நான் தூக்கியெறிந்த
எதையும் சிந்தித்ததில்லை
பிரிவுகளே வாழ்கை
பாடமானதால்!!!
விட்டு சென்றவர்கள் நினைவில்
வாழ ஆசையுமில்லை !
பிரிந்தே புரிந்தே போகும்
வாழ்கையேடு வாழும் வாழ்கை
என்னை விழாதே
தாங்கிக்கொள்வதால் !
புரியாமல் பேசும் வாய்களோடு
கோவமும் இல்லை!!
காலம் கடந்து
காயபட்டு காயப்பட்டு
இதயங்கள் இருப்பதாய் சொல்லும்
இதயங்களின் புரிதலையும் புரிந்தே
வாழ்வதால் பொய்கள் மீதும்
வருத்தமில்லை!!
ஒரு மாயவாழ்கைக்குள்
பேசும் ஓவியம் போல் நான்!!
யார்மீதும் கோவமில்லா
புன்னகை இதழ்கள் பேசும்
ஊமை போல் !!!
.jpg)
No comments:
Post a Comment