Saturday 17 November 2012

என் இலக்கணபிழைகளில் ஓர் இலக்கியம்,

அழகோவியம்


வண்ணங்களை கட்டிக்கொண்ட
   மலர்கொத்து
 சிந்துகின்றது எண்ணங்களை
தொட்டெடுத்து!!
 தென்றலுக்கு தூதுசொல்லும்
  வாசமலர்
 தென்திசைக்காற்றுக்குள்
 தெமாங்கு பாட்டெடுக்கும்
இசை மலர்
வண்டுக்குப்புதுராகத்தைத்
தொட்டுசொல்லும்  வர்ணத்தாளம்!!
வஞ்சணைக்குள் சிக்காத புதுமலர்
எண்ணத்தால் தொட்டவுடன்
ஒட்டிக்கொண்டு 
உயிருக்குள் ஒளியாகுது  வசந்தமலர்
 மழலை வர்ணத்தில் விளையாடும்
சின்னமலர் !
 மொழியின் நாத்தால் ஆடும் அழகு மலர்!!
கற்பனையில் தொட்டுவிடும்
 ஸ்ரத்தின் தந்திக்குள்  நடந்திடும்
கவிமலர்
கருணையுள்ளவர் கைளுக்கே
இசைமலர்
கொட்டமடிப்பர் பார்வைக்குள்
சிக்கா வாசனை மலர்
முயற்சியுள்ளவர் கைகே
மலர்க்கொத்தாகும் வைரமலர்
கொட்டும் மழையில் கரையாவாசமலர்
சுறாவளி தொட்டிட்டால்
வளைந்தாடும் நாணல்மலர்
சுட்டிடும் நெருப்பிலும் மறையாத
உண்மைமலர்
புரிந்தவர் உள்ளதில் நின்மதிமலர்
புரியாதவர் இதயதுக்கே முள்ளான
கருப்புமலர்.............


உள்ளோ!!!.......வெளியோ!!!.....

அழகானதோர்ரிடம்
அமைதியான வாழ்வுதனில்
பணமில்லாதவரோ!மனிதராயுண்டு !!!
பசிக்காத வயிருண்டு
தேடியோடாகால்களுண்டு
தட்டிப்பறித்திடா கைகளுண்டு
ஒலிகள்கேட் காதுண்டு
மொழிகள் பேசாவாயுண்டு
அமைதியான மனதுண்டு
துடிப்புணரா இதயமுண்டு
சோகமில்லா அகமுண்டு
கண்ணீர் சிந்தாக்கண்களுண்டு
கருணையுள்ளோர் மலர்களுண்டு
கவிதைகளின்மொழியுமுண்டு
இரவுமுண்டும் பகலுமுண்டு
கல்லுக்குள் வீடுமுண்டு
 கனவில்லா  உறக்கமுண்டு
பொய்யில்லா முகங்களுண்டு
தவிப்பில்லாதனிமையுண்டு
உயிரற்ற காற்றுண்டு
உண்மைகள் இங்குமட்டுமுண்டு.....................

Thursday 15 November 2012

தீபாவளி

பட்டுண்டு பாவாடையும்ண்டு
வேட்டியுமுண்டு சட்டையுமுண்டு
விதவிதமாய் உடைகளுமுண்டு 
ஆனாலும்
                                                                 அணிந்திடாத் தீபாவளி
கோயிலுண்டு வசதியுண்டு
ஆறுகாலபூசையும்முண்டு ஆனாலும்
 அங்கே போகமுடியா தீபாவளி
அரியுண்டு மாவுண்டு சீனியுண்டு
நெய்யுண்டு பக்கத்தில்வீடுமுண்டு
 ஆனாலும் விதம்விதமாய்
பலகாரம்செய்திடாத்தீபாவளி
அன்னையுண்டு தந்தையுண்டு
பிரிந்த போதும் கையோடு
 தொலைபேசியும்முண்டு ஆனாலும்
 வாழ்த்திட முடியாத் தீபாவளி
கணவருண்டு பிள்ளையுண்டு
ஒரு பொழுது கூடியுண்ண நேரமில்லா
வாழ்வும்முண்டு இருந்தபோதும்
மீட்கமுடியா நேரத்தை வாழ்த்தி
ஓய்வாக்க வந்திட்ட தீபாவளி
அன்பை பறிமாறிட முடியாது
போனது தேசமற்ற மனிதர்க்கு
விடுதலையின்றி............



