Wednesday 31 August 2022

விழி கண்டு மொழி பேசும் சாரல்....................

 கனவின் கனவிற்குள்

கற்சிலையென்றை கண்டேன்

கையேடு  கையெடுத்து 

கனவிற்குள் நடந்தேன்

அழகான பெண்வடிவம் 

 மூடியவிழியின்திரையானது  

என்னைப்போல்

கனவிற்குள் ஒரு கற்பனை 



என்கற்பனையை  தடைபோட்டது!!

ஒரு குரல் காற்றைகிழித்தே

என் நடையை

தடைபோட  மெல்ல

திரும்பினேன்

குரல் வந்த திசைகேட்டு !

வேல்விழியின் வால்வீச்சே

திசைதொட்ட ஒளிவீச்சே

உன்மொழிகாற்றின் வில்பட்டு

என் இதயம் விழுந்ததடி கால்லடியில்!!!

என்ற கவி கேட்டு

கற்சிலை போல் நானேயானேன்

சிலைவடித்து கவிவடித்தவன்

குரல் கேட்டு !!!இருள் தனை 

கிழித்தெடுத்தவன்  உருவம் தேட

கனவினை உடைத்தே  விழிகள் திறந்தது

பாராமல்!!!

விழி கண்டு மொழி பேசும் சாரல்....................

 ஆழகான உறவின் அழகிய

அன்பினால் அழகான

சதருங்களை தரமுடியும்

ஆனால் 



அழகிய உறவுகள் தான் 

இங்கே  எங்கேயென 

தெரியமால்ஏமாற்றம் 

அடைகின்றோம்

சின்ன வயதின் 

கற்பனைகள்  மாறலாம்

ஆனால் 

வயதான காலத்தின்

 ஏமாற்றங்கள்மாறாதே 

எப்பவும்

மனிதனும் இயந்திரமும் 

பழுதடையும்வரைதான் 

தேவைப்படும் தேடல்கள்!!!


Monday 29 August 2022

குட்டிக்குட்டிச் சாரல்

 என்னில் நின்ற எல்லாம்

தொலைத்து  இல்லா உயிராய்

இருந்தும் கடந்த காலம் பெரிதே

ஆனாலும் கற்றுதந்த மனிதன்  கூட

நடந்தே கடந்ததால் கடந்த வழியில்

வலிகள் மறைந்த மதியாய் தேய்ந்தும்

வாழுது வாழ்க்கை!!!

Friday 26 August 2022

குட்டிக்குட்டிச் சாரல்

 என் சுவடுகளின் கண்ணீர்துளியை

கடல் அலைகள் அள்ளிச்செல்வதால்

என் பாத்த்தின் சுவடுகள் தடமின்றி போனது!!



Wednesday 24 August 2022

குட்டிக்குட்டிச் சாரல்

 உதிர்த்த பூவிடம்

இதயம் தேடும் கனவு

இறந்த மலரிடம்

உயிரை தேடும் கற்பனை

அழித்த உயிரிடம்

 ஆசையை கேட்க்கும் பாசம்

இருந்தால் செலவு இறந்தால்

வரவு இதுதான் உயிரின் உறவு!!!

குட்டிக்குட்டிச் சாரல்

 பெண்மை தேற்ற  மென்மை

வன்மை கொண்ட தாய்மை

வழிகள் இல்ல வாழ்க்கை

தடைகள் போடும் மனிதம்

கரைகள் தொடா கற்பனை

அறிவு சொல்லா பாசம்

அறியாமை செய்யும் அழங்காரம்

இருப்பதை மறந்து

இல்லாத ஓன்றை

தேடும் வாழ்க்கை பயணம்!!!


குட்டிக்குட்டிச் சாரல்

 இல்லையென்ற ஓன்றைவைத்து

இருப்பதாய் சொல்லி 

இயல்வாய் நடித்து  இயன்றவரை

போராடும் வாழ்விற்குள்  

உள்ளம் ஏனோ நியத்தை

மட்டுமே தேடுகின்றது 

வறுமையென்ற கோட்டில் 

வாழ்க்கையென்ற  நியம்!

எட்டிபார்க்கும் அயல்வீட்டின்

வாசணைகளின் ஏக்கமாய்

மாறுவதும்

 இயல்பான. நிமிடங்களே!!!

