Saturday 26 October 2013

மின்மினி..........


புன்னகைப்பூவென்று
பூத்திட்ட நாளின்று
கண்ணைகட்டிவிட்டு
கணலாய் மறைத்திட்டநாளின்று
தேடிஅழைத்திட்ட இதயமென்று
திரும்பி பார்க்கும் நாளின்று
பாசம்கொண்டு பாசம் தொலைத்து
ஏக்கம் கொண்ட நாளின்று
இருந்தும் இல்லையென்னும்
வெறுமையான நாளின்று
காத்துத் காத்துத்
என்னைத்தொலைத்தநாளின்று
எல்லாம் அறிந்தாலும்
அறிவு பேசா நாளின்று
மனசின் உணர்விற்குள்
பட்டாம்பூச்சி சிறகானநாளின்று
விடை தேடி விடை தேடி தேல்வி
கண்ட நாளின்று..................

குட்டிக்குட்டிச் சாரல்......,

நான்  எரித்த
என் நாட்களை
நீ எப்படி தேடுவாய்!!

உன்னாலே  வந்து
உன்னாலே அழிந்த
என் சந்தோஷத்தை போல்
இதையும் எண்ணித்தேடாதே !!

 நீ மறந்து நீ மறைத்து
  நீ  விளையாட
 பொம்மையல்லபெண்மை!!!

Thursday 24 October 2013

குட்டிக்குட்டிச்சாரல்......,

காதல் பொக்கிஷத்தை
காப்பாற்றிடத்தெரிந்தவனே
 வாழ்கைப் பொக்கிஷத்தை
அழகாய் திறக்கின்றன்!!

காதல் பொக்கிஷத்தை
தொலைத்தவன்
வாழ்வைக்கை பொக்கிஷம்
சுமையென பிதட்டுகின்றான்!

பருவங்கள் சொல்லும்
உணர்ச்சியால்யெழுவது காதல் அல்ல!!1



குட்டிக்குட்டிச்சாரல்......,


உன்
அன்னையை  நீ
                                                                  உண்மையாய்
நேசிப்பாய்  என்றால்
உன்
அன்னை போன்ற
 பெண்ணின் கண்ணீருக்கு
காரணமாய் இருக்கமாட்டாய்

Wednesday 23 October 2013

குட்டிக்குட்டிச் சாரல்......,

துயரப்புதைகுழிக்குள்
விழுந்திட்ட என்மீது
பாறாங்கல்லை போட்டு
உயிரோடு கொன்றுவிட்டாய்!!
 நான் அன்பை நேசித்தால்
இறந்தும் யாசக்கின்றேன்
உன்னை !!
கரைசேர்ப்பாய் என்பால் அல்ல
கருணைகொண்டமனம் வலிகண்டும்
உன்னையோ யோசிப்பதால்

தமிழ்........

இனிமைக்கு பொருளானது
இயற்கைக்கு எழிலானது
மண்ணுக்கு உயிரானது
வறுமைக்கு உழைப்பானது
தாழ்வுக்கு உயர்வானது
பெண்ணிற்கு காப்பானது
பண்புக்குசிறப்பானது
பண்பாட்டுக்கு அழகானது
பண்ணுக்கு சுருதியானது
மொழிகளுக்குள் சிறப்பானது
                                          சிறப்பானது
சிதையாதது கருவியானது
கருத்தானது  மனிதனுக்கு மொழியாது
தோப்பானது செழிப்பானது
ஏடானது எழுத்தானது இருந்தும்
சிறந்திட முடியாது தவிக்குது
தலைசாய்க்குது தடையாகுது
இயல்பிழக்குது வாய்பேச்சில்
வீரமாகுது வையத்திடம்
வழிவு தேடுது....
                               வழிதேடு வழிந்தோடு
தலைநிமிர்த்திடவோ போராடுது
எட்டிபார்ப்பவனுக்கும்
இனிமை சுவைகொடுக்குது
எட்டியே  உதைப்பவனுக்கும்
  எடுத்து உணவுகொடுக்குது
எண்ணிலா பல்சுவைகொடுக்குது
அன்னியரும் பயின்றிடவோ
விருச்சமாய் நிக்குது............

Tuesday 22 October 2013

மோதியுடைந்தன கனவு......

 என் நினைவுகளில் என்னை நீ
 துரத்துகின்றாய்
என் நியங்களில் என்னை நீ
விரட்டுகின்றாய்
என் கனவுகளில் என்னோடு நீ
கனிவாய்பேசுகின்றாய்
என்னைக் கண்டவுடன் நீ
 திரும்பிபோகின்றாய்
என் பொய்களில் நீ
அழகாய்சிரிக்கின்றாய்
என்னோடு உண்மையில்
நீ கோவமாய் பார்க்கின்றாய்
நான் உறங்கியபின் நீ
தாலாட்டு பாடுகின்றாய்
நான் விழித்திருக்க நீ
திட்டிஓடுகின்றாய்
எதை எதையோதேடுகின்றாய்
என் எண்ணங்களை நீ
ஒழித்து விளையாடுகின்றாய்
 நான் இல்லையென்றால் நீ
அன்பாய் இருக்கின்றாய்
நான் அருகே வந்து விட்டால் நீ
ஏனே வெறுப்பாய் தோன்றுகின்றாய்
என்னை நீ நேசிப்பதாய் எண்ணியது
தப்பேயென உணர்கின்றேன் இப்போது!!!
காலம் கடந்தாலும் கனிந்தமனம்
கனிந்ததவோ!!!!!!

Monday 21 October 2013

குட்டிக்குட்டிச் சாரல்......,

எழுதுகோலில் உள்ள மை
எழுதி முடியும்வரை
எழுந்து பேசு எழுத்தாணி
கூராயாய்

                                                                    பெண்ணியம்!!

சரிநிகர்..............


ஆண்மைக்கு பெண்மையின்
தேவை சிலநிமிடம்
ஆயுளுக்கும் சித்திரவதை
அதுவோ அவளுக்கு
தேவையற்ற  சிந்தனைகளை
தேடிசொல்பவர்கள்
தேடிப்பலகதை  தேவையற்று
படித்தாலும் தேடிசொல்வதெல்லாம்
பெண்ணே நீ தேவையற்ற ஆயுதம்!!!
காவிதரித்தாலும் காடசென்றாலும்
ஆவியோ பிரிந்தாலும்
அருகிலோ ஆறுதலாய் நாலுவார்தைக்காய்
தேடிபார்பாதுவும்
தேவையற்ற பெண்ணிவளோ
கூடி கூத்தாடி கும்மிகொட்டி
ஆடிப்பாடி முடித்து சொல்வதெல்லாம்
பெண்ணே நீ தேவையற்றவள்!!

குட்டிக்குட்டிச்சாரல்......,


நீ பெண்ணாய் இந்த
மண்ணில் ஏன் பிறந்தாய்!!


நீ மண்ணாய் இருந்திருந்தால்
 சண்டையிட்டு காத்திருப்பார் உன்னை!!

நீ  கல்லாய் இருந்திருந்தால்
சாமியென்று கையெதெழுதிருப்பார் உன்னை!!

நீ பெண்ணாய் பிறந்து விட்டாயே
இந்த மண்ணில்!!!உன்னை
பெண்ணே காத்திடுவாரோ  மண்ணில்!!

ஆரம்பம்,,,,,,,,,,,,,,,,,,..

மலையாய் எழுந்த சோகத்தில்
மழையாய் வந்தகண்ணீர் துளியில்
விதையாய் விழுந்த கரு
தளிராய் பற்றியது கரம்!

உளியாய் எழுந்து ஓவியமாய்
செதுக்கி தனியாய் நின்று
புயலாய் களைந்தது சிக்களை!!

பசியும் சொல்லாது பருவமும் மாறாது
 துணிவாய்  நடந்து தோழனாய் சிவந்து
தாய் காத்தது  முள்ளாய் மாறி!!

தனயனாய் தோல்கொடுத்து
தவிப்புகள் மறைத்து  தனியோ வலிபொறுத்து
தாயுக்கு கொடுத்தது வருடங்களாய்
தொலைந்த சந்தேசத்தின் முதல் புன்னகை!!

Saturday 12 October 2013

அன்னையானவளோ

மண்ணில் பெண்ணாய் பிறந்திடும்
பாக்கியத்தை மண்ணிற்கே
சொன்னவளோ!!
சொர்க்கமும் நரகமும்
தனக்குள் உண்டெனெ பெண்ணிற்கு
புரிந்திட செய்தவளோ!!
இன்பத்தையும் துன்னத்தையும்
சமமாய் காட்டியவளோ!!
அன்னையாய் அன்னைக்கு
தந்துவம் கொடுத்தவளோ!!
அரக்கரையும் அதிகாரம்
செய்ய கற்றுகொடுத்தவளோ!!
அவதரஆண்மைக்கும்
அரியணைகாத்திட உறுதியாய்
பொண்ணை மாற்றியவளோ!!
உண்டென ஆயிரம்
நம்மைகள் செய்தோரையும் இல்லையென  ஆயிரம்
தீமைகள் செய்வோரையும்
இல்லையென்ற உறவிற்க்குள்
இருக்கு என்ற உறவால் உயிரில் 
மாயம் செய்தவளே!!
அன்பால்  
அன்பையாளக்கற்றுக்கொடுத்தவளே
கருணையான மனதினை
பெண்ணாய் வடித்தவளோ
துஸ்ரரையும் காத்திடும்
வழியை காட்டியவளோ
பாவிக்கும் அடைக்கலம்
கொடுப்பவளோ உன்னால்
என்னால் வாழும் வாழ்வை
மண்ணில் தொலைதவர் கோடியாகி
போனதம்மா ஏன்........

