Friday, 29 December 2023

விழி கண்டு மொழி பேசும் சாரல்

 அழகிய நாட்களுடன் அழகிய

வாழ்வை  அழகாய்  வாழத்தான் 

ஆசை மாமா ஆனால் 

நான் அழகியாய் பிறக்கவில்லையே 

உனக்கு  நீ  கைபிடித்து 

மாலையிட்டு  கையேடு கூட்டிப்போக

கல்மீதும் முள்மீதும் நான் நடக்க

விதியென நீருக்க

கால் வலிபொறுத்து பசிமறந்து

உடல்மெலிந்து உள்ளம் உடைந்து

காதல் ஊமையானேன் உன்னால்

கடசிவரை நீவிரும்பா பெண்ணாகவே

ஆனேன் மாமா!!






No comments: