Sunday, 15 May 2022

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................


 விடியலில்  ஓரு

தீ என்னை சுற்றிபிடிக்க

ஓன்றை உயிரை 

காப்பாற்றிட  போராடினேன்

பயமின்றி வழிதேடியனுப்ப

வேகம்கொண்டு எழுந்ததீ

என்னை நெருக்க  

மண்ணில் என்

காலம் முடிந்தாய்

அச்சம்  கொண்டு 

கண்ணை மூடினேன்

 பயத்தில்

துணிவின்றி இதயம் 

படபடக்க

துணிந்து  ஒருகரம் 

என்னையிழுக்க

விழிகள் திறந்தேன் 

கனவு என்றதுவிடியல்!!!

புன்னகை தானய் மலர

எழுந்தேன் உச்சகமாய்

கொஞ்சமும் பொறுக்கா இறைவன்

இன்றைய நாளை எழுதினான்

பிழையாய்  புன்னகை கூட

கனவாய் போனதேயென 

சலித்துக்கொண்டேன் என்னை!!!

No comments: