Wednesday 31 October 2007

தேடல்கள்

பழமையில் புதுமை
தேடி
புதுமையிலும் புதுமை
தேடி
புதிதாய் ஒர் வாழ்வை
தேடி
பண்பில்லா பண்பில்
சேர்ந்து
பரிகாசம் தன்னைச்
சுமந்து
உறவிற்கே உறவு
சொல்லி
முறையே இல்லா
உறவில் சேர்ந்து
தேடலினால் தேடிக்
கொண்டோம்
பொறுமையில்லா இதயம்
கொண்டு
சொல்ல முடியா
பாதை ஒன்றை
புதிய வாழ்கையென்று………

Friday 26 October 2007

தீக்குளிப்பு

ராமன் தீயெடுக்க
சீதை குளித்தால் இன்று
இராவணர்கள் தீயெடுக்க
சீதைகள் குளிக்கின்றனர்

இதிகாசம் கண்ட தீயால்
கலியுகமும் குளிக்க
பணகார முதலைகள்
எடுத்த தீயில்
வறுமைத் தவிப்புக்கள்
நித்தம் குளிக்கின்றது

வரதட்சனை மாமியார்
வைத்த தீயில் மருமகள்
மட்டும் குளிக்க
வரன் காணா கன்னியவளை
ஏக்க தீ சுட்டெறித்தால்
மரணத் தீ அவள் குளிக்க

கோழையவன் எடுத்த தீயில்
குடும்பமே குளித்துக் கரைய
கடவுள் அவன் காட்டிய தீ
கருணையில்லா மனிதர்கள்
வைக்கும் தீயானது............

Wednesday 24 October 2007

அன்பே நீ வில்லனானால்

உன்னத பந்தம் ஒன்று
உன்னோடு எனைச் சேர்க்க
உன் கரம் பற்றியதால்
உன் உறவாய் நான் வந்தேன்

பலர் வாழ்ந்து நமைச்சேர
இணையான துணையாக
நம் வாழ்வில் நாம் சேர்ந்தோம்

மகிழ்ச்சியாய் சில நாட்கள்
மகிழந்தே போக ,சத்தியம்
தனை செய்து ,அன்போடு
எனை அணைத்த, இன்ப
நாட்கள் கசந்ததேன்!
இப்போது நம் உறவு புரியவில்லை,
எனக்கும் தான் எதுவுமே கூறாமல்
வார்த்தையால் எனைக் கொன்று
சாக்கடையாய் நீ பார்க்க
என்ன தான் நான் செய்தேன்

இரட்டை வேடம் நீ போட்டு
அழகாய் நடிக்க உன் வேடம்
தெரிந்தும் புரியாமல் நான்
தவிந்து இன்னும் வாழ
என்ன பாவம் நான் செய்தேனே
தெரியவில்லை எனக்கும் தான்!

வில்லனவன் வெளியிலென்றால்
உன்னிடம் சொல்லலாமே
வில்லனோ நீயென்றால்
நான் யாரிடம் தான் சொல்ல
துணையாய் வந்த என் அன்பே
நீ கூறு கொஞ்சம்.............

Tuesday 23 October 2007

கீற்றுகுள் இருவிழி தூறல் சாரலில்............,

ஆயிரம் ஆயிரம்
மனிதப் பூக்கள்;! பூக்களாய்
பூத்துக் குலுங்கிய என்
தோட்டத்தில்
யுத்தமென்னும் அரக்கன்
உடல் சிதறக் குண்டெறிந்து
உயிர்ப் பலியெடுத்து
அழிவின் மேல் அழிவு செய்து
பசியோடும் வலியோடும்
என் உறவை என் நட்பை
தவிக்க விட்டு!என் தோட்டத்தின்
அழகை ச் சுடுகாடாக்கி
எம் மிடத்தில் எம் மினத்தை
காக்கின்றான் சமாதான உயிர் குடித்து


சொல்லிச் சொல்லி மாண்டு
காயத்தின் மேல் காயத்தால்
கருகிய வாழ்வு ஒளிறின்றி போக
எங்கோர் முலையில்
உறவுகளின் நம்பிக்கை
மட்டும் உயிர் வாழ்கின்றது
என்றும் மாறாமல்........


Monday 22 October 2007

தோல்விகள்

ற்பனையின் அழகு என்றும்
நிஜத்தின் தோல்வி
பொய்யின் அழகு என்றும்
உண்மையின் தோல்வி
போலியின் அழகு என்றும்
உறவின் தோல்வி
ஏமாற்றத்தின்
அழகு என்றும்
நம்பிக்கையின்
தோல்வி
சந்தேகத்தின்
அழகு என்றும்
மகிழ்ச்சியின்
தோல்வி
ஆடம்பரத்தின்
அழகு என்றும்
அமைதியின் தோல்வி
பிரிவின் அழகு என்றும்
வாழ்வின் தோல்வி
யுத்தத்தின் அழகு என்றும்
மனிதனின் தோல்வி
சிந்தனையின் அழகு என்றும்
கடவுளின் தோல்வி!