Showing posts with label என் இலக்கணபிழைகளில் ஓர் இலக்கியம்............. Show all posts
Showing posts with label என் இலக்கணபிழைகளில் ஓர் இலக்கியம்............. Show all posts

Wednesday, 30 July 2025

என் இலக்கணபிழைகளில் ஓர் இலக்கியம்............,

 இறைவா!! ஏனடா 

நயமில்ல  கடவுளானாய் 

இல்லையென  தெரிந்தும் 

என்னை  மட்டும் 

மாட்டிவிடுகின்றாய் 

என்  பாதங்கள்  வலிக்க 

நடக்கவும்  வைக்கின்றாய் 

இல்லாத  பணத்தை 

இழக்கவும்  வைக்கின்றாய் 

என்  பெயரை  கேட்டாலே 

என்னிடம்  வாங்கியே கொடுக்க 

தோணுமா  உனக்கும்  

லஞ்சம்  கொடுத்து 

லஞ்சமாய்  செய்ய 

பணம்  இல்லாமல் 

பயணங்கள்  தடையாக 

தனிமையில் நிக்கின்றேன் 

உன்னால் !!

உருவாக்கியவன்  நீ 

இன்னும்  சில  நாட்களுக்குள் 

ஒன்று  பணத்தை  தா 

இல்லை!!

என்  தேவையை  நிறைவேற்று !!

கொடுப்பது  பத்தர்கள் 

வேண்டுபவன் நீ  வேண்டாமே 

உனக்கும்  பணத்திமிர் !!!


   

Tuesday, 13 May 2025

என் இலக்கணபிழைகளில் ஓர் இலக்கியம்............,

 கண்ணீர்  துளியின் 



துளியே  நீ  விட்ட  துளி 

என்னுள்  காயவில்லை 

இன்னும் !!தனிமைக்குள் 

உன்  நிழல்  குடைபிடிக்க  

எப்போதும்  ஏக்கங்களுடன் 

உன்னைத் தொலைத்தே 

தேடும்  உன் அன்னை  

அன்னையாகிய   குழந்தையானால் 

உன்னால்  !!


Friday, 9 May 2025

என் இலக்கணபிழைகளில் ஓர் இலக்கியம்............,

 இதுவரை  எனக்கு 

தேவையென்ற  ஒன்று 

தேவையென  தோன்றவில்லை !

தேடிப்பெறாமலேயே  

தேவதையானவள் 

தேடிவந்து  தேடித்தந்த 

நினைவுக்குள்  நின்றதாலோ 

இல்லை அவளாய்  நான் 

இறந்ததாலோ  பூக்களின்  

மெத்தையில் பூவாய்  போனவள் 

பூக்களில்  வண்ணத்தில் 

எண்ணமாய்  வாழ்கின்றாள் எனக்குள்  !


Saturday, 5 October 2024

என் இலக்கணபிழைகளில் ஓர் இலக்கியம்............,


 அப்பா  பாதச்சுவட்டிக்குள் 

கால்பதித்தே  நடந்த அழகிய 

நாட்கள் 

அண்ணன் கைபிடித்து 

நடந்த அழகிய 

 நாட்கள்

தந்த  அழகிய அன்பினை  

அவர்களே

எடுத்து  சென்றுவிட்டார்கள் 

போல !!

 இழந்த  அன்பினை 

இதுவரை  நான் யாரிடமும் 

உணர்ததில்லையே 

ஏன்   இறைவா!!!இதுவரை 

தோப்புக்குள்  ஏனோ 

தனியாக  வாழுகின்றேன் !!

இழந்தவை  திருப்பக்கிடைக்காது 

என்பார்கள் 

திருப்பிய கனவானது  ஏனோ !!!

இன்னும்  சிறுவயது  தந்த 

அந்த  அழகிய  வாழ்கையே  

எனக்குள்  அழகிய 

நினைவாய்  வழுக்கின்றதோ 

திரும்ப திரும்ப கனவாகியே

  பூப்பதால்  !!!


Tuesday, 18 June 2024

என் இலக்கணபிழைகளில் ஓர் இலக்கியம்............

என்  வரைபடத்தில் 
 இதுவரை   வெற்றிடமாய் 

இருக்கும்  உறவு  அப்பா!!

என்  கைகள்  

 யார்  கைபிடித்தலும் 

என்  கைகள் பிடித்து 

நடக்க துடிக்கும் உயிர்  அப்பா!!

முகம் தேடி வழிபார்க்கிறேன்

 விழிதூங்கிட ஆனால் 

 மரணம்  களவாடி   சென்ற 

உயிர்  அப்பா!! 

மரணம்  தத்தெடுத்து  தடுத்தபோதும் 

 என்  தலை கோதும் விரல்  அப்பா!!

யார்  வலிதந்தாலும்  நான் 

அழும்போது  அருகே உணரும் 

பரிசம் அப்பா !!

இருந்தவரை  சண்டை போட்டே

சமாதானம் ஆகா  உயிர் அப்பா !! 

தலை சாயாந்தே  தூங்கிட 

  கேட்கும்   ஆறுதல்  மடி

அப்பா ! இதுவரை  நான் 

தேடித்தோற்ற  அன்பின்  உணர்வு 

அப்பா !!





Friday, 6 January 2023

என் இலக்கணபிழைகளில் ஓர் இலக்கியம்............,

 என்புன்னகையை மட்டும்

ரசிப்பவர்களுக்கு! 

என் வலிகள் 

தெரியவாய்பில்லை!!

என் கோவத்தை மட்டும்

வெறுப்பவர்களுக்கு  

 என் ஏற்றங்கள் 

தெரியவாய்ப்பில்லை!!

என் அனபை மட்டும் 

கண்டுகொண்டவர்களுக்கு 

என் காயங்கள் 

தெரியவாய்ப்பில்லை!!

என் கனவை மட்டும் 

வேடிக்கை செய்ப்பவர்களுக்கு 

 என் ஏங்கள் 

தெரியவாய்ப்பில்லை!!

என் வார்த்தையை மட்டும்

வாசிப்பவர்களுக்கு   என்னையே

தெரியவ்ப்பில்லை!!!!!


Monday, 10 April 2017

என் இலக்கணபிழைகளில் ஓர் இலக்கியம்............,

வாழ்த்துகள்  தந்து
வாழ்கையை வாழ்ந்திட
சொல்கின்றாள் என்னையும்  அன்னை
ஏனோ தெரியாது!!!

உண்மையை நேசித்து  
உன்னையே நீ வென்றிடு 
சத்தியதின் வழியாய்
என்றென்னை வாழ்த்துகின்ற
என் அன்னையால் !
வாழ்கின்றது வாழ்கை
ஏனோ தெரியாது!!!

உறங்கிடும் நிமிடம் தவிர
உறங்காகப்பாசம் கொண்டு
என் அன்னைக்கு மகன்களாய்
என்னை தந்தெடுத்த மாமானுக்குள்
 ஆயிரம் வாழ்த்து மாமியேடு  எனக்காய்
ஏனோ தெரியாது !!!

ஒன்றை தாய் சுமப்பில் 
ஒன்பது தாய் அள்ளிசுமக்க 
அத்தனை பாரமும்
மறந்து வாழசொல்லுது அன்னைகளின்
வாழ்தென்னை ஏனோ தெரியாது !!!


சுற்றிய நட்ப்பாய்
 என்னை சுற்றி வலம்வந்து
என்னை தாய்யாக்கிய
 என்மகள்களின் மகன்களின் உணர்வில்
  என் உயிரின்  மூச்சுவலம் 
வருகின்றது வாழ்த்தாய்
ஏனோ தெரியாது !!!

மருமகன்களாய் வந்து  
மகன் களாய் தலைப்பாகையின்றி 
தலைசுமக்கும் தலைமகன்களின் 
பாசத்தால் வந்த வாழ்த்தால்
என் கண்ணீரில் மலர்கின்றது வாழ்கை வசதமாய்
ஏனோ தெரியாது !!!

அதிகாலை உறக்கம் கெடுத்து
அதிகாரம் பாசகொண்டு அன்பைாய்
வாழ்த்தி விட்டு அவரமாய் மறைந்த
நண்பனால் வாழச்சொல்கிறது வாழ்கை!!!
ஏனோ தெரியாது !!!

எத்தனை துயர்வந்தாலும்
 தன்னைத் தொலைத்து
என்னை காக்கின்ற இதயதிற்கு 
தெரியாமலேயே 
போன தியகத்தின் வழி வாழ்த்தாய்  என்னைவாழச்சொல்கின்றது
 ஏனோ தெரியாது !!!