புதுப்பார்வை
நீ பார்க்க
இளமை கொஞ்சம்
களவுபோக
மனமும் கொஞ்சம்
வண்ணக்கோலம் போட
இதயம் கொஞ்சம்
புன்னகைக்க
முகமும் கொஞ்சம்
காட்டிக்கொடுக்க
விழிகள் கொஞ்சம் கொஞ்சிப்பேச
விடைகள் தேடி
கொஞ்சும் விழிகள்
அலைய
அலையும் விழியின் காதிற்குள்
அலைமோதிய
அம்மாயென்ற குரல் கேட்டு
தொங்கிபோன முகங்கள்பார்த்து
கண்ணடித்தே நடந்தாள்
மகனின் கையைப்பற்றி!!!
.jpg)
No comments:
Post a Comment