Tuesday 23 August 2022

குட்டிக்குட்டிச் சாரல்

 ஓய்விற்காய் ஏங்குது மனம்

இல்லையென்றது காலம்

சோர்வாய் வாடுது உடல்

சோகமாய் விழிக்கு காலை

இயந்திரமாய் தேற்றது இதயம்

இயலாமல் தள்ளாடுது முதுமை

பொறுமைக்கு கிடைத்தது  தனிமை

போதுமடா என்றது உயிர்


குட்டிக்குட்டிச் சாரல்

 என் சந்தோஷங்கள் 

என்னிடம்இல்லையென  

என் ஏமாற்றங்கள்சொல்லியது  

என் நம்பிக்கை

என்னிடம் இல்லையென 

 என்தோல்விகள் சொல்லியது 

என்னை புரிந்திட 

யாரும் இல்லையென

என்  கண்ணீர்துளி என்னிடம்

சொல்லியது!!!

Monday 22 August 2022

விழி கண்டு மொழி பேசும் சாரல்....................

 பிரிவின் கதையில் பல

விம்பங்கள் உடைந்தது தானாய்

மெளனத்தின் மொழியில் பல

உறவுகள் பிரிந்தது தானாய்

உளியின் வலியில் என்னைக்

கடந்தேன் நானாய்

மொழியின் அழகில் 

உயிரையிழந்தது வாழ்கை

!!!விதியின் கதையில்

கசந்தே போனது நிழலும்

முடியும் வரையில்முயன்றே  

தேற்கின்றது நாட்கள்  

இருந்தும் வாழ்க்கை 

இல்லாதே  போனது  கதையில்!!!



குட்டிக்குட்டிச் சாரல்

 நான்கற்பனைகளை 

கடந்திட ஓரு 

கற்சிலை நின்றது

 முன்னே

கண்நீரை கடந்திட 

பல கற்பனைகள் 

தேற்றது பின்னே!!!நான்

மனிதனை கடந்திட 

பவ மிருகங்கள்

நின்றது முன்னே  நான்

மிருகங்களையே

கடந்திட பல காயங்கள்  

வந்தது பின்னே!!!

குட்டிக்குட்டிச் சாரல்

 முற்கள் சிந்தித்தால் வலிகளை

சந்திக்க கால்  துணியும்

இதயம் சிந்தித்தால்  வாழ்க்கை

யுத்தம் செய்ய துணியும்!!


Sunday 21 August 2022

குட்டிக்குட்டிச் சாரல்

 தொலைக்கபட்ட 

ஒரு கதைபுத்தகதை

விடாமல்படிக்கின்றது

இரு விழிகள் 

குட்டிக்குட்டிச் சாரல்

 நினைவுகளை அழித்திட 

நினைத்தால்

நினைவுகளே ஈட்டியாய் 

பாய்கின்றது என்னில் 

தப்பிக்க முடியா

 தண்டனைகளை விட 

தப்புகள் இல்ல

நினைவுகள் பரவாயில்லை

வாழ்வில்!!!

Tuesday 16 August 2022

குட்டிக்குட்டிச் சாரல்

 நமக்கே தெரிய  சில விசித்திரங்களை

சந்திக்கும் போதுதான் இந்த

இடம் நமக்கானதில்லை என்பதை

அறிந்து விலகுகின்றோம் 

Friday 12 August 2022

குட்டிக்குட்டிச் சாரல்

 ஓவ்வொரு தாள் விடியலிலும்

மனசு ஏங்கின்றது நாளைய

ஒய்வை  தேடி  உழைப்பும்

சலிப்பும் சேர 

இறைவனும் கற்பனையாய் தேற்க

வாழ்க்கையும் வெறுப்பாய் மாற

இன்னும் என்ன என்ற நாளையாகின்றது


குட்டிக்குட்டிச் சாரல்

 இயலாத சுமைகளை சுமக்கும்

ஓவ்வொரு இதயமும்  முதுமையில்

தேடும் நின்மதியை எந்த சுமையும்

திருப்பி கொடுப்பதில்லை ஆனாலும்

சுமக்கின்றது தன்னையும் சுமந்திட

ஒரு இதயம் இருக்கும் என்ற நம்மிக்கையில்!!!

குட்டிக்குட்டிச் சாரல்

 ஆண் உலகத்தின் தேடல்

போதையென்பதால் 

உயிரை மறந்த உடல்களே

அதிகம் நேசிக்கபடுகின்றது

இங்கே வேலிகளும்  

பாதுகாபற்றவையென்பதால்

பெண்ணின் உடல்களே  பேசுபொருள்

கற்பனையாகின்றது!!!




குட்டிக்குட்டிச் சாரல்

 நம்மை எப்படி மாற்றினாலும்

நம்மால் மாற்ற முடியாமல்

தொலைப்பது நாம் மனிதனாய்

பிறந்த பிறப்பை மட்டுமே 

தொலைத்துட்டு தேடியழையும் போது

சரிசெய்ய முடியாமல்  தவிப்பதும் 

இப் பிறப்பால் தான்

குட்டிக்குட்டிச் சாரல்

 விழும்போது தாங்கி பிடிக்க

கைகள் இருந்தால்  எழும்போது

வலிகள் தெரியாமல்நினைவு சொல்லும்

அன்பின் ஆழத்தை!!!

Thursday 11 August 2022

குட்டிக்குட்டிச் சாரல்

 இல்லங்களை கோயில்  என்றான்

தமிழன்  இப்பே தெய்வங்களே

அழுகின்றது  கோயில்களை பார்த்து

இல்லங்களிலும் இல்லை அன்பு

என்பதால்தெய்வங்களும்

ஆசிரமங்களில்  தேடியமர்கின்றது  !!


 

Tuesday 9 August 2022

குட்டிக்குட்டிச் சாரல்

 என்னில்  பிறந்த

கற்பனையை

என்னுள் வடித்தெடுத்தே  

வரைவதால்

என்னை  கற்பனைக்குள் 

தேடும் கண்கள்

தொலைத்திடுது உண்மையை!!!

குட்டிக்குட்டிச் சாரல்

 சிலநெடி நம் துன்பம்

யாரையே தேடுது நமக்காய்

சிலநெடி நம் துன்பம் யாருமற்ற

தனிமையை தேடுது  நம்மால்

வந்த துன்பம் தனிமையை தேட

இறைவனால் எழுதிய துன்பம்

ஆறுதல் தேடு!!!

குட்டிக்குட்டிச் சாரல்

 தவறுகளை மன்னித்து வாழ்லென

பெண்மைக்கு சொல்லும் மனிதம்

ஆண்மைக்கு பெண்மையை

தண்டிக்கசொல்லிக்கொடுக்கிண்றது

ஆண்மையுலகத்தின் கண்ணாடிமட்டும்

இன்னும் இருட்டாய்  இருப்பதே ஆச்சரியம்

ஆண்மையை ஞாயபடுத்தும் மனிதம்

பெண்மைக்கு மட்டும் ஞாயத்தை தேடாமலே

அழிக்கின்றது!!!!இன்னும்

இவ்வுலகம் மனிதன்மையற்ற

ஆண்மையுலகாமா?

Monday 8 August 2022

விழி கண்டு மொழி பேசும் சாரல்....................

 சின்ன ஆசை சிங்காராசை

என்னை தள்ளி  வைத்து

புன்னகைக்கும்பூவே

உன் மீது ஆசை  

ஆசை ஆசையாய் 

அள்ளிசூட ஆசைகொண்ட 

ஆசைக்கு  இல்லைபோவென 

ஆசையை  எரித்த பூவே

உன்னை  தொட்டெடுத்து 

கூத்தல் சோர்க ஆசையில்லை

போ!! மங்கையவள் வாசம் 

கொண்ட  மல்லிகைப்பூவே

நீ வேண்டாம்  எனக்கு

உன்னைக்கட்டி

தலையில் சூடும் ஆசையில்லை

வேண்டாம்பே

நீ

என்னைத்தெட்டு தலையில்

வாட

என்னைபோல் வேண்டாம்போ

நான்

கட்டிமாலையாக்கி

கழுத்தை அழகு பார்க்க 

ஆசையில்லை என்றாலும்

வண்ணம்கொண்டரோஜாவே  

உன்னை விடவும் 

ஆசையில்லையெனக்கு

வாசம் தோற்றபெண்ணிவள் தான்

உன் வாசத்தோடு  எறிந்தே போக

சின்ன ஆசை உன்மீது  எனக்கு

மங்கையவர்அழகில் 

மங்களத்தை கொடுத்து

அமங்கலம் தேற்றிவித்த 

கதைதேடவில்லை

உடலுக்கு கொடுக்கும் அலங்காரம்

மனசுகிடைக்கா பிறப்பென

எனக்கும்தெரியும் 

ஆனாலும் ஆசை உன்  மீது

என் உடல்மூடும் ஆடையாய்

என் தீ தாங்கும் குளிர்ச்சியாய

என்சாம்பலேடு 

ஒன்றாய் கலந்தே கடலில்

கலக்க!!!


