இவள் என்ன!
கல்லறையின் மேல்
பூத்தபூவா!
மீண்டும் மீண்டும்
மரணம் மன்னிக்கமறுக்கின்றது
இவளை தன்
தேவதையென்றவன்
இப்போ! சொல்லாதே சென்றுவிட்டான்
பிறவிகளில் சில உறவுகள்
நம்மை தாங்கியே தன்னை தரும்
அப்படி என் வாழ்வில்
வந்த அண்ணன் அவன்
இவள் சின்னவயதில்
பொறமையால் பூத்த நேசம் அவன்
தங்கையே விட்டுத்தந்த
பந்தம் அவன்
அண்ணியவள் பொறமைகொள்ளும்
அன்பு அவன்
இப்போ! என்னிடம்
சொல்லாமல் சென்றே விட்டான் !
நம்ப மறுக்குது உணர்வு
நம்பித்துடிக்கு மனசு
விதியே என்சந்தோஷங்களை
மட்டும் பறிக்கின்றாய்
என்னை பறித்திட
சொல்லியும் கேளாமலே
கண்களில் இல்லையண்ணா
கண்ணீர் உன்னை நினைத்தே
அழுது துடிக்க
இதயம் மட்டும் அழுகின்றது
உனக்காய்!! அங்கே நான் வரும்போது
எனக்காய் காத்திருக்கும் உயிர்களில் நீயும்
இருப்பாய் !எனக்காய் !
என்றும் உன் செல்லத்தங்கை
நான் தான் எப்போதும்!
.jpg)
No comments:
Post a Comment