Thursday, 26 May 2022

விழி கண்டு மொழி பேசும் சாரல்.....................

 நான் நேசித்து சுவாசித்து

வாசித்த புத்தகம் என் 



 அப்பா!

எனக்குள் பூசிக்கும் உணர்வாய்

வியாபித்து கிடக்கின்றார்!

நான் யாசித்து கேட்பபதுவும்

அவர் நேசமே !

 நான் யோசிக்கும் காலமும் 

அவர் வாசிக்க தந்த நெடிகளே!

எங்குமில்லா வாசனையின் 

உயிர்தீண்டலும்அவரே! 

இன்றும் வலிகண்டு

என் அருகே அமர்த்திருக்கும் 

சாமியும்அவரே !

கனவேடு உறவாடும் 

ஆறுதலும்  அவரே! என்னை

புரித்த ஆத்மாவும் அவரே

என் கோவம் கண்டு 

 அச்சம் கொண்டு  

 தவமாய் இருந்ததும்அவரே  !

தன்  பாதச்சுவட்டில் 

என் பாதம் வைத்து 

முற்களையெடுத்து

என் பாதம் வைத்து 

நடக்கவைத்தவரும்அவரே !

இன்று என் வாழ்வில்

 நான் தேடும் ஆறுதலும் அவரே

என்   கைபிடித்து தூக்கும் 

கனவும் அவரே!

இதுவரை நான் காணா  

ஆண்மையும் அவரே

என்னை முழுவதும் புரிந்த 

இலக்கணமும் அவரே!!!


No comments: