Thursday, 6 August 2015

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

கோவத்தில்  கொஞ்சமறந்து 
கொஞ்சும்கிளி  கெஞ்சல் மறந்து 
கொம்புத்தேன்  கூட்டில்  
எட்டிப்பிடித்திடா  சிந்தனைக்குள் 
சிக்கிக்கிட்டு  எட்டா  மலை 
உச்சியில்  நிற்கும்  மாமன் 

வீம்பிற்கு  தவமாய் 
தவம் புரியும்   வேப்பிலை 
கருப்பாயி  வேப்பம்பூ 
தேனாகி  நீ  வேண்டா  வரமாகி 
வாரா  உன்னைத்தேடி 
ஓடாமல்  ஒழியாமல் 
நில்  மாமா  தனியாய் 
உன் தவசிக்கோலம் 
தனைக்காக்க வாறாள் 
காளையே
 உன்னைக் கட்டியாழ!!
சரியான யோடி 
எனி நான் தான் தாடி!!!

No comments: