முற்களின் உதிரத்தில்
மருதாணிபாதச்சிகபபாய்நடந்திட் டவளை பார்த்தவன்
கண்கள் சொன்ன
பொய்யுக்கு கற்பனை
உயிர்கொடுத்தான்
வறுமையை அறியா சொல்வேந்தன்!!!
வஞ்சியவள் கஞ்சியில்லா
கொடுமையை கண்டுகொள்ளா
மனம்படைத்த கற்பனைகள்
தன் உடல் தேவைக்காய்
வைரத்தைகூட
அள்ளிக்கொடுக்கும் பெண்ணிற்கு !!
உண்டு உறங்க
கூரையில்லாப்பெண்ணிற்கும்
தெருவேர வாழ்க்கையிலும்
வறுமையை போக்க போராடும்
போராட்டத்தை விட
தன் உடல்காக்க
போராடும் போராட்டமே
வலிகூடியது!!!
இருப்பதையெடுத்து
இல்லா கதைபடிக்கும் உலகமா
னது!பெண்மைக்கு !

No comments:
Post a Comment