்  காத்திருக்கா இதயமது
காத்திருக்கு காத்திருக்கு உன்மொழி கேட்க!!“
பூ த்திருக்கு பூத்திருக்குஉன்னோடு பேசிட!!
 காலம் கடந்தும்உன்னோடு வாழ்ந்திட 
 இயலாதவாழ்வாகி போனபின்பும் 
முட்டாள் பெண்ணென்றுமுனுமுனுக்கும் 
சத்தங்கள் காதில் விழுந்தபோதும்
காத்திருக்கு கத்திருக்கு எதற்கென தெரியாமலோ!!!

இலக்கியத்து காதலை இலக்கணமாய்
எடுக்கவுமில்லை தொலைக்கவுமில்லை
இல்லா ஒன்றிற்காய் தவிக்கவுமில்லை
இருந்தும் அவை இதயதிற்குள்
 உண்டென்ற அறிவால் கொஞ்சம் துடித்து
கொஞ்சிபோகும் நேரத்தை கொஞ்சம் கொஞ்சமாய்
கரைத்து  காத்திருக்கு காத்திருக்கு
உன்னை எண்ணியோ!!

Tuesday 25 September 2012

வாய் சொல்லில் வீரர்கள்..........

முட்டாளின் சிந்தனையை
முந்திபெற்றவனும் அறியாதது போல்!!
அறிவிருந்தும் அறியமையால்
அறியாது பிதற்றுவதால் என்னபயன்!!“

நிலைகொள்ளா மனதின்  நிலையற்ற
வாழ்வு நிலைகொள்ள நினைப்பது
முற்களற்ற தரசை முன்வைக்கும்
இல்லறத்தில்  தான் என்றால்
காவியும்  கதைபடிக்கும் உண்மையென்று!!!
எல்லாமே காதலென்று  எல்லொரும்
சொன்னாலும் என்னாலும் எல்லோரும்
காதலோடு இருப்பதுவும் இல்லையோ!!
இல்லாத தேவதாஸ்  வாழ வாழ்கையும்
முற்சந்தி சாராயகடையும்  முன்னும் பின்னும்
உன்னையாற்றிட இருந்திட தேவையென்றால்!!

நிலையற்று தவிக்கும் மனதிற்கு
நிலைகொள்ளத்தெரியாத போது!!
நிலையானது இதுவென்று   நிலைகொள்ள
செய்பவனுக்கே  நிலை எதுவென்று
புரியாத நிலை தான் !
எங்கே!
நிலைகொள்ளுது  நிலையான வாழ்கை!!
என்னிடத்திலா உன்னிடத்திலா
முடிந்தாலும் வாழ்வு தொடர்வது
நமக்குள்  தானென்றால்
மாற்றத்தெரிந்த  வாழ்வு மாறதே
வந்தாலும்  சொல்லாதே  மீண்டும் மீண்டும்
கேட்டு  கேட்டு எல்லோரும் எதையும் புரியாது
போய்விட முதல்!! நன்றே செய் இன்றே செய்!!!!
நல்லதையோ செய்!!!!

பாரதியின்பெண்னே!!!!!