விழி கண்டு மொழி பேசும் சாரல்....................

 இலக்குகள் இல்லை  

சாதித்துடவுமில்லை

சாதிக்கநினைத்ததுமில்லை

என் பயணத்தில் பிடித்ததை 

எனக்காக செய்தே நடக்கின்றேன்

இங்கே  கொஞ்சம் கிறுக்கள்  

கொஞ்சும்தமிழேடு  

அச்சமான பிறப்பை

கொஞ்சம் மறக்க 

கொஞ்சம் கற்பனை

 எப்படி தேற்றலும்

சட்டென தூக்கும் 

இசையின் கையில்

விழியின்  தூக்கம் 

 மனதின் தூக்கம்

மறந்தே போச்சு 

முதுமையின் பாதம்

வலியால் ஏங்க 

இருக்கும் நிமிடம்

மௌனத்தை  போதுமென்றது!!!

குட்டிக்குட்டிச் சாரல்

 இறைவியும் இறைவனும்

மறந்த  இலக்கணபிழையிவள்

இலக்கியம் தேற்ற விதியாள்

எழுத்தினை கோர்த்த மரணத்தால்

வாழ்கின்றாள்

Friday 5 August 2022

குட்டிக்குட்டிச் சாரல்

 நம்பிக்கையில் தேற்கவுமில்லை

யாரையும் நம்மி மேற்கவுமில்லை

நான் நம்பிட  யாரும் என்னைபோல்

இல்லை எனக்கு!!

என்னை தந்தெடுத்த காலம் 

எனக்காய் வடிவமைத்த பாதை

கொஞ்சம் இருளின் அச்சத்தை  பல

இதயத்தில் காட்டியதால்  சற்றே 

புதைத்துவிட்டேன் காலத்திற்குள்

பாலைவனப்பயணமானதால்

வறட்ச்சியானது நாட்கள்!!!

குட்டிக்குட்டிச் சாரல்

 பெய்களற்ற  பாதையில்

குத்திய  கற்பனை முற்களே

என்னை தொலைத்து தேடியழைகின்றது

நியமாய்  மரணம் தந்தெடுத்த 

நிழலில்  கண்ணீர்த்துளியின்

பொக்கிஷம் நான்!!!




குட்டிக்குட்டிச் சாரல்

 என்னை என்னால்

மாற்றமுடியா தோல்வியே

மற்றவர்  எனக்காய் தந்த

கற்பனை!!!

குட்டிக்குட்டிச் சாரல்

 வெறுப்பும்  சலிப்பும்

நம்மை சோர்வடைய செய்ய

மற்றவர் முன் தூரமாகின்றோம் நாம்

நம்மை புரியமால் விலகியே போகின்றது

அக்கரையும் பாசமும்!!!

Thursday 4 August 2022

குட்டிக்குட்டிச் சாரல்

 நம் பயணங்களில் கற்றவை

நம்மை  பக்குவப்படுதுமெனில்

நாம் ஓரு அழகிய குடும்பத்தையாவது

உருவாக்கியிருப்போம்  நாம்

கற்பதுமில்லை  

தவறுகளை  கண்டு அஞ்சுவதுமில்ல

உண்மையில் நாமே பெரிய குற்றவாழி!!!

குட்டிக்குட்டிச் சாரல்

 எந்தனை முறை 

எத்தனை விதமாக

சொன்னாலும் அந்தனையும்

உண்மையெனிலும்  அதை

ஒரு நல்லமனிமனிடம் சொன்னாலே

விடையென்னும் முடிவு கிடைக்கும்

ஒரு நல்லமனிதனே 

 சிறந்த தலைவனாகவும் முடியும்!!!