Saturday 30 March 2024

விழி கண்டு மொழி பேசும் சாரல்

 இவள் கடந்த

 ஒத்தை பதையில்

பலரை கடந்தபோதும் 

ஒருசிலரே நினைவில் 

அப்படி கடக்கையில் இவள்

கைபிடித்தவள்  அவள்

இவள் வலிகளில்

அவள் அழுகின்றாள்  

இவள் பெற்ற சாபத்தில் 

கிடைத்த வரமே அவள்

அவள் விழிபார்த்து 

திகைத்தவிழிகளுக்குள்

பூக்கும் அன்பின் ஆழம் இவளானால்!!

ஒருவரை புரிந்தால் மட்டுமே

அவர் வலிகள் மற்றவரை ஆழவைக்கும்

இவளை புரிந்தவர்கள் 

புரியாமல்போனவர்களுக்குள்

இவளுக்காய் நிக்கிறாள் என்றும்

அவள்।



குட்டிக்குட்டிச் சாரல்

வாயடியனவள்  ஒற்றை சொல்லுக்குள்

மௌனமாகின்றாள்  

விசித்திரமாகதான்  உள்ளது  

அவள் மௌனம்।இங்கே

உறவும் உயிரும் அழகாகின்றது

அவள் ஒற்றை சொல் 

மௌனத்தில்!!!


Tuesday 26 March 2024

குட்டிக்குட்டிச் சாரல்

 துன்பமென்று தெரிந்தே

விழுகின்றோம்  விழுந்தபின்னரே

எழுந்திட துடிக்கின்றோம்

இங்கே காப்பத்த யாரு

இலையென்றால் தான்  வலிகள்

பேசுகின்றது!!!


விழி கண்டு மொழி பேசும் சாரல்

 என்னடா விசித்திரம்

சில உறவிற்கு

அர்த்தங்கள் புரியவில்லை

சில நட்பிற்கு காரணம்

 புரியவில்லை

என் வாழ்க்கையின் கிறுக்கள்

போல் காரணமின்றியே 

தோற்று  போனாலும் 

நிழ்போல் தொடருது

நெடுஞ்சாலை பயணம் போல்

விட்டு விலகிபோனாலும் 

தூறல்வழி  சாரல் மழை

தூறலால்  நனைக்கு  என்னை

தினமும் இது

அன்பின் தேடலால் தொலைந்த

குழந்தைக்கு கிடைத்த வரமா

இல்லை சாபமா!!



குட்டிக்குட்டிச் சாரல்

 இலையென்றே இருக்கும்போது

ஒடும் கால்கள் இறக்கும்வரை

ஒடும் எதுவிருந்தாலும்

குட்டிக்குட்டிச் சாரல்

 எதையெடுத்தும்  நான் கொடுக்க

நான் கற்பனையுலகவானில் 

பறக்கவில்லை  இப்போ மாமா  

நீ தந்த நான்

உன்னோடு பிறந்திறந்து

காலங்கள் காகிதமாய்

நினைவுக்குள் மறைந்தே

போனோம் மாமா

இரும்தும் அக்கம்பக்கம்

அவரவர் கொடுப்பதை  நாமாய்

சும்மா கொடுக்க சுகமாய்

இருக்கு மாமா கேட்டாலும்

இல்லை மாமா நீயில்லா

நான்!!!


Monday 25 March 2024

குட்டிக்குட்டிச் சாரல்

 நம்வாழ்வில் ஒருவரிருந்தால்

நம் வாழ்க்கை அழகாகும் என்பது

நம் நம்பிக்கை அதுவே இருவர்

நம்பிக்கையானால் வாழ்க்கை

அழகாகின்றது நமைபோல்!!

Sunday 24 March 2024

குட்டிக்குட்டிச் சாரல்

 ஒவ்வென்றும் ஒவ்வென்றை

காற்று தருவதே 

வாழ்க்கை என்றார்கள்

நானும் மனிதபுத்தத்தை 

புரட்டிப்புரட்டிப்பார்க்கின்றேன் 

 மனிதத்தறுகளின் அர்த்தங்கள் மட்டும்

புரியவில்லை 

இறைவனின் விளையாட்டு

என்றார்கள் 

இப்போ இறைவனையே

கேட்க்கிறேன் 

இத்த விளையாட்டால்

அதிகமானா  தண்டனை யாருக்கும்!!

விழி கண்டு மொழி பேசும் சாரல்

 ஒருபெண்மையின் வாழ்க்கை

முற்செடி பூபோன்றது 

யார் கண்ணுக்கும்

தெரியா காயங்களே அதிகம்

காவல்காரர்களும் காகிதாப்பூவாய்

நினைப்பதாலேயே 

இங்கே அவள் தியாகங்கள்

 அசிங்கப்பட்டு தன்னம்பிக்கை

உடைக்கப்படுகின்றது 

அவள் உடைந்து நிலைகுலைந்து

நிக்கும்போதே  அவள்

பலகாலவாழ்க்கையை 

ஒரு நொடியில் கசக்கியெறிந்து 

செல்லவும் முடிகின்றது

இங்கே பூ

அன்பால் தடுமாறுகிறது

துணையென நின்றவர்

ஆசையால்  தடுமாறுகிறார்

ஒற்றை சொல்லை சொல்லமுடியா

மனிதனால் துன்பம் என்னவே பூவிற்கே


Saturday 23 March 2024

குட்டிக்குட்டிச் சாரல்

 தண்டனைகள் 

அதிகம் தான் பெண்மைக்கு 

படைப்பின் நியதியென்றாலும் 

காக்க அப்பாவை 

படைத்து  தான் வைத்தான்

இறைவன்  ஆனால் 

அப்பாவிற்க்கு ஏன்

தான் புரியவில்லை 

மனைவியின் அர்த்தங்கள்!!!அப்ப

அப்பாவை படைத்த இறைவனுக்கு

என்ன தண்டனை!!


குட்டிக்குட்டிச் சாரல்

 கெட்டது நதியின் வேகத்தில்

வந்து சென்றுவிடுகின்றது

நல்லது ஆமையின் வேகத்தில்

வருவதால் நல்லது வந்தது

தெரியாமல் வாழ்க்கை நகர்கினள்றது



Friday 22 March 2024

குட்டிக்குட்டிச் சாரல்

 பேசி புரியவைக்க வேண்டிய

நேரம்  பேசிடாமல் 

உணர்வுகளை சிறைவைப்பவரே 

தனது வாழ்வில்

தமக்கே தண்டனை கொடுத்து

தன்னையே தண்டிக்கின்றனர்।

Thursday 21 March 2024

விழி கண்டு மொழி பேசும் சாரல்

 போட்டிகளும் பொறாமைகளும்

இதுவரை காயப்படுத்தியதில்லை

இப்போ இதனாலும் காயப்படும்

காலமதுவே !!!

இதுவரைபார்த்த முகங்கள்

இதுவரை காணா முகங்களாய்

அழகாய்

புன்னையோடே விளையாடி

நடிக்கின்றது !! இப்போதுதான்

புரிகின்றது மனிதர்களை 

விட இயற்கையை 

ஏன் காதல் செய்தேன் என்று 

முகங்கள் பார்த்து  முகங்கன்

அறிய எனக்கும் 

பல முகம் தேவையோ இறைவா!!!

என்றாலும் வேண்டாம் இறைவா

இந்த பொய்யான முங்களை விட

என் அழகான காடு என்றுமே  என்

அழகாகன புன்னகையாகும்!!! 

நடிக்கும் மேடையைவிட 

நடிக்கும் வாழ்க்கை கொடுமைக்குள் 

போளியாய் புன்னைக்க

கற்றுக்கொள்வதைவிட 

உண்மையான  தனிமைகள் வரமே


Wednesday 20 March 2024

விழி கண்டு மொழி பேசும் சாரல்

 இதுவரை  தனியாக

பூட்டிக்கொண்ட என் கனவுகள்

இன்னும் யாருக்கும் புரியாமலே

சிறைப்பட்டு கிடக்கின்றது 

யாரும் புரிந்துகொள்ளா  

உணர்வுகள் போல்

வெறுப்புகளும் வலிகளும் 

தத்தெடுத்த குழந்தையை போல் 

உறவுகள் இருந்தும்

அனாதையாய் கிடக்கின்றது

தனியாய்

உரிமையற்று மடிந்த  உடலை

பார்த்து தவிக்கும் உயிர்போல்

இவளும் இவள் கனவுகளும் என்றுமே

தனியாகவே  கூடு விட்டுபறக்கும்வரை

வாழும்!!!



Monday 18 March 2024

விழி கண்டு மொழி பேசும் சாரல்

 ஒருநாள் ஒருபொழுது 

எனக்க விடியுமா விடியல்

விடியலில் ஆதவன் ஒரு தேனீர்

தந்தென்னை  அதிகாலையெலுப்பிட

மண்ணிற்கு வருவானா!!

பெண்ணவள் கேட்டாள் பேயும்

இறங்குமாமே ஆதலால் 

ஒருகற்ப்பனை வரம் கேட்க்கிறேன்

ஆதவனே

பெண்ணிற்கு கிடைப்பதெல்லாம்

கற்பனைகள் தோற்றுவிடும்

கதைக்களமானதால் 

குந்திதேவிபோல் வரம் கேட்கவில்லை

ஆதவா!!!

 தோற்றுக்கொண்டே இருக்கின்றேன்

தோல்விகள் வெற்றியடையும் வரை

காத்துக்கொண்டே இருக்கிறேன்

காலங்கள் பேசும் வரை

நினைத்துக்கொண்டே இருபேன்

நினைத்தது கிடைக்கும் வரை

Sunday 17 March 2024

விழி கண்டு மொழி பேசும் சாரல்

 இதுவரை யாரையும்

 ஜெயித்திடத்தோன்றவில்லை

ஜெயிப்பவர்களுக்கு  பக்கத்தில்

ஒரு அணிலைப்போல் தான் நின்றேன்

முதல்முறை போட்டியுலகத்தை 

பார்க்கிறேன் 

போட்டிபோடும் மனிதனுக்குள்

ஒரு புள்ளிமானைப்போல் நிக்கின்றேன்

ஓடவும் தோணாமல் 

போடிபோடவும் தோணாமல் 

இது வேடிக்கையாகவே இருக்கு இறைவா

உன்வழி நானாக என்வழி நீயாக

நடுவில் ஒரு ஆரம்பம்!!!என் தொடக்கமும்

முடிவும் உன்னிடம்!!!


Thursday 14 March 2024

குட்டிக்குட்டிச் சாரல்

 எதிர்காலம் தொலைவாய்

தொலைந்த  இருளோடு ஒரு

யுத்தம் செய்ய ஒரு நிலவு 

விழித்திருக்குமென  கொஞ்மும்

நினைக்கவில்லை   விழித்திருந்தும்

காத்திருக்கும் மொழிகள் தொலைத்ததேன்

நிலவே  மண்ணீல் நீயும்

என்னைப்போல்  வெள்ளையடை 

சிறையெடுக்க மௌனங்களோடு 

யுத்தம் செய்கின்றாயா

சொன்னாலும் புரிந்திடா இதயங்களோடு

பேசிபயனில்லையென என்னைபோல் நீயும்

ஊமையாகாதே!!!


குட்டிக்குட்டிச் சாரல்

என்னைச்சுற்றி விதியாடும்

ஆட்டம் புரியவிலை தான்

ஆனால் எனக்காக மண்ணில்

எதையும் விட்டவில்லையென

மட்டும் புரிகின்றது।

 ஒவ்வெரு தோல்விகளும்

சொல்லும்படம் இதுவாக இருக்க

நான் காரணமேயின்றி நடகின்றேனோ

காலமே பதில்லெழுத்தட்டும்!!

Sunday 10 March 2024

குட்டிக்குட்டிச் சாரல்

 அழகியகார்கூந்தல் 

இழந்தவாசத்தால் 

முழுமதியவள் வடித்த கண்ணீரில்

முகமது இழந்த அழகை அவன் இறந்தும்

பேசிய  இதயத்தின் மொழியழகால்

அவள் கார்கூந்தல் மல்லிகை வசத்தை

சூடிக்கொண்டது!!



குட்டிக்குட்டிச் சாரல்

 தூக்கத்தை  வேலைச்சுமை

கொடுக்க  விழிகள் தொலைத்ததை

தேடாமல் உறங்கி விடுகின்றது

Saturday 9 March 2024

குட்டிக்குட்டிச் சாரல்

 நேசங்கள் உண்மையா 

எனத்தெரியவில்லை ஆனால்

நேசிக்கப்பட்டால்

எந்த தடையையும்

உடைத்தெறிந்து காத்திடும் என ஒரு

கற்பனை இதயமென்று கண்டேன்

கற்பனையாளர்கள் மாறினால்

அழகான உலகம் நியமகாலம்

இதை கற்பனையாளார்கள்

புரிவார்களா

காமத்தின் தேடல்களில் தொலைந்தவர்களை

கொஞ்சம் நியத்தையும் சிந்திக்க

வைக்கலாமே!!!கற்பனையுலகமே!!

குட்டிக்குட்டிச் சாரல்

கடவுள் தந்து 

கடவுளே பறித்ததை 

கடவுளாகவே

ஒரு இதயம் கொடுக்குமெனில்

இழந்தவளுக்கு கிடக்கும்

 மதிப்பு எந்த வைரம் 

போட்டாலும்கிடைக்காது

இதுதெரிந்தும் அறியா

மனிதன் அழகான வாழ்கையை  

இருட்டுக்குள் தேடுகின்றான் !!!

