Thursday 12 July 2007

என் விழிகளுக்குள் சிக்கிக்கொண்ட சாரல்...1



சிதைந்திடும் கோலத்தில்
கரைகின்ற கண் மையில்
வழிகின்ற விழிநீரை
ஏந்திடா தனிமைக்குள்
சமாதானத்தின் சின்னமாய்
தூய்மையின் சோகமாய்
வெள்ளை மலரொன்று.
விடியா இரவுகளில்
தொலைந்திட்டாள்
ஏக்கங்களோடு

தன் மனதைப் புரியா
மனிதர்கள் சமாதனம்
வேண்டா தனிமைச் சிறைக்குள்
தூய்மை தேடினாள் தன் தூய்மை
சொல்ல...
**************************
பூவென்று பூக் கொண்டு
பூப் போல் பூமகனைத் தேடி
நதிமேல் நதியாய் நதிபோல்
நதி கடந்திடுது தனியாய்
வெண் முகத்தின் ஒளியால்
வெண்மேகம் ஒளிபெற்று
சிரிந்து வரவேற்க !
கரு கூந்தல் தொட்டதென்றல்
கருமேகம் கூட்டி சின்னத் துறல்
போட்டு வரவேற்க !
சின்ன வேர்வைப் புள்ளி
தொட்ட துறல் பட்டுச் சிவந்த பெண்னைப்போல்
சூரியன் வந்து வரவேற்க!
வந்த சூரியன்ப்பார்வையால்
 கொண்டநாணப் பெண்மைபோல்
வானவில் வந்து வரவேற்க!
மெல்ல விரிந்த பூக்கொண்டு
வானவில் வர்ணமாய் மெல்ல போகின்றாள்
பூமகனைத் தேடி......

*****************************
வாழ்ந்த நாட்கள்
இனிமை சொல்ல
உண்மை பாசம் தாம்
கொண்டு !இணைந்த
இதயக் காதலால்
போகும் நாட்கள் தனை
மறந்து! முதுமைக் காலத்து
இளமை நினைவில் மயங்கி
நிக்கின்றது முதுமை இங்கே
************************************
வெள்ளைப் பனிச்சாரல்
பூமி நனைக்க, நனைந்த
பூமி குளிரில் தவிக்க!
தவிக்கும் பூமியியோடு
முதுமை துடிக்க!
துடிக்கும் முதுமையின்

உணர்வின்றி குழந்தைகள்
குதிக்க! குதிக்கும் குழந்தையாய்
விரிந்திடும்  மலர்களை
மூடிய பனிக்குள் இதழ் நடுங்க!

நடுங்கும் மலர் கண்டு நான் வாட
வாடிய எனைப் பார்த்து
என் இதயம் துடிக்க!
துடிக்கும் எமைப் பார்த்து

சூரியன் சிரிக்க! சிரிந்த சூரியன்
சிந்திய வெப்பத்தில் வெண்பனிஉருக!
உருகிய பனி கண்டு ,
என் மலர் சிரிக்க!
சிரிக்கும் மலர்கண்டு நான் சிரிக்க
எனை பார்த்து என் இதயம்
சிரிந்ததுமெல்ல .....................

*****************************

வண்ணமதி ஓளியில்
வெள்ளிநிலவென்று
இருண்ட வாழ்வின்
இருள் போக்க
மென்கரத்தால் ஒளியெடுத்து
இல்லமெங்கும் ஒளிர்கின்றாள்


புதிய காற்றின் வாசமாய்..
***********************************
சலனமில்லா இதயமென்று
உயிர் ஓவியமானதால்
பார்வைகள் பல சொல்ல
புரியா மனிதர்கள் பார்வையின்
நிலை கண்டு! இருளோடு
ஒர் சிறை தான் கொண்டு
இருண்ட வானத்தின்

நச்சத்திரத்திலும் நிலவிலும்
உறவின் முகம் கண்டு
பூவின் சிரிப்பில் தனை
மறந்து ,உரிமையோடு
உலமை ரசித்திட !
தப்பான தப்பு
தப்பாய் தவறி விழ
புரிந்தது அவளுக்கு
உண்மை உலகம்....
*********************************
இழந்த வலி தனை மறக்க
கல்லறைப் பூவென்று
கருவறை விதியால்
வாசமின்றி விசியது
வர்ணப்பூக்களின் முகம்
போல.....
காயம் தந்த கண்ணீர்
காலமும் மற்றிடா கோலம்
நிலையாக்கொண்டதால்
இப்போ! தவிக்கின்றாள் தன் நிலை
கண்டு................

ஏந்திய கையுக்குள்
ஓர் கை
இணையத் துடிக்கின்றது
சமாதானத்தைப் போல்
எட்ட நின்றே...





********************************
சிந்திய சிரிப்பொலியும்
பேசிய வார்த்தையும்
நித்தமும் என் காதில்
ஒலிக்க..
அவளோ சித்திரமாய்
சுவரில் தொங்கி
நித்தம் நித்தம் என்னை
நித்திரையின்றி தவிக்க விட்டு
அழகாய் சிரிக்கின்றாள்
என் நினைவோடு

எத்தனை எத்தனையோ
கற்பனைகளை என்னோடு
நித்திரையின்றி சொல்லி விட்டு
அத்தனை கனவையும் என்னிடம்
விட்டு சித்திரமாய் சிரிக்கின்றாள்
என் உயிரோடு


நித்தம் நித்தம் என் இதயம்
துடிக்க மறுத்தது அவள்
கன்னக்குழி சிரிப்பழகை
காணாது

எத்தனை எத்தனை கொடுமைகள்
வாழ்கையோடு வந்தாலும்
கண்மணியே!! உன்னை இழப்பது
போல் கொடுமை வேண்டாம்
இந்த பூமியில் எனி...............
*********************************
அழகு காதல் தான்
சேர
உணர்ச்சி தடுமாற்றம்
கூட்டுச் சேர
தப்பு தப்பில்லா சரியில்
ஒன்று சேர
கூடியவன் கூடுவிட்டு
தான் போக
பெண்மையின் தாய்மை
அதில் சேர
கற்பத்தில் கரு சேர
பத்து மாதம் சுமை சேர
சிற்றெறும்பு காட்டு
மரப்பொத்தில் சிசு சேர
நெஞ்சில் பால் சுறக்கா
பெண்மை தன் மானம்
காக்க
எறிந்தால் மொட்டு ஒன்றை
சித்தெறும்பின் காவலில்......

******************************


இதயங்கள் இரண்டும்
ஒன்றோடு ஒன்று
காதல் கொண்டு
தாயாய் சேயும்
சேயாய் தாயும்
மாறி மாறி
இன்பக் கனவைச்சொல்லி
இந்த உலகம் தாம் மறந்து
புதிய உலகம் தாம் கண்டு
வாழ்கின்றது வாழ்கையொன்று

*********************************

******************************
அறியா மனிதன்
அழிவு நிறுத்தி
அதிகார வர்க்கம்
தனை மாற்றி

கருவறை முதல்
கல்லறை வரை
உயிரின் உரிமை
தனை இழந்து தவிக்கும்
உறவிற்காய்......

பூப்பறிக்கா கைகள்
பூவேந்தி வருகின்றது
இறைவா உன்னிடத்தில்
பசியில்லா தவிப்பில்லா
உயிரின் வாழ்விற்காய்...

2 comments:

குட்டிபிசாசு said...

வாழ்த்துக்கள்!!

சு.கஜந்தி said...

நன்றிகள் என் குட்டிப்பிசாசிற்கு...
இருந்தும் உறவாய் வந்த காரணத்தால்
மேலும் நன்றிகள்...