Thursday 14 February 2008

காதலர் தினம்

புரியா உணர்வை
உடலுக்குள் வைத்து
காதலென புரியவைத்து
மனிதனை கடவுள் படைந்து
பூமியில் விட்டான் காதலாய் !

காதல் மலரே... | FOS Media Students' Blogவிட்டதால் வந்த பயன்
இளநெஞ்சங்கள் நெஞ்சோடு
காதலை பற்றிக் கொண்டு
இரு உயிரில் ஓர் உணர்வாய்
சேர்ந்திட

மண்ணோடு மறையும்
மனிதனோடு காதலால்
காலத்தின் கையில்
சிக்கிக் தவிக்க!

தோற்றவர் திட்ட
ஜெயித்தவர் மகிழ
மகிழ்ந்தவர் ரசிக்க
ரசிந்தவர் கரைந்த
காலத்தை காதலுக்காய்
எழுதிச் செல்ல!!

தப்பென்றும் சரியென்றும்
வாதிட்டு வாதிட்டு களைத்து
வாதிட்டவர் வாதிட்டு வாதிட்டு
வந்த காதல்..

காதல் அகம் புறம் | The love of the intellect - Dinakaranபொன் கொடுத்து
பரிசுப் பொருள் கொடுத்து
பூக் கொடுத்து
இதயத்தை இடமாற்றி
இடமாற்றி தவிக்க


ஆண்டு தோறும் தோர்க்காது
அந்த நாளும் வந்து சேர
வந்த நாளில் பூமியும்
வெடிச்சத்ததின் நடுவிலும்
இரத்தின் சிகப்பிலும்
மரணத்தின் வலியிலும்
தன்னை மறந்து
சிரிக்கின்றது காதலால்

ஆதலால் காதல்
செய்வீர்!

Monday 4 February 2008

சுதந்திரம்

வருடத்தில் ஓர் நாள்
சுதந்திரமில்லாச் சுதந்திரம்
சுதந்திரமாய் வந்து போக
சுதந்திர நாட்டின் சுதந்திரதை
இப்படிக் கண்டேன்....
தமிழ் அரசியல் கைதி 11 வருட ...
பெண்ணின் கற்பதனை அழிக்கும்
அரக்கன் கையில் ஓர் சுதந்திரம்
எப்போது சுதந்திரமாய் இருக்கக்
கண்டேன்


கருவோடு தாய்மை சிதைத்து
பெண்ணிற்கு விடுதலை கொடுக்கும்
அரக்கர் கையில் ஓர் சுதந்திரம்
எப்போது சுதந்திரமாய் இருக்கக்
கண்டேன்

அடுப்பில் இல்லா தீயால் ஊரையே எரித்து
எரிந்த பிணங்களுடன் கருகிய ஊரின்
நிலங்களுக்கு விடுதலை கொடுக்கும்
அரக்கர் கையில்  ஓர் சுதந்திரம்
எப்போதும்  சுகந்திரமாய் இருக்கக்
கண்டேன்....

வீதிக்கு வந்த இனம் இருக்க இடமில்லா தன் நாட்டில்
பெய்யும் மழையோடும் அடிக்கும் வெயிலோடும்
 காடுகளின் மரநிழல் கூரையில்
வாழ வழியின்றித் தவிக்கும் தவிப்பை,
 ரசிக்கும் அரக்கன் கையில்
ஓர் சுதந்திரம் சுதந்திரமாய் எப்போதும்
சிரிக்கக் கண்டேன்

தாயில்லாப் பிள்ளையும்
தாயப்பாலில்லா பிள்ளையும்
அழுதழுது சாகும் கொடுமை கண்டு
ரசித்த அரக்கன் கையில் ஓர் சுதந்திரம்
எப்போதும் சுதந்திரமாய் இருக்கக் கண்டேன்

தாய் நாட்டின் தாயின் கண்கள்
எப்போதும் அழுது தவித்திடும்
கண்களாய், மரணத்தின் வாசல்
நின்று ,தவிக்கும் சுதந்திரத்தைப் போல்
எப்போதும் இப்பதையே சுகந்திரமாய்கண்டேன்..

Saturday 2 February 2008

கதிரவன்.....

அதிகாலை யன்னல் வந்து
சின்னச்சிரிப்புதிர்த்து
சின்னவளை துயிலெழுப்பும்
நீ! இன்று எங்கே சென்றாய்
என்னை மறந்து?

நித்தம் நித்தம் நீ வந்து
யன்னலோடு  கதைபேசி
வண்ணக் காதலை!என்
இதயத்தில் வளர்த்து விட்டு
இன்று ! எங்கே சென்றாய் என்னை
மறந்து?


காதலோடு சின்னவள்  உன்
வரவிற்காய் காத்திருக்க!
அவள் நினைவை மறந்து
இன்று நீ எங்கே சென்றாய்?

தேன்மொழியாள் வார்த்தையெல்லாம்
தேனெனச் சொல்லி விட்டு
தேன்மொழியாள் வார்த்தையின்
தேன் மறந்து இன்று நீ எங்கே சென்றாய்
என்னை மறந்து?

நித்தம் நித்தம்  வரவிற்காய்
சின்னவளை யன்னலில்
காத்திருக்க வைத்து விட்டு
இன்று ஏமாற்றி வாட விட்டு
வாடியவள் முகம் மலரந்திட
செய்யாது நீ எங்கே சென்றாய்
என்னை மறந்து?