Sunday, 27 September 2026

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 அவள் விழும் போதும் 

அவளுக்காய்  துடிக்க 

ஒர் துடிப்பில்லை.!அவள் அழும் 

போதும் அவளுக்காய் துடிக்க 

 ஓர் துடிப்பில்லை! 

அவளுக்காய் துடிக்க 

ஒரு துடிப்பு இருக்க 

அவள் எப்படி நடிக்கவேணும்!

அவள்  தேடித்தேடிப்பார்க்கிறாள் 

அவளுக்கு. இன்னும் புரியவில்லை 

அவளின் பெண்ணான பிறப்பை!! 

பெண்மகளாய். அழகாய் 

புன்னைக்கின்றாள் !

மனைவியாய் தினம் தினம் 

வாழப்போரடுகின்றாள்! 

காதலியாய் கற்பனைக்குள் புரியாமல் 

வேடிக்கைக்கு வாடிக்கையாகின்றாள் !

விபச்சாரியாய் உணர்விற்கு 

சொந்தமாய் உயிர்கொடுக்கின்றாள்!  

வைப்பட்டியாய்  சில நேரத்தேவைக்கு 

உரிமையின்  உறவாகின்றாள் !

கள்ளக்காதலியாய்  ஊர் நாற 

கற்பனைக்கு  தலைவியாகின்றாள்! 

இருந்தும்  ஆண்  சொல்லும் 

எல்லா  அவமானத்திற்கும் 

தலைவிதி  வரலாறு  காண்கின்றாள் !!

Thursday, 24 September 2026

விழியேடு மொழி பேசும் சாரல்........

 அவள் பெற்ற வரமே


 

அவளுக்காக அவள் 

கொண்ட சாபம் !!

அவள் யாரைத்தேடி 

யாரிடம் கேட்ப்பாள் அவள் 

வாழா வாழ்க்கையின் 

சந்தோஷங்களை !!!

வீனெனதெரிந்தும்  அவள் 

வீன் பழி போட்டு 

வீனாகும் காலத்தை தானாக 

வாழப்பழகிக்கொண்டாள் !!!

தேனான வாழ்வும் 

தேகிட்டாத சுவையும் 

காணாத அவள் தான் !!!

ஓடாக தேய்ந்தாலும் 

யாராலும் தேடாத  அவள் 

தேனாக வாழ்கின்றாள் 

தேர்மேல் நின்றாலும் 

தெருவோடு  கிடந்தாலும்  

புதிதில்லை தானே நிகழ்வு ஒரு 

பூவின் விடியலும் உதிர்வும் 

பொழுதுக்குள் முடிந்த முடிவே!!

இது தெரிந்தே தனியாகி 

போகின்றாள் !!!

விழியேடு மொழி பேசும் சாரல்........

 பஞ்சமா பாதகம் செய்தார் 



தலைகொய்திட்ட

 நீதிகள் பிறந்த மண்ணில் 

அஞ்சாமல் பஞ்சமாபாதகம் 

செய்திட்டு பணமுட்டைக்குள் 

ஒழித்து விளையாடும் 

காலிகாலத் தாண்டவம் இது !!

முடியாமல் தடுமாறும்  நீதியின் 

கைகளை வாளாக மாற்றி 

சிங்கப்பெண்னே நீயே !!

மானினம் வேட்டையாடும்

 ஓநாயகளை  விட்டு விட்டாமல் 

வேட்டையாடு ! 

நம் குலம் காக்க  

மண்ணில் ஒரு கிருஷ்ணர் 

சேலைகொடுக்க இல்லாமல் 

போனாலும் !!

தன் பெண் சேலையை 

தொட்டவனை எட்டிப் பிடித்து 

கட்டிப்போட ஒரு தமையனும் 

இல்லையென்றாலும்!!

உன் கைவைத்தே 

உன் கண்ணை குத்தியே 

அழித்தலும் !

சிங்கப்பெண்ணே 

சேலைத்தோடும் கயவன் கைகளை 

நீ விட்டுவிடலாமா !!வெட்டிவிட்டு பேசும் 

ஒரு கலியுக சிங்கபெண்ணாகிய 

களம்விளையாடு!

விட்டுவிட்டதால் தான் 

நீதியின் முன் ஆராச்சி மணி 

துருபிடித்துகிடக்கின்றது 

துருப்பிடித்த மணியொலிக்க 

சிங்கப்பெண்ணே எழுந்து 

விளையாடு !!

இது தர்மம் குறையும் பூமி 

உன் இனம் காத்திட நீயே வா 

துணையாக!!!

Wednesday, 23 September 2026

விழியேடு மொழி பேசும் சாரல்........

என் தூக்கமே !

நீ என்னைத்தூக்கி தூக்கில் 

தொங்கவிட்டாயா என் 

விழிகள் தூக்கம் தொலைத்து 

துக்கம் கொண்டாடி 

தேயும் இரவுக்குள்  தேம்பி தேம்பி 

அழுகின்றது !

வெள்ளை ஆடை 

பெண்ணைக்கண்டு  

அச்சம் கொண்ட 

காளையின் விழிகள் 

வெளிச்சம் தேடும் படபடப்பைபோல் 

அஞ்சும் பேயும் தூக்கம் கொள்ளும் 

இரவைத்தூக்கி 

அச்சம் கொண்டு 

வெளிச்சம் தேடியலைகின்ற 

ஆன்மா போல் 

என்னை கொன்று 

திண்ணை தேடும் நியமென்ன!!

Sunday, 20 September 2026

விழியேடு மொழி பேசும் சாரல்............

 எங்கடா இறைவா நீ

பத்தியாய் உன்னை

தண்ணீரில் தூக்கி எறிந்தவர் 

பக்தியில் சாரியாக 

போட மறந்திட்டாரோ 

கரையில் தனித்தனி பாகமாய் 

விலைவாசிபோல் அலையோடு 

முட்டி மோதி கரையவும் முடியாமல் 

சேரவும் முடியாமல் 

கரைமேல் கறைபட்டு மிதிபட்டு  

மிதிபட்டு  கிடக்கின்றாய் 

மண்ணில் நின்று எழுந்து 

வந்ததை மறந்வர் 

கொஞ்சம் ஆசையில் 

அழகுக்குக்கு அழகு செய்ததால் 

தானோ  இப்போ 

அலங்கோலம் ஆனது வாழ்க்கை 

உனக்கும் மனிதன் போல் 

விழியேடு மொழி பேசும் சாரல்............

 விழுத்திடும் வாழ்க்கைக்குள் 



எழுந்திடும் வாழ்க்கையும் வேண்டும் 

எழுந்திடும் வாழ்க்கைக்குள் 

தைரியம் கொண்ட மனசும் வேண்டும் 

அந்த தைரியம் கொண்ட மனசு 

செய்யும்  செயல் உன் 

பிழையையும் சரியையும் 

சொல்லிடும் கண்ணாடிபோன்றதாக 

இருந்திட வேண்டும் 

நீ அதிகம் எதை செய்கின்றாயோ 

அதுவே உனக்கும் தெரியும் 

இதை புரிந்தால் அன்பு 

புரியாமல் நின்றால் வேஷம் 

நீ யாரை தேடுவாயோ அவர்களே 

உன் கண்ணாடி!!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

 ஒரு மனித வாழ்வியலில் 



இரு மனசின் ஒரு காதல் பக்கமே 

ஒரு இல்லத்தின் அழகிய தலைமுறை

நாம் கற்றே 

சொல்லி போகும் வாழ்க்கையும் 

இது !!நாம் 

முதுமையிலும்  கைகள் பிடித்து 

நடக்கும் அழகிய காதலும் கூட !!இன்று 

எங்கோ ஒரு இடத்தில் யாரோ ஒரு சில 

முதுமை யின் சந்தோசத்தை உலகமே 

தனிமைக்கு துணையாக  ரசிக்கின்றது !!

வாழ்வை இழந்து !!



Thursday, 3 September 2026

விழியேடு மொழி பேசும் சாரல்.......................,

சிதைந்து  போன ஒரு 

சமூகத்தி  மாற்றத்தை 

சரிசெய்ய முயற்சி  செய்கின்ற 

ஒரு மனிதனின் சிந்தனையை 

 சிந்திக்க  வைத்திடா 

எதிரியின்   சிந்தனையே  

ஒரு  மாற்றத்தின்  அழிவு !!

இதை  எதிரிக்கு  சமூகம் 

சொன்னால்  நல்ல 

தலைவன்  சமூகத்தின் 

காவலன் !!

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

அவள்  சிந்தனையை 



சற்று  தட்டி  நிறுத்தியது  

அவள் கண்ணம்  தொட்டு 

விழுந்த  மஞ்சல்  வண்ண 

இலை !!அவள் ஒரு நொடி 

நின்று உதிர்ந்த இலை 

பார்த்து  மௌனமாய் நின்றாள் !

அந்த  மௌனத்திற்குள் ஆயிரம் 

வார்த்தைகள் ஊமையாய் 

உதிர்ந்தது அவளிடமிருந்து !!

இலைக்கு  புரியா மௌனம் 

இறைவனுக்கு  புரியுமென்றே 

மீண்டும்  நடக்கின்றாள் !!

Tuesday, 1 September 2026

குட்டிக்குட்டிச் சாரல்......,

சுயநலவாதியிடம்  அன்பை 

தேடாதே 



பொதுநலவாதியிடம் உன் 

உணர்வை  தேடாதே 

வறுமையிடம்  உன் தகுதியை 

தேடாதே 

பணக்காரரிடம்  உன்னையே 

தேடாதே !!!