என்னைபெற்றெடுத்த
இதயங்களுக்கு
நன்றி. என்னை
பொத்திவைத்தே காத்த
என் அப்பாவிற்கு
நன்றி
என் கண்ணில் சிறுதுளி
சிந்திடாமல் என் விழியாய்
வாழ்ந்த என்அண்ணனுக்கு
நன்றி
சின்ன சின்ன சண்டைபோட்டும்
அன்பில் மட்டும் மாற்றமில்ல என்
அன்னையின் பெற்றிடா பிள்ளைகளுக்கு
நன்றி
சாதிக்க துடித்த நேரதனில்
நட்பாய் கூடி பணமற்ற நேரங்களில்
சில்லறைகளால் என்னை சிரிக்க
வைத்த என் இதயம் நிலைத்த நட்பின்கு
நன்றி
வேடிக்கை பேச்சில் வேதனை
துடைத்தே பிரிந்தாடா உறவாய்
இறுதிவரை என்னை புரிந்தே
நான் பெற்றிடா பிள்ளைகளுக்கு நன்றி
தம்பியென்ற ஒற்றை சொல்லில்
என் அன்பை திருடி மணிதுளிகளை
தொலைப்பதறியாமல் தொலைத்து
இன்று வரை என்னை புரிந்தால்
பிரியாமல் உறவாய் நிலைக்கும்
என் தம்பிக்கு நன்றி!
வேசம் போட்டு வேடிகையாய்
முகம் தொலைத்து முகமற்றே போன
முகங்களுக்கு நன்றி
என்னைத்தேடி
என்னையே பயணபடுத்தி
என்னையே மற்றவருக்கு
தப்பாய் காட்டியே நல்லவர்களான
நல்லவர்களுக்கு நன்றி!!!
தன்னம் தனியே தைரியமான
எந்தன் போராட்டமதில்
எதிரியாய் என் பின்னே
நின்ற அறிவிலிகளுக்கும்
நன்றி!!! சில சமயவலியை
பெரும் வலியாய் மாற்றியே
இறுதிவரை என்னை
புரிந்திடாமல் சென்றவருக்கும்
நன்றி!!!படைபின்
புரிதலை என் பாதையில்
தந்த உறவிற்க்கும் நன்றி !!!
என்னை படைத்தே
பெண்ணை தேடவைத்த
இறைவனுக்கும் நன்றி!!!!

No comments:
Post a Comment