இதைகற்பனைகள் கூட

 கற்பனை பண்ணா கற்பனையானதால் 

நியங்கள் மிருகவாழ்க்கை

தேடியாழைகின்றது !!

Friday 8 March 2024

குட்டிக்குட்டிச் சாரல்

 அச்சம்கொண்டபெண்மை

மிச்சமீதிவாழ்கைதேடி கால்களுக்கு

விலங்கை பூட்டுகின்றது !!

பாதம்  பரத்தும்  உயிர் 

போகும்மென்ற போதைகொண்ட 

உலமாவதால்!! பிறப்பிற்கும்

இறப்பிற்கும் அர்த்தம்மில்ல

வாழ்கையே பெண்ணை

தேடிப்பெற்றுக்கொண்டதால்

குட்டிக்குட்டிச் சாரல்

 ஒற்றை கனவோடு சிலையானவள்

கொட்டும் மழையில் நனைத்தும்

ஆசைகள் தோற்றும அசையாது

நிக்கின்றாள்  தடாகம் தாங்கிய தாமரைபோல்

குட்டிக்குட்டிச் சாரல்

  உறவுகள் நம் உதிரம்

கலந்தோடும் உணர்வு போன்றது

மூச்சுக்காற்று உள்ளவரை இதியத்திற்குள்

துடிப்பதை   தடுத்திடமுடியது


Thursday 7 March 2024

குட்டிக்குட்டிச் சாரல்

 காமத்தை வென்ற ஆண்மை

தமையை பெற்றேடுக்கின்றது

தாய்மையை பெற்றேடுத்த ஆண்மை

பெண்மையை  காக்கின்றது !!!

பெண்மைக்கு கொடுத்த வரம் இங்கே

பெண்மையே அழிக்கும் சாவமாய்

பெண்மை பெற்ற வரமாகின்றது!!!

Tuesday 5 March 2024

குட்டிக்குட்டிச் சாரல்

 கைகள் இல்லா கைபிடித்து

தோளில்லா தோள்சாய்ந்து

நிஜமில்லா நிழலோடு கதைபேசிட

பொய்யான இருள் தேடுது என்னை

கனவுலகத்தனிமைக்குள் வாழ்ந்திட

வாவென்!!


குட்டிக்குட்டிச் சாரல்

 கிடைக்காது என 

விட்டுபோன  ஒன்று 

கையில் கிடைக்கும் போது

கிடைக்கும்  மகிழ்ச்சிக்கு 

இணையான ஒன்றை 

ஏதைக்கொடுத்தும் அடையமுடியாது।!!


Sunday 3 March 2024

குட்டிக்குட்டிச் சாரல்

எழுதிமுடித்த புத்தம் 

விமர்சனங்களை கடந்து

விடையை  தேடுது அவர் அவர்

கற்பனைக்குள்!!

விழி கண்டு மொழி பேசும் சாரல்

 யாரே ஒருவன்  தொலைத்து

தேடும் கனவை 

யாரோ ஒருவன் தூக்கி செல்ல

யாரோ ஒருவன் தூக்கிப்போட்ட 

ஆசையை  யாரோ ஒருவன் 

கையில் ஏந்தி செல்ல

யாரோ ஒருவனைப்போல் ஒருவனாய்

ஒவ்வொருவர் வாழ்க்கையும்

தவிகின்றது  கரணமேயின்றி

தேடும் காரணம்  தேடியும் கிடைக்கா

ஒருவன் போல் கையில் வைத்தே

தேடும் ஒருவனாய்

தனியாய் த்விக்கு காரணமேயின்றி

யாரோ ஒருவன் நானென நினைக்கா

ஒருவனாய் வாடுவாழ்க்கை!!!





குட்டிக்குட்டிச் சாரல்

 மண்ணில் வாழ்ந்தபோது

தமிழால் அயல் வீட்டோடு சண்டை

இழந்தே நாடுநாடாய் வந்தும் 

தமிழால் நாட்டுக்கு நாடு

 சண்டை 

இங்கே இழந்தும் திருந்தாத ஒரு

மனிதம் நாமே !!!


Saturday 2 March 2024

குட்டிக்குட்டிச் சாரல்

இருக்கும் இததிற்கே 

புரியக்கதால்

இறந்து வாழும் இதயம் 

புரிந்து

இழந்த பெண்ணை வாழவைத்திட

துடிப்பதே காதலென்றால்  விசித்திரம்

தான்  கற்பனைவாழும் காதலும்!!!