Sunday, 31 December 2023

ஹைக்கூ... கவிதைகள்

பெண்விழுந்த அறைக்கோணத்தில் 

விழிகளுக்கு கிடைத்தது  பெண்விடுதலை!!

Saturday, 30 December 2023

விழி கண்டு மொழி பேசும் சாரல்

 உறைபனியின் மேல் ஓரு நடை

விழுந்தெழும்பி  தத்தி தவழ்ந்து

 மகனின் கைபிடித்த நடை

ஓரு  குழந்தை போல்

அழகிய நடை ! விழுந்திடாதே 

இறுகப்பற்றிக்கொண்ட மகனின்

கைகளுக்குள்  ஓரு நடை 

நடக்கக்க கற்றுக்கொடுத்த தாயே

நடக்ககற்றுக்கொண்ட நடை

புதிதாய் பிறந்திட்ட

அழகிய தருணம்  மீண்டும்

குழந்தையாய்  வாழ்ந்த நடை

அன்பான தருனத்தை 

அருகே இருப்பவர் அழகா

கொடுத்தாலே  போதும்!!

அழகானா வாழ்க்கை பூக்கும்

வாழ்வோடு


குட்டிக்குட்டிச் சாரல்

 செல்லும் ஆண்டு

  எடுத்து செல்வதை

வரும் ஆண்டு 

தந்து செல்லுமா 

ஏனத்தெரியவில்லை

 இருந்தும்

காத்திருக்கின்றேன்

 எல்லா ஆண்டும்!!


Friday, 29 December 2023

விழி கண்டு மொழி பேசும் சாரல்

 அழகிய நாட்களுடன் அழகிய

வாழ்வை  அழகாய்  வாழத்தான் 

ஆசை மாமா ஆனால் 

நான் அழகியாய் பிறக்கவில்லையே 

உனக்கு  நீ  கைபிடித்து 

மாலையிட்டு  கையேடு கூட்டிப்போக

கல்மீதும் முள்மீதும் நான் நடக்க

விதியென நீருக்க

கால் வலிபொறுத்து பசிமறந்து

உடல்மெலிந்து உள்ளம் உடைந்து

காதல் ஊமையானேன் உன்னால்

கடசிவரை நீவிரும்பா பெண்ணாகவே

ஆனேன் மாமா!!






Thursday, 28 December 2023

குட்டிக்குட்டிச் சாரல்

 சட்டென திரும்பிப் பாரென்றது

உணர்வு

நீயெனப்பார்த்தது விழிகள் 

நிழலாய் சிலநொடி நீ தோன்றுகையில்

ஏதோ ஓரு உணர்வு  எனக்குள்

சந்தோஷம் தருகின்றது।

அது நிரந்தரமில்லையெனத்தெரிந்தும்

அதேயே மனம் விரும்புகின்றது।

Wednesday, 27 December 2023

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 அவள் 

போராட்டக்களத்திற்குள்

பருந்துகள்

அவளை  

தூக்கியெறிந்திடவே

வட்டமிடுகின்றது  

அவள் 

எதிரிகளை மறந்து 

பருந்துகளுடன் யுத்தம்

செய்கின்றாள் 

அவள்

 உயிர் எதிரியிடம் 

 அவள் 

மானம் பருந்துகளிடம்

 பெண்மைக்கு

எப்போதும்  

இருயுத்த வாழ்க்கையே

இருக்கும் வரை!!!



Monday, 25 December 2023

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 கிழிந்த ஆடையை 

நனைத்த மழைத்துளி 

தொட்டு சொன்ன காதல்!!

அவளை விட்டுச்சென்ற

 மரணம்

கொட்டிக்கொடுத்த

 வலிக்குள்

கைவிட்டு சென்ற

 கணவன் மிண்டும்

உயிர்பெற்று

 கட்டியணைத்தததை போன்ற

உணர்வினை கொடுத்தது

 அச்சமின்றி

புன்னகைத்தால் 

மிச்சமீதவலிகள் மறந்து!!


விழியேடு மாமன் மொழி பேசும் சாரல்.......................,

மாமன் நெஞ்சுக்குள் வாழும்

இந்த கூண்டுக்கிளி

மாமன் உயிரை தன்


 நெஞ்சுக்குள் சுமந்த்து

மாமனை நினைவிற்குள் தன்னை  

 வைத்து தன்னை  

வடித்தால் ஒவியமாய்!

குட்டிக்குட்டிச் சாரல்

 ஒற்றை  இதயத்துடிப்பில் 

ஒற்றை  முகம் தவிப்பில் 

என்னைத்தேடியே 

உன் இதயம்

 எனக்காய் துடித்தது 

நிஜமென்றால் 

நிஜங்களை கண்டு 

அச்சம் கொண்டு 

மிச்வாழ்கையை 


தொலைத்திருக்கமட்டாய்!


குட்டிக்குட்டிச் சாரல்

 என் தேனீர் சுவையேடு

இசையின் சுவை இணைந்து

என் கவிச்சுவையை களவாடியே

என்னை ஊமையாக்கி  உறங்கிட

சொல்கின்றது!!

குட்டிக்குட்டிச் சாரல்

 நான் 

சொல்லாமலேயே 

 எனக்குள்

ஒடும் 

உணர்வைப்போல்

நான்

 உடைந்தே 

அழுதிடும் 

நிமிடங்களில்

எனக்கு

 சொல்லாமலேயே 

 என்னை

எழும்பியேட 

 செய்கின்றது


 இசை!!



குட்டிக்குட்டிச் சாரல்

 நின்றுபேசி 

பிரிந்த பின்

சிலநெடி 

பிரியாதே

 நம்மேடு

வீசும் வாசம்போல்

 சிலரின்

வாழ்கையில்

 சில உறவுகள்

அர்த்தங்கள்

 இல்லா வாசமகின்றனர்!!



Sunday, 24 December 2023

விழி கண்டு மொழி பேசும் சாரல்

என் வாழ்வில்  எதை 

 வேண்டாமென   வெறுகின்றேனோ

அதையே திரும்ப கொடுக்காதே

இறைவா!! 

என்னை படைத்தபோது

என்ன நினைத்து 

படைத்தாய்யெத்தெரியவில்லை

ஆனால் எனக்காய் என்முன்னே

உள்ள வாழ்கை

 கொடுமையான வலியெனக்கு 

 இறைவா!!!

என்னை புரிந்த நீ 

 என்முன்னே வைப்பது ஏன் 

இறைவா !!!

சிலுவை சுமப்பவளை 

கல்கொண்டு அடிக்கும்

வலியை தருகின்றாயே

 இறைவா!!!

தண்டனைக்காளாம் 

மரணமென தெரியும்  ஆனாலும் 

வலிகள்  வலிக்குது

 இறைவா!!!

என்பிறவியின் அர்த்தம்

 பாவத்தின் தண்டனையென

அறிந்தாலும்  மனசு கல்லில்லையே  

இறைவா!!!


குட்டிக்குட்டிச் சாரல்

 சோர்ந்திடும் போது தந்தை



கரம் தேடுது மனசு

அழுதிடும் போது தந்தை

மடிதேடுது மனசு

தடுமாறும் போது  தந்தை

தோல்தேடுது மனசு

கோவம் வரும்போது

தந்தை முகம் தேடுமனசு

குட்டிக்குட்டிச் சாரல்

 நிறங்கள் நிறப்பிய

 வண்ண நீருக்குள்



அவளை போட்டு எடுத்தாலும்

அவள் என்னவோ 

வெள்ளை வர்ணம் தான்!!!


குட்டிக்குட்டிச் சாரல்


 அழகான ஒற்றைகனவு

கிளிக்கூட்டுக்குள் அடைபட்ட

கிளியைப்போல் சிறைப்பட்டுக்கிடக்கிறது

குட்டிக்குட்டிச் சாரல்

 எப்பவும்!!  அவன் 

 சினம் என்னை

கொஞ்சம் அழவைக்கும் 

இப்போது!!

என்னை சிந்திவைக்கின்றது

பல  விடைகள் 

கேள்வியானதால்!!

கேவிக்கு விடைத்தேடலே

தனிமைக்கு துணையானதால்

கண்ணீருக்கு அர்த்தம் 

தேடுகின்றது
தனிமை!!




Saturday, 23 December 2023

குட்டிக்குட்டிச் சாரல்


 என் மரணவாசலில்

நட்டுவைத்த ரோஜா கூட

பூப்பதில்லை எனக்காய்

விழி கண்டு மொழி பேசும் சாரல்

 இரட்டை வேடம் இரடடை

வாழ்கை வாழும் இருண்ட

மனித வாழ்வை வெறுத்தே

கல்லறையில் பூத்தேன்

இருந்தும் என்னை 

நடிக்க அழைக்கின்றாயே

இறைவா



பொய்யாய் வாழும் வாழ்கையில்

மெய்யான வலிகள் வேண்டாம்

இல்லா உடலாய் வாழும் 

உயிர் போதும் இந்தக்கல்லறைபூவிற்கு 

துன்பம் கண்டு துவண்டு போன

துன்பப்பூவிற்கு

இனியும் வேண்டாம் உன் வேடிக்கை

தாங்கிகொள்ள இதயமில்லை

தடுத்து நிக்க  தைரியமும் இல்லை

போதுமே இந்த உயிர் பட்டகாயங்கள்

விட்டுவிடு கல்லரைக்குள்ளேயே

உறங்கிக்கிடந்திட



Friday, 22 December 2023

குட்டிக்குட்டிச் சாரல்

 வாழ்கையென்னும் நதியில்

விழுந்த உயிர்  போகுமிடம்

தானாய்  ஒட நாம் எதையே 

வென்றதாய் பெருமை கொள்கின்றேன்!!

என் இலக்கணபிழைகளில் ஓர் இலக்கியம்......,

 என் கனவுகள் 



ஆசைகளுக்காய்

யார் வாழ்வையும்

கனவையும்  இதுவரை 

அழித்திடவில்லை !! 

மாறாக என் கனவையே அழித்தேன்

முதல் முரை !

என் கனவிற்காய்

உன் கரம் பிடிக்கின்றேன்

இது! சரியா பிழையா

 தெரியவில்லை மகனே 

இருந்தும் என் மரணம் 

 உன்னை 

என் கனவின் வழியாய் 

வழிநடத்துமென நம்பிக்கையேடு

 இறுகப்பற்றிக்கொள்கின்றேன்

மகனே !!


Thursday, 21 December 2023

விழி கண்டு மொழி பேசும் சாரல்

 ஒரு பெண்மையை

நேசிக்கும் போது 

நல்லதை தேடும் ஆண்மை

அந்த பெண்ணை  சமூதாயம்

பார்க்கும் பார்வையை மட்டும்

ஒருபோதும்  ஏன்  புரிவதேயில்லை

அவமானங்களையும் பழிகளையும்

பெண்மை சுமப்பதாலா

 அப்போ  எப்போ 

ஆண்மை பெண்மையை

பாதுகாக்கும்!!இன்றுவறை ஒற்றையாய்

வாழும் பெண்னிற்க்கு புரியவில்லை

ஆண்மையும் சமூதாயமும் !!!


விழி கண்டு மொழி பேசும் சாரல்

 நான் தூக்கியெறிந்த

 எதையும் சிந்தித்ததில்லை

 பிரிவுகளே வாழ்கை 

பாடமானதால்!!! 

விட்டு சென்றவர்கள் நினைவில்

வாழ ஆசையுமில்லை !

பிரிந்தே புரிந்தே போகும் 

வாழ்கையேடு வாழும் வாழ்கை 

என்னை விழாதே 

தாங்கிக்கொள்வதால் ! 

புரியாமல் பேசும் வாய்களோடு 

கோவமும் இல்லை!!

காலம் கடந்து 

காயபட்டு  காயப்பட்டு

இதயங்கள் இருப்பதாய் சொல்லும்

இதயங்களின் புரிதலையும் புரிந்தே 

வாழ்வதால் பொய்கள் மீதும் 

வருத்தமில்லை!!

ஒரு மாயவாழ்கைக்குள் 

பேசும் ஓவியம் போல் நான்!!

யார்மீதும் கோவமில்லா 

புன்னகை  இதழ்கள் பேசும் 

ஊமை  போல் !!!





குட்டிக்குட்டிச் சாரல்

 என்னை சுயநலவாதியென்றவரகள்

இன்னும் என்னோடு சேர்ந்தே இருக்க

தன்னை தியாகியென்றவர்கள் சுயநலமாய்

தொலைதே போனார்கள்

குட்டிக்குட்டிச் சாரல்

 உங்களிடம்  தைரியம் இருந்தால்

நீங்கள்  ஒரு அழகான 

வாழ்க்கு தேவையான ஒன்றை

தேடியிருப்பீர்கள் ஆனால் 

உங்களுக்கு வாழ்க்கையே 

வேடிகைவிளையாட்டு என்றால்

உங்களுக்கு அழகின் அர்த்தங்கள் 

ஒரு பெண்ணின் ஒபபணை போன்ற

சிலநெடித்தேடலே!!!



Tuesday, 19 December 2023

குட்டிக்குட்டிச் சாரல்

 சொல்லூக்குள் அடங்கா ஒற்றை

உணர்வை சொல்லிட ஏங்கிடும்

சொல்லுக்கு இல்லை உணர்வு

சொன்னாலும் புரியா சொல்லை சொல்லியே

ஏங்கினாலும் உணர்வுக்கு இல்லை

ஏக்கம் இருந்தும் இல்லாமல் தேடும்

உணர்வே உயிரின் தேடல் 

Monday, 18 December 2023

குட்டிக்குட்டிச் சாரல்

 எனக்கான உலகிற்க்குள்

எனக்கான எதையும் யாருக்காவும்

விட்டுக்கொத்திடவும்   மாட்டேன்

யாருக்கானதையும் எதற்க்காவும்

எனக்காவும்  வைத்துக்கொள்ளவும் 

மாட்டேன்!!!


குட்டிக்குட்டிச் சாரல்

 ஒற்றைச்சொல்லில் பட்டுவிடும்

மனசுயென சொல்லும் மனசுக்கும்

புரிவதேயில்லை  மனசு

குட்டிக்குட்டிச் சாரல்

 பெண்மை தன்னை புரிந்தமனதை

வென்றாலே போதும்

 தன் எண்ணங்களை வென்றிட


குட்டிக்குட்டிச் சாரல்

 பெண்ணின் கற்பனைக்குள்

கருவெடுத்து கதையெழூதும்

ஆண்மையே பெண்மையின்

நியத்தை அழிக்கின்றது।

விழி கண்டு மொழி பேசும் சாரல்

என்  இருண்ட  

பாதைக்குள்

 வெளிவரமுடியா

 யுத்தம் என்னேடு

சண்டையிட்டு  வென்றபோதும்   

என்னால் புரிந்திட முடியா 

இருட்டே நியமாய் நீண்டது 

ஒற்றை ஒளி பிறந்தபோது

விட்டுவிழகா  உறவே இன்று 

விலுந்திடதாங்கயே நிக்கின்றது 

விழுந்த காயம் 

நெஞ்சின்வலியானாலும் 

தாங்கி நிற்க்கும் கரங்கள் 

 நிஜமானதால்

எழும் பூவும்

 நம்பிக்கையின் 

 வண்ணமாய் மலர்கின்றது!!!



Thursday, 14 December 2023

குட்டிக்குட்டிச் சாரல்

 மீண்டும் ஒரு யாழ் இசையாய்

வீசும் காறிற்க்குள்  மிதற்க்கும்

மொழீயாகின்றேன் விழூம் இடத்தில்

ஏந்திடுதே s ஸ்வரங்கள் ।

இப்படி வாழ்ந்திடத் தான்!

 ஆசைத்துறலாயாய் விழுகின்றது

மனதில்  முதல் 

மழைத்துறல் பட்ட இடமும்

பூக்கிறது தானாய்!!!


Sunday, 10 December 2023

குட்டிக்குட்டிச் சாரல்

 என் கனவிற்க்குள்

 ஓரு அழகான வாழ்கை

 உறங்கியேகிடக்கின்றது

யாருக்கும்  புரியாமலேயே !!

சிலநேரம் ஏக்கமாய்  

என்னை வாட்டும்  

சிலநேரம்  

கண்ணீர்த்துளியாய்

 கரைந்தேயேடும் 

இருந்தும்

வாழ்க்கை  நகருகின்றது

தானாய்।।


குட்டிக்குட்டிச் சாரல்

 

ஓரு ஆழகான வாழ்க்கை 

எல்லோர் மனதிலும் அழகாய்

பூத்திருக்கும் ஓரு சிலருக்கு மட்டுமே

அழகாய் கைசேரும்

ஓரு சிலருக்கு  கனவின் மேகத்தில்

கற்பனையின் துறலில் நினைவாய்

வாழூம்।

Friday, 8 December 2023

குட்டிக்குட்டிச் சாரல்

 நம்மில் அக்கரையேடு  இருப்பவர் 

கூடயிருந்தால்  போதும்

எதையும்  முடிக்கும் நம்பிக்கை  

தைரியமாய் பிறக்கும்!!!



Tuesday, 5 December 2023

குட்டிக்குட்டிச் சாரல்.......


 எல்லாம் அறிந்தவர் 

முன் 

அறியா  ஒன்று இருப்பது  

அறிந்தவருக்கு தெரிவதில்லை 

எதுகும் தெரியாதவர் 

முன் 

தெளிவாய்   ஓன்று இருப்பது

தெரியாதவருக்கும்  புரிவதில்லை

இருவர் நிலையிலும் 

 ஒன்றை இழக்கும்  போதே  

கடவுள் எழுகின்றான்!!!

Sunday, 3 December 2023

குட்டிக்குட்டிச் சாரல்

 தோற்ற போதும்

துவண்டு அழுதபோதும்

தனிமை உண்மையை 

 சொன்னது

இருப்பவரும் இல்லாதவரும்

 உன்வாழ்வில்

ஓன்றுதான் என்று!!

குட்டிக்குட்டிச் சாரல்

 என்னை!



 விட்டுச்சென்ற எதையும்

என் வாழ்கை 

திரும்பப்பெறவில்லை

மாறக! என்னை மேலும்

 துன்படுத்தவே

சிலரை உறவாய் தத்தது  

இபோ!

நான் என்னையே

 வெறுத்த பின்னே

மரணம் மன்னிக்க சொல்கின்றது!!


Saturday, 2 December 2023

குட்டிக்குட்டிச் சாரல்

 என்னை 

புரிந்து கொள்ளா 

ஆயிரம்

 உறவைவிட 

என்னை

புரிந்த ஒரு  உறவு 

கூடயிருந்தால் போதும்

நான்

 நினைத்தது 

என் கைசேர!!!

Friday, 1 December 2023

குட்டிக்குட்டிச் சாரல்

  ஓரு அனுப்பவம்

 பலர் பார்வவைக்கு 

புரியா ஒன்றை 

நாம்பியே

 செல்லெனச்
சொல்லிறது

Monday, 13 November 2023

குட்டிக்குட்டிச் சாரல்

 ஒருமுறை  மரணம்

பலமுறை  வந்தால்  உயிர்தான்

எப்படி நடிக்கும் !!

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 ஒற்றையிழக்கும் வரை 

 அதன் அருமை 

புரிவதில்லை 

ஒற்றை இழந்த

பின்பு  மற்றென்றின் 

அருமை தெரிவதும் இல்லை

கூடவரும்  இன்னென்று 

நீண்டே வருவதும் 

இல்லை

கூடிபேசும் மனிதர் 

எல்லாம்

கூடவே இருப்பதும் 

இல்லை

கூட இருப்பவரும். 

இருந்தும் பயணில்லை

எல்லாம் கடக்குமென


 மரணவரை நடிப்பதே

உண்மையானது!!!

Sunday, 12 November 2023

குட்டிக்குட்டிச் சாரல்

 இருளின் ஓளியே  

ஓளியின் ஓளியே

நீ எரிகிறாய்  எரிக்கின்
றாய்

என்னை மட்டும்!!!


Saturday, 11 November 2023

குட்டிக்குட்டிச் சாரல்............

