கருவுக்குக்குள் பூத்த
கவிக்குயில்
பேசத்தொடங்கிய பேச்சுக்கு
சுகந்திரம் கிடைக்காமல்
பேசும் மொழியின் சிறைக்குள்
காகிதப்பூவிற்க்குள் வண்ணமாகி
வானவில் பூப்பறித்து
வெண்ணிலா ஒளிகுளித்து
வெண்மேகப்போர்வைக்குள்
விழுந்த தென்றலுக்கு
வேர்வைதுடைத்திட கைக்குடை
தான் கொடுத்து
உறவுக்குள் வேராகி உயிருக்கு
பூவெடுத்து வானம் துள்ளியோடும்
துளிகளின் விழிகளுக்கு
தோகையாகிய தானிருக்க
நந்தவனமானால் வாசகியாய் !!!
.jpg)
No comments:
Post a Comment