அப்பா தோற்றே விதைத்த
வலிகள் என்னுள்
விழுந்த நினைவு!!
அம்மா கடனால் வடித்த
கண்ணீர்
அறிந்தும் அறியாபருவம்
அறிவாய்சிந்தனை
செய்யென்றது!!
தந்தைகற்று தந்த
பாடம் கணவர் எழுதிய தொடர்கதை
தீயின் சுவாலையாய் என்னை எரித்தே
சாம்பலாக்கியது !!
சாபலில் இழந்து விழுந்து எழுந்த
பெண்னாய் மீண்டும் மீண்டேயெழுந்திட
விடாமல் கூடவே கூடியே நடித்தே
கூடவே நடத்தவரே அதிகம்
ஆனாலும் மனிதம் அப்படியே
அன்றிலிருந்து
இன்றுவரை எதை இழந்தாலும்
அதைவிட அதிகமாய்
சிந்தனை செய்திடச்சொன்னது!!!
அறிவும் தோல்விகளும்
வாழ்க்கையில் மலையென
உயர்ந்தாலும் முயற்சிகள் நதியென
ஒடுது வழியாய் என்னுள்ளே !!
பரதிகண்டகனவு
தோற்றதே வென்றதே அறியேன்
பரதிபெண்ணாய் உடைதாலும் எழுகின்றேன்
சுயமாய்!!!
.jpg)
No comments:
Post a Comment