Wednesday, 28 October 2015

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

கனவிற்குள் நிழலான ஓர்
ஓவியம் என்முன்னே 
உயிராகி நிற்ககண்டு அடடா
தொலைத்திட்ட மகிழ்வெல்லாம்
எனி எனக்கே எனக்கா வந்தென்று
கற்பனையில் சில காலம் 
கண்னோடு மறைத்ததுண்டு
தன்னை தான் மறந்திட்டபாவியிவள்
உண்மைக்கு நிழலாகி பொய்யிற்குள்
தான்விழுந்து  ஏமாற்றம் தனைக்கண்டு
துன்பத்தை அணிந்தபோது 
காலத்தின் கண்ணீர் சொன்னது
பாலைவனத்திற்குள்
 தாகத்தின் தண்ணீர்
என்றுமே ஊற்றாகாதென!!

No comments: