ஆதிப்பெண்ணிவள்!!
காடுகளில் நடுவே
தொலைத்துவிட்டு சென்ற
மனித உறவுகளுக்கு நன்றி !
கொஞ்சிப்பேசும் தாய்மொழியில்லை
கொஞ்சிபேசுகின்ற பறவைமொழியழகு
கொஞ்சம் சோர்ந்தால் கூடி விளையாட
அன்பைகாட்டும் மிருகங்கள்
மனித கோவத்தை விட
அழகாய் விளையாடும் அவளோடு!
உறவையிட அழகின் உறவு
அவள் கொடுக்கும் அன்பின் அழகிற்கு
கிடைக்கும் அன்பின் அழகு
செல்லப்பிள்ளை இவள் !பசியை போக்க
பிச்சையிட தட்டு ஏந்திடாமல்
பசியை போக்கும் மரமும்
இவள் தாய்மையின் அழகு
திரும்பும் திசைக்காற்று
கூட நின்று பேசியே செல்லும்
இவள் குருப்பின் அழகில்
ஆற்றின் மொழிகள் துங்கிட
தாலட்டும் அழகில் உறக்கம்
சொர்க்கவாசல் கொண்டுசெல்லும் !
அச்சம் கொண்ட நாகம் கூட
கூடவந்து கூடி விளையாட
பாசம் கொள்ளும் இவளோடு
இவள் சொல்லும்
மொழிகள் மௌனம் கொள்ளும்
இவள் பேசாமொழிகள் கூடி பேசி
அச்சம் போக்கும்
இங்கு ஏற்ற தழ்வு
இல்லா சுகந்திரம் அவளை
அன்பாய் கட்டிப்போட்டு வாழக்கூடி
வாழ்க்கை முத்தாகின்றது !!

No comments:
Post a Comment