Showing posts with label விழி கண்டு மொழி பேசும் சாரல்........................ Show all posts
Showing posts with label விழி கண்டு மொழி பேசும் சாரல்........................ Show all posts

Thursday, 3 September 2026

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

அவள்  சிந்தனையை 



சற்று  தட்டி  நிறுத்தியது  

அவள் கண்ணம்  தொட்டு 

விழுந்த  மஞ்சல்  வண்ண 

இலை !!அவள் ஒரு நொடி 

நின்று உதிர்ந்த இலை 

பார்த்து  மௌனமாய் நின்றாள் !

அந்த  மௌனத்திற்குள் ஆயிரம் 

வார்த்தைகள் ஊமையாய் 

உதிர்ந்தது அவளிடமிருந்து !!

இலைக்கு  புரியா மௌனம் 

இறைவனுக்கு  புரியுமென்றே 

மீண்டும்  நடக்கின்றாள் !!

Monday, 31 August 2026

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

போதுமடா  சாமி நீ 


தந்த  வலிகள் !

கொஞ்சம் ஓய்வாய் 

 இருந்தால் தான் என்ன? 

வீழ்ந்து விட்டபின்னும்  ஏறி மிதிக்கும் 

உந்தன் கால்கள்

 மட்டும் கல்லில்லையா ?

எழுந்திடா  சிலையே  நீ 

விழுந்தவள்  மேல்  நடப்பதெப்படி ?

வீழ்ந்தே கிடந்தாலும் இல்லை 

புதைந்தே போனாலும் நீ 

ஓரக்கண்ணால்  பார்த்தாலும் 

இல்லை  நெற்றிக்கண்ணால் 

எரித்தாலும்  படைத்தவன் நீயே 

என்கேள்விக்குப்பதில்  தேடு !!!

உறவை  உருவாக்கியவனும் நீயே 

மனிதனை  குறையாய் 

படைத்தவனும்  நீயே 

மனிதனுக்குள்  அரக்கனை  

மனிதனாய்  நடிக்க  வைத்ததும்  நீயே 

பூவினை காசிக்கிடும்  மிருகத்தை 

மனிதனாய்  காப்பதும்  நீயே 

நல்லவர்களை  கெட்டவர்களாய் 

காட்டுவதும்  நீயே  அறிவின் 

கதைவடைத்து  மனதின் வழியால் 

மனதினை  முட்டாளாக்கி 

மனிதனை  வீழ்த்திடுவதும் நீயே 

வீழ்த்த  மனிதனின்  மேல் 

 ஏறி  நடப்பதும்  நீயே  !!

நான் தேடும் பதிலும்  

என்  முன்  நிற்கும்  குறையும் நீயே  !!

நிறைவு இல்லா  உலகில் 

என்னை  குறைகாணும்  கண்களின் 

பார்வையும்  நீயே !!!

  


Wednesday, 19 August 2026

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 அவன்!



 தன் வாழ்க்கைக்குள் 

அவளை!!

  கட்டி போட்டு  விட்டு 

நினைவினை  காதல் 

செய்கின்றான்!

அவளோ!!

 அவன்  வாழ்க்கையின் 

ஓரமாய் நின்று 

 போகும்  நாட்களை 

வேடிக்கை  பார்க்கின்றாள்  

இருவர்  வாழ்க்கையும் 

நாளுகண்களின் 

பார்வைக்குள்  வாழ்கின்றது !!



Wednesday, 12 August 2026

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 காதுகொடுத்து  கேட்டிடும் 

நாட்களில் நான்  காதுகொடுத்து 

கேட்டிடா சொல் அப்பா 

இப்போ!!  காதுகளில்  ஒலித்திடும் 

சொல்லும் அப்பா!1 நின்று 

நிதானிக்க  முடியா 

நிதானம்  அன்றில்லாக்கொடுமைக்குள் 

இருந்தும் தேடமால்  சொல்லுக்கு 

சொல்லு சண்டையிட்டு 

புரிந்ததும் புரியாமல் 

தொலைத்த  உயிர் அப்பா!!!

இதயசிறைக்கதவிற்க்குள் 

சிறைவைத்த  உயிரின் 

இதயம்  புரியா துடிப்பிற்குள் 

நின்று  பேசிய உணர்வு 

கேலிபேசிட்டாலும்   வலிக்கின்றது 

என் புரிதலில்லா காலம் பார்த்து !!

இருந்தும்  இப்போதும்  என்னை 

ஏமாற்ற  நானே சொல்லும் 

உயிர்  ஓசை அப்பா !!!

 

Tuesday, 11 August 2026

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 கண்மூடிதனமான 



 நம்பிக்கைகளை 

கைபிடித்து சேர்ந்தபோது 

எல்லா மனிதனும் 

ஓன்றை நம்பினான்!! 

வெவ்வேறு  திசைகள்

 வெவ்வேறு 

நம்பிக்கைகள்! 

வெவ்வேறு பாதைகளாய் 

கடந்தமனிதன் !

கண்திறந்த நம்பிக்கைகள் 

தனிமனிசுகந்திரம் 

பெற்று மூழ்கி தோற்று போகுமோ 

மனிதத்தேடலில்  

Monday, 10 August 2026

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 ஆணுக்கு!! 

என்ன தேவையென  

பெண்ணை  படைத்த 

இறைவனை விட அறிந்த 

உலகிற்கு  பெண்ணிற்கு 

என்ன தேவையென  விவாதித்தும் 

விடைகளை தொலைத்தே 

தேடிக்கொண்டே  இருக்கின்றது  

உலகு !!இந்த உலகிற்குள் 

பிறந்த  அவளுக்கும் புரியவில்லை 

அவளை  வைத்து பிழைக்கும் 

கற்பனைவாதிகளுக்கும் 

தெரியவில்லை  தெரிந்ததெல்லாம் 

ஒன்றே !!அதுவா 

ஒன்றுமே இல்லை 

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

வெண்ணிலா  இரவுக்குள் 

தூக்கம்  தொலைத்து 

ஓடும்  அவள்  சோர்விற்குள் 

இல்லா ஒரு துணை  

இறைவன்

எழுதிய   புத்தகத்தின் 

வெள்ளை காகிதத்தின்  

வெள்ளை யெழுத்துக்கள்  

யாராலும்  படிக்க  முடியவிடடாலும் 

அவள்  தனிமை மொழிப்போர் 

செய்கின்றது  அவளோடு 

விழி கண்டு மொழி பேசும் சாரல்........................,

அயல்   வாசல்  கதவின் 



முன்  யாசகம்  கேட்டிடும் 

அறிவின்  முதிர்ச்சி !!தன் 

வாசலில் ஒரு  மனிதனையும் 

தலைவனாய்  அங்கிகரிக்கா 

அகங்காரத்தின் வீழ்ச்சி   

இங்கே !!ஒரு 

இனம் பேசும்   அறிவு 

தனிமனித தாக்குதலுக்குள் 

ஒரு  தலைவனும்  தோன்ற 

இனத்தின் தோல்வி !!வார்த்தைகளுக்குள் 

மாயாயலம் ஏழையின்  கனவிற்குள் 

உணவு !அடிவயிரோ  வலியில் !!

பேசிப்பேசி  அழித்த பெருமை 

நம்மையே  சாரும் !!




Friday, 31 July 2026

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

இருப்பவனுக்கு !

 இழப்பின்மீது  பயம் !

இழந்தவனுக்கு

 தன்மீதி பயம்  !

எல்லாம்  !

வெறுத்தவனுக்கு எதன் 

மீதும் பயமில்லை !

அவனை!!நம்பினால் 

  இழந்து விடுவோம் என்ற 

பயமே  பயந்து  

 காட்டிக்கொடுக்கின்றது

இழந்திட விருப்பாதவனே 

எதிரியாகின்றான் என்று !!! 

Thursday, 30 July 2026

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 ஒன்றை  தீர்வுக்கு 

ஒருமுறை  அல்ல 

பலமுறை சிந்தித்தாலும்  

கிடைக்கா  ஒரு பதில்  

இல்லத்தரசிக்கே 

சொந்தமான கேள்வி !!

 ஒருமுறை அல்ல  பலமுறை

 கேட்டாலும் 

கொடுக்கா  வரமும் அவள் 

சுமக்கும்  மனதின் 

சுமைகளின் கேள்விக்கே 

வலி !!!


Tuesday, 28 July 2026

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

கோடி இன்னல்களின்  



நடுவே கொஞ்சமும் அச்சமில்லாதே 

பூவான பெண்மை 

கொஞ்சிபேசிடும் 

கோழை மனிதனிடம் 

மட்டும்  வார்த்தைகளில் 

விழுது விடுக்கின்றதே 

கொஞ்சமும் யோசிக்காதே 

இங்கே அறிவை வெல்லும் 

ஆயுதம் எது  

தேடித்தேடி  பார்க்கின்றேன் 

இதுவரை  சிக்கவில்லை 

மனசின்  சிறைக்குள் 

அடைக்கப்படட  உணர்வின் 

மாயயாலத்தின்  மர்மங்களின் 

பக்கங்கள்  கோடுபோட்டதும் 

பொய்யே  !!


Monday, 27 July 2026

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

அன்பெதுவான 



தேடிப்பார்த்தேன் 

யாரிடமும் கிடைக்கவில்லை 

நான் தேடிய அன்பு !அன்பை 

 கேட்டேன் அன்பிடமே!

 அன்பு கண்ணீரோடு 

சொன்னது நீகொடுத்து 

நீ தேடும் நான் தொலைந்த 

இடமே அன்பு !உன் வீட்டில் 

அழகான ஒளியின் வெளிச்சம் 

ஊர்பரவ ஊர்பேசும் உன் 

வீட்டில் உன் கண்களின் 

ஏக்கம்  நான்னென !நான் 

தேடும் நீயும்  நீதேடும் 

நானும்  தொலைக்கப்பட்ட 

பெண்மையை !தேடாத 

சமூகத்தின் வீரமென்றது  !

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

நிலைகொள்ளா  வேலைகளை 



நிலையில்லா உயரத்தில் 

வைத்து!  நிலையில்லாமல் 

நின்றுகொண்டு 

நிற்கும்  உறவுகளை

நிலைமாற   செய்துவிட்டு 

நிலைக்கும் கற்பனைக்குள்  

நீயும்  நானும்  பேசும் 

வார்த்தைகள்  எனறும் 

போலிமுகம்கொண்ட 

விம்பத்தின்  அழகே !

இங்கே  நாம்  தொலைத்து 

தேடும்  வாழ்விற்க்குள் 

அன்பே  தோடும் பொருளானால் 

காதல் எப்படி வாழும் 

வாழ்க்கையாகும் !

யாரோ எழுதிய கற்பனைக்குள் 

யாரோ தொலைத்த காதலை 

நாமும்  இன்னும் எதுவென 

தெரியாமலே தேடிக்கொண்டே 

இருக்கின்றோம் !அன்பேயில்லாமல் !!

Thursday, 16 July 2026

விழி கண்டு மொழி பேசும் சாரல்........................,

 மாயாவுலகிற்குள் 

மாட்டிக்கொண்ட 

புள்ளிமான் துள்ளியோடி 

அள்ளிக்கொள்ள  கைகள் 

நீட்டிய போதே 

தெரிந்தது இது 

மாயாவுலகென்று சந்தமில்லாமல் 

காட்டுக்குள் திரும்பியது 

மாயாவுலத்து வெளிச்சத்தைவிட 

காட்டின் இருள் அழகென்று !

விழி கண்டு மொழி பேசும் சாரல்........................,

 காப்பாற்றும் கைகள் 



கிடைத்தால் போராடும் 

நிமிடங்கள் அழகு 

சோர்வுகளை தோற்கடி

கைப்பிடிக்கும்  கைகளுக்கு 

தெரியும்  மனதின் வலி !

தெரியாமல் மாட்டிக்கொண்ட 

மனதிற்கு  கண்ணீரே 

கைகள் !!

Tuesday, 14 July 2026

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 உயரத்தின் ஏழ்மை 

அன்பே!  ஏமாற்றம்! 

வார்த்தைகளில் இல்லை 

பொய்மை!  இருந்தும் 

பெயர்கள் முன் கண்ணாடி 

வார்த்தை  வித்தகர் முன் 

தோல்வியின்  கடிகாரம் !

ஏளனப் பேச்சில்  எதிரியும் 

ஒன்றாய்  கூடி 

 அழுதே புலம்பிட 

வார்த்தையால்   விளையாட்டு! 

போகும் திசைகள்  முன்னே 

வாழும்  காலக்கணக்கில்

தனக்காய் சிந்திக்காமல் 

ஏழ்மையின் பாதைகளில் 

முற்களை  எடுத்திடவே 

சிந்திக்கின்ற சிறந்த மனித 

நேயம்!  கோடிமனிதனுக்குள் 

தேடினாலும் குறைகளுக்குள் 

சிறந்திடமுடியா  மணித்துளிகளை 

அழகாக்கியே  ரசிக்கும் தலைவனாய் 

நாளை எதுக்கும்  நிலையில்லை என்ற 

இறையை  நாளின் அழகிய 

விழிப்பு !!  சுயநலவாதிகள் வெறுக்கும் 

இன்றைய  வெளிச்சம்  !!



Thursday, 9 July 2026

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 ஆதிப்பெண்ணிவள்!!



 காடுகளில்  நடுவே  

தொலைத்துவிட்டு  சென்ற 

மனித உறவுகளுக்கு  நன்றி !

கொஞ்சிப்பேசும்  தாய்மொழியில்லை 

கொஞ்சிபேசுகின்ற பறவைமொழியழகு 

கொஞ்சம் சோர்ந்தால் கூடி விளையாட

அன்பைகாட்டும்  மிருகங்கள் 

மனித கோவத்தை விட 

அழகாய் விளையாடும்  அவளோடு! 

உறவையிட அழகின்  உறவு 

அவள் கொடுக்கும் அன்பின் அழகிற்கு 

கிடைக்கும் அன்பின்  அழகு    

செல்லப்பிள்ளை இவள்  !பசியை போக்க 

பிச்சையிட  தட்டு  ஏந்திடாமல் 

பசியை போக்கும்  மரமும் 

இவள் தாய்மையின்  அழகு 

 திரும்பும் திசைக்காற்று 

கூட  நின்று பேசியே செல்லும் 

இவள் குருப்பின் அழகில்

ஆற்றின்  மொழிகள்  துங்கிட 

தாலட்டும்  அழகில் உறக்கம் 

சொர்க்கவாசல்  கொண்டுசெல்லும் !

அச்சம்  கொண்ட  நாகம் கூட 

கூடவந்து  கூடி விளையாட 

பாசம் கொள்ளும்  இவளோடு 

 இவள் சொல்லும் 

மொழிகள் மௌனம் கொள்ளும் 

இவள் பேசாமொழிகள்  கூடி பேசி 

அச்சம்  போக்கும் 

  இங்கு  ஏற்ற தழ்வு 

இல்லா  சுகந்திரம்  அவளை 

அன்பாய்  கட்டிப்போட்டு வாழக்கூடி 

வாழ்க்கை முத்தாகின்றது !!




விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

ஒற்றை பிறப்பின் ஒற்றை 



மாற்றம்  ஒன்பது 

வித கற்பனையின் தோல்வி 

  இங்கே 

பெண்மையும்  ஆண்மையும் 

தொலைந்த  இடத்தின் 

தொடக்கம் !தொடங்கியதால் 

வாழ்வே  ஏமாற்றம்!  

அன்பை தாய்மை கொள்ளா 

அன்பின் தாய்மையை  

தவறுக்குள்  தள்ளிவிட்டு  

தவறுகளை கற்றுக்கொடுத்து 

ஏளனம் செய்யும் பிறவிகளுக்கு 

கிடைத்த  தாய்மாடியில் 

பிறந்ததை  தொலைத்து விட்டு 

பேசும்  தகுதி மட்டு  யார்கொடுத்தார் !!



 

Wednesday, 8 July 2026

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 தூரத்தே  மின்னும்  


நட்சத்திரம்  போல் இவள்

 மண்ணில் தூரமாய் 

போன வாழ்விற்க்குள்

இரவல் கேட்டிடும்  சந்தோஷம் 

 இருளின் கண்களுக்குள் 

அமைதி கொள்கின்றது 

ஆர்பாட்டமில்லாமல்!இங்கே 

பொய்கள் இல்லா விம்பமே 

அவளின்  சந்தோஷத்திற்கு 

காரணமே !! 




Sunday, 5 July 2026

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 இரவுகள் என்னை பார்த்து 



அச்சத்தோடு கேட்கின்றது! 

பெண்ணே நீ !

அச்சம் கொள்ள வேண்டாமா !

 நிசத்தம் கொண்ட எனக்குள்  

நின்று! பதற்றமின்றி ரசிக்கின்றயே 

உன் முகம் மூடிய என் முகத்திற்கு 

உன் விழி கொண்டு புது வெளிச்சம் 

தேடுகின்றாய் !அச்சமின்றி !

அடடா !!உன்மொழிகேட்டு 

குரல் கேட்டு  இசைக்கும் 

தென்றலின் குரல் ஓசை 

மறக்கின்ற மாயத்தால் 

உன் திசை பார்த்து அச்சத்தோடு 

காத்திருக்கின்றேன்!

ஆதவன் தொடும் வரை 

கரைகின்ற என்னை 

உன் விழி சொல்லும்  மொழி தேடி 

கரைய வைக்கின்றாயே பெண்ணே!

மௌனம் பேசும் 

கலைபெண்ணே பதில் சொல்வாயா 

உன் பெண்மைக்குள் ஒரு தீ 

என் இரவிற்குள் இரவல் கேட்க 

நீயே துணைக்கு என்னையே காவல் 

என்கிறாய்!!