Wednesday, 29 April 2026

விழி கண்டு மொழி பேசும் சாரல்........................,

 அதிகாலை வேளை 

அவசரஅவசரமாய் 

 வேலையை  நோக்கி 

ஓடியவேளை  

சின்னதாய்  ஒருதூறல் 

மெல்லமெல்ல சரலாகி 

என்னை  தீண்ட 

 அதைக்கண்டுகொள்ள 

நேரமில்லா  என்வேகத்தை 

சடடென  தடுத்தது  தென்றல் 

சடென  கோவமாய்  மரத்தின் கீழ் 

நின்ற  என்மேல் 

 கொஞ்சமும்  யோசிக்காமல் 

மரத்தின்  பூக்களை  என்மிது 

கொட்டியது!  நின்று ரசிக்க 

நேரமில்லாமல்  குடையை  விரித்தபடி 

வேகமா  நடந்தேன் !! அந்த தருணத்தை!


குட்டிக்குட்டிச் சாரல்......,


அன்று  ஒருநாள்!

அழகிய மணப்பெண்போல் 

புன்னகையோடு 

என்னை  வரவேற்ற மரம்  

இன்று  என்னைபோல்

 வண்ணமிழந்து  வாடியே 

நிக்கின்றது  தூறலோடு 

தென்றல் கைகோர்த்ததாலோ !! 



 

Friday, 24 April 2026

மழையின்சாரல்.................,

 கொட்டும்  மழைக்கு

மட்டுமே  தெரிந்தது 

அவள்  கண்ணீர்த்துளிகள் !

தூரத்தே  ஒதுங்கிய 

 விழிகளுக்கு தெரிந்தது 

அவள்  சிறுபிள்ளை  தனம் 

விதிக்கு  தெரிந்தது 

 அவள்  மரணம் 

ஆனால் !

மின்னலுக்கு  தெரியாமல் 

போனது  அவள்  ஆசைகள் 


Wednesday, 22 April 2026

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 தேசம்  கடந்து  நேசம் 

கொண்டாடுகின்றது  இற்றைப்பொழுதை 

சந்தோசமாய் !

விடியல்  காற்று கொஞ்சம் 

 சுகந்திரமாய் வீதியில்  வீசுகின்றது 

நாளைய  உதயதம்  தழுவ  

முகங்கள்  கொஞ்சம் அடையாளம் 

மறந்து  கைப்பிடித்தே  நிக்கின்றது 

வீதியெங்கும்  !

நிழல் படங்கள் கொஞ்சம் 

அழுகின்றது  நியமில்லை 

தம்  உருவமென்று  புதிய 

உதயம்  எழுகின்றது  எல்லா உயிர்களுக்கும் 

பொதுவாய் !!


Monday, 20 April 2026

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,


சின்னதாய் ஒரு பயணம் 

கூடியபயணிகள்  

எதை எதையோ 

தேடியவடிவாய்  கைபேசியோடு !

நடுவே நான் எதுவும்  தோன்றாமல் 

வேடிக்கை  பார்த வேளை 

பாதையோர  மரமொன்று 

அழகிழந்த மணப்பெண்ணொருத்தி 

அழகுக்கலை பெண்ணின் 

கையில் கிடைத்தவள் போல் 

அழகான இளஞ்சிகப்
பில் 

புன்னகைத்தது! 


Friday, 17 April 2026

குட்டிக்குட்டிச் சாரல்......,

யாரோ ஒருவரிடம் 

நம்மீதான அன்பிற்க்காய் 

சண்டையிட்டு போராடும்  

இயந்திர நிமிடங்களைத்தேடாமல் 

எனக்கான  

பாலைவனத்திற்குள் 

ஒரு பூக்களின் 

சிறைச்சாலைக்கூண்டுக்கிளியக்கின்றேன் 

 

Monday, 13 April 2026

குட்டிக்குட்டிச் சாரல்......,

 அவள்  வலதுகண் 

துடிப்பின்  தவிப்பை 

அவள்  இடது கண் 

ரசிக்கின்றது !

பாவம்  அவள்! 

அவள்  கண்களுக்கு 

புரிந்தது 

அவனுக்கு  புரியாமல் ஏன்  போனது  !!


விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

முதுமை  வந்தால் 

முகம் கொஞ்சம் 

 தொலைகின்றதோ 

முடிவுரை  காலத்து முகம் 

கொஞ்சம்  ரசனை  அற்றுத்தான் 

போகின்றது!கொஞ்சமும் 

வசதியில்லை என்றால் 

அருவருக்கவும்  வைக்கின்றது

 தானாய் வரும்  தூக்கத்து 

கனவுகளே  நாங்கள் !!!

    

Friday, 10 April 2026

குட்டிக்குட்டிச் சாரல்......,

விழிக்கும்  பொழுதுக்குள் 



விழிமூடிடத்துடிக்குது 

இதயம்!