Saturday, 17 November 2007

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

இன்பங்கள் பலகோடி 


அவள்     வரவாள் 
உன்னைச்சேர!
துன்பமே வந்ததென்று
கிண்டலும் கேலியுமாய்
எத்தனை காயங்கள் நீ 
கொடுத்தாலும்!
உன்னைத் தாங்கிக் கொள்ளும்
சுமைதாங்கி அவள் தானே...

எத்தனையோ விண்மீன்கள்
உன் வாழ்வில் வந்து வந்து
போனாலும் !,
 நீயே அவைகளை
ரசித்தே நின்றாலும்,
உன் இருளுக்கு ஒளியாய் 
இறுதிவரை உன்னோடு வருபவள்
 அவள் தானே!


தன்னுயிர் உள்ளவரை
உன்னை சுமந்து
 உன் கருவை சுமந்து
உன் வாழ்வை தன் வாழ்வாய்
எண்ணி, 
உனக்காய் சுமக்கின்ற
சுமைதாங்கி என்றும் அவள்தானே..............

No comments: