Monday, 20 July 2026

என் இலக்கணபிழைகளில் ஓர் இலக்கியம்......,

 செல்லமாய்!

  செல்லம் கொஞ்ச

செல்வமாய்!

  நாங்கள்  வந்தோம் 

அப்பாவின்  கைகளுக்குள் !!

அன்பின் !மொழிக்கேட்டு 

அன்பென்னும் !

கூட்டுக்குள்  செல்லசிட்டுகளாய் 

சிறகடித்தே பறந்த நாம் 

பரந்த  வான்கடைந்து தூரதேசத்து 

துரமானாலும்!

 நிழல் குடையின்   வடத்திற்குள் 

கூடிப்பேசி சிரித்து மகிழும் 

சொர்க்க  வாசல் அப்பா !

கோவம் வரும் கூடவே அம்மா 

குரலும்  வரும் பின்னே !

 பிரிவுகள் பிரித்தாலும்  

பிரிக்கமுடியா இல்லம்

  அப்பா !

இன்று அவருக்கு 

பிள்ளைகள்  ஒன்றுகூடி 

சின்ன  விழா 

நான் தூரம்  நின்று 

ரசித்தது  வியக்கின்றேன்!

 அவரை ! அவர்  

மகிழ்வை  கண்டு வியக்கின்றது 

விழிகள் !

ஆனாலும் !

மகள்களை மறக்கடித்த 

மருமக்களுக்கு  என்  இதயத்தால் 

நன்றிகள் கோடி !!!கூடியகைகளுக்குள் 

கொடுத்த  வரம் அவர்களே !!!



No comments: