Monday, 31 August 2026

விழியேடு மாமன் மொழி பேசும் சாரல்.......................

ஆற்றோரம்  அருவி காற்றாட  



தோப்புக்குள்  சோடிகிளிகள் 

காதல் கூத்தாட !

 ஒற்றையில்  போன மக 

நெஞ்ச்சுக்குள் மாமன் நினைப்பு 

நெருஞ்சி  முள்ளாய்  குத்த 

அருவி ஓசை  வந்து   காதோடு 

 காதல்  பேசவில்லை 

தென்றல்காற்று இசையாகி 

பாட  தூண்டவில்லை 

தழுவியேடும்  கிராமத்து 

இசைகள்  காதோடு  கதைகள் 

கூறவில்லை  அவள் நிற்க 

கால் தழுவிய  நீரும் 

முட்டிமோதிய  மீனும் 

அவளின்  உணர்வோடு  விளையாட 

அழைக்கவில்லை  

அனாலும்  அவள்  விழிகள் 

மட்டும்  மாமனை  தேடுது 

தானாய் !!நெஞ்ச்சுக்குள் 

அவள்  பூட்டிவைத்த  நினைவுகள் 

அவள்  விழிகள்  தேட பேசுது 

அவளோடு !!


விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

போதுமடா  சாமி நீ 


தந்த  வலிகள் !

கொஞ்சம் ஓய்வாய் 

 இருந்தால் தான் என்ன? 

வீழ்ந்து விட்டபின்னும்  ஏறி மிதிக்கும் 

உந்தன் கால்கள்

 மட்டும் கல்லில்லையா ?

எழுந்திடா  சிலையே  நீ 

விழுந்தவள்  மேல்  நடப்பதெப்படி ?

வீழ்ந்தே கிடந்தாலும் இல்லை 

புதைந்தே போனாலும் நீ 

ஓரக்கண்ணால்  பார்த்தாலும் 

இல்லை  நெற்றிக்கண்ணால் 

எரித்தாலும்  படைத்தவன் நீயே 

என்கேள்விக்குப்பதில்  தேடு !!!

உறவை  உருவாக்கியவனும் நீயே 

மனிதனை  குறையாய் 

படைத்தவனும்  நீயே 

மனிதனுக்குள்  அரக்கனை  

மனிதனாய்  நடிக்க  வைத்ததும்  நீயே 

பூவினை காசிக்கிடும்  மிருகத்தை 

மனிதனாய்  காப்பதும்  நீயே 

நல்லவர்களை  கெட்டவர்களாய் 

காட்டுவதும்  நீயே  அறிவின் 

கதைவடைத்து  மனதின் வழியால் 

மனதினை  முட்டாளாக்கி 

மனிதனை  வீழ்த்திடுவதும் நீயே 

வீழ்த்த  மனிதனின்  மேல் 

 ஏறி  நடப்பதும்  நீயே  !!

நான் தேடும் பதிலும்  

என்  முன்  நிற்கும்  குறையும் நீயே  !!

நிறைவு இல்லா  உலகில் 

என்னை  குறைகாணும்  கண்களின் 

பார்வையும்  நீயே !!!

  


Thursday, 27 August 2026

குட்டிக்குட்டிச் சாரல்......,

 அவள்!!



  கால்கொலுசு 

களவு !போனநாளில்

 இருந்து !!அவள்!

 இசைக்குள் தொலைந்து 

போனது !அவள்

 காதல் மொழி 


குட்டிக்குட்டிச் சாரல்......,

கொஞ்சநேரம் 

 கொஞ்சிப்பேசிய 

கொஞ்சும் தூறலின் 

கொஞ்சும்  அழகினை 

கொஞ்சமும்  ஏற்கா வானவில் 

மழைத்தூறலின் மேல் 

கோவம்  கொண்டு  

குடையானது !!

குட்டிக்குட்டிச் சாரல்......,

 விழுந்து  சிதறிய 

பனித்துளிகள் பூவின் 

முகம்  துடைத்து சிதறிய 

பண்ணீர்துளிகளாய்  அவள் 

பாதம்  கழுவியபோது 

அவள் வாசம் பேசிட 

வண்டுகள் கூடிசங்கம் 

வளர்க்கின்றது !!


குட்டிக்குட்டிச் சாரல்......,

அவள்  நிழலுருவத்திற்கு 



கிடைத்த  நேசம் அவள் 

உணர்விற்கு கொடுக்கா 

நியமே!!   அவள்  உயிரில்லா 

ஓவியபொம்மையானாள்!!! 

Tuesday, 25 August 2026

குட்டிக்குட்டிச் சாரல்......,

முற்தரை பாதையில்


 

முழுநேர பயணம் !

ஓய்வின் நாற்காலி 

 சுடுகாட்டில்  ஓய்வாய் 

காத்திருக்கின்றது !  

Friday, 21 August 2026

குட்டிக்குட்டிச் சாரல்......,

என்!


சாலை ஓரங்களில் கூட 

ஒரு !

நிழல்  மரத்தையும் 

 காணோமே 

நான்  நடக்கும் 

பாதையை  முன்பே 

கணித்த  இறைவன் 

செய்த சதியோ  விதி !!!


விழி கண்டு மொழி பேசும் சாரல்........................,

ஒவ்வெரு  உறவும் 



ஒவ்வெறு நிலையில் 

விட்டுப்போகும்  போது

சொல்லும்  பொய்களை 

நம்பும் சொல்  நேசம் !!

காலம்  கடந்து  தேடும் 

வயது  கற்று  தரும் பாடம் 

உனக்கான  வாழ்க்கை 

உன்னோடு !!!அன்னை 

மகன்  உறவானாலும் 

தூரம் வரும்  வரைதான் 

கைகள் !!

Thursday, 20 August 2026

குட்டிக்குட்டிச் சாரல்......,

 மழையின் தூறலில்  



விழுந்தெழுந்து 

மழைக்காற்றில் அசைந்தாடும் 

பூவைப்போல் 

அவள் நனைய !அவள் 

  உடல் குளித்த நீர் 

தன் குளிருக்கு அவள் 

வெப்பத்தை தன்னோடு 

கொண்டு  செல்கின்றது மெல்ல !!



Wednesday, 19 August 2026

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 அவன்!



 தன் வாழ்க்கைக்குள் 

அவளை!!

  கட்டி போட்டு  விட்டு 

நினைவினை  காதல் 

செய்கின்றான்!

அவளோ!!

 அவன்  வாழ்க்கையின் 

ஓரமாய் நின்று 

 போகும்  நாட்களை 

வேடிக்கை  பார்க்கின்றாள்  

இருவர்  வாழ்க்கையும் 

நாளுகண்களின் 

பார்வைக்குள்  வாழ்கின்றது !!



குட்டிக்குட்டிச் சாரல்......,

 பல சடங்க்குக்குள்!! 

நாம்  நம்மை 

கட்டிப் போட் டாலும் !!கட்டிகாத்திட 

இரு  மனசு தன்னைத்தானே  

ஜெயித்தித்திட்டால் தான் !

நம்  சடங்குக்குகள் நாம்  ஜெக்கின்றோம் !!


Monday, 17 August 2026

குட்டிக்குட்டிச் சாரல்......,

தூக்கி சுமந்த வலி



சுகமாய்  ஒரு  நாளில்  

தலைகோதி  தூங்க 

வைக்கின்கிறது  தாயாய் !! 

ஏங்கம்  கொண்ட  விழிகள் 

பாசாங்கு செய்கின்றது 

தூங்குவது  போல்!! 

Wednesday, 12 August 2026

விழி கண்டு மொழி பேசும் சாரல்........................,

 இல்லம்  தழைக்க 

உறவுநிலைக்க கட்டிக்காத்து 

 தன்னைத்தானே கட்டிப்போட்டு 

ஓடிய உயிருக்கு  தெரியா 

இல்லத்து  மகிழ்சசிகள்!!!

 இப்போ !!

இல்லம் நில்லாதே  ஓடுது 

தனிமனித  சுகந்திர 

காற்றை தேடி !காமத்தை 

வென்ற தந்தை தந்த 

பாசம்  தந்தையான 

தந்தையைக்கும்  தாயுக்கும் 

குழிபறிக்க !

இல்லம் தேடுது தந்தை தயையை !

தொலைந்த அன்பில் !

விட்டுப்போய்! திரும்பா முடியாமல் 

தெருவுக்கு  தெரு  அழுகின்றது 

குழந்தைகள் பாசம் சொல்ல!!

ஒரு  பாசக்கதையோடு !!


விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 காதுகொடுத்து  கேட்டிடும் 

நாட்களில் நான்  காதுகொடுத்து 

கேட்டிடா சொல் அப்பா 

இப்போ!!  காதுகளில்  ஒலித்திடும் 

சொல்லும் அப்பா!1 நின்று 

நிதானிக்க  முடியா 

நிதானம்  அன்றில்லாக்கொடுமைக்குள் 

இருந்தும் தேடமால்  சொல்லுக்கு 

சொல்லு சண்டையிட்டு 

புரிந்ததும் புரியாமல் 

தொலைத்த  உயிர் அப்பா!!!

இதயசிறைக்கதவிற்க்குள் 

சிறைவைத்த  உயிரின் 

இதயம்  புரியா துடிப்பிற்குள் 

நின்று  பேசிய உணர்வு 

கேலிபேசிட்டாலும்   வலிக்கின்றது 

என் புரிதலில்லா காலம் பார்த்து !!

இருந்தும்  இப்போதும்  என்னை 

ஏமாற்ற  நானே சொல்லும் 

உயிர்  ஓசை அப்பா !!!

 

Tuesday, 11 August 2026

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 கண்மூடிதனமான 



 நம்பிக்கைகளை 

கைபிடித்து சேர்ந்தபோது 

எல்லா மனிதனும் 

ஓன்றை நம்பினான்!! 

வெவ்வேறு  திசைகள்

 வெவ்வேறு 

நம்பிக்கைகள்! 

வெவ்வேறு பாதைகளாய் 

கடந்தமனிதன் !

கண்திறந்த நம்பிக்கைகள் 

தனிமனிசுகந்திரம் 

பெற்று மூழ்கி தோற்று போகுமோ 

மனிதத்தேடலில்  

குட்டிக்குட்டிச் சாரல்......,

 அவள்!

தொலைத்த அப்பாவின் 

நிழலை ! நியமில்லா நீ 

தருவாய்யென அவள் 

செய்த  கற்பனைகள்  அவளையே 

அழித்தது  நிஜயம் !!

Monday, 10 August 2026

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 ஆணுக்கு!! 

என்ன தேவையென  

பெண்ணை  படைத்த 

இறைவனை விட அறிந்த 

உலகிற்கு  பெண்ணிற்கு 

என்ன தேவையென  விவாதித்தும் 

விடைகளை தொலைத்தே 

தேடிக்கொண்டே  இருக்கின்றது  

உலகு !!இந்த உலகிற்குள் 

பிறந்த  அவளுக்கும் புரியவில்லை 

அவளை  வைத்து பிழைக்கும் 

கற்பனைவாதிகளுக்கும் 

தெரியவில்லை  தெரிந்ததெல்லாம் 

ஒன்றே !!அதுவா 

ஒன்றுமே இல்லை 

குட்டிக்குட்டிச் சாரல்......,

 போகும்  பாதை போகமுடிய 

முற்காடு தான்  ஆனால் 

கைகள்  கத்தியானதால் 

வலிகள் அதிகமாய் காயத்தை 

பார்க்கின்றது !!

குட்டிக்குட்டிச் சாரல்......,

 அவள்  எழுதிய 

ஏடுகளில் 

கிழித்தெறியப்படட

அவள் சந்தோசங்கள்

  இன்னும் 

யார்கையிலும்   சிக்கவில்லையே 

அவள்! இன்னும் 

 கானல் நீர் 

பூந்தோட்டத்திற்குள் 

பூப்பறிதே சூடுகின்றாள் 

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

வெண்ணிலா  இரவுக்குள் 

தூக்கம்  தொலைத்து 

ஓடும்  அவள்  சோர்விற்குள் 

இல்லா ஒரு துணை  

இறைவன்

எழுதிய   புத்தகத்தின் 

வெள்ளை காகிதத்தின்  

வெள்ளை யெழுத்துக்கள்  

யாராலும்  படிக்க  முடியவிடடாலும் 

அவள்  தனிமை மொழிப்போர் 

செய்கின்றது  அவளோடு 

நட்பின் சாரல்.............,

 தேடுது கண்கள்  



அவனைப்போல் 

ஒரு ஆணை  

கோடி கொடுத்தாலும் 

கிடைக்காது  போடி 

என்கின்றதிமிரில் 

என்னை  கண்டுகொள்ளாமல் 

அவன் 

கொஞ்சம் மறந்து

 விட்டவன் போல் அவன் 

சந்தோசமாக  இருந்தாலும் 

எங்கோ  தொலைத்த 

சின்ன சின்ன சந்தோஷத்தை 

தேடும்  குழந்தையாய் 

என்னை  தேடுவான்  !!

அப்போதும்  கோவம் மறந்து 

நான்  சொல்லும்  சோகத்தை 

முகம் சுழிக்காமல் 

மீண்டும் கேட்பான் 

புதிதாய் கேட்பது போல் 

நடித்தே !!இருக்கும் போதும் 

விழும் போதும் விலகினாலும் 

வலிக்கும்  நேரத்தில் 

சொல்லாமல்  புரிந்த உறவு 

எப்போதும்  அவன்  தான் !!!


குட்டிக்குட்டிச் சாரல்......,

நிலைத்த நினைவிற்குள் 

நினைக்கும்   நினைவினை 

நிலையென  மட்டும் வைத்த 

நினைவிற்கு  சொல்லிப்போ 

கொடுமையாக  கொல்லும் 

விசம்  நான்  தானடி உனக்கு என்றும்  !!!

 

குட்டிக்குட்டிச் சாரல்......,

ஒரு  இரவின் விழிப்பு 



பகலின்  அழகை 

கொன்று  விடுகின்றது  

குட்டிக்குட்டிச் சாரல்......,

விழியின் தோல்வியில் 

தூக்கம் துக்கமானது 

வயதின் தோல்வியில் 

ஏக்கம் எழுந்து  நடக்கின்றது 

வறுமையின்  தோல்வியில் 

வறட்சியின்  கனவு  

வாசலில்  பூசணி பூ 

வைக்கின்றது  

விழி கண்டு மொழி பேசும் சாரல்........................,

அயல்   வாசல்  கதவின் 



முன்  யாசகம்  கேட்டிடும் 

அறிவின்  முதிர்ச்சி !!தன் 

வாசலில் ஒரு  மனிதனையும் 

தலைவனாய்  அங்கிகரிக்கா 

அகங்காரத்தின் வீழ்ச்சி   

இங்கே !!ஒரு 

இனம் பேசும்   அறிவு 

தனிமனித தாக்குதலுக்குள் 

ஒரு  தலைவனும்  தோன்ற 

இனத்தின் தோல்வி !!வார்த்தைகளுக்குள் 

மாயாயலம் ஏழையின்  கனவிற்குள் 

உணவு !அடிவயிரோ  வலியில் !!

பேசிப்பேசி  அழித்த பெருமை 

நம்மையே  சாரும் !!




Friday, 7 August 2026

விழி கண்டு மொழி பேசும் சாரல்........................,

 மனமென்னும்  !!

சாக்கடைக்குள் விஷச்செடிகளை 

 நட்டுவிடும்  அறிவிற்கு 

தெரியாமல் போகின்றது 

உயிரை!!

 கொஞ்சம் கொஞ்சமாய் 

கொல்லும்  விஷத்தையே 

மனதிற்குள்  பதியம் போட்டு 

வார்க்கின்ற கொடுமையை 

தடுக்கின்ற ஆயுதமே தானென  !!

Saturday, 1 August 2026

விழி கண்டு மொழி பேசும் சாரல்........................,

கழிவறைகளிவோடு நின்று 


கழிவிய கழிவறை பணத்தில் 

பெருமைகொள் சமூகம் 

ஒன்று !! பணத்தால்  தன் 

சாதிதொலைத்து  சாதிபெருமை 

பேசும்  சிறப்பை  கிராமத்து 

பெண்ணிவள்!புன்னையோடு 

  வேடிக்கை கொள்கின்றாள்! 

இருக்கும் !இல்லாமலும் இருக்கும் 

ஒன்று  இருக்க  தேடும் 

வேடம்  சிறப்பாக 

மனிதனிடம்  இல்லாமல் 

போகா  ஒன்றை  பார்த்து

பெருமை கொள்கின்றது !!