கற்றுபெற்று விட்டு கலங்கிய
காலம்  இப்ப இங்கே 
எங்கே போச்சு
வீட்டை விட்டு வெளியே வந்து 
உழைத்து பணம் கையில் வந்தாச்சி!!
அப்ப !கண்ட கனவு இப்ப
பெண்னோடு உண்டாச்சி !!
இருந்தும் கையில்  இருப்பதுவோ
ஓட்டை குடமாச்சி!!எதற்கு 
இந்த வாழ்வு என்று
இன்னும் பெண்பேச்சி!!
காலமும் விதியும் கலந்ததாய்
சொல்லி போகுதுபெண்மூச்சு!!
இதனால் ! இங்கே தொலைந்த
கலாச்சாரம் !மாற்றதின்கையில்
போயேபோச்சி !!ஆனாலும்
ஆடவன் வந்தால் ஆனந்தமே
பெண்னிற்கு பொருபாடய்போச்சி!!
காதலும் உணர்வும் வந்து 
காகிதங்களோடு வாழும் கதையாச்சி!!
நேருக்கு நேர்சந்தித்தால் இருவருக்கும்
தெரியாவாழ்வு திரையாய் போச்சி!!
தினசரி செய்திகளும் பெண்ணின் 
அறியாமை அங்கங்கே உண்மையோடு
விளம்பரம் செய்தாச்சி!!இருந்தும்
பெண் உணர்விற்குள் அடைபட்டு
நிற்பதுவும் துடிப்பதுவும் தவிப்பதுவும்
ஆண்மையின் சாட்சியாய்போச்சி !!இதனாலோ
ஆடவன் பெண்ணின் திறப்பாய் போச்சு
இருந்தும் அவனுக்கும் புரியாத மனமும்
உள்ளுக்குள்  இருப்பதாய் பேச்சி!!
புரிந்தாலும் நிறைவது சட்டதின் கோப்புகலாச்சி!!!!




Tuesday 18 September 2012

.இப்படியிருந்தால்..எப்படி தான் சாதிக்க?????

தொலைந்த வாழ்விற்குள்
தொலைதுரமான கனவு
வரைந்திட்ட காலதிற்குள்
விரையமாக்கியது  வயதை!!

விரைந்தும் முடியா ஏழ்மைக்குள்
தொல்லைகளை சுமந்து 
வரும் விதி
சும்மாவிட்டாலும் விட்டிடாடு
துரத்து  இல்லா 
கற்பனைக்கதைகளை
சேர்த்தே கூட்டிக்கொண்டு!!

பெற்ற தாயவளுக்கு கொடுத்திட
முடியா பணம் வந்த போதும் சென்ற போதும்
வட்டிப்பணதிற்கோ வந்திடாமையை
எப்படி எப்படியென சிந்தித்து சிந்தித்து
உழைத்ததில் உயிரிருந்தும்
இல்லா வாழ்கை ஒன்று கூடவோ
கூடியோ நடக்க அருமையும் பெருமையும்
மரணதிற்கு தான் புரியுமென்றது மனசு!

சும்மா இருந்தாலும் சும்மா சென்றாலும்
சும்மாசொல்லக்கூடாது பணம்
பக்குவமாய் பந்தாடுது வாழ்வை
எல்லாமே பணமென்பதால்!!

பாசம் இல்லாதே இருந்தாலும்
இல்லாப்பணம் பொய்பேசும் தனக்காய்!!
இல்லாதபோதே எல்லாமே தேவையென
கூட்டிவரும் இல்லறவாழ்வின்  தேவைகள்
சொன்னாலும் புரியாதிருந்து கொண்டோ
என்னாலும் சொல்லாதே தண்டிக்குது
 சோதனைகளால்!

கல்லாத கல்வியை என்னாலும்
கற்றும் கண்டிடமுடியா ஆழம் போல்
விட்டு விட்டு  போகின்றது
இயலாமை கோழையாக்கி!
எதையும் செய்திட முடியா தவிப்பாக்கி
கண்ணிருந்தும் குருடாய் போன உதயம்
எக்காலமும் வராது நிற்பது எதனால்?????????????

Saturday 15 September 2012

பராசக்தி


காணியுண்டு நிலமுண்டு மனிதனுண்டு
பண்படுத்த மட்டும்வேணுமடி பராசக்தி

தமிழுண்டு தமிழனுண்டுமண்ணுமுண்டு
காத்திட மட்டும்வேணுமடிபராசக்தி!!

கலையுண்டு கலாச்சாரமுண்டு
காவலுமுண்டு வளர்த்திட மட்டும்
வேணுமடிபராசக்தி!!“

ஆணுமுண்டு பெண்ணுமுண்டு
தாலியுண்டு வேலியுண்டு பூவுமுண்டு
பொட்டுமுண்டு புரிந்தவர் மட்டும்
வேணுமடி    பராசக்தி!!!“

குடும்பம்முண்டு குலமுண்டு
குத்துவிளக்குமுண்டு அன்பின்ஒளி மட்டும்
வேணுமடி பராசக்தி!!

இதயமுண்டு இரக்கமுண்டு உழைப்புமுண்டு
 உதவிடும்கை மட்டும் வேணுமடி பராசக்தி!!!

படிப்புண்டு பதவியுண்டு உயர்வுமுண்டு
 ஓழுக்கம் மட்டும் வேணுமடிபராசக்தி!!!

இன்பமுண்டு துன்பமுண்டு  சுமையுமுண்டு
சுப்பரின்தோலில் தூங்கிடாதவர் மட்டும்
வேணுமடி பராசக்தி!!!

Tuesday 11 September 2012

ஏமாளிகள்


புரியாத் தேல்விகள் ஏமாற்ற
கதவுகளை மெல்லத்திறக்க
வெண்பிஞ்சு மனசு சிந்துகின்றது
சிந்தனையின்றி!!

அள்ளிய கைகள் காட்டிடா
பாசத்தை  எண்ணியபடியே
என்றும் தொலையாய்  நடக்கின்றது
சிந்தனையின்றி!!

பாராமுகம் கொண்டு விட்டு
விலகும் உறவு தன்னையே
வெறுத்துகொண்டு நடக்கின்றது
சிந்தனையின்றி !!!

பிரிந்த வாழ்வு திசைகாற்றில் தள்ளாட
பிரிந்த இதயமே வேரோர் உறவோடு
கைகோர்க்க  அழிந்த ஆசை
அதிகாலை கனவானதால் நடக்கின்றது
சிந்தனையின்றி!!

எண்ணிய எண்ணம் கற்பனைகாற்றாய்
 களைந்தோட !வெட்டவெளி
 பக்கத்தில் விரக்கிப்பூ
உணர்வின் பக்கமாய்விரிய
 அறிவின்முதிர்ச்சியை உணர்வின்பூக்கள்
அப்படியேசிதைக்க!! சிந்தனை இழந்து
தன்னைத் தொலைத்து தட்டுதடுமாறிய
உணர்வின் பக்கத்திற்குள் புதைந்து
நடக்கின்றது சிந்தனையின்றி!!

தெளிவிழந்த சிந்தனை பாசத்தால் தவிக்க! 
புரியா குழப்பதிற்குள் கோமாளி வேடமிட்டவர்
 நிமிடத்தின்பக்கங்களை தன்பக்கமாய்
மாற்ற எதையும“ புரியா ஏமாளியாய்
நடக்கின்றது சிந்தனையின்றி!!
தன்னை தொலைத்து எடுதழித்து சென்றதன்
வாழ்வு அந்தனையும் மறந்து அன்பின்தேடலில்
பூமிவிட்டு சிறகடித்து பறந்திட
 தன்னை மறந்து நடக்கின்றது சிந்தனையின்றி!!

கொஞ்சிய கோமாளிகளின் வர்ணங்கள்
 மெல்ல வெளுத்து  தற்காலிக குடையான
 உண்மையில்லா பொய்களின் கைப்பிடிப்பு 
ஊமைவாழ்வானதால் அஞ்சம்கொண்டு
நடக்கின்றது சிந்தனையின்றி!!

ஒன்றை ஒன்று பொய்கள் கைபிடித்து
மன்னிக்கமுடியா பிழைகளை மண்ணில்
செய்து!!! ஒன்றைஒன்று காயபடுத்தி
 தன்னை தானோ ஏமாற்றிக்கொள்ளது
நடக்கின்றது சிந்திக்காமலே!!