 பிடித்தவர்கள் 

மரணிக்கும் போதுதான்

நாம் பிடிக்காதவர்கள்  கூட

 வாழும் சுமை

அதிகமாகமாய் அழவைக்கின்றது

பிடித்தவர்கள்

  எப்போதும் நம்மை

மகிழ்ச்சியாய் வைத்திருப்பார்கள்

பிடிக்காதஙர்கள் 

 எப்போதும்  நம்மை

அழவைத்துக்கொண்டே  இருப்பார்கள்!!!


Wednesday, 1 November 2023

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 இறையவன் விதித்த 

 வித்தைக்குள் சிக்கிகொள்ளும் 

போதெல்லாம்

தனிமை கேலிசெய்யும் 

மனிதபிறப்பின்  அர்த்தம் 

தன் கையெழுத்தென!!!

வித்தையாய்  எப்போதும் போல 

மனம்  விதித்த  விதியால் 

தானாய்  ஏங்கும் !

நடக்காதேயென இயற்க்கை 

இயம்பினாலும்

 எழுப்படா தேடலைத்தேடி 

கடைசியில்  

என் தோல்விகளில்  

என்  தேடல்கள் முடியும்!

நான் இழந்த  உறவே   

என் தண்டனையாகும்  

என் தண்டனைக்குள்  சிறுபொருமூசிச்சு

சுவாசமாய்  மீண்டும்  துடிக்கும்    !!!




Tuesday, 31 October 2023

விழி கண்டு மொழி பேசும் சாரல்

 இவள் என்ன!



 கல்லறையின் மேல் 

பூத்தபூவா!

 மீண்டும் மீண்டும்

மரணம்  மன்னிக்கமறுக்கின்றது

இவளை தன்  

 தேவதையென்றவன்

இப்போ! சொல்லாதே சென்றுவிட்டான்

பிறவிகளில் சில உறவுகள் 

நம்மை தாங்கியே தன்னை தரும்

அப்படி  என் வாழ்வில் 

வந்த  அண்ணன் அவன் 

இவள் சின்னவயதில்

பொறமையால் பூத்த நேசம் அவன்

தங்கையே விட்டுத்தந்த 

பந்தம் அவன் 

அண்ணியவள் பொறமைகொள்ளும்

அன்பு  அவன் 

இப்போ!  என்னிடம்

சொல்லாமல் சென்றே விட்டான்  !

நம்ப மறுக்குது  உணர்வு

நம்பித்துடிக்கு மனசு

  விதியே என்சந்தோஷங்களை 

மட்டும் பறிக்கின்றாய்

என்னை பறித்திட

 சொல்லியும் கேளாமலே

கண்களில் இல்லையண்ணா

கண்ணீர்  உன்னை நினைத்தே

அழுது துடிக்க

 இதயம் மட்டும் அழுகின்றது 

உனக்காய்!! அங்கே நான் வரும்போது

எனக்காய் காத்திருக்கும் உயிர்களில் நீயும்

இருப்பாய் !எனக்காய் !

என்றும்  உன் செல்லத்தங்கை 

 நான் தான் எப்போதும்!


Sunday, 29 October 2023

விழியேடு மாமன் மொழி பேசும் சாரல்.......................,

 இங்கே !!

இல்லை மாமா  நான் 

எங்கே!! 

எடுத்துச்சென்றாய் 

என்னை!

எங்கையும் காணேமாமே  

நம்மை!

யார்  யாரே 

தேடிப்பார்த்தும்  

இல்லையென்று  

சொல்லியழைக்க 

நாம் மட்டும் 

 என்னவானோம் !!

ஒற்றை உயிரெடுத்து

எந்தன்  இதயம் சுமந்து  

ஓருமுறை கனவுக்குள் 

பேசிட  வா மாமா!!

கற்பனைக்குள் 

நம்மை  கண்டு  வந்த 

கண்களுக்கு

ஒற்றை உயிர்வாசம் 

பேசும்  நாமே  

வாழ்வின் தேடலாக 

வாமா மா !!!


விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 கோடிமின்னல்

 தாக்கிய இருள் சூழ்ந்த

 வனத்திற்க்குள்

ஒற்றைக்குயில் வாழுது 

தனியாய்!!

 ஒளியை தொலைத்த  

வனத்திற்கு  ஒற்றைவிளக்காய் 

வாழும்  நிலவும் வளர்ந்தும் 

தேய்த்தும்!இருளோடும் 

ஒளியோடும் 

 கூடயில்லாப்பரிதாவம்!

கூயிலுக்கும் பழகிவிட்டது

இருள் !!
 


குட்டிக்குட்டிச் சாரல்

 இல்லையெனும்  உறவுகள்

இருக்கும் உறவுஎள் 

இருப்பதை மறைக்கும்  இதயத்திற்க்குள்

இல்லாமல் இருக்கும் இதயம்

இருக்கும் வாழ்வே 

உயிருக்கு இறை  தந்த வரம் !!!

விழி கண்டு மொழி பேசும் சாரல்

 முற்களின் உதிரத்தில்  

மருதாணிபாதச்சிகபபாய் 

 நடந்திட் டவளை பார்த்தவன் 

கண்கள்  சொன்ன 

பொய்யுக்கு கற்பனை

 உயிர்கொடுத்தான் 

 வறுமையை அறியா சொல்வேந்தன்!!!

வஞ்சியவள் கஞ்சியில்லா

கொடுமையை கண்டுகொள்ளா 

மனம்படைத்த கற்பனைகள் 

தன்  உடல் தேவைக்காய் 

வைரத்தைகூட

அள்ளிக்கொடுக்கும்  பெண்ணிற்கு !!

உண்டு உறங்க  

கூரையில்லாப்பெண்ணிற்கும்

தெருவேர வாழ்க்கையிலும்

வறுமையை போக்க போராடும் 

போராட்டத்தை விட 

தன் உடல்காக்க 

போராடும் போராட்டமே

வலிகூடியது!!!

இருப்பதையெடுத்து

இல்லா கதைபடிக்கும் உலகமா
னது!பெண்மைக்கு !

Thursday, 26 October 2023

குட்டிக்குட்டிச் சாரல்


 மொழிதடுக்க  இனம் தடுக்க

நிறம் தடுக்க   இதயம் மட்டும்

இதயத்திடம்  பேசிதோற்கின்றது

காதல்மொழி!!!

விழி கண்டு மொழி பேசும் சாரல்

 இதயங்கள் மோதிகொண்டே

ரணங்களில்  தூங்கிக்கொள்ளும்

இயல்பினேடே  வாழ்வதா காதல்!!!

இயற்கையேடே சண்டையிடும்

மரணத்தைபோல் தெரியமலே

வந்தே  மறைகின்றதே காதலாய்!!!

கண்ணீரை கைதுடைத்து  

மண்மீதேயுள்ளவரை நம்பிக்கையில் 

பூப்பதில்லையா காதல்!!

இருள்பற்றிய  வாழ்வினுடே  

ஒற்றை விரல் தொட்டு  ஓளிபற்றும்

பாதைவரை கூட்டிபோகதா காதல்!!

இருக்கும்  வரை சேர்ந்தே சுவாசித்து

இனிமையான நாட்களைப்போல்

இணைந்து போக எதைகொண்டு

எது தடுக்குது இதயதிற்க்குள் காதலை!!!

உணவுர்வு எழும் கிறுக்களைபோல்

இதபமொழிகள் களவுபோக இதயம்

பேசா வார்த்தையில்  புதைத்திடவே காதலா!!!

 



Tuesday, 24 October 2023

விழி கண்டு மொழி பேசும் சாரல்

 ஊருமெச்ச. உறவுஉச்சுக்கொட்ட

ஊருக்குள்ள மாமான் கைபிடித்தே

நடக்கதான் ஆசை !!!

உள்ளூர் பெருமைகொள்

பெருமை போல்  மாமான்  

உயிராய் வாழ 

அக்கம் பக்கம் பொறாமைபடும்

ஒருத்தி நானாய் 

ஊருக்குள் வாழத்தான் ஆசை!!!

அச்சதேடு வந்து  அஞ்சிபேசும்

மனிதனெல்லாம் எக்கரைக்கு சென்றாலும்

மாமான் ஒற்றைபெயரை கேட்டால் பயம்வர

மாமான் கொஞ்சும் கிளியாக ஆசை!!!

ஊருக்குள்ள உள்ள ஜோடியெல்லாம்

கண்ணுபட்டு கண்ணுகதற  மாமன்

கண்ணுக்கு  ஒருத்தி 

நானாக தானாக  ஆசை!!

இஸ்ரதெய்வம் இருக்கும் வரமாக

மாமான்  பெற்றதெய்வம்  

கொடுத்தவரமான மாலைக்கு 

மல்ராக  பூத்திடத்தான் ஆசை!!!

கண்பட்டு கண்ணீசொட்டும்

  கண்கள் தேடும் ஜோடி 

நாங்களாய்  கண்களுக்குள்

வாழத்தான் ஆசை !!!

மாமன் கைபட்டு சொழித்திடம் 

நிலம்போல்   எம் வாழ்க்கை

மண்ணின்பெருமைகொள் 

வளம்போல் காலம்மோறும் 

வாய்பேசும் மொழியின்  சிறபாக 

வாழ்ந்திடத்தான் ஆசை!!!


குட்டிக்குட்டிச் சாரல்

அன்பானவர்கள் கூடவே இருந்தால்

எதிர்மறை எண்ணங்களால் கூட

தோற்கடிக்க முடியாது யாரையும்!!!

நம்மை நாமே சிந்திக்காதவரை

நம் எதிர்வுனையே  மற்ளவர்களை

உயரத்திற்க்கு எடுத்து சொல்லும்

நம்மையும்  முந்திக்கொண்டு!!!

குட்டிக்குட்டிச் சாரல்

 நீண்ட வான் தொடாதூரம்

நான் தொடா நீயும்  நானும்

கார்கால மயில்தோகைபோல்

காத்திருக்கும் கனவிற்குள்

மழைவந்தது!!!



Sunday, 22 October 2023

குட்டிக்குட்டிச் சாரல்

 கண்மூடிய நம்பிக்கையில்

தன்னைத்தொலைத்த பூவென்று

நம்பிக்கையை மறந்து

புன்னைக்க கற்றுக்கொள்கின்றது


Friday, 20 October 2023

விழி கண்டு மொழி பேசும் சாரல்

 எட்டிப்பிடித்திடத்தான் ஆசை

ஆனால்  எட்டவில்லை உன் கனவுகள்

விட்டு நடந்திடத்தான் ஆசை

ஆனால் முடியவில்லையெனக்கு

தள்ளித்தனியே நின்றிடத்தான் ஆசை

ஆனால் அசையவில்லை இதயம்

எட்டாதே என தெரிந்தும்

எட்டிபிடித்திடா வானவிலின் 

வண்ணங்களாய் வண்ணம் தொலைத்து

வண்த்தோட்டத்தில் தனியாய்

சும்மா நிக்கின்றேன் சுமையின் வலியாய்

சொன்னால் புரியா சொல்லின் 

மௌனத்தின் புன்னகை போல்!!!

விழி கண்டு மொழி பேசும் சாரல்

 என்னில் என்னை காணாத்தருனம்

எல்லாம் நான் இழந்த தருனம்

ஒற்றை இதயம் என்னை தாங்கியே

எல்லா உறவின் தூணாய் நின்றவர்

இற்றைபொழுது  ஏனே இறைவன்  

கஸ்ரத்தை கொடையாய்  கொடுத்தே 

 கஸ்ரங்களை  சுமக்க சொல்கின்றான்

இதையும் தாங்கி மலையாய் எழுந்து

தவிக்கும் மனையாளின் கணீர்துடைக்க

வரவே வேண்டும் இறையே  என்னில்

கண்ட துயரம் எல்லாம் எனியும்  கானா

நன்மைகொண்ட நாட்கள்  வேண்டும்

எந்தன் உயிரே முதலாய் போகும் வரமே

வரமாய் வேண்டும்  வதைப்பதும்

சிதைவதும் நானாகவே முடியவேண்டும்

கண்ணீர் கண்கள் புன்னகைக்கும்

பொழுதாய்  நாளைய பொழுது வேண்டும்

இறையின் தீபமே  இல்லமாய் மாறிட நீயே 

எழுந்தே நடத்திட வா!!!




Thursday, 19 October 2023

விழி கண்டு மொழி பேசும் சாரல்

 தாத்தாவிற்க்கு  

இரண்டு மனைவியென

பாட்டியழும்போது  கூட வளர்த்த

 அப்பாவிற்க்கு இன்னெருத்தி வந்தால்

அம்மா உயிருடன் இருக்க!!

அம்மா சண்டைபோட கூட

இருந்த அண்ணனுக்கு

மனைவி கூடவாழ்கையில் 

அண்ணன் மனைவியறியாமல்

அண்ணனுக்கு இன்னெருத்தி

இயல்பாய்  கைகோர்த்தால்  

அண்ணியழுவதை பார்த்து பார்த்தே

அண்ணன்  மகன் கூடவளர்கின்றான்

நாளை அவனுக்கு  இரு பெண் காத்திருப்பதாய்

கற்பனைகள் நாளைய வாழ்க்கைக்கு 

ஒருவழிதேடிகொடுக்க

பெண்ணின் கோழைவாழ்க்கைக்கு

புதிய அந்தியாயம் எழுதிகின்றத்து

கற்பனைகதைபோல் !

!திருட்டுதனங்களின்

அங்கிகாரப்பணத்தோட்டம்

புதியபாதையாய் பூக்கின்றது பழமையில

புதுமையாய்!!!

கவலைவிடுபெண்னே

அங்கிகாரம் இல்லாகோடிகளுக்குள்

கோடிவாழ்க்கை கஸ்ரமில்லாமல் 

எதிர்காலத்திட்டதில் சில்லறைகளைபோல்

சிதறி புன்னைக்க கைபிடித்தபடி

நீயே எப்பவும்போல் கற்பனையுலக்தோடு

சண்டைபோட்டே உயிர்வாழ தயராயிரு!!



குட்டிக்குட்டிச் சாரல்

 உன்னைதொலைக்கும் வரை

என்னையாரும் திரும்பிபார்க்கவில்லை 

மாமா 

உன்னைத்தொலைத்தபின்னர்

ஐந்துவயதிற்க்கு கூட 

அன்ரிமேல்  ஆசைவருதுமாமா  

நீயல்ல உலகில்

வாழ்க்கையே கறுப்பாச்சிமாமா

நான் நடக்கபாதையும் வெறுப்பாச்சிமாமா

என் உறக்கமும் கனவாச்சி மாமா

கனவேடும் கற்பனையேடும் காலமும்

முடிந்தது மாமா!!!

விழி மொழி பேசும் சாரல்

தனித்த பெண்னின் 

இடருக்குள்

சிக்கிகொள்ளும் 

குழந்தைகள்

எப்போதும் !

பாதிப்புக்குள்ளயே

சிக்கிக்கொள்கின்றனர்!

சிக்கிக்கொண்ட சின்னசிரார்களை 

சிக்கவைத்திடும்  சமூகத்திற்குள்  

தானாய் நடக்கமுடியாமல்

தொலையும் குழந்தைகளே 

அதிகம்!

ஒடிவிளையாடும் வயதில் 

போராடும் காலில் உறுதியுண்டு  

ஆனாலும் வலியின் வழிகள்

கொஞ்சம் தடுமாறும்  இயல்பாய்!! 

இது கூட நடக்கும் 

உறவுக்கே புரியாதபோது

வேடிக்கை பேசும் மனிதம்

 அறியாமுடியாதே!

தோற்றுப் பார்த்தால் தெரியும்  உலகு

படித்தவர்  மற்றவர் மனசை !

படித்தால் போதும் 

பலபடிகள் தாண்ட குழந்தைக்கும் 

தெரியும்  தானாய் !!!!



Tuesday, 17 October 2023

குட்டிக்குட்டிச் சாரல்

 புத்திசாலியை பார்த்து 

கற்றுக்கொள்ளாத  முட்டாளே 

புத்திசாலியின்  அடிமையாகின்றான்

கற்றவன் தன்வழி நடக்கின்றான்!!

Friday, 13 October 2023

குட்டிக்குட்டிச் சாரல்

 என்னில் துறல்போட்ட

மழைதுளி  சொன்னது 

உந்தன்  ஆசை 

 எந்தன் ஆசையென்று  

எப்பவும் தோற்றிடும்

எந்தன் தோல்விகளுக்கு 

எந்தன் மனசு சொன்னது. 

எந்தன் வெற்றி 

இயற்கையின் காதலால்

பூக்கும்  நம்பிக்கையின்  

கையென்று!!!


Thursday, 12 October 2023

விழி மொழி பேசும் சாரல்

 அழகான வாழ்க்கை 

எதுவென தேடிபார்த்தேன் 

உண்மையற்ற இதயத்தின் 

பொய்களில் மயங்கிக்கிடந்தது!!!

அன்பான வாழ்க்கை 

எதுவென  தேடிப்பார்த்தேன்

வறுமையின் குடிலுக்குள்

 மழைவெள்ளத்தி்ல் மிதந்து கிடந்தது

அறிவான வாழ்க்கை எதுவென

தேடிப்பார்த்தேன் 

கையில் சிக்கிடா முத்தைபோல்

கடலிலுக்குள் கிடந்தது

கற்பான வாழ்க்கை

எதுவென தேடிபார்த்தேன்

தனியான பெண்மையின் கையின 

ஆயுதமாய் இருந்தது!!!

பண்பாடான வாழ்க்கை

எதுவென தேடிப்பார்த்தேன்

ஆண்மையின் உருவத்தில்

விலங்கைப்போல் காட்டிற்க்குள்

 கிடந்தது!!

மனிதனின் பிறப்பென்னயென

தேடிப்பார்த்தேன் 

தவறுகளின் வடிவில் தன்னையே

தொலைத்து தேடும் உயிராய் கிடந்தது!!!




குட்டிக்குட்டிச் சாரல்

 நம் வாழ்க்கையை 

எதுவும் தீர்மாணிக்கலாம்

நாம்



நம்நற்பண்பை இழக்காதவரை  

நம் வாழ்க்கை

எப்போதும்  மற்றவரிடமிருந்து

வேறுபடும் !!!


Wednesday, 11 October 2023

குட்டிக்குட்டிச் சாரல்

 அவள் தோல்விகளில் 

மகிழ்ச்சியை ரசித்தபடி பல

உருவம் நிழலாய்  நடைபோட

அவள் நிழலின் விம்பத்தில் கால்வைத்தே

நடக்க தனகென தனிவழியமைத்தால்!!

குட்டிக்குட்டிச் சாரல்

 கற்பனை கண்ணாடிக்குள்



கற்பனை உருவம். 

கற்பனை உயிர்பொய்யில்

கருவாகி வடிக்கின்றது  கண்ணீர் கதை!!!


குட்டிக்குட்டிச் சாரல்

 வாக்கப்பட்டு  இஸ்ரப்பட்டு

கஸ்ரப்பட்டு  வதைபட்டு

காயப்பட்டு  கண்ணீர்பட்டு

பூவென்று பூக்கின்றது  தீக்குளிக்க!!



குட்டிக்குட்டிச் சாரல்

 கொஞ்சநேரம்  ஓய்வாய்

கொஞ்சிபேசிய காலம்

கொஞ்சம் கொஞ்சமாய் 

ஓய்ந்தே போக

கொஞ்சமும் ஒய்வற்ற தேவையேயற்ற

தேவைகளை  சுமந்தபடி

வாழும் வாழ்க்கை ஏங்கு தேடுது

கொஞ்நேரம் கொஞ்சிப்பேச…..

Thursday, 5 October 2023

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 மங்கையவளை விதவையாக்கிய

மரணத்தோடு  ஓற்றைக்காதல்!!

வெள்ளைமலரைக்கொய்தே  

மாலையாக்கி  மரணக்காதலுக்கு  

காணிக்கையாக்கியே

மங்கை சூடினால் வெள்ளையாடை!



வெள்ளை மாலைக்குள் மாலரைப்போல்

அவளுக்கு மட்டும்

 பூக்கும்  கனவுவாழ்க்கை!!

கல்லினுள் கவிதையாய்

ஒற்றைவாசல் இல்லாவீட்டில் 

மங்கையிவள் ஏற்றிய ஆத்மதீபம்

அழகாய்  எரியும் 

 மனிதனின் மறுபக்கத்தில்!!

கவிவழியே  கரையும்

கனாக்காலத்தை  பறித்தே  

பதியமிட்டத்து  வாழ்கையை!!!

குட்டிக்குட்டிச் சாரல்

 என்கற்பனைகளுக்கு 

முகங்கள்

தேடபட்டபோதெல்லாம்!! 

என் முகம் கருமையின் 

கனவிற்குள் முழுமதியற்ற

இரவுக்குள் 

தொலைந்து கிடந்தது

இருந்தும் ஓற்றை நிமிடத்தை

மரணம் கொடுத்திடவே

 கனாக்கண்டேன் 

கற்பனை முகம் புன்னகைக்க!!!


Tuesday, 3 October 2023

விழி மொழி பேசும் சாரல்

 அப்பாதோற்றே விழுந்த நினைவு

கடனால் அம்மாவடித்த கண்ணீர்

அறிந்தும் அறியாபருவம் அறிவாய்

சிந்தனை செய்யென்றது!!தந்தைகற்று தந்த

பாடம் கணவர் எழுதிய தொடர்கதை

தீயின் சுவாலையாய் என்னை எரித்தே

சாம்பலாக்கியது !!

சாபலில் இழந்து விழுந்து எழுந்த

பெண்னாய் மீண்டும்  மீண்டேயெழுந்திட

விடாமல் கூடவே  கூடியே  நடித்தே

கூடவே நடத்தவரே அதிகம் 

ஆனாலும் மனிதம் அப்படியே

 அன்றிலிருந்து

இன்றுவரை எதை இழந்தாலும்

அதைவிட  அதிகமாய் 

சிந்தனை செய்திடச்சொன்னது!!!

அறிவும்தோல்விகள் 

வாழ்க்கையில் மலையென

உயர்ந்தாலும் முயற்சிகள் ந்தியென

ஒடுது வழியாய்  என்னுள்ளே !!

 பரதிகண்டகனவு

தோற்றதே வென்றதே அறியேன்

பரதிபெண்ணாய் உடைதாலும் எழுகின்றேன்

சுயமாய்!!!

குட்டிக்குட்டிச் சாரல்

 சந்தர்ப்பங்கள்

தோற்கடித்தாலும்

நம் சந்தோஷங்களை 

தோற்கடிக்கா

சந்தர்ப்பத்தை 

தரும் நம்பிக்கையே

நம் எதிர்காலம்!!!

Sunday, 1 October 2023

விழி மொழி பேசும் சாரல்

 கொஞ்சம் கூட 

தெரிய மனிதர்களின் பொய்யே

இன்றைய மனித வாழ்க்கையின்

கற்பனைபொழுதுபோக்கின் 

நியமாய்பேச்சு!!

உள்வீட்டு உண்மைகளை  

வறுமைகுடிக்க

உயரத்தின் ஒளியில் 

தெரியும் முகத்தின்பின்னே

ஆயிரம் கதைபடித்திட 

தோடுகின்றனர்!!

தன்னைமறந்த  மனிதர் கூட்டம்!!

உயரதெட்டவன் படியில் 

பலவடிவம் படுத்துறங்கிப்கிடப்பதை

அறிந்தவனே ! பொயின்றி 

தானாய்  தன்னைக்கொடுத்தே

தன்னைசெதுக்கி  தன்னைமிக்கும் 

கால்களுக்கு  மேலே 

நல்லதலைவனாய் உயர்கின்றான்!!

புரியாமனின்  கடசிவரை தன்னை

மறந்து பெய்யேடு  வாழ்கின்றான் 

அடுத்தவர் வாழ்விற்குள்  தேடல் 

 தன்  வாழ்க்கையின்  

கற்பனைச் செலவு !!!


விழி மொழி பேசும் சாரல்....................

 அன்னையவள்  பெற்றவரம் 



பேதையிவள் வாழ்வியிற்றுக்குள்  

விதியென  விளையாடிட  

அரக்கனும்  இரக்கம்கொள்ளும் 

விட்டில்பூச்சி   பெற்ற   தீப்போல்  

துடிக்கும்  இவளுக்காய் 

கொஞ்சம்  இரக்கம்கொள் 

இறையே !!! 

கொஞ்சுமொழிச்சுவை

பெண்ணவள் கொஞ்சகாலம்

நின்மதி கொள்ள!!

கொஞ்சம் கருணைகொள் 

இறையே !!!

கருணைவடிவானவள்

கண்குளத்திற்க்குள்ளும்  மீன்தேடும் 

கண்கள்  முன்னே கொஞ்சகாலம்

புன்னகைவழித்தோடிட!!!

கொஞ்சம் பாசம்  கொள்

இறையே !!!

பாசப்பெண்னிவள் ஏமாந்தே 

இழந்த  இதயத்தின்வலிகள் 

கொஞ்சமறந்திட

பாசம்கொடு இதயம்பெற!!!

கொஞ்சம் உயிர்கொடு 

இறையே!!!

கல்லான பெண்னிவள் கற்பனையும்

தோற்றிட்ட நாட்களை கொஞ்சம்

கவிவடிவமாய் உயிர்பூவில் பூவாக்க !

கொஞ்சம்  காண்பாரு  இறையே 


Saturday, 30 September 2023

குட்டிக்குட்டிச் சாரல்

 போராடும் வாழ்க்கையை 

 தடைபோட்டே

 நிறுத்திய தோல்வியால் 

தடுமாறும் மனதினை



தடுதிடும் இசையெடுத்து

 தூங்க தோழன் மடியால்

விதியேடு  விளையாடவும் 

பிடிக்கின்றது  முதுமையிலும் !!

மீண்டும் மொழியேடு

காதலும் பூக்கின்றது  

அழகான போராட்டக்கடல் மீனாகின்றேன்

விதியேட தூண்டிலில் சிக்கியே!!!

Friday, 29 September 2023

குட்டிக்குட்டிச் சாரல்

 விதையாய் விழுந்த கனவு

விளையாடிடு  என்னேடு

விருப்பமே இல்லாமல் 

திண்டாது உறவு

அடுத்த அந்தியாதை 

அழகாய் தொடங்கு விதி

விதியின்  கையில் 

பொம்மையாய் நான்

விழுந்த தெருவில்  அழிந்த கனவு

விதியின் வடிவெடுக்கு தானாய்!!

அழிவதே எழுதே இறைவன்  எழுதிய

நாட்காட்டியின் எழுதியே முடிவான பக்கம்!!!