Monday 7 October 2013

குட்டிக்குட்டிச்சாரல்......,

வேதனைகளை  பரிசாய்
தந்தாய் புன்னகைதந்து
ஏற்றுகொண்டேன் மீண்டும்
மீண்டும் வேதனைகளோ
சுமக்க சொல்கின்றாயோ
ஏன்
என்னை சுமைதாங்கியாய்
படைத்தாலா

Saturday 5 October 2013

பிறப்பேயன்று.................

இறைவா
என்னை திட்டியவரை
உன்னிடம் தந்துவிட்டேன்
என்னை ஏமாற்றியவரை
உன்னிடம் தந்துவிட்டேன்
என்னை சந்தேகபட்டவரை
உன்னிடம் தந்துவிட்டேன்
என் நட்பால் காரியம் பெற்று மறத்தவரை
உன்னிடம் தந்து விட்டேன்
என் கண்ணீரை ரசிப்பவரை
உன்னிடம் தந்துவிட்டேன்
என்னை அசிங்கமென்றவரை
உன்னிடம் தந்துவிட்டேன்
எனக்காக செய்ததாய் செல்லி
எதையும் செய்தவரையும்
உன்னிடம் தந்துவிட்டேன்
என்னை கண்டு புன்னகைத்து
புறம் பேசுபவரையும்
உன்னிடம் தந்து விட்டேன்
என்னை என் இதயசுவருக்குல்
ஆணியால்அடித்தவரை
உன்னிடம் தந்து விட்டேன்
என்னை எதிரியாய் எண்ணி
என்னையே பலிவாங்கியவரை
உன்னிடம் தந்து விட்டேன்
என்னைஅன்பால் ஏமாழியாக்கியவரை
உன்னிடம் தந்து விட்டேன்
இந்தனை மனிதரை தந்தால்
உன்னைவிட்டு நான் சென்றேன்
அவர்களை நீகாக்கவோ!!ஆனால்
நீயோ எதையோ எனக்கு சொல்ல
என்னை தேடித்தேடிவருகின்றாய்
இப்போது!!! மனிதனையும் புரியவில்லை
உன்னையும் புரியவில்லை


Thursday 3 October 2013

குட்டிக்குட்டிச்சாரல்......,

ஊமைகில்லா  மொழியில்
வார்த்தை சொல்வது
சங்கீதம்
 அலைக்கில்லாமொழியில்
 ஓசை சொல்வது
சங்கீதம்
அறுவிக்கில்லா பாதையில்
சத்தம் சொல்வது
சங்கீதம்
பறவைக்கில்லா பாசையில்
சிறகு சொல்வது
 சங்கீதம்
என்னோடு உனகில்லா
உணர்வில் கண்ணீர்
சொல்வதும்
சங்கீதம்

நீ உணர்வா இல்லை மயக்கமா !!!

காதலே நீ
எங்கே  இருக்கின்றாய்!!
எதை!!
 இந்த மனிதன் காதலெங்கின்றான்
புரியாத உள்ளம் ஒன்று
தெரியாது தேட!!
அழகான உருவம் கண்டு
கண்கள் தொடுப்பது காதல்!!
தெரியா உள்ளதை அறியாத
உருவங்கள் மாற்றுவதுகாதல்!!
புரியாத மொழியிலும் மொளனமாய்
தேன்றுவது காதல்
அப்பாவி உருவத்திற்கும்
அடிதடி உருவத்திற்கும்
நம்பிக்கை கொடுப்பது காதல்!!
அப்ப வழிமாறி தடமாறி
 வருவது என்னவென்றேன்!!
அதுகும் காதலென்றனர்
இதுவென்ன குழப்பம் காதல்
உண்மையா பொய்ய  என வந்தது
சிந்தனை வழியோரம்
வழிமாற ஞானி
சிரியாது கூறினார்
காமத்தை வென்றிடமனிதன்
உணர்விற்கு கொடுத்தமொழி
காதல் இதை  காதலென்று
எண்ணாதே !!தொடங்காது முடியாது
அழியாது காதல் மண்ணுக்கும்
விண்ணுக்கும் சொந்தம் பெண்ணே
ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில்
சேராது தவிக்கு  ஒர் நேசம்
இந்த  உணர்வுக்குள் தோற்குதம்மா
கலியுலகம்!!!!