Saturday 1 September 2012

கார்காலம்


தென்றல் காற்றாட கார்கூந்தல்
சேர்ந்தாட!! 
அந்தி வான் கொண்டாட
புள்ளிமான் எழுந்தாட!!
 தேகைமயில்விரித்தாட !!
கார்மேகம் ஓடியாட
மஞ்சள்வான் கலைந்தாட
புன்னகைத்து நந்தவனமாட
பூக்களோடு நானாட!!
 சட்டென சிந்தனை யாட !!
சிறகுகள் அதற்குள் விரிந்தாட
இடியோடு மின்னல்லாட
அச்சத்தோடு நான் நின்றாட
 மாமான்என்னைக் கண்டாட
அகத்தேடு முகமலர்ந்தாட
கண்ணத்தின்குழிக்குள் துளியாட
முதல்துளி காதலாய் என்னோடுவிழுந்தாட
 என்றுமில்லாஆனந்தம் வந்தாட
மயில் போல்  மாமான் சேர்ந்தாட
தோகையில்லா மார்வேடுநானாடா
தெறித்திடும் துளிகள்என்னேடுவிளையாட
வெட்கத்தோடு நான்நனைந்தாட
மாமான் என்னைப் பிடித்தாட!!
கைபட்டு  வலயல்களாட
உடைந்திட்டதுண்டுகள்
வானவில்லாய் விழுந்தாட!!
 கூயிலென்று பாட்டெடுத்தாட
என்கால் சலங்கை வளைந்தாட !!
சலசலக்கும் நீர்பிரிந்தாட !!
இயற்கைஅசைத்த ஒலியில்
இசைத்த கூயிலைரசித்த மழை
 என்னை சிக்கிவிழகிதொட்டு
நனைத்து போககையில்
சொல்லவில்லையோ!!
என் மாமானுக்கு ஜயலதோஸம் வருமொன்று!!

கீற்றுகுள் இருவிழி தூறல் சாரலில்............,


மண்ணில் கண்ணில்
புத்த தர்மம் எழுதிய அகிம்சை
நடைபாதை பாதசுட்டக்குள்
காப்பாற்ற பட்ட ஊர்வண காட்டா
நன்றியால் எழுந்த வீரம்!! புத்தர்
கொள்கைக்கு கொடுக்கா உயிரை
தன் உயிர் காத்திட மாற்றி மாற்றி
பிற உயிர் பறித்து தான் வாழ
எழுந்த அகிம்சையே தமிழன் உயிரானது!

இழந்ததால் பிரிந்தால் தன்னை தொலைத்தால்
தழிழன் எழுந்து தலைநிமிர்ந்ததால்
தன்னை கொடுத்து எடுத்தது மீண்டும்
கொடுத்ததை நினைத்து நினைத்து
உருகு தழிழ் ஈடாக எதையும்
பெற்றிட முடியாமல் தவிக்கும் தவிப்போ
தேசத்தின இழப்பாய் போனது!

தவித்து புலம்பினாலும் வழிதேடும்
கொள்கையில் வடிவாய் அமர்த்தாலும்
தற்பொருமை  பேசி பேசி
வந்தவர் நின்றவர் போனவர்
பின்னால் கூட்டிப் போனதால்
ஆசைக்காய் பணம் வந்து
கதைபடிக்க ஆடம்பரம் ஆடைகிழிக்க்
எம்மிடம் உள்ளது கையிழக்க
கட்டிப்போட்ட திறமை தலைமிர
தலைகவிழ்ந்தது உண்மையானது!!

பலகால தவம்
இன்னும் தேடும் தேடலானதால்
கண்டு கொண்ட குற்றசாட்டு மற்றவர்
மற்றவர் என்ற வீரப்பேசி
சின்ன நாட்டு சிற்கார தமிழ்
கற்றதை பெருமைக்காய் விற்று
வீரமிருந்தும் பொருமையால்
வாழ்வின்றி தவிக்கின்றது..
இன்று நாளை என்று!!…
.