இரவுகள் என்னை பார்த்து
அச்சத்தோடு கேட்கின்றது
பெண்ணே நீ !
அச்சம் கொள்ள வேண்டாமா !
நிசத்தம் கொண்ட எனக்குள்
நின்று! பதற்றமின்றி ரசிக்கின்றயே
உன் முகம் மூடிய என் முகத்திற்கு
உன் விழி கொண்டு புது வெளிச்சம்
தேடுகின்றாய் !அச்சமின்றி !
அடடா !!உன்மொழிகேட்டு
குரல் கேட்டு இசைக்கும்
தென்றலின் குரல் ஓசை
மறக்கின்ற மாயத்தால்
உன் திசை பார்த்து அச்சத்தோடு
காத்திருக்கின்றேன்!
ஆதவன் தொடும் வரை
கரைகின்ற என்னை
உன் விழி சொல்லும் மொழி தேடி
கரைய வைக்கின்றாயே பெண்ணே!
மௌனம் பேசும்
கலைபெண்ணே பதில் சொல்வாயா
உன் பெண்மைக்குள் ஒரு தீ
என் இரவிற்குள் இரவல் கேட்க
நீயே துணைக்கு என்னையே காவல்
என்கிறாய்!!
No comments:
Post a Comment