Tuesday, 19 October 2021

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 தேவியவள் !!

இவள் தேவைமுடிந்ததாய்

நினைதே  வந்தாலோ !  இல்லை 

பூமிதனில் பூவையவள் 

வாழ்க்கை போதுமென்று

நினைத்தால்  வந்தாலோ  ! இல்லை 

கண்ணின் மணியுக்கு

 கண்கள்குளமாகக்கண்டு 

தாய்யாய் மீண்டும் மீண்டாலோ!

இல்லை

 வீதியில் விட்டு சென்றவள்

தவிப்பைக்கண்டு 

மீண்டும்  தாயாய்மை மனசு துடிக்க 

 காத்திட வந்தாலோ 

இல்லை  சொன்னதெல்லாம் 

புரியாமல் சென்றவள்

பட்டதுன்பம் போதுமென

 வந்தாலோ இல்லை 

பாவையவள் புத்திக்கு 

பட்டறிவு போதுமென தீயாய்

 வந்தாளோ இல்லை  

துன்பத்தின் உச்சத்தில்

கையணைக்க  யாறுமில்லையென

கண்மணியை  கையணைக்க

வந்தாளோ  இல்லை

தன்னம்தனியாய் நின்று 

 உண்மைக்கும் பொய்யுக்கும்  

மனிதனுக்கும்  அன்பிற்கும்

இடைவெளி  போராடிடும் 

இவளை  கண்டு தன்னை 

மீண்டும்  தாயாய்  தருகின்றாலோ 

நான்

அப்போது செய்தபிழை  

இப்போது புரிகின்றது 

நீ இப்போது வந்தது 

என் மரணத்தின் பாதைவழி

தனிமைதுணையாய உணர்கின்றேன் 

No comments: