Tuesday, 30 June 2026

விழி கண்டு மொழி பேசும் சாரல்........................,

 அவளுக்காய்!!அவள் 

இருப்பதாய் நினைத்த 

  ஒற்றை  சொல் இருந்தும் 

ஏனோ இல்லாமல் 

 போய்  வாழ்வதாய் ஏக்கங்கள் 

சூழ்ந்தே 

விழித்த  இரவுக்குள் 

புரட்டிய  பக்கத்திற்குள்  விழிமூட 

துடிக்கும்  தூக்கத்திற்கு 

தாலாட்டியே தலைசாயும் 

மடிதூக்கத்தை  தேடியே 

புரண்டுகொண்டே இருக்கின்றது!! 



Thursday, 25 June 2026

குட்டிக்குட்டிச் சாரல்......,

கைகள் வெட்டுண்டு

 வீழ்ந்தாலும் 

கால்கள் கட்டுண்டு  

கிடந்தாலும் 

நல்மனதின்  சிந்தனை 

நல்விதையே  விதைக்கும் !



Tuesday, 23 June 2026

விழி கண்டு மொழி பேசும் சாரல்........................,

 சுமந்த  கருவை 

 காக்கும் 



பெருமை  கொள்

 பெண்மை 

சிறுமையாகி!  இங்கே 

தனியே!  கிடக்கின்றது 

போற்றும்  சமூகமும் 

தூற்றும்  சமூகமும்

 தூரதேசத்து பார்வையானது  

உண்மை! 

வெளியே  அழகின்  வேடம் 

உள்ளே    வலிகள் 

சுமந்திட  முடியாமல் 

பெண்மைக்குள் போராட்ட 

களம் ! அறிவின் திறனை 

அழித்து 

தாய்மையை  கொன்று

  உயிரை குடிப்பதுவும் உண்மை !! 

காலத்தின்  ஒட் டம் 

அனைத்தையும்  அள்ளிக்கொண்டோடுத்து 

தனியாய் !! சொன்னால் புரியும் 

என்ற பார்வைகள்  குருடாகி 

சொல்லாமல்  ஓடுது  வாழ்க்கை !!


Thursday, 18 June 2026

குட்டிக்குட்டிச் சாரல்......,

என்னைத்தேடிக்கொண்ட 

என்னை!

தேடவிடாமல்  திருடிக்கொண்டு 

போன  இயற்க்கை!  

கொடுத்துவிட்டு  போன 

காட்டு முல்லை!  மூடிவைத்தே 

வீசுகின்றது  காடெங்கும் 

என்  வாசத்தை !


விழியேடு மொழி பேசும் சாரல்.......................,

 தூக்கம் கலையா விழி 



ஓடும்  கைகால்களை 

நில்லென  கெஞ்சியே நிற்க 

வேள்வித்தீயாய்  சுற்றியே 

 எழுப்பியது  கோடைகாலத்து  

ஆதவன் !!

மனதின்  சோர்வினை  சுட்டதோ 

விழித்து கொண்ட என்  விழிகள் 

வாவென கெஞ்சு  என்னை !!

Wednesday, 17 June 2026

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 என்ன வாழ்க்கையை 

நான்  சிந்திக்கும்  

நொடிகள் கூடிப்பேசி 

கொடுத்த  சாபமா நான்  !!

சொல்லமுடியா  தடைகோட்டுக்குள் 

அடைத்து 

சடுகுடு ஆட்டம் ஆடி 

விளையாடுகின்றதே என்னோடு !

விதியென  எதிர்த்தே 

விளையாடிடாவ !!  இல்லை 

அடைக்கப்பட்ட  கோட்டுக்குள் 

மௌனமாய்  மோதிவிளையாடி 

தோற்க்கவா! சொல்லிவிட்டு 

போகவா  இறைவா !!!



Saturday, 13 June 2026

விழி கண்டு மொழி பேசும் சாரல்........................,

 தொட்டு இழுக்கின்றது

 தென்றல் 

கொஞ்சம்  தூரமாய்  ஓடுது

 மனசு 

விட்டிடாது   துடிக்கின்து

  இதயம் 

விட்டுவிட  சொல்லுது 

உணர்வு 

கூடிப்பேசி சிரிக்குது  

நினைவு  

தட்டிநிறுத்தி கால்கள் தொட்டு 

 விளையாடுது 

சாய்ந்தாடும் புற்கள்!கொஞ்சம் 

மறக்கு துளிகள் !



Friday, 12 June 2026

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

வார்த்தைக்குள்  சிக்கிக்கொண்ட 

உறவுகளே!


 

வார்த்தைக்கு  வார்த்தை 

தன்னை  நிருபிக்க 

  வார்த்தையின்றி 

தகராறுக்குள்  தடுக்கி  விழுது 

கேலிக்கூத்தாக்கின்றது!

இங்கே !

ஒற்றை  சுயநலத்தேவை   

வார்த்தைக்கு  கொடுத்த 

உறவே உறவற்று போக  கரணம்!!


 

Thursday, 11 June 2026

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 மனிதனை அடிமைகொள்

வழிகள்  ஆயிரம்! ஆனால் 

இப்போ!!

 அடிமை  கொண்டது 

ஆடம்பரம்!

பணமெனும் கருவி 

பூசும்  வர்ணத்தில் 

 மயங்கி கிடக்கின்றது 

மனிதம்!

  இருப்பவன்  கையில் 

இழந்தவன்  பொம்மையே !

கண்ணுக்குள்  துள்ளும் 

கண்ணீர்த்துளிகள் விழுந்தாலும் 

நின்றாலும்  வேடிக்கை மனிதனுக்கு 

எல்லாம்  ஒன்றே !!

நீ  உண்மை எனில்

 போலி பொய்யெனில்  

நீயே  இருந்தும் போலியே  

நல்ல  மனிதனாய்  !


குட்டிக்குட்டிச் சாரல்......,

வெறுமைத்துளிகள் 

சிந்தி சிவந்த  காலமும்  

கருணையற்று கடந்தது  

தனிமையில்  இருந்தும் 

வெளியில்  ஆயிரம் மாயமேககூட்டம் 

பாலைவன மண்மேல் 

கருணைமுகம்போல் !!

Tuesday, 2 June 2026

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 முதல் முறை  ஒரு 

உணர்வு  அன்பை 



அழகாக்கின்றது  இதுவரை 

பொம்மையின்  கையில் 

சிக்கிய  பெண்மை  

உணர்வின்  கையில் 

உணர்வாகின்றாள் 

 இனிவரும் காலம்  

ஆண்மை  இருப்பதுவும் 

பெண்மையிருப்பதுவும்  ஒரு 

பூமியின்   இரு வேறு உலகு !

தெரியாமல்  போனாலும் 

தெரிந்தே செய்யும்  தவறுகளால் 

தனியாகின்றது  இருவர்வாழ்வும் !! 

இருந்தாலும்  தேவையின் தேடல் 

அழிக்கப்போகின்றது  நல்லறத்தை !!


மழையின்சாரல்................

 சோர்ந்தே போன



உணர்வினை தட்டியெழுப்பி 

சடுகுயாடி  துளியோட 

வைக்கின்றாய் 

கொஞ்சம் கூட  அச்சப்படாமல் 

மொத்தமாய்  நனைத்து 

மொத்த உடலும் நடுங்க 

உன்னை  திட்டவும்  முடியாமல் 

வெறுக்கவும்  முடியாமல் 

நள்ளிரவில் நான் ஒரு 

சூரியத்தீண்டல் பூவாய் 

நிக்கின்றேன்!

Monday, 1 June 2026

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 கொஞ்சம் கொஞ்சமாக 



குறைந்து கொண்டே போகும் 

வாழ்வின் எல்லைக் கோடு

கொஞ்சநேரம் ஒய்ந்திருக்க. 

சொன்ன நேரம்!

 கொஞ்சமும் யோசிக்காமல்

 என்  கைபிடித்து 

என்னை பார்த்து  கேட்டது 

உன் கைபிடித்து

காதல் செய்யும் நிமிடங்கள் 

 கைநீட்டும் தூரம் வரை 

காத்திருக்கா?இல்லை  உன் வாழ்வில் 

தான் பூத்திருக்க 

உன் துயரத்தில் 

நீ  தோள்சாந்து  கதை பேசி 

உன்னை தேற்ற உன் பார்வையின் 

தூரத்தில் ஓர் உறவு 

 உனக்குத்தான்  காத்திருக்க? இல்லை 

உன் வாழ்வில் சேர்ந்திருக்க 

நீ அழும்  துளிகள் 

உன் விழி குளமதில் ஆறாகி ஓடமுன்  

உன் பாரம் தாங்கும் நின்மதி 

உனக்கிருக்க!!  இல்லை 

உனக்கென ஒரு உயிர்பிறந்திருக்கா  

 ஓடுகின்றாய் 

ஏன் என்று கேள்விக்கு

 விடையின்றி !பேசுகின்றாய். 

உன் பேச்சில் அனைவரும் 

உன்னை  தேட 

ஆனாலும் நீ தேட உனக்கா 

 நியாமற்ற உன் நிழலே நியம் 

நியமாய் சொல்லு நியதானே !