Sunday, 22 January 2023

விழி கண்டு மொழி பேசும் சாரல்...................

 வேண்டாமே இந்த வெளிநாட்டு  வாழ்க்கை!!!

போதும் போதுமே  இந்த நாடக நடிப்பு

ஓடு ஓடு என்கின்றது சுமைகள்

ஒழித்திட முடியாமல் சிக்க வைத்து

விடுகின்றது கடன்கள் 

தேடிதவிக்கின்றது  இதயம் 

தேடியிணைந்தவரே பாவம்

 பேசிடமுடியா மொழி போல் வாழ்க்கை

பேசினால் பணம்  தாலேயே சண்டை

இருப்பதாய்  இல்லாமே  பெருமைகள்

பெருமைகளால் இல்லை பிள்ளைக்கும்

வாழ்க்கை  இருந்தும்  திருந்திடா 

வாழ்க்கையே நிரந்தரம்

மெல்ல  மெல்ல   தாய்மொழியும் 

மறந்தேபோகுது  நமக்குள் !!இருந்தும்

தமிழ் தொலைக்காட்சிகளேடே  உரையாடல்

இறந்து வாழுது உணர்வு  பணமிருந்தும்

பிரியுது    உறவு  

ஆடம்பரம் உண்டு உடுத்தியதால்

வயிற்றுக்கு   இல்லை உணவு  

வசதியாய் இருப்பதாய்

ஊருக்கு சொல்லும் பொய்களே 

நமக்கு நாமே கொடுத்த தண்டனை

பிரிவுகள் பேசும் சுயத்தை மதிப்பதேயில்லை

முதுமையில் ஓய்வு  இருப்பதாய் பேச்சு

முமைக்கு முதலே உயிரும் போகு தனியாய்

மரணமே  இங்கே விடுதலை!!!!





No comments: