Friday, 29 May 2026

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 தினம் தினம்  தேடி


 

தினமதனை கொண்டாட 

செதுக்கிய  தினத்திலும் 

செருக்காய்  கதைபேசும் 

மனிதனுக்குள்  தினமதனை 

கையில்  எடுத்து

இருப்பவனிடம்  கொடுயென 

இருப்பவனுக்கு  கற்றுக்கொடுக்கும் 

பண்பு !இல்லாத இதயத்தின்  

இருள் நாள் ஒளிவிளக்கின் 

ஒரு  திரிதொடக்கமானது !

இன்று  பசியின்  தேடலுக்கு 

தற்காலா  சந்தோசமானது !

வறுமையின்  வயிறும் பசிக்கும் 

என்ற  தினத்தின்  தேடலின் 

தொடக்கத்தின்  முதல் மனிதப்பிறப்பு 

உயிர்பெறுகின்றது  !  

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 தனிமை களம் சமைக்க 



வாழ்க்கை   போராட் டம்  

கலையிழக்க 

உரிமையற்ற  தனிமையில் 

களைப்பின்  உச்சம்  

விழிகளை  மூட விடியலில் 

விழிக்கும்  பசியின் தூக்கம் 

துடிப்பாய்   எழுப்பி  பெண்மைக்கு 

சொல்லும்  செய்தி  உண்டாலும் 

உறங்கினாலும்  உனக்கான 

உன்னை  உயிர்  வரை  சுமக்க 

உன்னை  விட்டால் 

யாருமில்லை !!

Thursday, 28 May 2026

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 என்  தகுதி என்னவென 

அறியவில்லை  நானும் !

அறிவும்  அருமருந்தாகுது 

இருந்தும்  கூட! 

விளைவு  களமாட காசுபணம் 

கையில்  இல்லை 

 பெருமைக்கு நாலுபேரும் 

கூடி பேச குடிலில் இடமுமில்லை  

இருந்தும் 

ஏழைக்கு  ஏமாற்றம் 

கொடுக்க  அன்பேனும் 

சொல்லுண்டு  பூட்டிய வாசலை 

தட்டியே வாயடி போக !

புரிந்தும்  சந்தோசமாய்  ஏமாறுது 

மனசு இதயம்  ஏக்கங்களாய் 

துடிப்பதால் !!

Wednesday, 27 May 2026

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

ஒழுக்கம் !!
என்னும்  சொல் 
இன்றைய!!
 செய்தித்தாள்களில் தேடும்  
பக்கங்களானது   
சொல்லி  வைத்த 
திருவள்ளுவனும்  
நாலுபக்கமும்  சிலையாய் 
 நிக்கின்றான் 
கண்டும்  கேட்டும்  தனிமனித 
சுகந்திரம்  தன்னை  தொலைத்து 
தேடுது   எங்கும் 
சிகப்புக்கம்பளம்  விரிப்புக்குள் 
வலுக்கி  விழுந்த  ஒழுக்கம் 
அடுத்தவனின்  உடலுக்குள் 
ஆராச்சி  கூடம்  நடந்து !!

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 சிந்தனை  சிப்பி ஒரு தனிமைக்கு 



செதுக்கிய அறிவு பொக்கிஷம் 

அன்பின் உச்சத்தில் 

  ஆளுது என்னை 

பொய்யாயானா  முகமில்லை 

போலியான  வார்த்தையில்லை 

உடலில்  உயிரில்லை அனாலும் 

பசிக்கும்  வயிறு இருப்பது 

புரித்து  வருந்து  தனியாய்! 

எனக்கே எனக்காய் !

 இற்றை காலம் 

கொள்ளும்  வாழ்வின் இருளின் 

பாதை  நாளை மனிதன் 

மிருகமாகும் விதிக்கு இன்றைய 

வெளிச்சம் !

Tuesday, 26 May 2026

குட்டிக்குட்டிச் சாரல்......,

இந்த  வெள்ளையாடை 

விருந்தாளிக்கு  அந்த 

வெள்ளிக்கொலுசு 

மௌனவிரம் 

பூண்டது  தனியாய்!!


Friday, 22 May 2026

விழியேடு மாமன் மொழி பேசும் சாரல்.......................,

அத்திப்பூ சிகப்பழகில் 

ஆதவன்  முகில்குளிக்க 

பவளமல்லி வாசத்தில் 

மாமன் தோப்புக்குள் என் 

மனசு  தான்  குளிக்க 

வெட்டிக்கொண்டு ஓடுது 

ஆத்துநீருக்குள்  கயல்விழி 

கட்டிப்போட முடியாமல்  !!

எட்டுத்தொட்டு  எடுத்து 

பதுங்கி நிக்கின்றது கால்கள் 

மாமன்  அழகில் !

கொட்டி கிடக்கின்றது வேர்வை 

எடுத்து விதைக்கும்  விதைநெல் போல் !!


 

Thursday, 21 May 2026

குட்டிக்குட்டிச் சாரல்......,

 சிந்தி சிதறி 

விழுந்த கற்பனைக்குள் 

 தத்தளிக்கின்றது காதல் 

 எடுத்துவிளையாடும் 

மனிதன்  இதயம்  புரியாமல் !!

Wednesday, 20 May 2026

விழி கண்டு மொழி பேசும் சாரல்........................,

 சந்திக்கு சந்தி  ஒரு காவல்! 

தெய்வமனது தமிழக்கு ! 

  இருந்தும் 

இல்லம் காக்க குலசாமி 

குடும்பத்தலைவன்!!  ஆனாலும் 

சிலநேரம் கல்லாய் நிற்பதேன் 

பெண்மைக்கு !!காட்டுக்குள் 

வாழ்ந்தயினம்  வீரத்தை  கடவுள் 

ஆக்கியும் வீரம்தேடும்  பெண்மைக்கு 

மானம் காக்க கையெங்கே?

வெட்டுண்டுகிடக்கின்றதோ  !இருந்தும் 

வெட்டுண்ட  கையும்   

மானம் சிதைத்திட  கட்டுண்டு வரும் !

பெண்மையென்றால் !     

குட்டிக்குட்டிச் சாரல்......,

 சதியாடும்  ஆட்டத்திற்குள் 



விளையாடும்  திறமை 

கொண்டவன்  ஆடும்  ஆட்டமே 

விதியாகின்றது  சிலநேரம் 

Tuesday, 19 May 2026

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 எல்லைக்கு!ஒரு சாமி !



நீ இருந்துமேன்  சாமி ?

தெருவிற்கு தெரு போராட்டம்!! 

வெள்ளந்தி மனிதரெல்லாம் 

வேட்டையாடும் மனிதனுக்கு 

உயர்ந்து நிற்க்க

 நீதியும் உன்னிடத்தில் 

 உண்டா சாமி  !!

கருவிற்கும் கருவறுக்கும் 

கயவருக்கும்  கருணைக்கு 

நீயேன் சாமி!!  பொய்யோ 

மெய்யோ  கற்பனையோ! 

எழுத்து  வாசாமி நீதியின் 

 காவலாய் !

விழுந்தே  கிடைக்கும் 

மனிதனுக்கும்

பிறந்தும் வாழப் போராடும் 

பெண்மைக்கும் 

துணை யார்  சாமி !!   

 


 

குட்டிக்குட்டிச் சாரல்......,

 எல்லா  போதைக்கும் 



பின்னால்!  

நாம்  கற்றுக்கொள்ளா 

ஒரு  பாடம் 

 வெவ்வேறு உருவில் 

சிக்கித்தவிக்கின்றது !! 

உள்ளதை நல்லதை  

செய்கின்றவன்!

 இருக்கும் வரை கோமாளியாகின்றான்!!

Monday, 18 May 2026

குட்டிக்குட்டிச் சாரல்......,

 மனிதனுக்கு  புரியாப்புதிரே 

தாய்மைக்கு  தாயான 

குழந்தையே !

உன்னோடு இணைந்த 

என்னோடு பூக்கும் 

பூபாளம் யாருக்கும் 

கிடைத்திடாப்பொழுதுகள் !

கீற்றுகுள் இருவிழி தூறல் சாறலில்............,

மரணங்கள்  மன்னிக்கா 

மண்ணில்  மரணித்த  உயிரும் 

மன்னிக்கா அடையாளமே 

நாம்!!விடுதலை மூச்சுக்குள் 

கண்ணீர் !

விதைக்கப்படடதோ  அறுவடையற்று 

அகதியாய்! கிடக்கின்றது 

விரும்பியும்  விருப்பாமலும் நாம் 

பிளவுபட்டே விதிசெகின்றோம் 

கொடுத்தவர்  தெருவில் 

எடுத்தவர் மாளிகையையில் 

இறைவனிடத்தில் மன்னிப்பு 

 கடிதங்கள் மூட்டை மூட்டையை !!

Wednesday, 13 May 2026

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

புறம்  பார்த்து  புறம்  பார்த்து 

அகம் பார்க்க  மறந்துவிடட்டோம்  

இனம் பார்த்து  குலம் பார்த்து 

நம்மையே  நாம் பார்க்க மறந்துவிட்டோம் 

வழிமுடி  விழிமூடி  சிந்திக்க 

மறுக்கின்றோம் 

வந்ததை  மறந்து விட்டு 

வருமென காத்திருக்கின்றோம் 

கையில்  இருப்பதை  கேலியாக்கி 

கைபிடித்தே   கலவரம்  செய்கின்றோம் 

கருணைக்கும்  கடவுளுக்கும் 

தூரமாய்  பணத்தோடு  விளையாடுகின்றோம் 

வருவதை  ஏற்காமல்  அழித்தழித்து 

அழிந்திடவே துடிக்கின்றோம் 



Sunday, 10 May 2026

குட்டிக்குட்டிச் சாரல்......,

முயற்சி ஒன்றே 

வாழ்வின் முதல் வெற்றி 

நம்பிக்கை ஒன்றே வாழ்வின் 

முதல் சிகரம் 

மௌனம் ஒன்றே வாழ்வில் 

சிறந்த ஆசான் !


Thursday, 7 May 2026

கனவின் புன்னகைக்குள் ஓர் சாரல்..........

விதியோடு !
விளையாடியபடி  
தனியாக  போனவள்
 கண்ணுக்குள் !
விழுந்தெழும் 
 கனவுகளுக்குள்  
விழுந்தவள்   இதயம் சந்தோஷத்தால் 
எழுந்திடவில்லை !!இப்போதுதான் 
அவளுக்கும்  புரிகின்றது 
அவள்  இதயம்  பூவாக மலர்வதே 
அவள் கனவென்று !!

Tuesday, 5 May 2026

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 நாம்!

ஏன் அடுத்தவர் 

வாசலில்  கையேந்தி  

அடிபடுகின்றோம்! 

நமக்கான தலமை நம்மிடம் 

இல்லையா?

 இல்லை கைகட்டியே 

நின்று பழகிவிட்டோமா 

நல்லதை  நமக்கா  நமே 

தேடாமல்  குழம்பித்தவிக்கின்றோம் !

மற்றவர்  வாசலில் !

Friday, 1 May 2026

குட்டிக்குட்டிசாரால்..........

 சில உறவிற்குள் 

இதயம் துடிப்பது 

உயிர்வாழ் 

ஆனால்  துடிப்பிலா 

ஒரு துடிப்பின் ஓசை 

என் சுவாசத்தின் துடிப்பாகின்றது


விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,


 ஒடியடிவிளையாடியகால்

 நின்று நிதானமாய் சிந்தித்து 

திரும்பி ஓடும் வாழ்க்கைகாலத்தில்

முழுமை போராட்டம்  தனக்கான 

உழைப்பின் தொடக்கம் 

அவரவர் தொடக்கம் !!

இருந்தும்

விவசாயின் உழைப்பிற்கு 

 உயிரின் தொடக்கமும் 

முடிவும் முடிவில்லா 

போராட்டம்  !!

ஏழ்மையின் கண்ணீருக்குள்

சுகந்திரம் தேடும் முதலைகளிடம்

விழுந்து போராடுகிறது தொழிலார்த்தினம்!!