Wednesday, 27 September 2023

விழி மொழி பேசும் சாரல்

 பூக்களின் பனித்துளி 

விழும் வரைபனித்துளியேடு காதல்

பருகிடும் சூரியன்  

தாகம் உள்ளவரை நீரோடு காதல்

பூமிக்கு  மழைத்துளியின்

தேவையால் மழையோடு காதல்

தேடிய உடல்  அழகினேடு

சேர்ந்தே பிறக்கவும்   இறக்கம் காதல் 

பூவைத்தீ சுட்டுவிட்டால்

வண்டிற்கு தேனேடு காதல்

கல்லறையுமில்லையென்றால்

காகிதம் குப்பையேடு  காதல்

மண்ணிலுள்ள உயிருக்கு மட்டும்

மண்ணில் இல்லா மரணமே காதல்!!!



குட்டிக்குட்டிச் சாரல்

 ஒற்றைபெண்ணாய்

 பிறந்ததில் இத்தனை  தவரா !! 

எத்தனை  நாட்கள் இங்கே 

சுத்தமாய்  தொலைந்தே  போச்சி

எத்தனையே !! தடைகள்  

என் முன்னே 
எழுந்திட முடியா 

எரிமலையாய்  எழுகின்றது!!  

உன்னால் முடியாதென

உச்சரிக்கும் ஓலியின் சத்தமே

என் உறக்கத்தை பறிக்கின்றது

இருந்தும்  பாதம் முன்னே வைக்கின்றேன் 

பின்னே என்னை வைத்தே!!!

குட்டிக்குட்டிச் சாரல்

 வெண்பனி   ஒன்றாய் 

கொட்டினாபோல் 

முன்னே  சென்றவள் 

பின்னே நடந்தவரை

சட்டென திரும்பிப்பார்த்தாள்

அவள்  அழகில் 

சாத்திரங்கள் விழுந்தது

அவள் காலடியில்  !!!

பெண்ணின் அழகிற்க்கு முன்

எந்த  கட்டுக்குள்ளும் 


ஆண்மையை

கட்டிவைத்திட முடியா வரமே

மண்ணில் அழகிய பெண்மை!!!



விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,


 வெற்றி வேண்டுமா!!!

உண்மையற்ற உருவம் கொள்

பொய்களேடு உறவாய் பிறந்திடு

நிமிடத்திற்க்கு நிமிடம் 

எமாற்றகற்றுக்கொள்

இல்லாத ஒன்றை இருப்பதாய் 

நடித்திடு 

வறுமையை மறைத்து  ஆடம்பரமாய்

வாழகற்றுக்கொள்  

உயர்ந்த எண்ணங்களைஅழித்து 

சுயநலமாய் சிந்தனை  செய்

கொடுத்திடமலே கொடுத்தாய்

விளம்பரம் செய்  

கோவிலை  கண்டால் அச்சம்கொள்

உச்சத்தைதொட்டு  திரும்பி பார்க்க 

உலகம் வரும்!!!



குட்டிக்குட்டிச் சாரல்


 அவள்  தனிமைக்கு 

துணையாய் அவள்

வரைந்த  கற்பனை

உருவம் உயிபெற்று  

வராதென்று  அவள் 

மட்டுமே  அறிவாள் !!!


குட்டிக்குட்டிச் சாரல்

 அவள் தலையாடி 

உதிர்ந்த  மலர்கள் 

தன்னை தொட்டாலே

கருகிவிடுவேன் என்றது

அவள் முகமுதிர்ந்த மங்களமே

அவளை  அமங்களம் 

என்றே தள்ளி  நில்றென்றது

அவள் உடல் வளைந்து அழகான பட்டே

அவள் உள்ளமறந்தே  தீயேடு

சாம்பலானது

அவள் நடந்த தெருவே அவள் பதம்

பட அஞ்சியே விழிகள் முடிட

அவள் தன்னை வெறுத்து

 சிறைபட்ட இருளே  அவள் வாழ்வின்

துணையானது !!!


Tuesday, 26 September 2023

குட்டிக்குட்டிச் சாரல்

 திரும்பிபார்க்கின்ற 

என்னை

எப்படிபார்த்தாலும்  

ஒற்றை துளியே நிற்காமல்  

விழுகின்றதை  கண்கள்

சொல்லாமல் சொல்லிசெல்லுகின்றது

இருந்தும் என்னிலும் உண்டு 

கற்பனைகைக்குள் அடங்கிடா 

கனவுகள் 

கையேடு எடுத்திடமுடியாமல்!!!

Sunday, 24 September 2023

குட்டிக்குட்டிச் சாரல்

 என் தோல்விகளுக்குள் எத்தனை

காரணமும் இருக்கலாம் ஆனால்

இற்றைவரை என்னை நம்பியே

ஏற்றிவிட ஓற்றை கரம் இல்லா தோல்விகளே

அதிகம்  இது விதியே இல்லை 

என்பிறப்பின் தண்டனையே அறியேன்



குட்டிக்குட்டிச் சாரல்

 தோல்வியால் பறிபோன

 ஆசை!

அலைமோதி அலைமோதி 

மனசுடைக்க ! 

தனிமைகொண்டு

உறக்கம் தொலைந்த  

 நிமிடம்

வெற்றி கிண்ணமாய்  

மரணத்தை

தூக்கிதரும் நெடி 

உயிர்ப்பாரத்தை

உடல் சுமக்க மறக்கின்றது!!




Friday, 22 September 2023

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 எத்தனை தடைகள்

 வந்தாலும் 

உடைத்திடவே 

நினைக்கின்றேன்


ஆனால்

 கொஞ்சமும் மாறமல்  

வாழ்வும் தடுமாறியே

 ஏங்கிடுது 

ஒற்றை கைகூட

 தடுத்திட இல்லாமல்

மனசு ஏங்கிடும் 

பொழுதெல்லாம்

தனிமையை

 தலையணையாக்கியே

உறக்கம் விழித்திடுது

இல்லையென்ற ஓன்றையே 

தேடிதுடிப்பதும் 

ஏமாந்தே  ஒய்ந்து

கிடப்பதும் இழப்பால் 

கிடைத்திட துயரத்தால் 

மனசு அழுதிட

இதயம்வலிகிறதே தானாய்!!!


Tuesday, 19 September 2023

குட்டிக்குட்டிச் சாரல்

 ஓரு மரணம் வலியேட பிறசவம்

அதுவே பிரசவித்த மகளின் வலியென்றால்

தீயிட்டு கொழுத்திடும் வலியை விட

வலி தரும்!!!


குட்டிக்குட்டிச் சாரல்

நமக்காக சிந்திக்க தவறினால்

முதுமைக்காலம்.

 நம்மை அதிகம்

சிந்திக்க செய்கின்றது 

 நாம் மற்றவருக்காய்  

பார்த்து பார்த்து சிந்தித்து

செய்யும்  நல்லவைகள் யாவும்

யாரும் தனக்காய் செய்யாத போதே

முதுமை  சந்தித்து 

சிந்திக சொல்லும் நம்மை!!!