Sunday 11 November 2012

ஒளிநிலா

வந்தனர் சென்றனர்
ஏதோ சொன்னனர்
பிரிந்தனர் கூடினர்
குற்றங்கள் கண்டனர்
வஞ்சகமாய் பேசினர்
கார்ரிருள் என்றனர்
 சொந்தமென்றனர்
பின்னர் முன்னர்
காப்பதாய் சொன்னனர்
மகிழ்ந்தனர் கூடிகூலாவினர்
இன்னும் ஏதேதோ சொன்னனர்!!
மௌன இதயத்தின்
ஒலியில்ஊமையான மொழி
மெல்ல கற்றிட்டதை
அசைபோட்டு அசைபோட்டு
தன் செல்லதளிர்கரம்
பிடித்திட்டது இது மட்டும்
உண்மையொன்று!!! இப்போ
 இருள்வென்று தளிர் வருகின்றது ஒளியாய்!!!!!!!!!!!!!!!!!

Saturday 10 November 2012

வட்டம்.........................

உருண்டை பந்துபோல்
உருண்டேடுது வாழ்வு
மேடுபள்ளம் மோதி!
வந்து கூடி உறவாடி
விட்டுப் பிரிந்து உறவாகி
விளையாடுது  விதியாகி
கட்டிக் காத்திடமுடியாது
தள்ளாடுது
                                                       கருணை கதறிக்கொண்டு
முட்டி மோதி பட்டுப் பதறி
விட்டு விலகி உருண்டு புறன்டு
உளறி கொண்டிநிற்கு பாசம்
எதுகும் அறியாது‘
அட்டைக்கத்தி யோடும்
 அறிவில்லா வாளோடும்
கெட்டியாய் பிடித்த வேலோடும்
அள்ளி தெளிக்குது மனசு
உண்மை புரியாது
தத்தளித்து தள்ளாடி தன்னை மறந்து
தானாடி எட்டிபிடித்திட நின்றாலும்
உருட்டியொடுகின்றது ஒன்றுமோ
                      சொல்லா ஈர்ப்புக்குள் விதி.............


கீற்றுகுள் இருவிழி தூறல் சாரலில்............,



மண்ணைத் தொலைத்திட்ட
இதயங்களே !கொஞ்சம்  நாம்
தாய்மண்ணையும்  சிந்தித்தால் தான் என்ன?

உறங்கியே வாழும்
 இதயங்களே! கொஞ்சம்
மண்ணுக்காய் விழித்திட்டால்
தான் என்ன?
அறம்பாடும் இதயங்களே!
கொஞ்சம் அல்லல்படும்
தமிழுக்காய் பாடினால் தான் என்ன?

இறைபாடும் இதயங்களே!
மனிதஇயங்களில்  கொஞ்சம்
அன்பையும் தூவினால் தான்  என்ன?

தமிழ்பேசும் இதயங்களே!
கொஞ்சம் தமிழுக்காய்  வாழ்ந்து
பார்த்தால் தான் ஏன்ன?

ஆண்டுக்கு ஒருமுறை  அழிந்ததை
நினைக்கும் இதயங்களே!அப்பப்
கொஞ்சம் மாண்டு போனதை
நினைத்தால் தான் என்ன?

தன்னைக்காக் தனக்காய்
மண்டியிட்ட இதயங்களே!
கொஞ்சம் மண்ணுக்காய்
 தலைநிமிர்ந்தால்தான் என்ன?

வாழ்விழந்து வழியிழந்து
வாழயிழது தவிக்கும் இதயங்களே!
கொஞ்சம் இழந்ததை நினைத்து
எழுந்தால் தான் என்ன?

அது  இது எதுவெனத்தெரியா
இதயங்களே!
எல்லாம் எம் விதடுலையென
கூடிவாழ்ந்துவென்றிட எழுந்தால் தான் என்ன?


கனவு தேசம்

நேசத்தின் நிழல் காதலின்
உணர்வால் துறந்தது
காதலின் நிழல் காமத்தின்
உணர்வால் துறந்தது
பொய்யின் நிழல் கவிதையின்
உணர்வால் துறந்தது
கற்பனையின் நிழல் கனவின்
உணர்வால் துறந்து
காலத்தின் நிழல் வீணடித்திட்ட
உணர்வால் திறந்தது
இப்படிஇரண்டும் சண்டையிட
துரத்தி துரத்தி ஓடி
நிழலோடு நிழல்மேதிஉடைகின்றது
ஒன்றாகையில்......................

Friday 2 November 2012

கனவு

எட்டி எட்டி பார்க்கின்றேன் எங்கோ 
தொலைந்த கனவினை கொஞ்சம் 
அள்ளிக்கொண்டு நடைபோட  
ஆனாலும்!கொஞ்சமும் அச்சமின்றி
நட்டநடுவான் நட்சத்திரஒளிபோல்
விட்டுவிலகிய கனவுகள்அப்படியோ 
நிக்கின்றது என்னைத் தள்ளிவிட்டு!!

அழிந்தொழிந்த கனவுகளை
கூட்டி க்கூட்டி பார்கின்றேன்
கொஞ்ச நாள் நான் வாழ
எங்கிருந்தோ வந்து போகும்
தொன்றல் சுழன்று போகையில்
அத்தனையும் சிதறவிட்டு
வெற்றுக்கைகளாய்
 மீண்டும் திரும்புது என்னிடத்தே!!“

குட்டிஇதயமதில் கொட்டி வைத்த
கனவுகளை  தட்டித் தட்டிப்பார்க்கின்றேன்
கொஞ்ச உற்சாகத்தை கட்டிக்கொள்ள
கட்டிக்காக்கும் சிந்தனை தடடிவிட்டு
போகின்றது அந்தனையும் மறந்திட்டதாய்!!

எந்தனையோ கற்றாலும் எந்தனையோ
நினைத்தாலும்  அந்தனையும் கூடிடாது
பலமிழந்த மனசு ஏனோ
என்னை சுற்றி சுற்றி வந்து
 இதயமதை உடைக்கின்றது
கனவிற்காய்!!!!!!!!!!

ஏமாற்றம்

உன்னை நம்பி
நம்பிக்கையிழந்து!!!
உயிரோடு ஒரு இறந்த காலம்
உணர்வின்றி நடைபோட
வசந்தங்கள் வாசலில்லா
இல்லத்தில் சற்று நேர
ஓய்விற்காய் தங்கிவிட்டு போக!!
இருப்பதற்கும் நடப்பதற்கும்
உண்மையில்லா உள்ளம்
தானென்று வீரம் போச!!
கண்களுக்குள் ஓர்  கணிவில்லா
பாசம் சுயநலத்தோடு  தேடிநிற்க
விட்டு போன துயரங்கள்
இரட்டை வேடங்கொண்டு
ஒன்றை சொல்லொடுத்து
பொய்யான உண்மைக்காய்
விட்டிடாத் தொடர்மழைக் காற்றாய்
திக்குதிசையின்றி  கொட்ட!!
நொந்து போன இதயது
மீட்டுமொரு  வலியால் தன்னை
தொலைத்து  தவிக்குது ஏமாற்றதால்!!!!!